Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்
+3
அ.இராஜ்திலக்
நண்பன்
பார்த்திபன்
7 posters
Page 1 of 1
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்
அது ஒரு ஆடை நனைக்கும் கோடைக்காலம்!
சூரியன் தன் வீரியம் காட்டி
மேற்கு நோக்கி மெதுவாய் நகர்ந்த
ஒரு மாலைப் பொழுது!
வெண்ணையாய் உருகும் சென்னையில்
நானொரு நடுத்தர நகரவாசி!
வியர்வை எனும் மையால் வெப்பம்
என் உடல் முழுதும் கையொப்பம் இட்டிருந்தது!
புழுக்கம் என்னைப் புலம்ப வைத்தது!
"சே! வெய்யிலா இது?
கதிரவன் உமிழும் கந்தக அமிலம்"!
என் தலையில் சுரந்த வியர்வைத் துளி ஒன்று
என் தாடையில் இருந்து விழுந்து
தற்கொலை செய்துகொண்டது!
கடற் காற்றுக்கு உடல் ஏங்கியது!
தொடர்வண்டி பிடித்துத் தொட்டுவிட்டேன் கடற்கரையை!
மணல்வெளியெங்கும் மனிதத் தலைகள்!
அனேகர் முகத்தில் மகிழ்ச்சியின் இழைகள்!
கரைமணலைக் கரைத்துவிடும் வீண்முயற்ச்சியில்
அடுத்தடுத்து அலைகளை அனுப்பிக்கொண்டிருந்தது கடல்!
படகடியில் ஒரு ஜோடி, நான்
பக்கம் வருவதைப் பார்த்து
படக்கென்று விலகி அமர்ந்தது!
உடை கலைந்த பதற்றம் அவள் முகத்தில்! -அவள்
இடை பிரிந்த ஏக்கம் அவன் முகத்தில்!
அவர்களுக்கும் எனக்குமான வேறுபாடு ஒன்றுதான்!
அவர்கள் கடற்கரையில் காதலிப்பவர்கள்!
நான் கடற்கரையைக் காதலிப்பவன்!
"இது கடற்கரையா அல்லது கவிச்சிக்கடையா"?
விடலைக் கூட்டமொன்று
விமர்சித்தபடி சென்றது!
ஜோடி கிடைக்காத ஏக்கம் அதைச் சொன்னவன்
வார்த்தையில் சொட்டியது!
நாகரீகம் என்னை அங்கிருந்து நகர்த்தியது!
தலையில் சுற்றும் பூவிற்கு
தலையே சுற்றுமளவு விலை சொல்லும் பூக்காரி!
பலூன் ஊதி ஊதி பாதியாய் இளைத்துப்போன பலூன் வியாபாரி!
என்ன மாறினாலும்
எண்ணையை மாற்றாத பஜ்ஜி கடைக்காரன்!
பெற்றோரின் சுண்டுவிரல் பிடித்து நடக்கும் வயதில்
பெற்றோருக்காக சுண்டல் விற்கும் சிறுவர்கள்!
நைந்துபோன தன் வாழ்க்கையை நிமிர்த்த
ஐந்தறிவு ஜீவனை நம்பியிருக்கும் குதிரைக்காரன்!
வட்டமடிக்கும் பருந்தை
பட்டமனுப்பித் தொட்டுவிடத் துடிக்கும் குறும்புக் கூட்டம்!
கடல் துப்பிய சிப்பிகளை
உடல் குனிந்து பொறுக்கும் சிறுமிகள்!
அந்த நீண்ட மணற்பரப்பை
நிரந்தரப் பரபரப்பில் வைத்திருக்கும்
கடற்கரைக் கதாபாத்திரங்கள் இவர்கள்!
ஆனால் மறுபுறம் கடல், தன்னிடம்
கால் நனைக்க வந்தவர்களின்
கால் பிடித்துக் கதறிக்கொண்டிருந்தது!
"தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்" என்று!
நிலவை.பார்த்திபன்
சூரியன் தன் வீரியம் காட்டி
மேற்கு நோக்கி மெதுவாய் நகர்ந்த
ஒரு மாலைப் பொழுது!
வெண்ணையாய் உருகும் சென்னையில்
நானொரு நடுத்தர நகரவாசி!
வியர்வை எனும் மையால் வெப்பம்
என் உடல் முழுதும் கையொப்பம் இட்டிருந்தது!
புழுக்கம் என்னைப் புலம்ப வைத்தது!
"சே! வெய்யிலா இது?
கதிரவன் உமிழும் கந்தக அமிலம்"!
என் தலையில் சுரந்த வியர்வைத் துளி ஒன்று
என் தாடையில் இருந்து விழுந்து
தற்கொலை செய்துகொண்டது!
கடற் காற்றுக்கு உடல் ஏங்கியது!
தொடர்வண்டி பிடித்துத் தொட்டுவிட்டேன் கடற்கரையை!
மணல்வெளியெங்கும் மனிதத் தலைகள்!
அனேகர் முகத்தில் மகிழ்ச்சியின் இழைகள்!
கரைமணலைக் கரைத்துவிடும் வீண்முயற்ச்சியில்
அடுத்தடுத்து அலைகளை அனுப்பிக்கொண்டிருந்தது கடல்!
படகடியில் ஒரு ஜோடி, நான்
பக்கம் வருவதைப் பார்த்து
படக்கென்று விலகி அமர்ந்தது!
உடை கலைந்த பதற்றம் அவள் முகத்தில்! -அவள்
இடை பிரிந்த ஏக்கம் அவன் முகத்தில்!
அவர்களுக்கும் எனக்குமான வேறுபாடு ஒன்றுதான்!
அவர்கள் கடற்கரையில் காதலிப்பவர்கள்!
நான் கடற்கரையைக் காதலிப்பவன்!
"இது கடற்கரையா அல்லது கவிச்சிக்கடையா"?
விடலைக் கூட்டமொன்று
விமர்சித்தபடி சென்றது!
ஜோடி கிடைக்காத ஏக்கம் அதைச் சொன்னவன்
வார்த்தையில் சொட்டியது!
நாகரீகம் என்னை அங்கிருந்து நகர்த்தியது!
தலையில் சுற்றும் பூவிற்கு
தலையே சுற்றுமளவு விலை சொல்லும் பூக்காரி!
பலூன் ஊதி ஊதி பாதியாய் இளைத்துப்போன பலூன் வியாபாரி!
என்ன மாறினாலும்
எண்ணையை மாற்றாத பஜ்ஜி கடைக்காரன்!
பெற்றோரின் சுண்டுவிரல் பிடித்து நடக்கும் வயதில்
பெற்றோருக்காக சுண்டல் விற்கும் சிறுவர்கள்!
நைந்துபோன தன் வாழ்க்கையை நிமிர்த்த
ஐந்தறிவு ஜீவனை நம்பியிருக்கும் குதிரைக்காரன்!
வட்டமடிக்கும் பருந்தை
பட்டமனுப்பித் தொட்டுவிடத் துடிக்கும் குறும்புக் கூட்டம்!
கடல் துப்பிய சிப்பிகளை
உடல் குனிந்து பொறுக்கும் சிறுமிகள்!
அந்த நீண்ட மணற்பரப்பை
நிரந்தரப் பரபரப்பில் வைத்திருக்கும்
கடற்கரைக் கதாபாத்திரங்கள் இவர்கள்!
ஆனால் மறுபுறம் கடல், தன்னிடம்
கால் நனைக்க வந்தவர்களின்
கால் பிடித்துக் கதறிக்கொண்டிருந்தது!
"தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்" என்று!
நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்
இந்தக் கவிதையில் வரும் கதாநாயகனும் அந்தக் கடல் அலைபோல் தனிமையை விரும்பியவர்கள் வரிகள் அனைத்தும் பிரமாதம் மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் உறவே தொடருங்கள் உங்கள் பயணத்தை என்றும் நன்றியுடன்
நண்பன்.
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்
அருமையான உணர்வு
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்
சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் உறவே தொடருங்கள் உங்கள் பயணத்தை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்
மிக சிறப்பாக இருந்தது. அதனால் எனது வலைப்பூவிலும் இணைத்துவிட்டேன். வாழ்த்துக்கள் அன்பு உறவே!
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்
@. @.*சம்ஸ் wrote:சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் உறவே தொடருங்கள் உங்கள் பயணத்தை
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்
என்ன ஒரு உள்ளர்த்தம் பொதிந்த மணிப்பிரவாளமான நடையுடன் கூடிய படைப்பு...... பார்த்தி உணர்வுகளைக் குவித்து வரிவரியாக எழுத உங்களுக்கு நன்றாகக் கைவருகிறது ..எண்ணங்களை எழுத்தாக்குங்கள் எங்களுக்கு விருந்தாக்குங்கள்....
பாராட்டுக்கள்./
பாராட்டுக்கள்./
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்
ஊக்கத்தினால் உற்சாகம் அடைந்தேன். கோடான கோடி நன்றிகள்!
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Similar topics
» தனிமையில்...
» என்னைத் தொலைத்த நான்
» என்னைத் தெரியாத ஆளே கிடையாது…!!
» கொடுமையான தனிமையில் நான்....
» என்னைத் தமிழா் அழிக்கவில்லையடா!! நீங்கள்தான்டா அழித்தீா்கள்
» என்னைத் தொலைத்த நான்
» என்னைத் தெரியாத ஆளே கிடையாது…!!
» கொடுமையான தனிமையில் நான்....
» என்னைத் தமிழா் அழிக்கவில்லையடா!! நீங்கள்தான்டா அழித்தீா்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum