Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குழந்தைக்காகப் பெற்றோர்கள்!
Page 1 of 1
குழந்தைக்காகப் பெற்றோர்கள்!
குழந்தை பிறந்ததிலிருந்தே அது தூங்கும்போது அருகில் வைத்துக்கொள்ளும் பழக்கம் நம்மிடையே இருக்கிறது. குழந்தை அம்மாவிற்கு அருகில் அதே கட்டிலில் அல்லது கட்டிலுக்கு அருகில் படுத்துத் தூங்குகிறது. சில மாதங்கள் கழித்துக் குழந்தையின் தாய் அதன் தந்தைக்கு அருகில் படுக்கும்போது குழந்தை பெற்றோர்களுடன் படுத்துத் தூங்குகிறது.
குழந்தைக்கு எப்போது தனி படுக்கையறை கொடுப்பது என்ற முக்கியமான கேள்வியை யாரும் கேட்காதது துரதிஷ்டம். பெற்றோர்கள் ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்கென்று ஒரு தனி இடம் ஒதுக்கத் தயங்குகிறார்கள். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வளர் இளம் பருவத்தை எட்டிய பின்னும் அவர்களைத் தங்கள் அருகில் தூங்க வைக்கிறார்கள். ஆனால் மேற்கு நாடுகளில் குழந்தை பிறப்பதற்கு முன்பே அது தூங்குவதற்குத் தனியறை ஏற்பாடு செய்கிறார்கள்.
இந்தியாவில் கூட்டுக் குடும்பங்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்த காலத்தில் குழந்தைக்குத் தூங்கும் விஷயத்தில் பல வசதிகள் இருந்தன. ஆனால் குடும்பங்கள் தனியாக வாழத் தொடங்கிவிட்ட இந்தக் காலத்தில் குழந்தைக்கு இரண்டு தேர்வுகள்தான் இருக்கின்றன. தனியறையில் தூங்குவது என்ற இரண்டாம் வசதியைப் பெற்றோர்கள் அறிமுகப்படுத்தவில்லை என்றால் குழந்தைக்கு அப்படி ஒரு தேர்வு இருப்பது தெரியாமல் போகும்.
பெற்றோர்கள் தாங்கள் தூங்கும் அதே அறையில் குழந்தையைத் தூங்க வைப்பதற்குப் பொதுவாக என்ன காரணங்கள் சொல்லப்படுகின்றன? ஒரு காரணம், குழந்தை தூங்கும்போது அதை சுலபமாகக் கண்காணிக்க முடியும் என்பது. தனியாகத் தூங்குவதற்குக் குழந்தை பயப்படும் என்பது இன்னொரு காரணம்.
நம் குழந்தை நம்முடன் சில வருடங்கள்தான் இருக்கும். அது பிரிந்து போகும் வரை அதனுடன் இருக்கலாமே என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். சில பெற்றோர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் சாதகமான ஒரே அம்சம் குழந்தைதான் என்பதால், அல்லது திருமண வாழ்க்கையைத் தொடர்வதற்கான ஒரே காரணம் குழந்தைதான் என்பதால் குழந்தையைத் தனியே வைப்பதில்லை!
மூன்று வயதிலிருந்து ஆறு வயது வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட எல்லாக் குழந்தைகளுக்குமே எதிர் பாலினத்தைச் சேர்ந்த பெற்றோர்மீது காதல் போன்ற ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. "நான் அம்மா அப்பா மாதிரி ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன்" என்பது போல் இந்த ஈர்ப்பு உரையாடலில் வெளிப்படுகிறது. இந்தக் கட்டத்தில் குழந்தைக்குத் தனது பாலினத்தைச் சேர்ந்த பெற்றோரிடம் மிதமான ஒரு வெறுப்பும் உருவாகிறது.
குழந்தைகள் சுமார் ஆறு வயதில் பாலியல் அனுபவங்களைப் பற்றி ஆர்வக் குறுகுறுப்பு ஏற்படுகிறது. அந்த அனுபவங்களைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறார்கள். எதிர் பாலினத்தைச் சேர்ந்த பெற்றோரின் உடல் உறுப்புகளைப் பற்றி அறியும் ஆர்வம் வெளிப்படத் தொடங்குகிறது. எனவே குழந்தைகளை இந்தக் கட்டம் தொடங்குவதற்கு முன்பே பிரித்து வைப்பது அவசியம். உண்மையில் இது மிக அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டிய ஒரு கட்டம்.
குழந்தையை வேறு படுக்கையறையிலோ பெற்றோரின் படுக்கையறைக்கு வெளியிலோ தூங்க வைப்பது ஆரோக்கியமான திருமண வாழ்க்கை இருப்பதற்கான ஓர் அறிகுறியும் கூட. இது பெற்றோர்களிடையே பாலுறவு மேம்பட உதவுவது மட்டுமின்றி, அவர்கள் மேலும் நெருக்கமாகப் பேசிப் பழகவும் உதவுகிறது.
ஆறு வயதில் தொடங்கிக் குழந்தைகள் பெற்றோர்கள் பேசிக்கொள்ளும் விஷயங்களைப் பெரும்பாலும் புரிந்துகொள்கின்றன. பெற்றோர்கள் பலர் குழந்தை தூங்கும் வரை காத்திருக்கிறார்கள் அல்லது தாங்கள் வேலைக்குப் போகாத நாள் குழந்தை பள்ளிக்குச் செல்லும் அபூர்வமான நாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.
பெற்றோர்கள் தங்கள் உறவினர்கள் போன்ற பல்வேறு சிக்கலான உறவுகளைப் பற்றிய தங்கள் தனிப்பட்ட கருத்துகளைப் பேசும்போது அதைக் குழந்தைகள் பார்க்கவும் கேட்கவும் தேவையில்லை. பெற்றோர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் உணர்ச்சி ரீதியான நெருக்கம் வளர்வதற்குத் தேவையான தனிமையும் நேரமும் அவர்களுக்குக் கிடைப்பது மிகவும் முக்கியம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பெற்றோர்கள் கவனத்திற்கு...
» இனிய இல்லத்தரசிகளை உருவாக்கும் பெற்றோர்கள்
» ஜெனிலியா-ரிதேஷ் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம்
» குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டியது...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum