சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சபரிமலையில் ஜோதி தினத்தில் நிகழ்ந்த நெரிசலில் 106 பேர் பலி. Khan11

சபரிமலையில் ஜோதி தினத்தில் நிகழ்ந்த நெரிசலில் 106 பேர் பலி.

2 posters

Go down

சபரிமலையில் ஜோதி தினத்தில் நிகழ்ந்த நெரிசலில் 106 பேர் பலி. Empty சபரிமலையில் ஜோதி தினத்தில் நிகழ்ந்த நெரிசலில் 106 பேர் பலி.

Post by *சம்ஸ் Sun 16 Jan 2011 - 6:32

சபரிமலையில் ஜோதி தினத்தில் நிகழ்ந்த நெரிசலில் 106 பேர் பலி. Large_166811

குமுளி : சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதியை காண சென்ற தமிழகம், ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 106 பேர், கூட்டநெரிசலில் சிக்கி பலியாயினர். லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடந்த இடம் வெளிச்சம் இல்லாத அடர்ந்த வனப்பகுதி என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் முக்கிய நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பன் கோயிலில் திரண்டனர். இதனால், போலீசார் கோயிலை சுற்றியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கேரள மாநிலம் குமுளியில் இருந்து வண்டிப்பெரியார், வல்லக்கடவு வழியாக வந்த பக்தர்கள், சபரிமலையிலிருந்து 7 கி.மீ., தூரத்தில் உள்ள வனப்பகுதியான புல்மேடு பாதைக்கு வந்தனர்.

ஜோதி தரிசனம்: அதிக கூட்டம் காரணமாக கோயிலுக்கு அருகே செல்ல முடியாத நிலையில், அங்கிருந்தே மகரஜோதியை தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு ஜோதி தரிசனம் செய்துவிட்டு, வண்டிப்பெரியார் நோக்கி பக்தர்கள் திரும்பினர். வனப்பகுதி என்பதால் சரியான பாதை வசதி இல்லை. மேலும் குறுகிய இடத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்ததாலும், தரிசனம் முடித்துவிட்டு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

கூட்ட நெரிசல்: சிறிது தூரத்தில் பக்தர்களை ஏற்றிச் செல்ல வாடகை ஜீப் ஒன்று நின்று கொண்டிருந்தது. கூட்ட நெரிசலில் இருந்து வெளியேறவும் ஜீப்பில் ஏறிச்செல்லவும் ஒரே நேரத்தில் பல பக்தர்கள் முயன்றனர். பலர் ஜீப்பில் ஏறியதும், நின்றுகொண்டுஇருந்த ஜீப் கவிழத்தொடங்கியது. இதையறிந்த பின்னால் வந்த பக்தர்கள் ஜீப் தங்கள் மீது விழுந்து விடுமோ என்று பயந்து தப்பித்து ஓடினர். இதில், பலர் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்படவே பலரும் முண்டியடித்துக் கொண்டு விலகி ஓட முயல ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர். இதில் மூச்சுத்திணறியும், வனப்பகுதியிலுள்ள பாறை மீது மோதியும் பலர் உயிரிழந்தனர்.

மீட்பு பணியில் சிக்கல்: இரவு 9 மணிக்கு இந்த சம்பவம் நடந்தும், தாமதமாகவே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இரவு 10 மணிக்கு போலீசார், தீயணைப்பு துறை, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியை துவக்கினர். சம்பவ இடத்திற்கு செல்ல இடையூறாக வண்டிப்பெரியார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தது. மேலும் இரவு நேரம் என்பதால் வனப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததும் மீட்பு பணியில் சிக்கலை ஏற்படுத்தியது. கேரள டி.ஜி.பி., ஜேக்கப் குன்னூஸ், ஐ.ஜி.,கள் சந்தியா, ஹேமச்சந்திரன், எஸ்.பி., ஜார்ஸ்வர்கீஸ் கலெக்டர் அசோக்குமார்சிங் ஆகியோர் முன்னிலையில் மீட்புப்பணியில் போலீஸ், தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர். சம்பவம் நடந்து 6 மணி நேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணிக்குத் தான் மூன்று உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்களை சிகிச்சைக்கு குமுளி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருவதில், போக்குவரத்து நெரிசலால் சிக்கல் ஏற்பட்டது. ஒரு வழியாக அதிகாலை 4 மணி முதல் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடந்தன. காலை 7 மணிக்கு மீட்பு பணி முழுமை அடைந்தது. இதில், ஒரு பெண், மூன்று குழந்தைகள் உட்பட 106 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இறுதிச்சடங்கிற்கு உதவி: இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல, சவப்பெட்டிகளுக்கு கேரள அரசு ஏற்பாடு செய்தது. இடுக்கி, பத்தனம்திட்டா பகுதிகளில் இருந்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இறுதிச்சடங்கிற்காக கேரள அரசு 5000 ரூபாய் வழங்கி உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் உதவி: "சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 106 பேர் பலியாகினர். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, மத்திய, மாநில அரசுகள் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளன.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் புல்லுமலை வனப்பகுதியில், ஏற்பட்ட நெரிசலில் பலர் இறந்தனர். மரணம் அடைந்தவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் உள்ளதாக முதல் நிலை தகவல் தெரிவிக்கிறது. அவர்களது குடும்பத்திற்கு முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதியும், காயமடைந்தோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் மருத்துவ செலவுக்கும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு: அதே போல் நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் சார்பில் மீட்புக்குழு: இறந்த தமிழக பக்தர்களின் உடல்களை அவரவர் ஊருக்கு அனுப்பிவைக்கவும், உறவினர்களுக்கு உதவவும் தேனி கலெக்டர் முத்துவீரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. பெரியகுளம் ஆர்.டி.ஓ., இளங்கோவன் உட்பட வருவாய்த்துறை அலுவலர்கள் தனியாக உதவி மையம் திறந்து (போன்: 04554-235 254) உதவிகளை செய்தனர். இறந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. பாலகிருஷ்ணன் எஸ்.பி., மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிகளை செய்தனர்.

சபரிமலை சோகம்

சபரிமலைக்கு எத்தனை பாதை: சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிப்பதற்கு, பக்தர்கள் மூன்று பாதைகளை பயன்படுத்துகின்றனர். முதலாவதாக கோட்டயத்தில் இருந்து பம்பை செல்வது ஒரு பாதை. எரிமேலியில் இருந்து பம்பை செல்வது அடுத்த வழித் தடம். இந்த இரண்டு பாதையைத் தான், பக்தர்கள் பெரும்பாலும் அதிகமாக பயன்படுத்துவர். 3வது பாதை, வண்டிப்பெரியாரில் இருந்து சபரிமலை செல்வது. தமிழகத்தின் தேனி, கம்பம், மதுரை போன்ற இடங்களில் இருந்து செல்லும் பக்தர்கள், இந்த பாதையைத் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். விபத்து நடந்த தினத்தில் மட்டும், மூன்று லட்சம் பக்தர்கள் இந்த பாதையை பயன்படுத்தியுள்ளனர்.

புலிகள் அதிகம் நடமாடும் இடம்: நேற்று முன்தினம், சபரிமலை அருகேவிபந்து நடந்த இடம், புல்மேடு என, அழைக்கப்படுகிறது. அடர்ந்த வனப் பகுதி என்பதால், இங்கு புலி மற்றும் சிறுத்தைகள் அதிகமாக நடமாடுவதாக பக்தர்கள் கூறுவது உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இங்கு புலி, சிறுத்தை போன்ற மிருகங்களால், பக்தர்கள் தாக்குதலுக்கு உள்ளான சம்பவங்கள் நடந்தது உண்டு. மேலும், இந்த பகுதி முழுவதும் அடர்த்தியான புல்வெளிகள் நிறைந்து காணப்படும். இதனால் தான் இதை புல்மேடு என, கூறுகின்றனர்.

எங்கு பார்த்தாலும் கறுப்பு மயம்: விபத்து நடந்த புல்மேடு பகுதியில் பக்தர்கள் அணிந்திருந்த மற்றும் கொண்டு வந்திருந்த கறுப்பு மற்றும் காவி நிற உடைகள் சிதறிக் கிடந்தன. இதனால், எங்கு பார்த்தாலும் ஒரே கறுப்பு மயமாக இருந்தது. பக்தர்கள் வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்த பிரசாத பொட்டலங்கள், அந்த பகுதி முழுவதும் சிதறிக் கிடந்தன. பக்தர்களின் பேக், துணிப் பைகள் ஆகியவையும் அந்த பகுதியில் நிறைந்து காணப்பட்டன.

இரண்டு மணி நேரமாயிற்று: புல்மேடு பகுதியில் பக்தர்கள் நெரிசல் காரணமாக, இரவு 8.15க்கு விபத்து ஏற்பட்டது. இருந்தாலும், இந்த விபத்து விவரம் யாருக்கும் தெரியவில்லை. விபத்து நடந்த இடம், அடர்ந்த வனப் பகுதி என்பதாலும், உரிய நேரத்தில் யாரும் தகவல் தெரிவிக்கவில்லை என்பதாலும், இரண்டு மணி நேரத்துக்கு பின்னர் தான், விபத்தின் விபரீதம் வெளி உலகிற்கு தெரியவந்தது. மீட்பு குழுவினரும், அதற்கு பின்தான் பணியை துவக்கினர்.

போலீசார் குறைவு: விபத்து நடந்த இடத்தில், கூட்டத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு போலீசார் எண்ணிக்கை இல்லை. பெரும்பாலான போலீசார், சன்னிதானம் மற்றும் பம்பை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டு இருந்தனர். புல்மேடு பகுதியில் இந்த அளவுக்கு அதிகமான பக்தர்கள் வருவர் என, யாருமே எதிர்பார்க்காததால், இங்கு போதிய அளவு போலீசார் பணி அமர்த்தப்படவில்லை. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்து விட்டது.

கடற்படை விரைந்தது: கொச்சியில் உள்ள தெற்கு பிராந்திய கடற்படை தளத்தில் இருந்து, விபத்து நடந்த புல்மேடு பகுதிக்கு, மருத்துவ குழு ஒன்று, ஹெலிகாப்டர் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் டாக்டர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஏராளமான மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டன. மற்றொரு ஹெலிகாப்டர் கண்ணூரில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இதில், கேரள முதல்வர் அச்சுதானந்தன் சென்றார்.

ஜனவரி 14 கறுப்பு நாள்: சபரிமலை பக்தர்களுக்கு, கடந்த 14ம் தேதி, கறுப்பு நாளாக மாறி விட்டது. கடந்த 1952 ஜனவரி 14ல் சபரிமலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 66 பக்தர்கள் பலியாயினர். இதேபோல், கடந்த 1998ல் ஜனவரி 14ல், பம்பையில் குவிந்திருந்த பக்தர்களிடையே திடீரென நெரிசல் ஏற்பட்டது. இதில் 52 பக்தர்கள் பலியாயினர். தற்போது நடந்த விபத்தும், ஜனவரி 14ல் தான் நடந்துள்ளது. கடந்த 1998ல் ஏற்பட்ட விபத்துக்கு பின், பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், கேரள போலீசார் அறிவியல் பூர்வமான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக விபத்து எதுவும் ஏற்படாமல் இருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள விபத்து, சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.

நடிகர் உயிர் தப்பினார்: பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய், சபரிமலை ஐயப்பனின் தீவிர பக்தர். கடந்த 13 ஆண்டுகளாக அவர், சபரிமலைக்கு வந்து செல்கிறார். இந்தாண்டும், மகர ஜோதி தரிசனத்தை காண்பதற்காக அவர், கடந்த வியாழன் இரவே சபரிமலைக்கு வந்து விட்டார். தரிசனம் முடிந்ததும், அவர் மும்பை புறப்பட்டுச் சென்றார். அடுத்த ஒரு சில மணி நேரத்தில் புல்மேடு பகுதியில் நெரிசல் ஏற்பட்டு, மிகப் பெரிய துயரம் அரங்கேறி விட்டது.

ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்: கேரளாவில் நெரிசலில் சிக்கி ஐயப்ப பக்தர்கள் இறந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார். இதேபோல், பிரதமர் மன்மோகன்சிங்கும் முதல்வர் அச்சுதானந்தனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, சபரிமலை நெரிசல் சம்பவம் பற்றி கேட்டறிந்தார். அத்துடன் நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவும், சம்பவம் குறித்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் உடல்களை வைக்கக்கூட இடமில்லை

* இறந்தவர்களின் உடல்கள் வைக்ககூட குமுளி அரசு ஆஸ்பத்திரியில் இடம் இல்லை.

* ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் பலியான சம்பவம் தெரிந்தவுடனேயே குமுளி ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் அனைவரும் வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.

* பலியானவர்களில் கர்நாடகாவை சேர்ந்த 25 பேரின் உடல்களை, அம்மாநில அரசு ஹெலிகாப்டர் மூலம் கொச்சி எடுத்துச்சென்று, அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு கொண்டு சென்றது.

* ஆந்திராவை சேர்ந்த பலியான 16 பேரின் உடல்களை கொச்சி வழியாக ஐதராபாத் எடுத்துச்செல்ல அம்மாநில அரசு ஏற்பாடு செய்திருந்தது.

* சவப்பெட்டிகள் பற்றாக்குறை ஏற்பட்டதால் உடனடியாக தயாரிக்க உத்தரவிடப்பட்டது.

* ஆம்புலன்ஸ் பற்றாக்குறை காரணமாக கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும் வரவழைக்கப்பட்டன. மேலும் தமிழகத்திலிருந்தும் ஆம்புலன்ஸ்கள் சென்றது.

பாதுகாப்புக்கு ஒரு போலீசார் கூட இல்லை: உயிர் தப்பியவர்கள் உருக்கமான பேட்டி: புல்மேட்டில் நேற்று முன்தினம் நடந்த நெரிசலில் சிக்கி 106 பக்தர்கள் பலியாயினர். இதில் காயமடைந்தவர்கள் கூறியதாவது:

பி.சின்னச்சாமி, சேலம்: மூச்சு விடக்கூட முடியாத அளவிற்கு புல்மேடு பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் இறங்கி வந்து கொண்டிருந்தனர். பாதையின் இருபுறமும் உள்ள கடைகள், அவற்றில் இருந்து வந்த கழிவு நீர் இவற்றால் பாதை முழுவதும் ஒரே தண்ணீர், சகதியாக இருந்தது. கூட்டத்தை ஒழுங்கு படுத்த போலீசார் யாரும் இல்லை. ஆறு வாகனங்களில் சென்ற 69 பேரில் நான் மட்டும் கூட்ட நெரிசலில் சிக்கி எப்படியோ உயிர் தப்பி விட்டேன்.

எஸ்.கன்னையா, தர்மபுரி: புல்மேடு பகுதியில் இருந்து ஏழு கி.மீ.,தூரத்திற்கு அப்பால் தமிழக வாகனங்களை நிறுத்தி விட்டனர். ஆனால், கேரள வாகனங்கள் எந்த கட்டுப்பாடும் இன்றி கூட்ட நெரிசல் பகுதிக்கு வந்து சென்றன. குறுகலான பாதையில் வந்தபோது, ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப், ஆட்டோவை தள்ளும் நிலை ஏற்பட்டது. பல பக்தர்கள் நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தனர். விழுந்தவர்களை அருகிலிருந்தவர்கள் தூக்கி விடுவதற்குள், அடுத்தடுத்து ஒருவர் மேல் ஒருவர் விழும் நிலை ஏற்பட்டது. அடியில் சிக்கியவர்கள் மிதிபட்டு இறந்தனர். பலர் காயம் அடைந்து மூர்ச்சையாகி கிடந்தனர். அவர்களை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இடத்தில் பாதுகாப்புக்கு போலீசார் ஒருவர் கூட இல்லை. பக்தர்களை ஒழுங்குபடுத்தி, கூட்டத்தை கட்டுப்படுத்தி இருந்தாலோ அல்லது வாகனங்களை அனுமதிக்காமல் இருந்திருந்தாலோ, இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது.

கேரளத்தில் மூன்று நாள் துக்கம்: ஐயப்ப பக்தர்கள் பலியானதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கேரளத்தில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என, முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்தார். சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததைத் தொடர்ந்து குமுளி வந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன், அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பக்தர்களின் உடல்களை பார்வையிட்டார். பின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அவர் கூறியதாவது: இறந்தவர்களின் குடும்பத்திற்கு கேரள அரசு மற்றும் தேவசம்போர்டு சார்பில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதிக காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம், சிறு காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். உடல்களை அவரவர் மாநிலங்களுக்கு எடுத்துச்செல்ல இலவச ஆம்புலன்ஸ் வசதியும், தேவைப்பட்டால் விமானத்தில் கொண்டு செல்லவும் அரசு செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர இறுதி சடங்கிற்காக தலா 5000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களே அதிகம் பலியாகி உள்ளனர். அவர்களின் விபரம் முழுமையாக இன்னும் தெரியவில்லை. பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கேரள அரசு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கும். சம்பவம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். புல்மேடு பகுதியில் ரோடு வசதி உட்பட எந்த அடிப்படை வசதியும் செய்யாதது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அச்சுதானந்தன், ""எதுவும் இப்போது சொல்வதற்கில்லை. உங்களுக்கு எது தோன்றுகிறதோ அதை எழுதிக்கொள்ளுங்கள்,'' என்றார்.

பாதுகாப்பில் அலட்சியமே விபத்திற்கு காரணம்: விபத்து நடந்த புல்மேடு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு மிகவும் குறைவாக இருந்துள்ளது. குறுகலான பாதையுள்ள வனப்பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் முண்டியடித்து சென்றுள்ளனர். இதை யாரும் ஒழுங்குபடுத்தவில்லை. இவர்களை கட்டுப்படுத்தி முறைப்படுத்த போதுமான போலீசார் பணியில் இல்லை. அங்கு பெயரளவில் ஐந்து போலீசாரே இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். கேரள ஜீப் டிரைவர்கள், ஆட்டோக்கள் இந்த குறுகலான பாதையையும் அடைத்து நின்று கொண்டு ஆட்களை ஏற்றி உள்ளனர். ஜீப்பில் அளவுக்கு அதிகமாக 30 பேர் வரை ஏற்றியுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடு குளறுபடியே உயிர்சேதம் அதிகமாக காரணமாக இருந்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சபரிமலையில் ஜோதி தினத்தில் நிகழ்ந்த நெரிசலில் 106 பேர் பலி. Empty Re: சபரிமலையில் ஜோதி தினத்தில் நிகழ்ந்த நெரிசலில் 106 பேர் பலி.

Post by *சம்ஸ் Sun 16 Jan 2011 - 6:32

இறந்த பக்தர்கள் விபரம்

தமிழகம்

1.ராஜ்குமார் (30), நீலகிரி.
2. கலைமணி (31), தர்மபுரி.
3. முருகேசன் (50),நீலகிரி.
4. ராமர் (58), திருவண்ணாமலை
5.குமரன் (40), தர்மபுரி.
6. கிருஷ்ணபிரசாந்த் (34), ராமலிங்கம் காலனி, சென்னை.
7. செல்வராஜ் (40) திருப்பூர்.
8.ராமலிங்கம் (40), கடலூர்
9.கோவிந்தராஜ் (45), மேட்டுப்பாளையம்.
10.சாந்தமூர்த்தி (23), மதிவாணன்பாளையம்.
11.ஸ்ரீகாந்த் (30), கர்னல்கோடு.
12.ராமகிருஷ்ணன் (55), கோயம்புத்தூர்.
13.அஜீத்குமார் (33) பொள்ளாச்சி.
14.சதீஷ் (34), குமாரசுவாமிபட்டி.
15.தாரணி (39), வியாசபுரம், திருவள்ளூர்
16.அன்பரசு (42), பல்லடம்.
17.பால்ராஜ் (40) தர்மாநகரம், திருநெல்வேலி
18.கேசவன் (49), சென்னை
19.சபரீசன் (27), சீறூர்பட்டி பாளையம்,கோவை
20.கனகராஜ் (50), சத்தியமங்கலம்
21.தர்மராஜ் (10),நாமக்கல்
22.ஐயப்பன் (30), மக்கனூர், தர்மபுரி
23.பழனிச்சாமி (50) செட்டிபாளையம், பேரூர்
24.சுப்பிரமணியன், சின்னகாஞ்சிபுரம்
25. தங்கம், தூத்துக்குடி.
26. ராஜரத்தினம், பொள்ளாச்சி.
27.தேவேந்திரராஜ்,மேட்டுப்பாளையம்
28.கிருஷ்ணன், தர்மபுரி.
29.ராமன், கடலூர்
30.கலைமணி, மதிவாணன்பாளையம், தர்மபுரி.
31.ரகு, மதிவாணன்பாளையம், தர்மபுரி.
32.நந்தினி (11), தொப்பம்பட்டி, கோவை.
33.கனகராஜ், எரியப்பபாளையம், சத்தியமங்கலம்.
34. தரணி, வியாசபுரம், திருவேற்காடு
35.பிரசாத், வாழப்பாடி, சேலம்.

கேரளா
36. உன்னிகிருஷ்ணன் (42),
37. கோர்குட்டி (60) மலப்புரம்,
38. பத்மநாபன், பாலக்காடு.
இலங்கை
39. உஷாகாந்த்(24)
* கர்நாடகாவை சேர்ந்த 25 பேர்,
* ஆந்திராவை சேர்ந்த 16 பேர்
மீதமுள்ளவர்கள் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை


நன்றி தினமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சபரிமலையில் ஜோதி தினத்தில் நிகழ்ந்த நெரிசலில் 106 பேர் பலி. Empty Re: சபரிமலையில் ஜோதி தினத்தில் நிகழ்ந்த நெரிசலில் 106 பேர் பலி.

Post by ஹனி Sun 16 Jan 2011 - 7:14

:!.: :!.: m--+
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

சபரிமலையில் ஜோதி தினத்தில் நிகழ்ந்த நெரிசலில் 106 பேர் பலி. Empty Re: சபரிமலையில் ஜோதி தினத்தில் நிகழ்ந்த நெரிசலில் 106 பேர் பலி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum