சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.  Khan11

கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.

4 posters

Go down

கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.  Empty கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.

Post by kalainilaa Tue 25 Oct 2011 - 1:11



விடுதலை வீரர்களின் நண்பன்
உலக எண்ணெய் வளத்திலேயே லிபியாவில் உள்ள எண்ணெய் வளம்தான் மிகத் தூய்மையானது. சதாம் ஹுசேயின் அரபு நாடுகள் தமது எண்ணெய் விலையை அமெரிக்க டொலர்களில் நிர்ணயம் செய்யாமல் யூரோ நாணயத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறியதற்காக கொல்லப்பட்டார். மும்மர் கடாஃபி எண்ணெய விலையை தங்கத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறியதற்காகக் கொல்லப்பட்டார். கடாஃபியை கொல்லாமல் உயிருடன் பிடித்து விசாரித்திருந்தால் அவர் பல ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்குக் கொடுத்த இலஞ்சங்கள் வெளி வந்திருக்கும். ஒரு மடிக்கணனி(Laptop) இலவசமாகக் கொடுத்து ஐந்து ஆண்டுகாலம் ஆட்சியில் அமர்ந்து கொள்கிறார்கள். காடாஃபியோ அள்ளி அள்ளிக் கொடுத்தார்.


புரட்சி வீரர்களின் நண்பன்.


மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்களின் நண்பன்

1. அனைவருக்கும் மின்சாரம் இலவசம்.
2. லிபிய வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு வட்டி அறவிடப்படுவதில்லை.
3. மக்களுக்கு வீடு என்பது அடிப்படை உரிமை. லிபிய நாட்டின் அனைத்து மக்களுக்கும் வீடு கிடைக்கும் வரை தனது தந்தைக்கு கடாஃபி வீடு கொடுக்கவில்லை. கடாஃபியின் தந்தை இறக்கும் வரை ஒரு கூடாரத்திலேயே வசித்தார்.
4. லிபியாவில் திருமணமான தம்பதிகளுக்கு அறுபதினாயிரம் டினார்கள் (50,000அமெரிக்க டொலர்கள்) இலவசமாக அவர்கள் வீடு வாங்கவும் வாழ்க்கையை ஆரம்பிக்கவும் வழங்கப்படும்.
5 அனைவருக்கும் இலவசக் கல்வி. கடாஃபி ஆட்சிக்கு வரமுன் லிபியாவின் படித்தவர்கள் 25%. இப்போது 83%
6. அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி.
7. லிபிய மக்கள் எவராவது விவசாயம் செய்ய விரும்பினால் அவர்களுக்கு இலவசக் காணி, வீடு, விவசாய உபகரணங்கள் வழங்கப்படும்.
8. லிபிய மக்களில் எவருக்காவது தேவையான கல்வியோ அல்லது மருத்துவ வசதியோ லிபியாவில் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் வெளி நாடு சென்று அவற்றைப் பெற அதற்குரிய செலவை லிபிய அரசு பொறுப்பேற்கும். அத்துடன் மாதமொன்றுக்கு அவர்களுக்கு அமெரிக்க டாலர்கள் 2300ஐ இலவசமாக வழங்கும்.
9 லிபிய மக்கள் எவராவது மகிழூர்தி(Car)வாங்க விரும்பினால் அரைவாசிச் செலவை லிபிய அரசு வழங்கும்.
10 லிபியாவில் பெட்ரல் விலை US $0.14. per litre.
11 லிபியாவிற்கு வெளிநாட்டுக் கடன் எதுவுமில்லை.அதன் வெளிநாட்டுச் சொத்து $150பில்லியன்கள்
12. பட்டதாரி ஒருவருக்கு வேலை கிடைக்கும் வரை சராசரி பட்டதாரிக்குரிய சம்பளத்தை லிபிய அரசு வழங்கும்.
13. லிபிய எண்ணெய் விற்பனை வருமானத்தின் ஒரு பகுதி நேரடியாக ஒவ்வொரு லிபிய மக்களினது வங்கிக்கணக்கில் வைப்பிலடப்படும்.
14. பிள்ளை பெறும் ஒரு தாய்க்கு அரசு US $5,000 வழங்கும்.
15 லிபியாவில் 40துண்டங்கள் அடங்கிய பாணின் விலை US $0.15
16. லிபிய மக்களில் 25% மானோர் பல்கலைக்கழகப் பட்டதாரிகள்.
17. உலகத்திலேயே பாரிய நீர்ப்பாசனத் திட்டம் - செயற்கை ஆறு லிபியாவில் மேற்கொள்ளபட்டது.
18. ஆபிரிக்காவிற்கான தொலை தொடர்புச் செய்மதியை ஒழுங்கு செய்ய கடாஃபி பணம் கொடுத்தார்.
19. ஆபிரிக்கக் கண்டத்திலேயே லிபியா மிகச் செல்வந்த நாடு.
20. ஆபிரிக்கக் கண்டத்திலேயே வாழ்கைத் தரம் மிக உயர்ந்தவர்கள் லிபியர்கள்.


கடாஃபிக்கு எதிரான கருத்துக்கள்

லிபியாவின் வெளிநாட்டுச் சொத்து $150பில்லியன்கள் ஆனால் கடாஃபியின் சொத்து $200 பில்லியன்கள்.
கடாஃபி சவுதி மன்னரிலும் பார்க்க மூன்று மடங்கு செல்வந்தர்.
கடாஃபி சிறப்பாக பொருளாதாரத்தை நிர்வகிக்கவில்லை.
லிபிய வருமானத்தின் 5% கடாஃபியைப் போய்ச் சேரும். கடாஃபி நாட்டின் கட்டமைப்புக்களை(infrastructure) சரியாக அபிவிருத்தி செய்யவில்லை.


அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்கு கொழும்பு வந்திருந்தபோது கடாஃபியின் படத்தில் கையெழுத்து வாங்கப் பல இலங்கை அதிகாரிகள் திரண்டனர்.
கடாஃபியை மேற்குலகினர் ஏன் வெறுத்தனர்.
கடாஃபியின் பெயரை எப்படி எழுதுவது என்பதில் மேற்குலக ஊடகங்களிடை பெரும் குழப்பம்.
ஆபிரிக்காவிற்கான தொலை தொடர்புச் செய்மதியை ஒழுங்கு செய்ய கடாஃபி பணம் கொடுத்தார். இதனால் மேற்கத்திய வர்த்தகர்களுக்கு பெரு நட்டம் ஏற்பட்டது.
கடாஃபி தனது நாட்டில் சீனாவின் முதலீட்டை அதிகரித்தார். பல அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவிற்கு அதிக வாய்ப்புக்கள் வழங்கினார். காடாஃபிக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பித்தவுடன் லிபியாவில் இருந்து 30,000க்கு அதிகமான சீனர்கள் வெளியேறினர்.
கடாஃபி ஒரு ஆபிரிக்க நாணய நிதியத்தை உருவாக்க முயன்றார். இது மேற்குலக ஆதிக்கத்தில் உள்ள பன்னாட்டு நாணய நிதியத்திற்கு பெரும் சவாலாக அமையும்.

நன்றி http://veltharma.blogspot.com/2011/10/blog-post_24.html
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.  Empty Re: கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 25 Oct 2011 - 7:32

மிக்க நன்றி சகோ இப்படியொரு பதிவினை தேடியிருந்தேன் பகிர்வுக்கு நன்றி ஜசாக்கள்ளாஹ் கைர்

இத்தனை செய்த 42 வருட ஆட்சியாளனின் மரணம் அவருக்கு இழைக்கப்பட்ட கொடூரம் கண்ணீரை வரவைத்தது இறைவன் மாத்திரம் இவைகளுக்கு பதிலழிக்க தகுதியானவன் நன்றி சகோ


கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.  Empty Re: கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.

Post by kalainilaa Tue 25 Oct 2011 - 8:13

நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க நன்றி சகோ இப்படியொரு பதிவினை தேடியிருந்தேன் பகிர்வுக்கு நன்றி ஜசாக்கள்ளாஹ் கைர்

இத்தனை செய்த 42 வருட ஆட்சியாளனின் மரணம் அவருக்கு இழைக்கப்பட்ட கொடூரம் கண்ணீரை வரவைத்தது இறைவன் மாத்திரம் இவைகளுக்கு பதிலழிக்க தகுதியானவன் நன்றி சகோ
@. @. :”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.  Empty Re: கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.

Post by அப்துல்லாஹ் Tue 25 Oct 2011 - 8:22

லிபியாவில் ஆரம்பமான உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் கிளர்ச்சியைத் தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி கடாபி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததையடுத்து மேற்கு நாடுகள் லிபியாவுக்கு எதிராக யுத்தத்தை தற்போது மேற்கொண்டு வருகின்றது.

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அந்நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் புதிய பாணியில் அமெரிகா செயற்படுகிறது அதற்கு ஐ.நா. ஒத்துழைப்பு வழங்குகிறது என்பது நடுநிலையாளர்களின் குற்றச்சாட்டு.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின் “உலக நாடுகளுக்கிடையில் யுத்தம் எதுவும் ஏற்படாமல் தடுக்கவும் நாடுகளை ஆக்கிரமிக்காமல் இருக்கவும் நல்லுறவுகளை வளர்க்கவும் அவசியம் கருதி உருவாக்கப்பட்டதுதான் ஐ.நா. சபை”. ஆனால் இன்று அறபு நாடுகளின் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிட்டு ஆக்கிரமிப்பு பணிகளில் ஈடுபடும் அமெரிக்காவின் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கும் தவறான செயலை ஐ.நா. செய்து வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டனின் சைகைக்கு தலையாட்டும் சபையாக ஐ.நா. ஆகியதன் விளைவாகவே இன்று உலகம் பெரும் அழிவை சந்திக்கிறது.

கடந்த 2001 மற்றும் 2003ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான். ஈராக் மீது போர் தொடுக்க அமெரிக்கா முன்வைத்த ஆவணங்களை ஆய்வு செய்யாமல் உண்மை நிலவரங்களை கண்டறியமுனையாமல் அவ்விரு நாடகள் மீது யுத்தம் தொடுக்க ஐ.நா. ஒப்புதல் வழங்கியது.

“ஈராக்கில் இரசாயன அயுதங்கள் உண்டு” என காரணங்களைக் காட்டி அமெரிக்கா, பிரிட்டன் ஈராக் மீது போர் தொடுத்து அந்நாட்டை துவம்சம் செய்தது. 6 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டு சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டு எண்ணெய் வயல்கள் அமெரிக்காவுக்கும் அதன் நேசநாடுகளுக்கும் பங்கு வைக்கப்பட்டதன் பின்புதான் ஈராக்கில் எவ்வித இரசாயன ஆயுதங்களும் இல்லை தவறுதலாக நடந்து விட்டது என புஷ்ஷூம் பிளேயரும் கூறினர்.

அழிந்த சொத்துக்களுக்கும் இழந்த உரிமைகளுக்கும் பறிபோன உயிர்களுக்கும் பொறுப்பு சொல்வது யார்?

அறபு நாடுகளின் எண்ணெய் வயல்களை கொள்ளையடிக்க அமெரிக்கா, பிரிட்டன் போடும் திட்டங்களை கண்மூடித்தனமாக ஏற்று, அங்கீகாரம் வழங்கும் ஜ.நா சபையின் போக்கினால் இன்று ஈராக்கும் ஆப்கானிஸ்தானும் அழிந்து போய்விட்டன.

தற்போது லிபியாவின் உள்நாட்டு கிளர்ச்சியை காரணம் காட்டி, அமெரிக்கா நேட்டோவை தன் கைக்குள் போட்டுக் கொண்டு ஐ.நா.வை துணைக்கு அழைத்துக் கொண்டு அப்பாவி லிபிய மக்கள் மீது குண்டுகளைப் பொழிந்து வருகின்றது.

கடாபிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தபோது போராட்டங்கள் பல வழிகளிலும் முன்னெடுக்கப்பட்டது. திடீரென அப்போராட்டக்காரர்கள் எப்படி கிளர்ச்சியாளர்களாகவும் ஆயுததாரிகளாகவும் மாற்றப்பட்டார்கள்?

தூனீசியாவிலும் எகிப்திலும் மக்கள் போராட்டமும் இயற்கையாக எழுந்ததாகவே தென்பட்டது. அது வெற்றியும் பெற்றது. லிபியாவிலும் இயற்கையாகத் தொடங்கப்பட்ட போராட்டம் இடைநடுவில் ஆயுத போராட்டமாக மாற்றப்பட்டது எப்படி?

கிளர்ச்சிக்காரர்கள் அடக்கப்பட்டு பின்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அமெரிக்கா லிபியா மீது யுத்தத்தை துவங்கியதன் மர்மம் என்ன?

கடாபி அமெரிக்காவிற்கும் அதன் அடிவருடிகளுக்கும் எதிரானவராகக் காணப்பட்டார். 1980 ஆண்டுக்குப் பின் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரேகன் பலமுறை லிபியா மீது தாக்குதல் தொடுத்து கடாபியை கொலை செய்ய எத்தணித்தார். இன்று வரை அது முடியாமல் போனது. தற்போது உள்விவகாரங்களை மூட்டி விட்டு கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு லிபியாவை ஆக்கிரமித்து கொள்ளையடிக்கவும் எண்ணெய் வயல்களை பங்குபோடவும் முனைந்துள்ளது அமெரிக்கா என்பது வெளிப்படை. கிளர்ச்சியாளர்கள் ஒடுக்கப்பட்டால் எண்ணெய் வயல்களை ஏப்பமிட முடியாது என்றபோதே அமெரிக்கா அவசரமாக போரை ஆரம்பித்தது.

கடாபி தன்னுடைய குடிமக்க்ள மீது நடாத்தும் அடக்குமுறைகளை எவ்வழிகளிலும் நியாயப்படுத்திட முடியாது. கடாபியின் இச்செயல் கண்டிக்கத்தக்கதே. ஒவ்வொரு நாட்டிலும் இது போன்ற அநியாயங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

ஈராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீதும் அமெரிக்கா தொடுத்து வரும் அநியாயங்களையும் படுகொலைகளையும் காரணம் காட்டி அமெரிக்கா மீது போர் தொடுக்க அனுமதி வழங்குமா ஐ.நா. சபை?

அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷும் பிரிட்டன் பிரதமர் டொனி பிளயரும் ஈராக், ஆப்கான் மீதும் இழைத்த கொடுமைகளுக்கும் படுகொலைகளுக்கும் இன்று வரை நீதி வழங்கப்படவில்லையே. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கூண்டில் நிறுத்தப்படவில்லையே. கடாபி இழைத்த கொடுமைகளை விட பல்லாயிரம் மடங்கு கொடுமைகளை இழைத்த இந்த அக்கிரமக்காரர்களை இன்னும் தண்டிக்காமல் விட்டிருப்பது ஏன்?

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்ட அக்கிரமங்களை படுகொலைகளை அராஜகங்களைக் கண்டித்து பலமுறை ஐ.நாவில் பிரேரணைகள் நூற்றுக்கணக்கில் கொண்டு வரப்பட்டபோதும் அவைகள் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்லுபடியற்றதாக ஆக்கியதே! இந்த அநீதிக்கெதிராக நீதி வழங்குபவர் யார்?

பலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்து அந்த மண்ணின் சொந்தக்காரர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கிவருகிறது இஸ்ரேல. லிபியாவில் நடக்கும் அனியாயங்களை விட பலகோடி அக்கிரமங்கள் பல வருடங்களாக நடாத்தப்பட்டுவருகின்றது. அப்படியாயின் இஸ்ரேலுக்கெதிராக போர் பிரகடனம் செய்வது யார்?

லிபியாவிற்கு எதிராக கிளர்ச்சிக்காரர்களக்கு சார்பாக பிரான்ஸ், கனடா. பிரிட்டன், அமெரிக்கா ஆரம்பித்துள்ள இப்போருக்கு “துணிகரமான நீண்ட பயணத்தின் உதயம்” என பெயரிடப்பட்டுள்ளது.

துணிகரமான நீண்ட பயணத்தில் இவ்யுத்தம் மேலும் பல அறபு நாடுகளுக்குளும் ஊடுருவும் என்பதே அர்த்தமாகும். தற்போது லண்டனில் இவ்வலரசுகள் ஒன்று கூடி லிபியாவின் எதிர்காலம் குறித்து கலந்தாலோசனை நடாத்தி வருகிறது. அடுத்தவனின் சொத்தை எப்படி பங்கு போட்டு பராமரிப்பது என்பதே இவ்வுயர்மட்ட பேச்சுவார்த்தையின் பிரதான செய்தி. கடாபிக்கு பதிலாக் ஆமாசாமி போடும் இன்னொரு ஆசாமியை கொண்டுவருவதில் தயாராகுகிறார்கள்.

சிரியாவிலும் யெமனிலும் இப்போது உருவாகிவரும் உள்நாட்டு பிரச்சினைகளை காரணம் காட்டி சிரியாவிற்குளும் அதற்கடுத்து ஈரானுக்குள்ளும் யுத்தம் தொடுக்க முனையலாம். இவ்விரண்டு நாடுகளின் மீதும் போர் தொடுக்க அமெரிக்கா நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது.

வீட்டோ அதிகாரம் பெற்ற சீனாவும். ரஷ்யாவும் லிபியாவிற்கு எதிரான யுத்தத்தை கண்டித்துள்ளதுடன் உடனடியாக சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமெனக் குரல் கொடுக்கிறது. இது கபடமில்லாத ஏமாற்றமும் இரட்டை வேடமும் ஆகும்.

அமெரிக்கா ஆரம்பித்த இவ் யுத்தம் அநீதியானது எனத் தெரிந்த பின் ஐ.நா.வில் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏன் யுத்தத்தை நிறுத்தியிருக்கக் கூடாது. வீட்டோவை பயன்படுத்தாமல் விலகி நின்று யுத்தத்திற்கு வழிவிட்ட பின் கண்டனம் தெரிவிப்பதனால் எந்த நன்மையுமில்லை. இவர்களது “கார்ட்போட்” அறிக்கைகள் தனக்கு வழங்கப்படும் அங்கீகாரம் என்று நன்கு தெரிந்து வைத்துள்ள அமெரிக்கா வெளிப்படையாகவே அக்கிரமங்கள் புரிய ஆரம்பித்துள்ளது.

லிபியாவும் ஈராக்கும் சீனாவினதும் ரஷ்யாவினதும் நெருங்கிய தோழமை நாடு. சதாம் உசைன் கொல்லப்பட்டபோதும் லிபியா அழிந்துகொண்டிருக்கும் போதும் நியாயமாக நடந்து நீதியை காப்பாற்ற முன்வராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு அறிக்கை விடுவதிலிருந்து இவர்களது பின்னணி தெளிவாகிறது.

அறபு நாடுகளின் ஒருங்கிணைப்பான அறபு லீக்கும் அடங்கியிருப்பதனால் எதிர்காலத்தில் அமெரிக்காவின் இந்த யுத்தம் அந்நாடுகளையும் ஆக்கிரமிக்க வழிசமைக்கலாம். கடாபியின் வார்த்தையில் சொல்வதானால் புதிய சிலுவை யுத்தம் மஸ்ஜிதுகளின் கோபுரங்களையும் தகர்த்து விடலாம்.

கடாபியின் போக்கு தப்பு என்றால் சர்வதேச நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்கலாமே தவிர, லிபியாவை அழிக்கவோ அந்நாட்டு மக்களை அழிக்கவோ எந்த வழிகளிலும் அனுமதிக்க முடியாது.

கடாபி கிளர்ச்சிக் காரர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை விட லிபிய மக்கள் மீது அமெரிக்காவின் கூட்டுப் படை மேற்கொண்டு வரும் யுத்தமும் அழிவும், படுகொலையும் பல மடங்கு அக்கிரமானது. லிபியாவின் முக்கிய கேந்திரஸ்தலங்கள், விமான நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், மக்கள் குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான சிவிலியன்கள் கொள்ளப்பட்டுள்ளனர்.

கிளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்க முனைந்த அமெரிக்கா லிபியாவை துவம்சம் செய்து அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பின்னடைவை ஏற்படுத்த முனைகிறது. இனிவரும் காலங்களில் லிபியா இன்னுமொரு ஈராக்காகவோ ஆப்கானிஸ்தானகவோ மாறலாம். ஆமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்த்து அந்நாட்டு மக்கள் நீதிக்காக போடினால் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படலாம்.

இது பழைய பதிவு என்ற போதும் தொடர்புடையது என்பதால் உறவுகளுக்கு அறியத் தருகிறேன் ....

ஆக்கம் : இம்தியாஸ் சலபி...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.  Empty Re: கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 8:57

படிக்கும் போதே மனது வலிக்கிறது கலை நிலாவின் பதிவில் கடாபியின் நல்ல எண்ணங்கள் சேவைகள் தெரியவந்ததது
அப்துல்லாஹ் சாரின் பதிவில் இன்னும் அமெரிக்க வெறியர்களின் உண்மைகள் அறிய முடிந்தது அனைத்தையும் பார்த்துக்கொண்டு பொறுமையாக இருக்கும் இறைவன் தீர்ப்பு வளங்குவதில் கடுமையானவன் நேர்மையானவன் காத்திருப்போம் இறைவன் போதுமானவன் நம்பிக்கை உண்டு.

இவைகள் அனைத்திற்கும் சேர்த்தே அமெரிக்கா அனுபவிக்கப்போகிறது அனுபவிக்கிறது இன்னும் அனுபவிக்கும் கேவலத்திலும் கேவலமாகவும் அமெரிக்கா மாறும் காத்திருங்கள் அனைவரும் பார்ப்பீர்கள் கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.  876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.  Empty Re: கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.

Post by kalainilaa Tue 25 Oct 2011 - 12:21

ஈராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீதும் அமெரிக்கா தொடுத்து வரும் அநியாயங்களையும் படுகொலைகளையும் காரணம் காட்டி அமெரிக்கா மீது போர் தொடுக்க அனுமதி வழங்குமா ஐ.நா. சபை?

அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷும் பிரிட்டன் பிரதமர் டொனி பிளயரும் ஈராக், ஆப்கான் மீதும் இழைத்த கொடுமைகளுக்கும் படுகொலைகளுக்கும் இன்று வரை நீதி வழங்கப்படவில்லையே. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கூண்டில் நிறுத்தப்படவில்லையே. கடாபி இழைத்த கொடுமைகளை விட பல்லாயிரம் மடங்கு கொடுமைகளை இழைத்த இந்த அக்கிரமக்காரர்களை இன்னும் தண்டிக்காமல் விட்டிருப்பது ஏன்?

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்ட அக்கிரமங்களை படுகொலைகளை அராஜகங்களைக் கண்டித்து பலமுறை ஐ.நாவில் பிரேரணைகள் நூற்றுக்கணக்கில் கொண்டு வரப்பட்டபோதும் அவைகள் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்லுபடியற்றதாக ஆக்கியதே! இந்த அநீதிக்கெதிராக நீதி வழங்குபவர் யார்?


இதுவரை உலக வங்கியில் கடன் வாங்காத நாடு லிபியா எனபது
குறிப்பிட ஒன்று .

இனி வாங்க வேண்டிய நிலையில் ............
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.  Empty Re: கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 13:25

kalainilaa wrote:ஈராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீதும் அமெரிக்கா தொடுத்து வரும் அநியாயங்களையும் படுகொலைகளையும் காரணம் காட்டி அமெரிக்கா மீது போர் தொடுக்க அனுமதி வழங்குமா ஐ.நா. சபை?

அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷும் பிரிட்டன் பிரதமர் டொனி பிளயரும் ஈராக், ஆப்கான் மீதும் இழைத்த கொடுமைகளுக்கும் படுகொலைகளுக்கும் இன்று வரை நீதி வழங்கப்படவில்லையே. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கூண்டில் நிறுத்தப்படவில்லையே. கடாபி இழைத்த கொடுமைகளை விட பல்லாயிரம் மடங்கு கொடுமைகளை இழைத்த இந்த அக்கிரமக்காரர்களை இன்னும் தண்டிக்காமல் விட்டிருப்பது ஏன்?

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்ட அக்கிரமங்களை படுகொலைகளை அராஜகங்களைக் கண்டித்து பலமுறை ஐ.நாவில் பிரேரணைகள் நூற்றுக்கணக்கில் கொண்டு வரப்பட்டபோதும் அவைகள் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்லுபடியற்றதாக ஆக்கியதே! இந்த அநீதிக்கெதிராக நீதி வழங்குபவர் யார்?


இதுவரை உலக வங்கியில் கடன் வாங்காத நாடு லிபியா எனபது
குறிப்பிட ஒன்று .

இனி வாங்க வேண்டிய நிலையில் ............
இந்தக் கேள்விகளுக்கு விடையே இல்லை இறைவன்தான் விடை சொல்ல வேண்டும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம் ஜின் சக்தி எனக்கு கிடைக்குமென்றால் இறைவன் அருளால் அமெரிக்காவை ஒரு வழி பண்ணி விடுவேன் அவ்வளவு வெறி என்னுள் புதைந்துள்ளது :silent:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.  Empty Re: கடாஃபி!லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum