Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அதிக நேரம் லேப்டாப் பயன்படுத்தினால்
5 posters
Page 1 of 1
அதிக நேரம் லேப்டாப் பயன்படுத்தினால்
உலகையே உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டது விஞ்ஞானம். ஆனாலும், அதற்கு விலையாக அடுக்கடுக்கானப் பிரச்னைகளும் நம்மிடத்தில் அணிவகுத்து நிற்கின்றன!
'கைக்கு அடக்கமாக இருக்கும்; எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லலாம்’ என்பதாலேயே 'லேப்டாப்’ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகம்! குறிப்பாக, பிஸினஸ் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் - வெளிநாடு என பறந்து கொண்டே இருப்பவர்களிடையே லேப்டாப்பின் பயன்பாடு ரொம்பவே அதிகம். தற்போது கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கி வருகிறது. இப்படி பல்வேறு துறையினரும் லேப்டாப் பயன்படுத்தி வரும் சூழ்நிலையில், 'அதிக நேரம் லேப்டாப் பயன்படுத்தினால் பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடும்’ என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இதுகுறித்து பொது மருத்துவர் ராஜாமணியிடம் கேட்டோம். 'கம்ப்யூட்டரைப் போல ஒரே இடத்தில் அமர்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதால், பெரும்பாலானவர்கள் லேப்டாப்புக்கு மாறி வருகிறார்கள். மடியில் வைத்துப் பயன்படுத்துதல், படுத்துக்கொண்டே பயன்படுத்துதல், ஹாயாக தரையில் உட்கார்ந்துகொண்டு பயன்படுத்துதல் என ஒவ்வொருவரும் தங்களுடைய வசதிக்கேற்ப விதவிதமான முறைகளில் லேப்டாப்பைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதுவும், குறிப்பிட்ட நேரம்தான் என்றில்லை... மணிக்கணக்காக அதிலேயே மூழ்கி விடுகின்றனர். இப்படித் தொடர்ந்து பயன்படுத்துவதால் இடுப்பு, கழுத்து, மூட்டு, தோள்பட்டை என உடம்பில் பல இடங்களில் வலி தோன்றும். குறிப்பாக, நீண்ட நேரம் டைப் செய்யும்போது, மணிக்கட்டுப் பகுதிக்கு ரத்தம் வருவது குறைந்து வலி உண்டாகும். விரல்களிலும் இந்தப் பாதிப்பு இருக்கும். எனவே, தொடர்ந்து தட்டச்சு செய்யவேண்டிய வேலை இருந்தால், அவ்வப்போது விரல்களுக்கு ஓய்வு கொடுத்து, ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும். விரல்களை நீட்டி மடக்குவது போன்ற சிறிய பயிற்சிகளையும் செய்யலாம். இதனால் ரத்த ஓட்டம் சீராகப் பாய்ந்து, புத்துணர்வு ஏற்படும். மடியில் லேப்டாப்பை வைத்துப் பயன்படுத்தும்போது, அதில் இருந்து வெளியாகும் அதிக சூட்டினால் ஆண்களின் விதைப்பை பாதிக்கப்பட்டு, விந்தணுக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் 'குழந்தைப் பேறு கிடைப்பதிலும் சிக்கல் உண்டாகலாம்’ என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால், இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுதவிர, சூட்டினால் மடியில் எரிச்சல், புண் போன்ற சருமப் பாதிப்புகள் வரலாம். சிலர் துணி அல்லது தலையணையை மடியில் வைத்து, அதன்மேல் லேப்டாப்பை வைத்துக் கொள்வார்கள். இப்படிச் செய்வதால், லேப்டாப்பில் இருந்து வரும் வெப்பம் தங்களைத் தாக்காது என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறான விஷயம். ஏனெனில், வெப்பம் வெளியேற வழி இல்லாமல், லேப்டாப் இன்னும் அதிகமாக சூடாகும். சில சமயங்களில் வெடித்து விடவும் வாய்ப்புண்டு. லேப்டாப்பை மடியிலோ அல்லது தரையிலோ வைத்துப் பயன்படுத்தும்போது குனிந்தே இருப்பதால் கழுத்து வலி, முதுகுவலி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி உண்டாகும். சிலர் படுக்கையில் குப்புறப் படுத்துக்கொண்டே லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். இப்படிச் செய்யும்போது மார்பு வரை உள்ள உடல்பகுதி மட்டுமே படுக்கையில் பதிந்திருக்கும். தலையும், கழுத்தும் மேலே தூக்கி இருக்கும். இதனால் முதுகு, கழுத்துப் பகுதிகளில் வலி ஏற்படும். இப்படித்தான் அமர வேண்டும், படுக்க வேண்டும் என வரைமுறை இருக்கிறது. இந்த வரைமுறைகளை மீறும்போதுதான் மேற்கண்ட பிரச்னைகள் உருவாகின்றன. எனவே, மேஜை அல்லது அதற்குச் சமமான உயரம் கொண்ட இடங்களில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு முதுகு வளையாமல் வேலை செய்யலாம். மேலும் ஒரே நிலையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்காமல், குறிப்பிட்ட இடைவெளிகளில், உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இதுதவிர அவ்வப்போது எழுந்து சிறிது தூரம் நடக்கவும் செய்யலாம். அதிக வெளிச்சமுள்ள விளக்குகள் இருக்கும் இடங்களில் லேப்டாப் பயன்படுத்தும்போது, அதிகமான ஒளி லேப்டாப் திரை மீது பட்டு, எதிரொளிக்கும். இதனால், கண்களில் உள்ள ரெட்டினாவில் பாதிப்பு ஏற்படும். எனவே, அதற்குத் தகுந்தாற்போல் திரையின் பிரகாச அளவை மாற்றி அமைத்துக்கொள்வது நல்லது!' என்கிறார் டாக்டர் ராஜாமணி! நன்றி: டாக்டர் ராஜாமணி

Re: அதிக நேரம் லேப்டாப் பயன்படுத்தினால்
அருமையான பகிர்விற்கு நன்றி தோழரே தொடர்ந்து தாருங்கள் உங்களின் பதிவுகளை. :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அதிக நேரம் லேப்டாப் பயன்படுத்தினால்
உண்மையில் அனைவரும் இப்பதிவினை கொஞ்சம் நேரம் ஒதுக்கி வாசியுங்கள் ஆளமான முக்கிய குறிப்புக்கள் இருக்கின்றன
நன்றி தோழருக்கு
நன்றி தோழருக்கு
Re: அதிக நேரம் லேப்டாப் பயன்படுத்தினால்
அருமையான பகிர்வுக்கு நன்றி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அதிக நேரம் லேப்டாப் பயன்படுத்தினால்
பயனுள்ள பகிர்வு..நன்றி..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
» My Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா?
» இணையத்தில் எந்த நாட்டினர் அதிக நேரம் செலவிடுகின்றனர்!
» அதிக நேரம் டி.வி பார்ப்பதால் மனஅழுத்தம் அதிகரிக்கும்..
» பெண்கள் அதிக நேரம் தூங்குவது ஆபத்தானது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum