Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வயதான காலத்தில் மூளை தொடர்பான பாதிப்புகள் வராமல் தடுப்பது சாத்தியமா?
Page 1 of 1
வயதான காலத்தில் மூளை தொடர்பான பாதிப்புகள் வராமல் தடுப்பது சாத்தியமா?
-
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல்
அறுவைசிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா சாரி.
-
வயதாக, ஆக எல்லோருக்குமே மூளையின் ஆற்றல் குறையத்
தொடங்கும். வயதானவர்களுக்கு அல்சைமர் பாதிப்பும்
வரக்கூடும். அந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள், உயிரோடு
இருப்பார்களே தவிர, சுற்றி உள்ள யாரையும் அடையாளம்
தெரியாது...
எதுவும் நினைவில் இருக்காது. அந்த அளவுக்கு மிக மோசமான
நோய் அது. அந்தப் பிரச்னைக்கு சிகிச்சையே கிடையாது.
ஆனால் 20, 30 வயதிலிருந்தே மூளையின் ஆரோக்கியத்தில்
கவனம் செலுத்தினால் பிற்காலத்தில் ஏற்படும் இத்தகைய
பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். சரிவிகித உணவுப்
பழக்கம், போதுமான அளவு தூக்கம், உடற்பயிற்சி என
எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள்தான் மூளையின்
ஆரோக்கியத்துக்கும் வலியுறுத்தப்படுகின்றன. ஆனால்,
இவற்றை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்பதுதான்
கேள்வி.
மூளை என்பது 50 சதவிகிதம் கொழுப்புச் சத்தால் ஆனது.
ஆனால், இன்று பெரும்பாலானோர் கொலஸ்ட்ரால், இதய
ஆரோக்கியம் என்ற பெயரில் கொழுப்பு குறைவாக அல்லது
அறவே கொழுப்பு இல்லாமல்தான் சாப்பிடுகிறார்கள். அப்படி
கொழுப்பு குறைவாகச் சாப்பிடுவது மூளைக்கு நல்லதல்ல.
எனவே, கொழுப்பே இல்லாமல் சாப்பிடுவதைத் தவிர்த்து
ஆரோக்கியமான கொழுப்பு உள்ள உணவுகளைத் தேர்ந்து
எடுத்துச் சாப்பிட வேண்டும்.
மீன், பாதாம், அவகேடோ எனப்படும் பட்டர் ஃப்ரூட், தேங்காய்
எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றில் ஆரோக்கியமான
கொழுப்பு உள்ளது. மூளையில் 75 சதவிகித அளவு நீர்ச்சத்து இருக்கும்.
அதைத் தக்கவைக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க
வேண்டும்.
உடற்பயிற்சி செய்யும்போது ஆக்ஸிஜன் அதிகமுள்ள ரத்தமானது
மூளைக்குச் செல்லும். அது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிகவும்
நல்லது. உடற்பயிற்சியின்போது Brain-derived neurotrophic
factor (BDNF) என்கிற சாரம் வெளியேற்றப்படும். அது புதிய
நரம்பு செல்கள் உருவாகக் காரணமாகும். பழுதடைந்த செல்களை
ரிப்பேர் செய்யவும் உதவுவதால், மூளையின் ஆரோக்கியம்
மேம்படுகிறது.
அடுத்தது தூக்கம். போதுமான தூக்கம் இல்லாவிட்டால் மூளையின்
செல்கள் பெரிதும் பாதிக்கப்படும். ஐ.டி வேலை, பி.பி.ஓ வேலைகளில்
இருப்பவர்கள், தூக்க நேரத்தைக் குறைப்பதன் மூலம், மூளையின்
ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள் என்பதுதான்
உண்மை.
அதன் விளைவு இள வயதில் தெரியாவிட்டாலும், 60 வயதுக்கு மேல்
நிச்சயம் தெரியும். இதையெல்லாம் தடுக்க வேண்டும் என்றால்
இன்றே விழித்துக் கொள்ள வேண்டும்.
-
நன்றி-ஆர்.வைதேகி (டாக்டர் விகடன்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பிறவிக் குறைபாடுகள் வராமல் தடுப்பது எப்படி?
» அம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி?
» இடுப்பு,முதுகுவலியா. வலி வராமல் தடுப்பது எப்படி?
» குடல் இறக்கம் வராமல் தடுப்பது எப்படி
» நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள்
» அம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி?
» இடுப்பு,முதுகுவலியா. வலி வராமல் தடுப்பது எப்படி?
» குடல் இறக்கம் வராமல் தடுப்பது எப்படி
» நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum