சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Khan11

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

+2
நேசமுடன் ஹாசிம்
Atchaya
6 posters

Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by Atchaya Mon 7 Nov 2011 - 4:13

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Eid_mubarak_461
தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  19
தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Happy-Eid-Mubarak-SMS-urdu
தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  278056889_7774d189c9
தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Eid_mubarak_13



Last edited by Atchaya on Mon 7 Nov 2011 - 10:07; edited 1 time in total
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by Atchaya Mon 7 Nov 2011 - 4:14

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  293460_281643728532952_145264895504170_925959_1320200976_n

மரங்களில் எத்தனை கிளைகள்
எனக்கில்லையே கைகள்....

மரங்களில் எத்தனை இலைகள்
எனக்குள்ளே நம்பிக்கை விதைகள்

அத்தனை இலைகள் இருந்திட்டாலும்
பூத்திட்டது என்னவோ ஒரு பூ!

எனக்குள்ளே ஆசைகள் அதிகம் இருந்திட்டாலும்
என்னிடம் கொட்டிக்கிடக்குது அன்பு

தராதரம் பார்க்க மனிதனே ஆனாலும்
தராதரம் இல்லாத அன்பு என்னிடம்

பகிர்ந்து கொடுப்பது உணவு அல்ல
என் இதயத்து அன்பு!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by Atchaya Mon 7 Nov 2011 - 4:17

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  320897_2456601901151_1435227178_32852965_702526705_n

ஓ என்ன அலறல் சத்தம்
ஓ எனது நண்பனா?

எப்படி விழுந்தாய் இதனுள்ளே!
எப்படி காப்பாற்றுவேன் உன்னை!

என் தோழன் உடனிருக்க
இதோ வந்துவிட்டேன் உடனே!

கை கொடுக்க நண்பனிருக்க
கவலை இனியில்லை உனக்கு!

கரை ஏற்றுவது என்வேலை!
நேரத்தில் உதவிடச் செயதிட்ட உனக்கும் நன்றி!

மனிதன் தானே எங்கே இருக்கும்
மனித நேயம் என நினைத்திட்டாயோ?

நன்றி மறவா ஜீவனே!
சென்றிடுவாயே இனி கவலை இன்றியே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by Atchaya Mon 7 Nov 2011 - 4:31

இன்று எனது பதிவுகள் தொடருமானால், அனைத்தும் இத் தலைப்பிலேயே பதிவிடுவேன். இதனை இன்று பெரு நாளை கொண்டாடும் எனது இனிய உறவுகளுக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் அர்ப்பணிக்கிறேன்!

இன்று போல் என்றும்
உற்சாகத்துடன் வாழ
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள்
உங்களை ஆசிர்வதிக்கட்டும்!

உறவுகளுடன், உறவுகள்
உயிர்த்தெழட்டும் மனித நேயம்
விண்ணைத் தொடட்டும்
விடியலாய் மாறட்டும்

பூந் தென்றலாய் மலரட்டும்
பூவைப் போல மென்மையாய் மாறட்டும்
அரக்க உணர்ச்சி மாறட்டும்
அன்பு பூக்கட்டும்

அந்நிய மண்ணிலே வாசம்
அஞ்சான வாசம் இந்நிலை
மாறட்டும் சொந்த மண்ணிலே
எதிரியாய் விரோதியாய் பார்க்கும்
மன நிலை மாறட்டும்!

மண்ணின் மைந்தர்களிடத்திலே உள்ள
கருத்தொற்றுமை ஓங்கட்டும்
கள்ளமில்லா உள்ளமாய் மாறட்டும்
மாறட்டும் மாறட்டும் நல்ல
உள்ளமாய் மாறட்டும்!
நானிலமும் சிறக்கட்டும்!
வாழ்த்த வேண்டும் இறைவா!
வையகத்தாரின் வாழ்க்கை சிறக்க
வாழ்த்த வேண்டும் இறைவா!



பள்ளமாய் மாறிப்போன
வாழ்க்கையினை கனிவு
உள்ளங்கொண்டு பாரேன் இறைவா!

பாரா மடந்தையாய் இருப்பதேனோ இறைவா!
பரம் பொருள் தானே .......
அப்படித்தான்
என்கிறாயோ இறைவா!
கேட்பது எனது பணி
கொடுப்பது உன் கடமை என்பதனை
மறந்தாயோ இறைவா!

மறப்பதும் மன்னிப்பதும்
மனிதநேயம் என்பதுவும்
மாறிவிட்டதோ இறைவா!

கேட்க வேண்டியதை கேட்டு விட்டேன்
கொடுப்பதுன் கடன்
என்றெண்ணி விட்டுவிட்டேன்
முடிவை உன்னிடமே இறைவா!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by Atchaya Mon 7 Nov 2011 - 5:52


உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை.
பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை.
காலையில் எழுந்து டீ / காஃபி குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும் என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை.
புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும் என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை.
இவருக்குத்தான் இனிய பெருநாள்…!
தன் ஆணவத்தை அடக்கி
அலட்சியப் போக்கை அழித்து
பகலில் பட்டினி கிடந்து
இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு
பசி, தாகத்தால் இச்சையை வென்று
இறை கடமைகளை நிறைவேற்றி
தானத்தால் ஏழைகளின் கண்களை திறந்த
உண்மை முஸ்லிமுக்குத்தான் பெருநாள்…!
வறியவர்களின் தேவைகளை கவனித்து
பட்டினியையும், பசியையும் அடக்கி,
நோன்பினால் ஈமானை பலப்படுத்தி
ஆன்மிக பலத்தை நிலை நாட்டி
ஒரு மாத கடுஞ்சோதனையை வென்று
இறைவனுக்காக நோன்பிருந்த
இறைமறையை ஓதி உணர்ந்த
இறைகடமைகளை நிறைவு செய்த
உண்மை முஃமினுக்குத்தான் உன்னத பெருநாள்…!
ஏழைவரி(ஜகாத்)யை முறையாக அளித்து
கருமித்தனத்தை அடியோடு ஒழித்து
சிறியவர்களை போற்றி – பாராட்டி
பெரியவர்களை மதித்து நடந்து
அறிஞர்களுடன் பண்புடன் நடந்து
செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு
இனி பாவமே செய்யமாட்டேன்
என்ற உறுதி கொண்ட
உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!
எனது தொழுகை அல்லாஹ்வுக்கே!
எனது தியாகச் செயல் அல்லாஹ்வுக்கே!
எனது பொதுப்பணி அல்லாஹ்வுக்கே!
எனது வாழ்வு அல்லாஹ்வுக்கே!
எனது மரணம் அல்லாஹ்வுக்கே!
என்று சத்தியப் பிரமாணம் எடுத்த
உண்மையளர்களுக்குத்தான் உண்மைப் பெருநாள்…!
உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த ஈகைப் பெருநாள் இனிய நல் வாழ்த்துக்கள்!
பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by Atchaya Mon 7 Nov 2011 - 5:58

நன்றி சித்தார்கோட்டை.


ஏழை மக்களுக்கு பண உதவியும் பொருளுதவியும் செய்ய இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனம் (Infosys Foundation) ஆரம்பித்த சமயம் அது. பெங்களூர் ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் ரயில்களின் பெட்டிகளைத் துடைத்து சுத்தம் செய்து விட்டு பயணிகளிடம் காசு கேட்டுக் கொண்டிருந்தனர் சிலர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்களின் மனைவி சுதா மூர்த்தி ஒரு முறை அதைப் பார்த்து, அந்த மனிதர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு அவர்களைப் பற்றி விசாரித்தார். அவர்கள் சுமார் 200 பேர் இருக்கிறார்கள் என்றும் அவர்களில் பலரும் வறுமை காரணமாக இரவில் வெறும் வயிற்றோடு படுக்கப் போவதாக அவரிடம் சொன்னார்கள். அவர்களுக்கு தினமும் இரவு வேளையில் உணவு வழங்கத் தேவையான அரிசி, பருப்பு ஆகியவற்றைத் தர தொண்டு நிறுவனத்தின் மூலம் சுதா மூர்த்தி ஏற்பாடு செய்தார்.

சில வாரங்கள் கழித்து அந்த பயனாளிகள் நிலை எந்த அளவு முன்னேறி உள்ளது என்றறிய சுதா மூர்த்தி சென்ற போது அவர்கள் யாரும் சோறு கிடைத்து விடுவதால் உழைப்பதில்லை, சோம்பேறிகளாக மாறி விட்டனர் என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது. கேட்டு வருத்தமடைந்தாலும் சுதா மூர்த்தி அவர்களுக்கு மேலும் உதவ முற்பட்டார். குளிர்காலம் ஆரம்பிக்கும் சமயம் ஆனதால் அவர்களுக்கு கம்பளிப் போர்வை தர எண்ணினார். அதை அனுப்பும் போது அவர்களுக்கு தடுப்பூசியும் போடும் யோசனையும் அவருக்கு வரவே தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு கம்பளிப் போர்வையும் தருவது என்று முடிவு செய்து அவர்களுக்கு அறிவித்தார்.

அப்போது தான் தெரிந்தது அவர்களில் இருநூறு பேர் இல்லை, இருப்பது ஐம்பது பேர் தான் என்ற உண்மை. தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்குத் தான் கையோடு கம்பளிப் போர்வையும் கிடைக்கும் என்றான போது உண்மை வெளி வந்து விட்டது. ஐம்பது பேர் இருநூறு பேர்களுக்கான உதவியைப் பெற்று வந்ததை அவர் அறிந்து கொண்டு விட்டார் என்று கோபப்பட்டு அவர்கள் அவரை வாயிற்கு வந்தபடி ஏசி விட்டனர். இத்தனை நாட்கள் அவரிடம் உதவி பெற்றும் ஏமாற்றியதை அறிந்து கொண்டு நிறுத்தியதை அவர்களால் சகிக்க முடியவில்லை. இது ஒரு நிகழ்ச்சி.

சுதா மூர்த்தியின் சமூக சேவை சம்பந்தப்பட்ட இன்னொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். கர்னாடகா மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட சமயம் அது. அந்த தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் வாங்கியவர்களுடைய புகைப்படங்களும் தகவல்களும் செய்தித்தாள்களில் வெளியாகி இருந்தன. அந்த செய்தித் தாள்களில் கண்ட அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனின் புகைப்படம் சுதா மூர்த்தி அவர்களை மிகவும் இரக்கப்பட வைத்தது. எலும்பும் தோலுமாக, ஒட்டிய கன்னத்துடன் இருந்த ஹனுமந்தப்பா என்ற சிறுவனின் புகைப்படம் தான் அது. அவன் ராமபுரா என்ற கிராமத்தைச் சேர்ந்த மூட்டை தூக்கிப் பிழைக்கும் ஏழை கூலித் தொழிலாளியின் மகன். அவனோடு பிறந்தவர்கள் ஐந்து பேர், அவன் தான் மூத்தவன் என்ற தகவல்களைப் படித்த அவர் இரக்கப்பட்டு அவனுக்கு ஒரு கடிதம் எழுதினார். குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட விலாசத்தில் தன்னை சந்திக்க வரும்படி அவனுக்கு எழுதிய அவர் பெங்களூர் வந்து போகத் தேவையான பயணத் தொகையும் அனுப்பி வைத்தார்.

அவர் சொன்ன படியே வந்து அவரை சந்தித்த ஹனுமந்தப்பாவிடம் சுதா மூர்த்தி சொன்னார். “நீ மேற்கொண்டு என்ன படிக்க விரும்புகிறாய்?, நீ என்ன படிப்பு படிக்க விரும்பினாலும் அந்த படிப்புக்கான செலவுகளை எங்கள் இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும்”

அவன் தன் கிராமத்திற்கு அருகில் இருக்கும் பெரிய நகரமான பெல்லாரியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படிக்க விரும்புவதாகச் சொன்னான்.

“ஆசிரியர் படிப்பு தான் என்றில்லை, நீ என்ன படிக்க விரும்பினாலும் தயங்காமல் சொல். உன்னைப் படிக்க வைக்கிறேன்” என்று சொன்னார் சுதா மூர்த்தி.

ஆனால் அந்த சிறுவன் தன் ஆசிரியர் படிப்பு ஆர்வத்திலேயே உறுதியாய் இருந்தான்.

“சரி அந்தப் பள்ளிக்குச் சென்று அந்தப் பயிற்சிப் படிப்பிற்கு எவ்வளவு செலவாகும் என்று விசாரித்து எனக்கு விவரமாக எழுது” என்று கூறி சுதா மூர்த்தி அவனை அனுப்பி வைத்தார்.

போன சிறுவன் உடனடியாக பதில் எழுதினான். பள்ளிக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், சாப்பாடுக் கட்டணம், புத்தகக் கட்டணம் எல்லாம் சேர்ந்து மாதம் முன்னூறு ரூபாய் செலவாகும் என எண்ணி இருந்தான். யாரோ உதவி செய்கிறார்கள் என்பதால் தகுதிக்கு மீறி எதையும் உபயோகிக்காமல் குறைந்த பட்சத் தொகையையே அவன் எழுதி இருக்கிறான் என்பதை சுதா மூர்த்தி புரிந்து கொண்டார். உடனடியாக அவனுக்கு ஆறு மாதச் செலவுக்கான தொகையாக 1800 ரூபாய் அவர் அனுப்பி வைத்தார்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. அடுத்த ஆறு மாதச் செலவுக்கான தொகை 1800 ரூபாய் அவர் அனுப்பி வைத்தார். உடனடியாக ஹனுமந்தப்பாவிடம் இருந்து சுதா மூர்த்திக்கு முன்னூறு ரூபாய் திரும்பி வந்தது. அவர் அனுப்பிய தொகைக்கு நன்றி தெரிவித்து விட்டு அந்த சிறுவன் எழுதியிருந்தான்.

”இங்கு ஒரு மாதக் கல்லூரி ஸ்டிரைக்கில் இருந்தது. அதனால் நான் பெல்லாரியில் ஹாஸ்டலில் தங்காமல் கிராமத்தில் இருக்கும் என் வீட்டுக்கே சென்று விட்டேன். அதனால் ஒரு மாத செலவுத் தொகை முன்னூறு ரூபாயை நான் திருப்பி அனுப்பி உள்ளேன்”.

சுதா மூர்த்தி அந்த சிறுவனின் நேர்மையை எண்ணி உள்ளம் நெகிழ்ந்து போனார். அந்த சிறுவனின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். வீட்டில் ஆட்களும் அதிகம். அவனுக்கே ஆசைப்படும் வயது. ஆனாலும் அந்த முன்னூறு ரூபாயை வேறு வகையில் செலவு செய்து விடாமல் திருப்பி அனுப்பிய அந்த உயர்ந்த பண்பை எண்ணி அவரால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

உதவ முன் வந்தவரிடம் நான்கு மடங்கு அதிகமாக ஏமாற்றி வாங்கி பயன்படுத்தி அதை அவர் அறிந்து கொண்டார் என்றவுடனேயே அவரை ஏசிய அந்தக் கூட்டத்தின் தன்மை எப்படி இருக்கிறது? அனுப்பிய தொகையில் அனுப்பிய நோக்கத்திற்காகப் பயன்படாத சிறு தொகையை பல்வேறு செலவுகள் இருப்பினும் அதற்குப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிய ஹனுமந்தப்பாவின் தன்மை எப்படி இருக்கிறது?

ஒருவருடைய நல்ல எண்ணத்தை நியாயம் இல்லாத விதத்தில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் திருட்டுக் கூட்டம் எப்போதும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் உதவும் உள்ளமே நெகிழ்ந்து நிறையும் படி அந்த உதவியை முறையாகப் பயன்படுத்தி முன்னேற முடிந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த முதல் வகைப் பயனாளிகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களைத் தவிர்ப்பதும், இரண்டாவது வகைப் பயனாளிகளைக் கண்டு கொண்டு உதவி அவர்கள் முன்னேற உதவுவதுமே உண்மையான சமூக சேவையின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அப்படியில்லாமல் தங்கள் சேவை தகுந்தவர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறதா என்று கவனிக்காமல் சேவை செய்வது முட்டாள்தனமே அல்லாமல் சமூக சேவை அல்ல. அதே போல் பயனாளிகளில் ஏமாற்றுபவர்களும், நன்றி கெட்டவர்களும் கணிசமாக உள்ளனர் என்பதாலேயே யாருக்கும் உதவிக்கரம் நீட்ட மறுப்பதும் உதவ முடிந்தவர்களுக்குப் பெருமை அல்ல. அப்படிச் செய்தால் ஹனுமந்தப்பா போன்ற நல்ல, திறமையான மனிதர்கள் வளர முடியாமல் முளையிலேயே கருகிப் போவார்கள். எத்தனையோ நல்ல, உண்மையான, பாவப்பட்ட மனிதர்கள் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு உதவினால், அந்த உதவி பெற்றவர்கள் கடைத்தேறுவதைக் கண்ணால் காணும் போது பெறும் நிறைவுக்கு ஒப்பானது உலகில் வேறெதுவும் இல்லை.

நன்றி:- என்.கணேசன் -ஈழநேசன்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by Atchaya Mon 7 Nov 2011 - 6:00

நன்றி சித்தார்கோட்டை.
எப்படா சூரியன் மறையும்னு தவங்கிடக்கிற பெண்களை பட்டணம் முதல் பட்டிகாடு வரை பரவலாக காணமுடிகிறது… காரணங்கள் பல அல்ல ஒன்றே…அது சீரியல்கள் என்கின்றனர் பெண்கள்..

திண்டிவனம் நகராட்சியில் பெண்களுக்கான பயிற்சியில் சிறப்பு பயிற்சியாளராக வெளிச்சம் செரீன் மற்றும் வெளிச்சம் மாணவர்களை அழைத்திருந்தனர் நகராட்சி நிர்வாகம்..

தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு குறித்து பேச தொடங்கினார் செரின் அவர்கள்.. பெண்கள் தான் சமூகத்தை பிரசவிக்கிற மொத்த பங்களிப்பை பெற்றுள்ளார்கள். சமூகத்தை சரியாக வளர்த்தெடுக்கிற பக்குவம் ஒவ்வொரு பெண்மனிக்கும் உண்டு. ஏனெனில் ஒரு தாய் குழந்தையை வளர்த்தெடுப்பதில் இருந்து கடைசி காலம் வரை பெண்கள்தான் ஆனால் பெண்கள் இப்போது குழந்தைகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்களா என்றால் இல்லை என்று தோன்றுகிறது…

கலை நிகழ்ச்சிகளில் வெளிச்சம் மாணவர்கள்

குழந்தைகள் மீதான தமது பொறுப்பை தட்டி கழிக்கும் பாங்கு பெண்களுக்கு வளர்ந்திருக்கிறது, அல்லது வளர்த்திருக்கிறது இந்த சீரியல்கள். இதன் காரணமாக, பிள்ளைகளோடு பேசுவதில்லை, பிள்ளைகளை வேண்டுமென்றே டியூசன்களுக்கு அனுப்பிவிட்டு தொடங்குகிறது சீரியல் வாழ்க்கை.. படிக்க தெரியாத பெண்கள் தான் குழந்தைகளை டியூசனுக்கு அனுப்புவதற்க்கு எழுத படிக்க தெரியாததால் சொல்லிகொடுக்க தெரியவில்லை என்பதை சீரியல் பார்க்க காரணமாக சொல்கிறார்கள் என்றால்,.. படித்த பெண்களும் இதே காரணத்தை சொல்வதுதான் வியப்பாக இருக்கிறது.

இதனால் குழந்தைகள் எல்லா வகையிலும் சீரழிந்து போவதை காண முடிகிறது.. குறிப்பாக போன வருடம் தஞ்சாவூர் பக்கம் குடிக்க பணம் தரலைன்னு தாயை கொன்ற 5 வகுப்பு மாணவனை பற்றி படிக்கும் போது மனசுக்குள்ள படபடன்னு ஓடுகிறது. .கோலங்கள் நாடகத்தோட கடைசி எபிசோட பார்க்க முடியாததல் தீக்குளிச்ச மதுரை மீனா (10 வயசு) மாணவியை மறந்துட்டீங்களா.. என சொல்லும் போது தாய்மார்கள் சிலர் அழுவதை பார்க்க முடிந்தது.. பெண்பிள்ளைகளை வளர்ப்பதை தென்னம்பிள்ளையை வளர்ப்பதை போல கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். கொஞ்சம் தவிறினால் இழப்பு நமக்குதான்…. மகள் அதிகமா சாப்பிடாம கொஞ்சமா சாப்பிடுவதை பார்த்து இனி கண்டிப்பீங்களா இல்லை, அவ அதிகமா சாப்பிடமாட்டான்னு சொல்லி அவ எதிர்காலத்தை நாசமாக்க போறீங்கிளா?.. இனி இந்தியாவில் பிறக்க போகும் பிள்ளைகள் 100% இரும்பு சத்து குறையா தான் பிள்ளைகள் பிறக்கும்னு புள்ளிவிவரம் சொல்லுது என்ன செய்ய போறீங்க…என செரின் சொல்லும் போது இனி “மக” சாப்பிடலைன்னா செத்தா” என ஒரு தாய் சொல்ல, எல்லோர் முகத்திலும் புன்னகை..

கொஞ்சம் சிரிக்க விட்டு உங்க பிள்ளையை அடிப்பதை முதலில் நிறுத்துங்கள்… அவர்களுக்கு எப்படி சொன்னால் புரியுமோ அப்படி சொல்லுங்கள் அதை கண்டுபிடிங்கள்… ஏனெனில் குழந்தைகள் எல்லோருக்கும் முதல் எதிரி யாருன்னா அப்பா அம்மாதான்னு சொல்லுறாங்க. உங்க பிள்லை நீங்க சொன்னா கேட்காம யார் சொல்லி கேட்பாங்க…என பேச எல்லோர் முகத்திலும் பயம் தெரிந்தது.. மெல்ல பேசி முடிக்க சரவெடியைவிட அதிகமாய் கரவோசை எழ அமர்ந்தார் செரின்.. அதனை தொடர்ந்து வெளிச்சம் மாணவர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது..

நிகழ்ச்சி குறித்து பேசிய பெண்மனி ஒருவர்:
ஒரு தாயாய் நான் எனக்கான கடமையை இதுவரை சரியாக செய்யவில்லை என உணர்கிறேன்., வீட்டுவேலை, குடிகார வீட்டுகாரங்கிட்ட படுற அவஸ்தை, என எங்க கஸ்டத்தை போக்குதுன்னுதான் சீரியல்களை பார்க்குறோம். அதை மணிக்கணக்கா பார்த்து கொண்டிருப்பதால் பாலாகும் குடும்ப உறவின் புனிதத்தை வெளிச்சம் வெளிச்சமிட்டுகாட்டியது… எங்களுக்கு கிடைத்தை போல் வெளிச்சம் பரவட்டும் என்றார்….

நன்றி: வெளிசசம மாணவர்கள்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 7 Nov 2011 - 7:29

Atchaya wrote:இன்று எனது பதிவுகள் தொடருமானால், அனைத்தும் இத் தலைப்பிலேயே பதிவிடுவேன். இதனை இன்று பெரு நாளை கொண்டாடும் எனது இனிய உறவுகளுக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் அர்ப்பணிக்கிறேன்!

இன்று போல் என்றும்
உற்சாகத்துடன் வாழ
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள்
உங்களை ஆசிர்வதிக்கட்டும்!

உறவுகளுடன், உறவுகள்
உயிர்த்தெழட்டும் மனித நேயம்
விண்ணைத் தொடட்டும்
விடியலாய் மாறட்டும்

பூந் தென்றலாய் மலரட்டும்
பூவைப் போல மென்மையாய் மாறட்டும்
அரக்க உணர்ச்சி மாறட்டும்
அன்பு பூக்கட்டும்

அந்நிய மண்ணிலே வாசம்
அஞ்சான வாசம் இந்நிலை
மாறட்டும் சொந்த மண்ணிலே
எதிரியாய் விரோதியாய் பார்க்கும்
மன நிலை மாறட்டும்!

மண்ணின் மைந்தர்களிடத்திலே உள்ள
கருத்தொற்றுமை ஓங்கட்டும்
கள்ளமில்லா உள்ளமாய் மாறட்டும்
மாறட்டும் மாறட்டும் நல்ல
உள்ளமாய் மாறட்டும்!
நானிலமும் சிறக்கட்டும்!
வாழ்த்த வேண்டும் இறைவா!
வையகத்தாரின் வாழ்க்கை சிறக்க
வாழ்த்த வேண்டும் இறைவா!



பள்ளமாய் மாறிப்போன
வாழ்க்கையினை கனிவு
உள்ளங்கொண்டு பாரேன் இறைவா!

பாரா மடந்தையாய் இருப்பதேனோ இறைவா!
பரம் பொருள் தானே .......
அப்படித்தான்
என்கிறாயோ இறைவா!
கேட்பது எனது பணி
கொடுப்பது உன் கடமை என்பதனை
மறந்தாயோ இறைவா!

மறப்பதும் மன்னிப்பதும்
மனிதநேயம் என்பதுவும்
மாறிவிட்டதோ இறைவா!

கேட்க வேண்டியதை கேட்டு விட்டேன்
கொடுப்பதுன் கடன்
என்றெண்ணி விட்டுவிட்டேன்
முடிவை உன்னிடமே இறைவா!

முதலில் உங்களுக்கும் நல்வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன் அற்புதமான இப்பதிவுகள் கண்டு மகிழ்கிறேன் நன்றிகள் உள்ளம் கவர்ந்த வரிகளுடன் உங்களின் உள்ளம் மேலோங்கித் தெரிகிறது


தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 7 Nov 2011 - 7:31

Atchaya wrote:
உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை.
பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை.
காலையில் எழுந்து டீ / காஃபி குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும் என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை.
புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும் என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை.
இவருக்குத்தான் இனிய பெருநாள்…!
தன் ஆணவத்தை அடக்கி
அலட்சியப் போக்கை அழித்து
பகலில் பட்டினி கிடந்து
இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு
பசி, தாகத்தால் இச்சையை வென்று
இறை கடமைகளை நிறைவேற்றி
தானத்தால் ஏழைகளின் கண்களை திறந்த
உண்மை முஸ்லிமுக்குத்தான் பெருநாள்…!
வறியவர்களின் தேவைகளை கவனித்து
பட்டினியையும், பசியையும் அடக்கி,
நோன்பினால் ஈமானை பலப்படுத்தி
ஆன்மிக பலத்தை நிலை நாட்டி
ஒரு மாத கடுஞ்சோதனையை வென்று
இறைவனுக்காக நோன்பிருந்த
இறைமறையை ஓதி உணர்ந்த
இறைகடமைகளை நிறைவு செய்த
உண்மை முஃமினுக்குத்தான் உன்னத பெருநாள்…!
ஏழைவரி(ஜகாத்)யை முறையாக அளித்து
கருமித்தனத்தை அடியோடு ஒழித்து
சிறியவர்களை போற்றி – பாராட்டி
பெரியவர்களை மதித்து நடந்து
அறிஞர்களுடன் பண்புடன் நடந்து
செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு
இனி பாவமே செய்யமாட்டேன்
என்ற உறுதி கொண்ட
உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!
எனது தொழுகை அல்லாஹ்வுக்கே!
எனது தியாகச் செயல் அல்லாஹ்வுக்கே!
எனது பொதுப்பணி அல்லாஹ்வுக்கே!
எனது வாழ்வு அல்லாஹ்வுக்கே!
எனது மரணம் அல்லாஹ்வுக்கே!
என்று சத்தியப் பிரமாணம் எடுத்த
உண்மையளர்களுக்குத்தான் உண்மைப் பெருநாள்…!
உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த ஈகைப் பெருநாள் இனிய நல் வாழ்த்துக்கள்!
பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ

உண்மையான வெளிப்பாடு நன்றி பகிர்வுக்கு


தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 7 Nov 2011 - 7:35

Atchaya wrote:தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  293460_281643728532952_145264895504170_925959_1320200976_n

மரங்களில் எத்தனை கிளைகள்
எனக்கில்லையே கைகள்....

மரங்களில் எத்தனை இலைகள்
எனக்குள்ளே நம்பிக்கை விதைகள்

அத்தனை இலைகள் இருந்திட்டாலும்
பூத்திட்டது என்னவோ ஒரு பூ!

எனக்குள்ளே ஆசைகள் அதிகம் இருந்திட்டாலும்
என்னிடம் கொட்டிக்கிடக்குது அன்பு

தராதரம் பார்க்க மனிதனே ஆனாலும்
தராதரம் இல்லாத அன்பு என்னிடம்

பகிர்ந்து கொடுப்பது உணவு அல்ல
என் இதயத்து அன்பு!

அன்புக்கு நிகர் வேறொன்றுமில்லை @. @.


தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by Atchaya Mon 7 Nov 2011 - 8:16

மிக்க நன்றி உறவே!
உங்களின் நெஞ்சு நிறைந்த அன்பிற்கு நன்றி... :];: :];:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by Atchaya Mon 7 Nov 2011 - 8:56

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  ANIMATE
தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  3D


மழை நீராய்
எங்கே பிறந்திட்டாலும்
ஒன்று கூடி
உங்களை வாழ்விக்க வேண்டி
வந்தோமய்யா!
கரடு முரடான பாதைகளை
கடந்து வந்தோமையா!
வழிப்பாதையில்
எத்தனை மலைக்குன்றுகள்
எங்களின் முயற்சிக்குத்
தடைக் கற்கள்.

எத்தனை உயர்ந்தவானாய்
இருந்திட்டாலும்
அன்பு உள்ளங் கொண்டவரையே
மக்கள் நாடுவர் .....
ஆம் நாங்களும் உங்களின் மேல்
கொண்ட அன்பினால்
குன்றைத் தாண்டி வந்தோம்.!

நீயோ பாராமுகமாய் இருந்திட்டாய்!
ஆனால், வாணவனோ எனை
மனம் குளிர தன்
மேகத்தினை அனுப்பி எனை
முத்தமிட வைத்திட்டானே!
என்னே! இறைவா உன் கருணை!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by ஹம்னா Mon 7 Nov 2011 - 16:11

உங்கள் இந்த பதிவுத்தொடர் என் மனதை மிகவும் மகிழச்செய்தது.
வாழ்த்துக்கள் அண்ணா.


தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by முனாஸ் சுலைமான் Mon 7 Nov 2011 - 18:09

மழை நீராய்
எங்கே பிறந்திட்டாலும்
ஒன்று கூடி
உங்களை வாழ்விக்க வேண்டி
வந்தோமய்யா!
கரடு முரடான பாதைகளை
கடந்து வந்தோமையா!
வழிப்பாதையில்
எத்தனை மலைக்குன்றுகள்
எங்களின் முயற்சிக்குத்
தடைக் கற்கள்.

எத்தனை உயர்ந்தவானாய்
இருந்திட்டாலும்
அன்பு உள்ளங் கொண்டவரையே
மக்கள் நாடுவர் .....
ஆம் நாங்களும் உங்களின் மேல்
கொண்ட அன்பினால்
குன்றைத் தாண்டி வந்தோம்.!

நீயோ பாராமுகமாய் இருந்திட்டாய்!
ஆனால், வாணவனோ எனை
மனம் குளிர தன்
மேகத்தினை அனுப்பி எனை
முத்தமிட வைத்திட்டானே!
என்னே! இறைவா உன் கருணை!
://:-: ://:-: :”@:
தோழரே
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by Atchaya Mon 7 Nov 2011 - 20:07

நன்றி தோழரே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by நண்பன் Tue 8 Nov 2011 - 13:29

மழை நீராய்
எங்கே பிறந்திட்டாலும்
ஒன்று கூடி
உங்களை வாழ்விக்க வேண்டி
வந்தோமய்யா!
கரடு முரடான பாதைகளை
கடந்து வந்தோமையா!
வழிப்பாதையில்
எத்தனை மலைக்குன்றுகள்
எங்களின் முயற்சிக்குத்
தடைக் கற்கள்.

எத்தனை உயர்ந்தவானாய்
இருந்திட்டாலும்
அன்பு உள்ளங் கொண்டவரையே
மக்கள் நாடுவர் .....
ஆம் நாங்களும் உங்களின் மேல்
கொண்ட அன்பினால்
குன்றைத் தாண்டி வந்தோம்.!

நீயோ பாராமுகமாய் இருந்திட்டாய்!
ஆனால், வாணவனோ எனை
மனம் குளிர தன்
மேகத்தினை அனுப்பி எனை
முத்தமிட வைத்திட்டானே!
என்னே! இறைவா உன் கருணை!

மிகவும் அருமையாக உள்ளது அட்சயா
மனம் குளிர தன்
மேகத்தினை அனுப்பி எனை
முத்தமிட வைத்திட்டானே!
என்னே! இறைவா உன் கருணை!
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by நண்பன் Tue 8 Nov 2011 - 14:04

Atchaya wrote:தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  293460_281643728532952_145264895504170_925959_1320200976_n

மரங்களில் எத்தனை கிளைகள்
எனக்கில்லையே கைகள்....

மரங்களில் எத்தனை இலைகள்
எனக்குள்ளே நம்பிக்கை விதைகள்

அத்தனை இலைகள் இருந்திட்டாலும்
பூத்திட்டது என்னவோ ஒரு பூ!

எனக்குள்ளே ஆசைகள் அதிகம் இருந்திட்டாலும்
என்னிடம் கொட்டிக்கிடக்குது அன்பு

தராதரம் பார்க்க மனிதனே ஆனாலும்
தராதரம் இல்லாத அன்பு என்னிடம்

பகிர்ந்து கொடுப்பது உணவு அல்ல
என் இதயத்து அன்பு!

மிகவும் அருமையாக உள்ளது அட்சயா வாழ்த்துக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by நண்பன் Tue 8 Nov 2011 - 14:18

Atchaya wrote:தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  320897_2456601901151_1435227178_32852965_702526705_n

ஓ என்ன அலறல் சத்தம்
ஓ எனது நண்பனா?

எப்படி விழுந்தாய் இதனுள்ளே!
எப்படி காப்பாற்றுவேன் உன்னை!

என் தோழன் உடனிருக்க
இதோ வந்துவிட்டேன் உடனே!

கை கொடுக்க நண்பனிருக்க
கவலை இனியில்லை உனக்கு!

கரை ஏற்றுவது என்வேலை!
நேரத்தில் உதவிடச் செயதிட்ட உனக்கும் நன்றி!

மனிதன் தானே எங்கே இருக்கும்
மனித நேயம் என நினைத்திட்டாயோ?

நன்றி மறவா ஜீவனே!
சென்றிடுவாயே இனி கவலை இன்றியே!

மிகவும் அருமை
கை கொடுக்க நண்பனிருக்க
கவலை இனியில்லை உனக்கு!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by kalainilaa Wed 9 Nov 2011 - 0:02

:!+: :!+: :!@!: :+=+: :+=+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by நண்பன் Wed 9 Nov 2011 - 9:47

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Thanksqp


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்  Empty Re: தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum