Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Vandhan Vendran (வந்தான் வென்றான்)
2 posters
Page 1 of 1
Vandhan Vendran (வந்தான் வென்றான்)
தனக்கென பயணத்தை தீர்மானித்து விட்டுச் செல்லும் ஒருவனுக்கு ஏற்படும் தடைகளும், அதை வெல்வதும்தான் கதை.
குத்துச்சண்டை வீரர் சிவாவாக வரும் ஜீவா, அஞ்சனாவாக வரும் டாப்ஸியை ஒரு
இக்கட்டான சந்தர்ப்பத்தில் சந்திக்கிறார். டாப்ஸி ஆபத்தில் இருக்கும் போது
அவருக்கு உதவி செய்து அவரை காப்பாற்றுகிறார். காதலிப்பதாகவும் கூறுகிறார்.
அதற்கு டாப்ஸியோ, என் அப்பா சொன்னால் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன்
என்கிறார். அவரை சந்திக்க சென்றால், மும்பை தாதாக்களுக்கு இடையே நடைபெறும்
சண்டையில் தவறுதலாக டாப்ஸியின் தந்தை கொல்லப்படுகிறார். என் தந்தையை
கொன்றவனை சிறையில் தள்ளினால், உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என டாப்ஸி,
ஜீவாவை உசுப்பேற்றுகிறார். இதற்கு மும்பையிலுள்ள தாதாவான ரமணாவாக வரும்
நந்தாவை சந்தித்து உதவி கோருகிறார்.
காதல் கதையை சொல்லி, அந்த தாதாவை சிறையில் தள்ள உதவுங்கள் என்கிறார்
ஜீவா. 'யார் அந்த தாதா?' என்று நந்தா கேட்கும் போது, அது வேறு யாருமல்ல
நீதான் என்று அதிர்ச்சி தருகிறார். இதன்பிறகு ஜீவா தனது தம்பி என்று
நந்தாவிற்கு தெரிய வருகிறது. அப்பா வேறு வேறு என்றாலும், இருவருக்கும் தாய்
ஒன்று என்பதால் அவருக்கு தனது தம்பி யார் என்ற உண்மையை தெரிந்து
கொள்கிறார். தம்பியின் காதலுக்காக நந்தா சிறைக்கு சென்றாரா? அண்ணனின்
உயிருக்காக ஜீவா காதலை துறந்தாரா? டாப்ஸி தனது தந்தையின் மரணத்திற்கு நீதி
தேடினாரா? என்ற கேள்விகளுக்கெல்லாம் மீதிக்கதை பதில் சொல்கிறது.
ஒரு பரபரப்பான நாவலுக்கான நல்ல ஸ்டோரி லைன்தான் இது. ஆனாலும் படத்தின்
முதல் பிரச்சினை திரைக்கதைதான். அடுத்தடுத்த காட்சிகளை நம்மால் எளிதாக
யூகிக்க முடிகிறது. காதல்தான் இங்கே மையப் பாத்திரம். அதற்காகத்தான் இந்தப்
போராட்டம் என்பதாக கதை நகர்கிறது. அப்படியிருக்கும்போது, அந்த காதல் ஜோடி
சேரவேண்டுமே என்ற பதைபதைப்பு ஆடியன்ஸிற்கு வரவேண்டும். அதற்கு அந்தக்
காதல்காட்சிகள் வலுவானதாக இருக்க வேண்டும்.
அந்த காதல் ஜோடி (குறிப்பாக ஹீரோயின்) கேரக்டர்ஸ் ஆடியன்ஸ் மனதை டச்
செய்வதாக இருக்கவேண்டும். இங்கோ சவசவவென்று காதல் காட்சிகள். காதல்
வருவதற்கான காரணமும் கொஞ்சமும் நம்பும்படி இல்லை. ஜீவா பாதிக் கதை
சொல்லிக்கொண்டிருக்கும்போதே நந்தாவின் எதிர் குரூப், அவர்கள் இருக்கும்
இடத்தில் நுழைந்து தாக்குதல் நடத்துகிறது. படபடவென துப்பாக்கி எடுத்துச்
சண்டை போடும் நந்தா, அது முடிந்ததும் திரும்ப உட்கார்ந்துகொண்டு 'அப்புறம்
என்னாச்சு..அந்தப் பொண்ணுகிட்ட உன் லவ்வைச் சொன்னியா' என கேட்கும்போது
நமக்கே கடுப்பாக இருக்கிறது. 'ஜீவா சொன்னதே ஒரு மொக்கை காதல்கதை..அதை இந்த
ரணகளத்திலயும் வந்து கண்டினியூ பண்ணச் சொல்றாரே'ன்னு நொந்துக்க
வேண்டியதுதான்.
அப்பிடி இப்பிடி என்று சலிப்பூட்டும் காதல் காட்சிகளுடன் செல்லும்
முதல்பாதி பின்னர் ஏனோதானோ என்று ஒரு யதார்த்தமே இன்றி காட்சிகள் ஒழுங்காக
பின்னப்படாது சென்று ஏதோ முடிகின்றது.
ஜீவா வழக்கம்போல் கொடுத்த வேலையை நன்றாகச் செய்திருக்கிறார். காதலில்
ஆரம்பித்து ஆக்ஷன் வரை ஓகே. ஆனாலும் அவரை பாக்ஸர் என்று (சும்மா தான்
இருந்தாலும்..) சொல்வது இன்னொரு வேடிக்கை. 'ரௌத்திர'த்திற்கு பிறகு
ஜீவாவிற்கு இது மீண்டும் ஒரு சறுக்கலாக இருக்கும்.
மும்பையிலுள்ள பெரிய தாதாவாக வருகிறார் நந்தா. அந்த கேரக்டருக்கு உரிய
முகம் இவரிடம் இல்லையா? அல்லது உடம்பு இல்லையா என சந்தேகம் வரும் அளவிற்கு
இருக்கிறது இவருடைய கேரக்டர். படத்தில் ஒழுங்கான கதையோ அட்லீஸ்ட்
சுவாரஸ்யமான திரைக்கதையோ இல்லாமையால் சும்மா வீணடிக்கப்பட்டு விட்டார்.
படத்தில் டாப்ஸி ஒரு வேஸ்ட்டு பெப்சி. சும்மா வெள்ளையடிச்சுவிட்ட மெழுகு
பொம்மை மாதிரி வந்து போகிறார். நடிக்கவும் தெரியவில்லை அழகாகவும் இல்லை.
சும்மா அவிச்ச இறால் மாதிரி இருக்கிறார்.
படத்தில் பாடல்களையும் சந்தானத்தின் நகைச்சுவையையும் தவிர சொல்வதற்கு
பெரிதாக ஒன்றுமில்லை. 'நிழல்கள்' ரவி, மனோபாலா, ரஹ்மான் என்று நல்ல
நடிகர்களுக்கு சிறுபாத்திரங்களை மட்டும் வழங்கி படத்தில் அவர்களும்
இருந்தார்கள் என்று உறுதிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
நந்தாவும், ஜீவாவும் மோதும் காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிண்ணனி இசை
தமனை கவனிக்க வைக்கிறது. பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட 'காஞ்சனமாலா' பாடல்
காட்சி எடுக்கப்பட்டவிதம் அழகாக ரசிக்ககூடியதாக இருக்கிறது. முதல் பாடலான
'ஏஞ்ஜோ' பாடலில் இசையமைப்பாளர் தமன் டரம்ஸ் வாத்தியத்துடன் வருகிறார்.
இவரது திரையுலக பயணத்தின் முக்கிய மைல்கல் அல்பமாக இது இருந்துவிட்டது.
'காஞ்சன மாலா...', 'அஞ்சனா...', 'திறந்தேன் திறந்தேன்...' என மூன்று
பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ரகமாக பாடல்கள் வெளிவந்து பலரை
கொள்ளையடித்திருந்தது. எனவே படமும் எப்பிடியும் நல்லாயிருக்கும் என்ற
எதிர்பார்ப்பு பலரிடம் இருந்தாலும் அதை அனைத்தையும்
தவிடுபொடியாக்கிவிட்டார் இயக்குநர். படத்தின் ஆரம்ப காட்சி ஒன்றில்
சந்தானம் டிரையிலர் பாத்திட்டு படம் நல்லாயிருக்குமென்று நினைச்சிருப்பியே.
ஆனா அப்பிடி இல்லை என்று வேறு ஒரு விஷயத்திற்கு சொல்வது இந்தப்படத்திற்கு
100% பொருந்திவிட்டது.
தாதாக்கள் கோட்டையான மும்பையை பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு, தனது
கேமரா கண்களால் நேர்த்தியாக சிறை பிடித்திருக்கிறது. பட்டுக் கோட்டை
பிரபாகரின் வசனங்கள் சில இடத்தில் அட! சொல்ல வைக்கிறது. ஜீவா, டாப்ஸி
இடையேயான காதல் வசனங்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
வள வளவென்று முதல் பாதியில் நகரும் திரைக்கதை, கடைசி 30 நிமிடத்தில்
வேகம் எடுக்கிறது. படத்தின் கடைசி நேர ட்விஸ்ட் தமிழ் சினிமாவிற்கு புதுசு.
அதுதான் படத்தின் பலம். ஆனால் அது மட்டுமே காப்பாற்றும் என்று இயக்குநர்
நம்பியது பெரும் தவறு.
வந்தான் வென்றான் - வந்ததோடு சரி!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Vandhan Vendran (வந்தான் வென்றான்)
படத்தில் பாடல்களையும் சந்தானத்தின் நகைச்சுவையையும் தவிர சொல்வதற்கு
பெரிதாக ஒன்றுமில்லை.
பெரிதாக ஒன்றுமில்லை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum