சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

குடல் இறக்கம் வராமல் தடுப்பது எப்படி  Khan11

குடல் இறக்கம் வராமல் தடுப்பது எப்படி

2 posters

Go down

குடல் இறக்கம் வராமல் தடுப்பது எப்படி  Empty குடல் இறக்கம் வராமல் தடுப்பது எப்படி

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Nov 2011 - 14:16

உடல் எடை அதிகரிப்பு பல்வேறு நோய்களுக்கு வாயிலாக அமைகிறது. நமது உணவு முறைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத மேற்கத்திய உணவு முறைக்கு அடிமையாகி பலர் தங்கள் உடலை பெருக்க வைக்கிறார்கள். உடல் உழைப்பு, உடற்பயிற்சி பழக்கம் பலருக்கு இருப்பதில்லை.

இதனாலும் உடல் எடை அதிகரிக்கிறது. இதை கண்டு கொள்ளமல் விடும்போது, மலச்சிக்கலில் ஆரம்பித்து பல நோய்களை கொண்டு வந்து விடுகிறது. அதிக எடை, குடல் இறக்கம் ஏற்படவும் முக்கிய காரணமாகிறது. குடல் இறக்கம் பிரச்னையை தீர்க்க விளக்கம் அளிக்கிறார் டாக்டர் வீ.மு.சசிக்குமார்.

குடல் இறக்கம் என்பது வயிற்றில் உள்ள குடல் சவ்வுப் படலம் சிறிய துவாரங்கள் வழியே வெளி வருதல் ஆகும். பொதுவாக நமது வயிற்றுப் பகுதியில் இயற்கையாக சில துவாரங்கள் உண்டு. அவை தொப்புள், அடிவயிற்றில் இருந்து தொடைக்கு செல்லும் நரம்பு மற்றும் ரத்தக் குழாய்க்கான இங்குனல் பகுதி போன்றவை.

இந்த துவாரங்கள் வயிற்றின் உள் பகுதியில் இருந்து மேல் வரை இணைக்கும் இந்த துவாரங்களின் வாய்ப்பகுதியில் எலாஸ்டிக் போன்று இருக்கும். இந்த எலாஸ்டிக் விரிவடைவதால் வயிற்றில் உள்ள குடல் மற்றும் குடல் சவ்வுப் படலம் போன்றவை வெளியில் வந்து விடுகிறது.

துவக்கத்தில் அழுத்தம் வரும் போது மட்டும் வெளியில் வந்து அழுத்தம் குறைந்த உடன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடும் தன்மை கொண்டதாக இருக்கும். அவ்வப்போது இந்தப் பிரச்னை தோன்றும். பிறகு குடல் பகுதிகள் நிரந்தரமாகத் தங்கி தொல்லை தர ஆரம்பிக்கும்.

அதுமட்டுமில்லாமல் வயிறு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு தையல் விலகி ஓட்டைகள் ஏற்படலாம். இந்த துவாரங்களின் வழியே குடல் வெளியில் வந்து அப்படியே தங்கிவிடும். இதனையே குடல் இறக்கம் என்கிறோம்.

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் குறிப்பாக தொப்பை உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம். பெண்களின் கர்ப்பகாலம், தொடர்ச்சியான மலச்சிக்கல், தொடர் இருமல் மற்றும் தும்மலால் அவதிப்படுபவர்கள், அதிக பாரம் தூக்குபவர்கள், வயிற்றில் அதிக அழுத்தம் கொடுப்பவர்கள், வயிறு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் முறையான ஓய்வு எடுக்காதவர்கள், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்கள் போன்றவர்களுக்கு குடல் இறக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே இவர்கள் குடல் இறக்கம் ஏற்படாமல் இருக்க கவனமாக இருப்பதுடன் பிரச்னையின் துவக்கத்திலேயே டாக்டரின் ஆலோசனையுடன் சிகிச்சை பெறலாம். குடல் இறக்கத்துக்கான அறிகுறிகளை உணர்ந்து உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் சரிசெய்து கொள்ள முடியும்.

பாதுகாப்பு முறை: குடல் இறக்கம் பிரச்னை வராமல் இருக்க முதலில் செய்ய வேண்டியது உடல் எடையைக் குறை ப்பது தான். அவரவர் உயரத்துக்கு ஏற்ற எடை உள் ளதா என்பதைத் தெரிந்து கொண்டு உடல் எடை யைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். அதிக கலோரி உள்ள உணவுகளை தவிர்ப்பது முக்கியம்.

மாமிச உணவுகளுக்கு குட்பை சொல்லி விடுவது நல்லது. நார்ச்சத்து உள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதுடன் சரியான உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் நோயை விரட்ட முடியும். இருமல் மற்றும் தும்மலுக்கு முறையான சிகிச்சை எடுத்து சரி செய்து கொள்ள வேண்டும்.

குடல் இறக்கப் பிரச்னையை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அடி வயிற்றில் அல்லது தொப்புள் பகுதியில் லேசான அழுத்தத்துடன் கூடிய வலி இருக்கும். திடீரென வீக்கம் ஏற்படும், அடுத்த நாள் அல்லது படுத்தால் வீக்கம் காணாமல் போய்விடும். வயிற்றுப் பகுதியில் மந்தமான வலி தொடர்ந்து தொல்லை தரும். இது போன்ற அறிகுறிகள் தென்பட்ட உடனே டாக்டரை அணுக வேண்டும்.

அப்போது உடனடியாக பிரச்னைக்கு தீர்வு காண முடியும். உணவு முறை மாற்றம் மற்றும் எளிய பயிற்சிகள் போதுமானதாக இருக்கும். பிரச்னை முற்றிய பின்னர் மருத்துவரை அணுகினால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும்.

குடல் இறக்கப் பிரச்னை வந்த பின்னர் வீக்கம் உள்ள இடத்தில் அழுத்தம் இருக்கும்படி பட்டையான பெல்ட் அணிய வேண்டும். கீழே உள்ள பொருட்களை நேரடியாக குனியாமல் உட்கார்ந்தபடி எடுக்க வேண்டும்.

ஸ்கிப்பிங் மற்றும் வெயிட் லிப்டிங் உள்ளிட்ட பயிற்சிகள் செய்யக் கூடாது. அதிக வெயிட் உள்ள பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்கவும். வந்த பின்னர் நொந்து கொள்வதை விட குடல் இறக்கம் பிரச்னை வராமல் காக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஸ்ரீதேவி

டயட்

குடல் இறக்கம் பிரச்னை வரா மல் தடுக்க என்ன சாப்பிட வே ண்டும் என்று சொல்கிறார் சங்கீதா. அதிக உடல் எடை, பிரசவத்துக்குப் பின்னர் வயிறு சுருங்கும் போது, அதிக எடையுள்ள பொருட்களை தூக்கும் போது, மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கும் குடல் இறக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

குடல் இறக்கம் செரிமானப் பிரச்னையை ஏற்படுத்தும். இது குழந்தைகளுக்கும் வரலாம். அதிக கொழுப்பு உணவு, எண்ணெயில் பொரித்த உணவு மட்டும் சாப்பிடும் குழந்தைகளுக்கு போதுமான சத்து இன்றி குடல் ஒட்டிக் கொண்டு இந்தப் பிரச்னை வரலாம். மேலும் செரிமானப் பிரச்னையுடன் வலியும் ஏற்படும்.

மலச்சிக்கல், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் உணவில் கவனம் செலுத்துவதன் மூலம் குடல் இறக்கப் பிரச்னை வருவதற்கு முன் சரி செய்ய முடியும்.

கொழுப்பு உணவுகளைத் தவிர்க்கவும். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் அதனைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் குடல் இறக்கப் பிரச்னை உள்ளவர்கள் ஒரே நேரத்தில் வயிறு முட்ட சாப்பிடுவதற்கு பதிலாக குறைந்த அளவு அதிக இடைவெளிகளில் சாப்பிட வேண்டும்.

எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். மசாலா மற்றும் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்க்கவும்.

மாவுப் பொருட்களும் எதிரியே. இதனால் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். நார்மல் புரோட்டின் உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். கீரைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் சேர்க்கவும். கூடுமானவரை அசைவத்தைத் தவிர்ப்பது நல்லது.

உணவுடன் சாலட் மற்றும் சூப் வகைகள் அடிக்கடி எடுத்துக் கொள்வது அவசியம். சரிவிகித உண வை கடைபிடிப்பதன் மூலம் அதிக உடல் எடை மற்றும் மலச்சிக்கலைத் தடுத்து குடல் இறக்கப் பிரச்னை வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கிறார் சங்கீதா.

ரெசிபி

ரைஸ்டோக்ளா

வேக வைத்த சாதம் இரண்டு டம்ளர் எடுத்துக் கொள்ளவும். கோதுமை மாவு கால் டம்ளர், மிளகாய்த்தூள் இரண்டு டீஸ்பூன், தாளிப்பதற்கு கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி,தேவையான அளவு உப்பு. சாதம், உப்பு, மிளகாய்த்தூள் மூன்றையும் நன்றாகப் பிசையவும்.

அத்துடன் கோதுமை மாவு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். இதை சப்பாத்தி போல் தேய்த்து இட்லிப் பானை யில் வைத்து வேக வைக்கவும். இந்த சப்பாத்தியை பொடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.

பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து வதக்கி பொடித்த சப்பாத்திகளைச் சேர்க்கவும். இது சரிவிகித உணவாக இருக்கும். மலச்சிக்கலைத் தவிர்க்கும்.

உப்புமா அடை

வெள்ளை ரவையில் தயாரித்த உப்புமா ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய் 4, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு எடுத்துக் கொள்ளவும். உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாயை மிக்சியில் கரகரப்பாக அரைத்து தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய பின்னர் இத்துடன் உப்புமா சேர்த்து தோசைப்பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். இதனை தோசைக்கல்லில் அடையாக சுட்டு எடுக்கலாம். எளிதில் ஜீரணம் ஆவதுடன் போதுமான சக்தியும் உடலுக்குக் கிடைக்கும்.

இடியாப்பம் புலவு

இடியாப்பம் 6 எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். பட்டை மற்றும் கிராம்பு சிறிது, பச்சை மிளகாய் 2, கரம்மசாலத் தூள் மற்றும் மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் சேர்த்து நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் கரம்மசாலா மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி இறுதியாக கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். இறுதியில் இடியாப்பத்தை உதிரியாக செய்து இதில் சேர்த்து வதக்கி இறக்கவும். எளிதில் ஜீரணம் ஆகும்.

நன்றி இணையம்


குடல் இறக்கம் வராமல் தடுப்பது எப்படி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குடல் இறக்கம் வராமல் தடுப்பது எப்படி  Empty Re: குடல் இறக்கம் வராமல் தடுப்பது எப்படி

Post by ஹம்னா Tue 22 Nov 2011 - 17:34

##* ##*


குடல் இறக்கம் வராமல் தடுப்பது எப்படி  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum