சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்திய - தமிழர் Khan11

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்திய - தமிழர்

4 posters

Go down

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்திய - தமிழர் Empty இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்திய - தமிழர்

Post by nazimudeen Thu 17 Nov 2011 - 18:12

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்திய - தமிழர்








சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா (Cheraman Perumal)என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.






சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி பழைய தோற்றம்



இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்திய - தமிழர் Cheraman_Juma_Masjid










சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி புதிய தோற்றம்



இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்திய - தமிழர் Cheraman_jumamasjid


கட்டுமான அமைப்பு

இந்த
மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக
உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற
உலக மசுதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது.
(ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது).
இதில்
மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும்
இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி
பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி
கட்டப்பட்டது.




சேரநாடு


சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின்
தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியர்களுடன் வியாபார கப்பல்
தொடர்பை கொண்டிருந்தது. பல்வேறு கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும்
அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.


நிலவை பிரிக்கும் அதிசயம்


மெக்காவில் முகம்மது நபி
(ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த
நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த
சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும்
ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும்
விசாரித்தார்கள்.


அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அரபியர்
கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை
தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்கள். அப்போது அவர்கள் தங்கள்
நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்)
எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த 'நிலவை பிரிக்கும்
அதிசயத்தை' நடத்தியதாகவும் கூறக்கேட்டனர்.


இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள்
அவர்கள் அந்த அரபியர்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை
பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும்
மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள். ஆனால் அப்போது ஈழத்துக்கு
பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியர் கூட்டம் தங்கள் திரும்பி
வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக
வாக்களித்தனர்.


இஸ்லாத்தை ஏற்றல்


தனது ராஜ்ஜியததை பல்வேறு பிரிவுகளாக பிரித்த
சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும்
பகிரிந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் 'கொச்சின் ராயல் பேமிலி' என்ற
பெயரில் இன்றளவும் கேரளாவில் வாசித்து வருகின்றனர்).
அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பி சென்றனர். அங்கு முகம்மது நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே இஸ்லாம்
மதத்தை ஏற்றார்கள். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜுதீன் எனவும்
பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்கள். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள்.


இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல்
குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில்
பின்வருமாறு கூறுகின்றார்:
"இந்தியாவிலிருந்து
முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடீ நிறைய
ஊறுகாய் கொண்டு வந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை
முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து
கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது."



இறப்பு


சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ்
(jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மணம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம்
மதத்தை இந்தியாவில் பரப்பும் நோக்கத்தில் நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின்
தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு
திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ்
துறைமுகத்தில் (Salalah Port, Oman) நோய்வாய்ப்பட்டு இறந்தார். அவருடைய உடல்
அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.




மாலிக் பின் தீனார் அவர்களின் இந்தியா வருகை


மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர
நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான்
பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர்.
அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம்
மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும்
அதற்காக பல மசூதிகளை கட்டுமாறும்
பணித்திருந்தனர்.

அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம்
மார்கத்தை
பரப்புவதற்கும் மசுதிகளை கட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி)
அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி
612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல
மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) போன்ற பகுதிகளிலும் கட்டினார்.



சில தகவல்கள்




சேரமான் பெருமாள் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்திய, தமிழர் ஆவார்.
சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி தான் இந்தியாவின்
முதல் மசூதி மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா மசூதி ஆகும். (உலகின் முதல்
ஜும்மா மசூதி மதினாவில் உள்ளது)
சேரமான் பெருமாள் அவர்களது சமாதி இன்றும் ஓமான் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (இன்றைய சலாலா) 'இந்திய மன்னர் சமாதி' என்ற பெயரில் உள்ளது


மேற்கோள்கள்




a b William Logan, Malabar Manual, Asian Educational Services, 1996 ISBN 8120604466, 9788120604469
saheehain al mustadrak reported by Al Imam Al Hafiz Abi Abdillah AL HAKIM -vol 4 chap 33 kitabul ath’ama page 241
http://www.islamicvoice.com/june.2004/miscellany.htm#cjm
http://www.indiatraveltimes.com/travelogue/mosque.html
http://www.iosworld.org/interview_cheramul.htm
http://www.hindu.com/2005/07/23/stories/2005072306490500.htm
https://www.youtube.com/watch?v=BU2duvVicuI (2/3 தென் இந்திய முஸ்லிம்களின் வரலாறு - CMN சலீம்)


நன்றி : http://ta.wikipedia.org/wiki/



--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்திய - தமிழர் Empty Re: இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்திய - தமிழர்

Post by பர்ஹாத் பாறூக் Thu 17 Nov 2011 - 18:26

தகவலுக்கு நன்றி சகோதரா..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்திய - தமிழர் Empty Re: இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்திய - தமிழர்

Post by ஹம்னா Thu 17 Nov 2011 - 20:57

அறிந்திடாத தகவல் நன்றி.


இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்திய - தமிழர் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்திய - தமிழர் Empty Re: இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்திய - தமிழர்

Post by lafeer Thu 17 Nov 2011 - 21:07

சிறப்பான பதிவு நன்றி
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்திய - தமிழர் Empty Re: இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்திய - தமிழர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னால் கிருத்தவ கன்னியாஸ்திரி Irena Handono இஸ்லாத்தை ஏற்ற வரலாறு.
» திருக்குர்ஆன் கூறும் அதிசய உண்மை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூதர்!
» (chat room) வழியாக "ஷஹாதா கலிமா" மொழிந்து இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டனின் சகோதரி சோஃபி ஜென்கின்ஸ்!
» நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – பொது அறிவு தகவல்கள்
» முதல் இந்திய குடிமகன் நான்தான்...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum