Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிரெஞ்சு ஆட்சியை எதிர்த்து புதுச்சேரி மக்கள் நடத்திய போராட்டம்.
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
பிரெஞ்சு ஆட்சியை எதிர்த்து புதுச்சேரி மக்கள் நடத்திய போராட்டம்.
1947 ஆகஸ்டு 15_ந்தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த போது, இந்தியாவுடன் இணையாமல் தொடர்ந்து பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து வந்த புதுச்சேரி, மக்கள் போராட்டத்துக் குப்பின் சுதந்திரம் அடைந்து, இந்தியாவுடன் இணைந்தது.
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவின் அரசுரிமையைக் கைப்பற்றியது போல், புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் பிடித்துக் கொண்டனர்.
257 ஆண்டு காலம், புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. புதுச்சேரி என்றாலே "ஆரோவில்" ஆசிரமம், "ஜிப்மர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி" ஆகியவைதான் அனை வரின் நினைவுக்கு வரும். அங்குள்ள பெரிய ஆலையான "ரோடியர் மில்" பிரபலமானது.
ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்திய சுதந்திர போராட் டம் நடந்தபோது பல தலைவர்களுக்கு அடைக்கலமாக இருந்ததும் புதுச்சேரிதான். இதன் பூகோள அமைப்பு வித்தியாசமானது என்றே சொல்லலாம். புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம், சந்திரநாகூர் என்று இதன் நிலப்பரப்பு பல பகுதிகளாக சிதறிக்கிடந்தது.
அதாவது தமிழ்நாடு எல்லையையொட்டி மகாபலிபுரத் துக்கு தெற்கே வங்காளவிரிகுடா கடற்கரையில் புதுச்சேரி அமைந்துள்ளது. காரைக்கால் தஞ்சை பகுதியிலும், மாகி கேரளாவிலும், ஏனாம் ஆந்திராவிலும், சந்திரநாகூர் மேற்கு வங்காளத்திலும் இருக்கின்றன. (இந்த சந்திரநாகூர் மட்டும் விடுதலைக்குப்பிறகு மேற்கு வங்காளத்தில் இணைக்கப் பட்டு விட்டது. மற்ற பகுதிகள் தற்போதும் புதுச்சேரி மாநிலத்தில் இருக்கின்றன.
1697_ம் ஆண்டு புதுச்சேரியும், அதனை சார்ந்த பகுதிகளும் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் சென்றது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் கூட புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி நீடித்தது.
அந்த ஆட்சியில் மக்களுக்கு பல வசதிகள் செய்து கொடுத்தார்கள். ஆனாலும் 2_ம் தர குடிமக்களாகவே கருதப்பட்டார்கள். பதவி மற்றும் உரிமைகளின் வேற்றுமை காட்டப்பட்டது. மேலும் இந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஏற்பட்ட சுதந்திர போராட்டம் புதுச்சேரி மக்களையும் கிளர்ந்தெழச் செய்தது.
மகாத்மா காந்தி, நேரு, திலகர் போன்ற தலைவர்களின் புதுச்சேரி வருகையும், ஆங்கிலேய அரசை எதிர்த்த அரவிந்தர், பாரதி, வ.வே.சு. அய்யர், சுப்ரமணிய சிவா, வாஞ்சிநாதன் ஆகியோரின் எழுத்துக்கள் மக்கள் மனதில் சுதந்திர தீயை மூட்டியது.
பிரெஞ்சு இந்திய விடுதலைக்காக பல்வேறு அமைப்புகளை உருவாக்கி வ.சுப்பையா, செல்லான் நாயக்கர், அன்சாரி துரைசாமி போன்ற தலைவர்கள் போராடினர். பிரெஞ்சு அரசின் கவுன்சிலராக இருந்த எதுவார் குபேரும் பிரெஞ்சுகாரர்களை எதிர்க்கவே சுதந்திர போராட்ட வேகம் அதிகரித்தது.
இதனை தொடர்ந்து அனைத்து அரசியல் சார்புடைய வர்களும் சேர்ந்து 1946-ம் ஆண்டு தேசிய ஜனநாயக முன்னணி என்ற அமைப்பை ஏற்படுத்தினர். இதில் குபேரும், வ.சுப்பையாவும் அந்த ஆண்டே இணைந்தனர். அந்த ஆண்டில் நடந்த நகரசபை தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணி பெருவாரியாக வெற்றி பெற்றது.
பின்னர் நடந்த பிரதிநிதித்துவ சபை தேர்தலில் மொத்தம் 64 இடங்களில் 34 இடங்களை தேசிய ஜனநாயக முன்னணி கைப்பற்றியது. குபேரும் பிரதிநிதித்துவ சபை உறுப்பினராகி பின்பு துணை மேயர் ஆனார். இதே போல் பிரான்சின் கீழ் சபைக்கு நடந்த தேர்தலில் அதே கட்சி வேட்பாளர் லாம்பேர் சரவன் வெற்றி பெற்றார். பிரான்சின் மேல் சபைக்கு வ.சுப்பையாவும், பக்கிரிசாமி பிள்ளையும் தேர்வு பெற்றனர்.
ஆனால் இந்த ஒற்றுமை அதிக நாள் நீடிக்கவில்லை. 1947-ம் ஆண்டு தேசிய ஜனநாயக முன்னணியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் குபேர், லாம்பேர் சரவன், ஆந்திரே குன்னம்மா ஆகியோர் அதில் இருந்து விலகி சோசலிஸ்ட் கட்சி அமைத்தனர்.
சுப்பையா தலைமையில் அமைந்த கம்ïனிஸ்டு கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தியது. 1947_ம் ஆண்டு பிப்ரவரி 18_ந்தேதி மவுன ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள். பஞ்சாலைகள், தொழிற்சாலைகள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கானவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இதைக்கண்டு பொறுக்காத ஆட்சியாளர்கள் ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றி கலவரத்தை தூண்டினர். ஆவேசமுற்ற தொழிலாளர்கள் எதிர் தாக்குதல் நடத்தினார்கள். ஊர்வலம் போர்க்களம் ஆனது.
பின்பு கலவரத்தை அடக்க பிரெஞ்சு ஆயுதப்படை துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் ராஜகோபால் என்ற தொழிற்சங்க பிரமுகர் இறந்தார். ஏராளமான பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
இதனை அடுத்து 1947 ஆகஸ்டு 9_ல் `பிரெஞ்சு ஆட்சியே இந்திய மண்ணை விட்டு வெளியேறு' என்ற முழக்கத் துடன் ஒரு மாபெரும் போராட்டத்தை அறிவித்தனர். பிறகு இப்போராட்டம் பிரெஞ்சு அதிகாரிகள் மற்றும் அவர் களின் குடும்பத்தாரையும் உள்ளிருப்பு சிறைவைக்கும் போராட்டமாக எழுச்சி பெற்றது.
அதைக் கண்டு கலங்கிய பிரெஞ்சு அதிகாரிகள், 2 வாரத்தில் இந்திய மண்ணை விட்டு வெளியேறுவதாக வாக்குறுதி அளித்தனர். விடுதலைப் போராட்ட வரலாற்றில் இப்போராட்டம் ஒரு திருப்புமுனை. ஆனால் பிரெஞ்சு அரசு, புதுச்சேரி மக்களை ஏமாற்ற நினைத்தது. `சில சீர்திருத்தங்களை மட்டும் செய்து விட்டு வெளியே போகிறோம்' என்று மகாத்மா காந்தியை ஒப்புக் கொள்ள செய்தார்கள். ஆனால் பிரெஞ்சு அரசு, சொன்னபடி செய்யவில்லை.
1947 ஆகஸ்டு 15_ந்தேதி இந்தியா சுதந்திரம் பெற்றது. அன்று புதுச்சேரியும் விழாக்கோலம் பூண்டது. புதுச்சேரி மேயர் முத்துப்பிள்ளை, நெட்டப்பாக்கம் மேயர் வெங்கடசுப்பா ரெட்டியார், முதலியார்பேட்டை மேயர் வைத்தியலிங்கம் ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.
1947 நவம்பர் மாதம் சுப்பையா டெல்லி சென்று பிர்லா மாளிகையில் காந்தியடிகளை சந்தித்தார். விடுதலை இயக்கத்திற்கு எதிராக கவர்னர் பரோன் மேற்கொண்டுள்ள வஞ்சக நடவடிக்கையினை விவரித்தார். சுப்பையாவின் கருத்தினை ஏற்றுக் கொண்ட காந்தியடிகள், அன்று மாலை நடந்த பிரார்த்தனை கூட்டத்தில், "பிரெஞ்சு ஏகாதிபத்தியம் நம் மண்ணில் நீடிப்பது சரியல்ல. அது உடனே வெளியேற வேண்டும்" என்ற கருத்தை வெளியிட்டார்.
1948_ல் ஜுன் 8_ந்தேதி இந்தியா _ பிரான்சு இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அதில் பிரெஞ்சு பகுதிகளின் எதிர்காலம் பற்றி அங்கு வாழும் மக்களின் கருத்துகளை பொது வாக்கெடுப்பு நடத்தி அதன்படி நடக்க இந்தியாவும் பிரான்சும் ஒப்புக்கொண்டன.
இதனிடையே 21 மார்ச் 1949_ல் கூடிய உள்ளாட்சி அமைப்புகள் இந்தியா _ பிரெஞ்சு ஒப்பந்தப்படி 12 டிசம்பர் 1949_ல் பொது வாக்கெடுப்பு நடத்தி மக்கள் கருத்தறிய முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்தத் தீர்மானத்தை பிரெஞ்சு அரசு ஏற்கவில்லை.
1949 ஜுன் 19_ந்தேதி பொது வாக்கெடுப்பு சந்திரநாகூரில் நடத்தப்பட்டது. 99 சதவீதம் மக்கள் சந்திரநாகூர் இந்தியாவுடன் இணைய வாக்களித்தனர். புதுவையில் அனைத்து தேசியவாதிகளையும் ஒரே அணியில் திரட்ட "நேஷனல் லிபரேஷன் பிரண்ட்" உருவானது.
புதுச்சேரியில் நான்கு பகுதிகளின் முனிசிபல் கவுன்சிலர்களும் புதுவை மேயர் கே.முத்துப்பிள்ளையின் தலைமையில் கூடினார்கள். பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதை காலவரையற்று தள்ளி வைத்து தீர்மானம் நிறைவேற்றினார்கள். பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு உள்பட்ட சுயேட்சை பகுதியாக புதுவை விளங்கலாம் என பிரெஞ்சு அரசு சொன்னதை ஏற்றும், மக்கள் பிரான்சுடன் இருக்குமாறு கூறியும் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இந்த தீர்மானத்திற்கு எதிராக போராடிய 125 விடுதலை வீரர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. கம்ïனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகமும், உணவு தானியக்கிடங்கும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
கம்யூனிஸ்டு தலைவர் சுப்பையா தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடித்துக் கொடுத்தால் ரூ.1,000 பரிசும், தகவல் கொடுத்தால் ரூ.500 பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நாளுக்கு நாள் இடத்தை மாற்றி சுப்பையா தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்.
கடலூரில் முதலியார்பேட்டை முன்னாள் மேயர் வைத்தியலிங்கம், சாம்பசிவம், வி.துளசிங்கம், மற்றும் கோட்டக் குப்பத்தில் கவிஞர் வெ.நாரா, முருகசாமி, கிளாமன்சோ ஆகியோரைக் கொண்டு விடுதலை இயக்க முகாம்கள் அமைக்கப்பட்டன.
அதைப்போலவே விழுப்புரம், நாகப்பட்டினம், தரங்கம்பாடி, நன்னிலம், தலைச்சேரி, காக்கிநாடா போன்ற எல்லை யோரப் பகுதியிலும் விடுதலை முகாம்கள் தொடங்கப்பட்டன. அதனால் சுதந்திர இயக்கம் தீவிரமடைந்தது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பாகிஸ்தானிலும் அன்னா அலை- ஊழலை எதிர்த்து தொழிலதிபர் உண்ணாவிரதப் போராட்டம்
» 21ஆம் நூற்றாண்டில் மக்கள் புரட்சியால் ஆட்சியை இழந்த தலைவர்கள்!
» ராணுவத்தை எதிர்த்து போராட்டம் எகிப்தில் வன்முறை 11 பேர் பலி May 3rd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» வெள்ளைக்காற வெறியர்களுக்கு எதிர்த்து நிற்க்கும் அப்பாவி மக்கள்
» ஊழலை எதிர்த்து ராஜ்நாத் சிங் தலைமையில் ஜுன் 2ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம்
» 21ஆம் நூற்றாண்டில் மக்கள் புரட்சியால் ஆட்சியை இழந்த தலைவர்கள்!
» ராணுவத்தை எதிர்த்து போராட்டம் எகிப்தில் வன்முறை 11 பேர் பலி May 3rd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» வெள்ளைக்காற வெறியர்களுக்கு எதிர்த்து நிற்க்கும் அப்பாவி மக்கள்
» ஊழலை எதிர்த்து ராஜ்நாத் சிங் தலைமையில் ஜுன் 2ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum