Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காங்கிரஸை ஆட்டிப் படைக்கும் வகையில் தனித்தெலுங்கானா கோரிக்கை தீவிரம்
Page 1 of 1

காங்கிரஸை ஆட்டிப் படைக்கும் வகையில்
தனித்தெலுங்கானா கோரிக்கை தீவிரம்
ஆந்திர அமைச்சர்கள் புதுடில்லி விரைவு;
ஹைதராபாத்தில் வழமை நிலைமை ஸ்தம்பிதம்
தனித் தெலுங்கானா மாநிலக் கோரிக்கை இப்போது டில்லியை மையம் கொண்டுள்ளது. இது மத்திய
அரசுக்கும், காங்கிரஸ¤க்கும் கடும்நெருக்கடியைக் கொடுத்துள்ளது. ஆந்திர மாநில
அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் அடங்கிய 10 பேர் கொண்ட காங்கிரஸ் குழு பிரதமரைச்
சந்தித்து அவசர ஆலோசனை நடத்தியது.
மற்றொருபுறம், டில்லியில் முகாமிட்டுள்ள டி.ஆர்.எஸ். தலைவர் சந்திரசேகரராவ் பா.ஜ.
மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இவ்விடயம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
ஹைதராபாத் நகரமே ஸ்தம்பிக்கும் வகையில்
தொடர்ந்து 21 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக அம்மாநில முக்கிய
தலைவர்கள் டில்லியில் குவிந்துள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த 10 பேர் குழு நேற்று
முன்தினம் டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசியது.
இதில் மாநில அமைச்சர்கள் கீதாரெட்டி, ஜெனா ரெட்டி மற்றும் மூத்த காங்கிரஸ்
எம்.பி.க்கள் கேசவ் ராவ், மது யாV உள்ளிட்ட பலர் இடம்பிடித்திருந்தனர். இந்த
குழுவினர் பிரதமரிடம் பேசும்போது தற்போதுள்ள நிலவரம் குறித்து தெளிவாகவும் அடிமட்ட
களத்தில் நிலைமை எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் தீவிரமாக விளக்கினர்.
மக்கள் வசிப்பதற்கே பொருத்தமில்லாத நகரமாக மாறும் அபாயம் உள்ளது. இதுவரை
வன்முறையற்ற போராட்டத்தை மட்டுமே கடைப்பிடித்த மக்கள் நிலைமை கைமீறிப் போனால்
வீதியில் இறங்கவும் தயங்கமாட்டார்கள் என்றே தெரிகிறது. எனவே இனியும் முடிவெடுக்கத்
தயங்கினால் நிச்சயம் விபரீதம் ஏற்படும் என்று இந்தக் குழுவினர் பிரதமரிடம்
விளக்கினர்.
மேலும் இப்போதும் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமெனில் தெலுங்கானா
கோரிக்கை குறித்து பரிசீலனை செய்கிறோம் என மத்திய அரசு கூறினால் போதும். மக்கள்
மனமாற்றம் அடைந்து போராட்டத்தைக் கைவிட வாய்ப்பிருப்பதாக அந்தக் குழு கேட்டுக்
கொண்டது. ஆனால் இதற்கு பிரதமர் மறுப்பு தெரிவித்து விட்டார்.
இருப்பினும், இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் ஆலோசனை மேற்கொண்டுவிட்டு
அதன் பிறகு தக்கதோர் முடிவு எடுக்கப்படும் என்று மட்டும் பிரதமர் கூறியதாகத்
தெரிகிறது. சந்திப்பு; இதற்கிடையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர
ராவ் கடந்த மூன்று நாட்களாகவே டில்லியில்தான் முகாமிட்டுள்ளார். அவரும் நேற்று
முன்தினம் லோக்சபா எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்
பரதன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அது மட்டுமல்லாது அவரும் பிரதமர் மன்மோகன்
சிங்கை சந்தித்துப் பேசினார்.
அவர் பிரதமரை சந்தித்த போது தெலுங்கானா போராட்டக் கூட்டுக் குழுவும் அவருடன்
சென்றிருந்தது. தெலுங்கானா குறித்த போராட்டத்தின் தற்போதைய நிலைவரம் குறித்தும்,
மறுத்தால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதையும் விரிவாக இந்தக் குழு பிரதமரிடம்
எடுத்துக் கூறியது.
இந்நிலையில் ஆந்திர மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்ச ருமான
குலாம் நபி ஆசாத் சார்பில், தெலுங் கானா பிரச்சினைக்காக ஒரு அறிக்கை சோனியா விடம்
அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த அறிக்கை
சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிக்கையின் அம்சங்கள் குறித்தும் பரவலாக
வெளிவரத் தொடங்கியுள்ளது.
இந்த அறிக்கையின் முழு விவரங்கள் வெளியாக வில்லை என்றாலும் கூட பிரச்சினைக்கு
தீர்வாக நான்கைந்து முக்கிய அம்சங்கள் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதன்படி ஹைதராபாத் நகரத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்து விடுவது என்ற ஒரு பரிந்துரை
செய்யப்பட் டுள்ளது.
ஆந்திர மாநிலத்திற்கு விஜயவாடாவை தலைநகரமாகிக் கொள்வது என்றும் தெலுங் கானா
மாநிலத்திற்கு வாராங்கல் நகரத்தை தலைநகரமாக்கிக் கொள்வது என்றும் பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யப்படுவதன் மூலம் இரண்டு தரப்பையும்
திருப்திப்படுத்திக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல மற்றொரு யோசனையாக ஹைதராபாத் நகரத்தை பத்து ஆண்டுகளுக்கு பொது தலைநகரமாக
ஆக்கிக் கொண்டு பிறகு தெலுங்கானாவிடம் ஒப்படைத்து விடலாம் என்றும் அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு என்ன முடிவு எடுத்தாலும், அது காங்கிரஸ்
கட்சியின் முழு சம்மதத்துடன் தான் இருக்கும் எனத் தெரிகிறது. இப்பிரச்சினை குறித்து
இரண்டு தடவைக்கு மேல் காங் மேலிடக் குழு கூடி ஆலோசித்து முடித்துவிட்டது. ஆனாலும்,
இறுதி முடிவை இதுவரை அந்த கட்சியால் எடுக்க முடியவில்லை. இருப்பினும் மாநில
அளவிலும் தேசிய அளவிலும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி அதில் ஆலோசித்து ஒரு
முடிவுக்கு வரலாம் என்ற மனநிலைக்கு காங், வந்துள்ளது. வெகு விரைவில் இதுபற்றிய
அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நவகிரகங்கள் நம்மை ஆட்டிப் படைக்காமலிருக்க…
» 2ஜி..ப.சிதம்பரம் விவகாரம்: காங்கிரஸை திருப்பி அடிக்கும் திமுக!
» கின்னஸ் சாதனை படைக்கும் களத்தில் வெலிக்கடை சிறைச்சாலை!
» சுரங்க மோசடி: கர்நாடக அரசை ஆட்டிப் படைத்த ரெட்டி சகோதரரை சி.பி.ஐ. கைது செய்தது
» சாதனை படைக்கும் ஆஷிமா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum