சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

சச்சின், தோனிக்கு ஓய்வு, சேவக் கேப்டன் Khan11

சச்சின், தோனிக்கு ஓய்வு, சேவக் கேப்டன்

3 posters

Go down

சச்சின், தோனிக்கு ஓய்வு, சேவக் கேப்டன் Empty சச்சின், தோனிக்கு ஓய்வு, சேவக் கேப்டன்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 Nov 2011 - 13:23

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், சச்சின், தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சேவக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி வரும் 29ம் தேதி கட்டாக்கில் நடக்கிறது. மற்ற போட்டிகள் விசாகபட்டினம் (டிச., 2), ஆமதாபாத் (டிச., 5), இந்தூர் (டிச., 8), சென்னை (டிச., 11) ஆகிய இடங்களில் நடக்கவுள்ளது. முதல் மூன்று போட்டிக்கான 15 பேர் கொண்ட வீரர்களை, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தேர்வுக்குழு நேற்று அறிவித்தது.

சச்சின் இல்லை:
இதில் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், கேப்டன் தோனி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை தொடருக்கு பின், இதுவரை ஒரு ஒருநாள் போட்டியில் கூட சச்சின் விளையாடவில்லை. இதன்மூலம், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது 100வது சர்வதேச சதத்தை நழுவவிட்ட சச்சின், ஒருநாள் தொடரில் அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

சேவக் கேப்டன்:
இந்த ஆண்டு இதுவரை 11 டெஸ்ட், 24 ஒருநாள், மூன்று சர்வதேச "டுவென்டி-20' போட்டியில் விளையாடிய கேப்டன் தோனி, ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். தொடர்ச்சியாக விளையாடி வரும் இவருக்கு ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேப்டன் பொறுப்பு அதிரடி துவக்க வீரர் சேவக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ஏழு போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள சேவக், நான்கு வெற்றி, மூன்று தோல்வியை பெற்றுத் தந்துள்ளார். துணைக் கேப்டனாக மற்றொரு துவக்க வீரர் கவுதம் காம்பிர் நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பருக்கு பார்த்திவ் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யுவராஜ் காயம்:


சமீபத்திய உலக கோப்பை தொடரில் "தொடர் நாயகன்' விருது வென்ற யுவராஜ் சிங், போதிய உடற்தகுதி இல்லாததால், தாமாகவே விலகிக் கொண்டார். விரைவில் இவர், நுரையீரல் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு "ஆப்பரேஷன்' செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாக "பார்மின்றி' தவித்து வரும் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. டெஸ்ட் தொடரில் சுழலில் அசத்திய அஷ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரக்யான் ஓஜா தேர்வு செய்யப்படவில்லை. இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராக ராகுல் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ரகானே வாய்ப்பு:
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்திய அஜின்கியா ரகானே, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. டெஸ்ட் தொடரில் வேகப்பந்துவீச்சில் நம்பிக்கை அளித்த வருண் ஆரோன், உமேஷ் யாதவ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் பிரவீண் குமார், வினய் குமார் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
15 பேர் கொண்ட இந்திய அணி: சேவக் (கேப்டன்), காம்பிர் (துணைக் கேப்டன்), பார்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, அஜின்கியா ரகானே, ரோகித் சர்மா, மனோஜ் திவாரி, ரவிந்திர ஜடேஜா, பிரவீண் குமார், வினய் குமார், வருண் ஆரோன், உமேஷ் யாதவ், அஷ்வின், ராகுல் சர்மா.

ஹர்பஜன் தேர்வு செய்யப்படுவாரா?
அடுத்த மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி டெஸ்ட், சர்வதேச "டுவென்டி-20' மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதற்கட்டமாக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களின் தேர்வு இன்று மும்பையில், பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் நடக்கிறது. இதில் "பார்மின்றி' தவித்து வரும் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் சுழற்பந்துவீச்சாளர்களான அஷ்வின், பிரக்யான் ஓஜா சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இருப்பினும், ஆஸ்திரேலிய மண்ணில் ஹர்பஜன் சிங்கின் முந்தைய செயல்பாடு நன்றாக இருப்பதால், வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல உடற்தகுதியை நிரூபித்து அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


சச்சின், தோனிக்கு ஓய்வு, சேவக் கேப்டன் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சச்சின், தோனிக்கு ஓய்வு, சேவக் கேப்டன் Empty Re: சச்சின், தோனிக்கு ஓய்வு, சேவக் கேப்டன்

Post by jasmin Sat 26 Nov 2011 - 16:02

விளையாட்டு தேர்வு குழுவின் முடிவு சரிதான் ஒருவருக்கே வாய்ப்பை கொடுத்து கொண்டு இருக்க முடியாது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சச்சின், தோனிக்கு ஓய்வு, சேவக் கேப்டன் Empty Re: சச்சின், தோனிக்கு ஓய்வு, சேவக் கேப்டன்

Post by நண்பன் Sat 26 Nov 2011 - 19:48

jasmin wrote:விளையாட்டு தேர்வு குழுவின் முடிவு சரிதான் ஒருவருக்கே வாய்ப்பை கொடுத்து கொண்டு இருக்க முடியாது
சச்சின், தோனிக்கு ஓய்வு, சேவக் கேப்டன் 111433 சச்சின், தோனிக்கு ஓய்வு, சேவக் கேப்டன் 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சச்சின், தோனிக்கு ஓய்வு, சேவக் கேப்டன் Empty Re: சச்சின், தோனிக்கு ஓய்வு, சேவக் கேப்டன்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 Nov 2011 - 20:15

jasmin wrote:விளையாட்டு தேர்வு குழுவின் முடிவு சரிதான் ஒருவருக்கே வாய்ப்பை கொடுத்து கொண்டு இருக்க முடியாது

@. @. @. @.


சச்சின், தோனிக்கு ஓய்வு, சேவக் கேப்டன் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சச்சின், தோனிக்கு ஓய்வு, சேவக் கேப்டன் Empty Re: சச்சின், தோனிக்கு ஓய்வு, சேவக் கேப்டன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum