சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நாட்டை ஒரே பூமியாக ஏற்க வேண்டுமாயின் எந்த இடத்திலும் இராணுவ முகாம்கள் தேவை Khan11

நாட்டை ஒரே பூமியாக ஏற்க வேண்டுமாயின் எந்த இடத்திலும் இராணுவ முகாம்கள் தேவை

Go down

நாட்டை ஒரே பூமியாக ஏற்க வேண்டுமாயின் எந்த இடத்திலும் இராணுவ முகாம்கள் தேவை Empty நாட்டை ஒரே பூமியாக ஏற்க வேண்டுமாயின் எந்த இடத்திலும் இராணுவ முகாம்கள் தேவை

Post by *சம்ஸ் Sun 4 Dec 2011 - 6:26

நாட்டை ஒரே பூமியாக ஏற்க வேண்டுமாயின் எந்த இடத்திலும் இராணுவ முகாம்கள் தேவை



நாட்டை ஒரே பூமியாக ஏற்க வேண்டுமாயின் எந்த இடத்திலும் இராணுவ முகாம்கள் தேவை Basil1பாதுகாப்புக்கும், அபிவிருத்திக்குமான முதலீடாகவே பாதுகாப்புச் செலவு - பசில்
சட்டம் மற்றும் மக்களின் பாதுகாப்பு, மக்களின் சொத்துப் பாதுகாப்பு இல்லாமலிருந்த
ஒரு காலகட்டத்திலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டைப் பொறுப்பேற்றார். பல்வேறு
நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனையூடாகப் புதிய இலங்கை
2005 ஆண்டிலிருந்து தற்போது வரை பயணித்து வருவதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதியில் அரசாங்கம்
சார்பில் விவாதத்தை முடித்து வைத்து அவர் உரையாற்றினார்.
அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது:-
2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் எதிர்க்கட்சி எவ்விதமான
பயனுள்ள விமர்சனங்களையும் முன்வைக் காமை கவலையளிக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின்
துரதிஷ்டம் காரணமாக அதில் இருந்த பிரபலமான புத்திஜீவி மற்றும் மக்களால் தெரிவு
செய்யப்பட்ட தமது கடமையை நேர்மையாக செய்வதற்கு முயற்சித்த எம்.பி. ஒருவர் இன்று அர
சாங்கத்துடன் இணைந்து வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்க உடன்பட்டார்.
இந்த நாட்டு மக்களின் ஆணையுடன் ஜனாதிபதி 2005 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் திகதி
நாட்டைப் பொறுப்பேற்றார். எனினும் அந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நாட்டின்
மூன்றில் இரண்டு பகுதியையே பொறுப்பேற்றார். கடல் வளத்தில் மூன்றில் ஒன்றையே
பொறுப்பேற்றார். அப்போது வடக்கின் அதிக பிரதேசங்களும், கிழக்கில் மூன்று
மாவட்டங்களிலும் பல பிரதேசங்களும் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதி என ரணில் -
பிரபாகரன் உடன்படிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட் டிருந்தன. அந்தப் பிரதேசங்களுக்கு
ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் மற்றும் சீருடை அணிந்த இராணுவத்தினருக்குக் கூடச்
செல்ல முடியாதிருந்தது. விடுமுறைக்கு வருகின்ற இராணுவ வீரர்கள் அந்த உடன்படிக்கையின்
கீழ் புலிகளிடம் அனுமதி கோரவேண்டிய சந்தர்ப்பமாக அது இருந்தது.
அத்துடன் அக்காலத்தில் சுனாமியால் நாடு அழிவடைந்திருந்த காலம். 30 வருட பயங்கரவாதம்
காரணமாக அனை வரினதும் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்ற
ஜனாதிபதி முதலாவதாக பிரிவினைவாதப் பயங்கரவாதத்தை அழிக்க நடவடிக்கை எடுத்தார்.
அத்துடன் அதனைக் காரணமாகக் கொண்டு நாட்டின் நலன்புரி விடயங்களை நிறுத்திவிடாமல்,
அபிவிருத்தியை செயலிலிக்க விடாமல் திட்டமிட்ட ரீதி யில் நாட்டை முன்னேற்ற மஹிந்த
சிந் தனை வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது. அந்த வகையில் உத்தியோகபூர்வமாக
ஜனாதிபதியின் முதலாவது பதவிக்காலமாக எடுக்கக் கூடிய 6 வருடங்கள் கடந்த நவம்பர் 17
ஆம் திகதி நிறைவு பெற்றது. அந்தக் காலத்தில் மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் ஒரு
நாளும் அதாவது 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி வரை நாட்டில் பயங்கரவாதம்
காணப்பட்டது. அதன் பின்னர் பயங்கரவாதம் இன்றி இரண்டு வருடங்களும் ஆறு மாதங்களும் 12
நாட்களுமே ஜனாதிபதியினால் நாட்டை நிர்வகிக்க முடிந்தது.
பாதுகாப்புச் செலவு எனும் போது இதுவரை அதிகமான நிதி கடந்த 2000 ஆம் ஆண்டே
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. அது 6.5 வீதமாகும். 2005 ஆம் ஆண்டில் 4
வீதமாகும். எனினும் 2010 ஆம் ஆண்டில் 3.5 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில்
பாதுகாப்பு செலவு என்பது முதலீட்டு செலவாகவே கணிப்பிடப்படுகின்றது என்பதனை இந்த
இடத்தில் குறிப்பிட வேண்டும். இவ்வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி ஆகும் போது
இலங்கையின் வரலாற்றில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியது. அது ஏழு
இலட்சத்து 50 ஆயிரம் ஆகும். 2010 ஆம் ஆண்டில் ஆறு இலட்சத்து 54 ஆயிரமாகும். 2009 ஆம்
ஆண்டில் ஐந்து இலட்சமாகும். அப்படியானால் ஏழு இலட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்தது ஏன்?
அது நாட்டின் பாதுகாப்பு அல்லது மக்களின் பாதுகாப்பு வளங்களின் பாது காப்பு
மட்டுமின்றி சுற்றுலாப் பயணி களுக்குப் பெற்றுக் கொடுத்த பாதுகாப்பாகும். எனவே
பாதுகாப்புக்கான செலவை எந்த இடத்திலும் நாம் முதலீடாகவே பார்க்கிறோம்.
அமெரிக்காவுக்கு வெளியிலிருந்து இரண்டு தாக்குதல்களே மேற்கொள்ளப்பட் டன. ஒன்று
பேர்ல் துறைமுகம் மீதான தாக்குதல், அடுத்தது உலக வர்த்தக மைய தாக்குதல், அந்த இரண்டு
விடயங் களுக்காக அவர்கள் இன்னும் பாதுகாப்புக் காக அதிக நிதியை செலவிடுகின்றனர்.
எந்த பயங்கரவாத செயற்பாடும் இல்லாத சிங்கப்பூரில் எம்மைப் போன்று இரண்டு மடங்கு
செலவு பாதுகாப்புக்காக ஒதுக் கப்படுகின்றது. எமது இராணுவம் இந்த நாட்டு மக்களின்
இராணுவம். எனவே இந்த நாட்டை ஒருபூமியாக ஏற்க வேண்டுமாயின் எந்த இடத்திலும் இரா ணுவ
முகாம்கள் இருக்க வேண்டும். எனவே பாதுகாப்புச் செலவானது நாட் டின் அபிவிருத்திக்கும்
மக்களின் பாது காப்புக்கும் மக்களின் நலன்புரிக்கும் அவசியமாகும். நாங்கள் வட்டி
வீதத்தைக் குறைத்தோம். அன்று வட்டி வீதம் 30 வீதம் வரை உயர்ந்தது. அதனால் விவ
சாயிகளுக்கு சிறிய வர்த்தகர்களுக்கு சிறு கைத்தொழிலாளர் களுக்கு பாரிய சுமை
ஏற்பட்டது. வீடுகளைக் கட்டுபவர்களுக்கு தொழிலாளர் களுக்கு பாரிய அழுத்தம் ஏற்பட்டது.
2010 வரை கடந்த ஆறு வருடங்களில் 24 முதல் 32 வரை காணப் பட்ட வட்டி வீதத்தை 8 முதல்
16 வரை குறைப்பதற்கு எம்மால் முடிந்தது.
அடுத்த வருடத்தில் வாராந்த சந்தைகளை முன்னேற்ற ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார். எமது
நாட்டு மக்களில் 80 வீதமானோர் வாராந்தம் சந்தைக்கு செல்கின்றனர்.
பஸ் தரிப்பு நிலையங்கள் சுயதொழில்கள் போன்றவற்றை முன்னேற்ற இந்த வரவு
செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் சுற்றுலாத்துறைக்காக பாரிய
தனியார் துறையின் ஊடாக முதலீடு செய்கின்றது. விசேடமாக ஒரு விடயத்தை நான் இந்த
சந்தர்ப்பத்தில் குறிப்பிட வேண்டும். அதாவது வடக்கு பிரதேசத்தில் பாரிய நிதி
முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2009 மே மாதம் 18 ஆம் திகதிக்கு பின்னர் 28 விமானங்கள்
இந்த நாட்டுக்கு வந்துள்ளன. அவற்றின் ஊடாக பயணிகளின் இருக்கைகளின் எண்ணிக்கை 4321
ஆக அதிகரித்துள்ளன.
அதாவது 1978 ஆம் ஆண்டிலிருந்து முதலீட்டு சபையை உருவாக்கிய தினத் திலிருந்து இந்த
நாட்டுக்கு 6802 மில்லி யன் டொலர்களே வந்துள்ளன. ஆனால் 2006 ஆம் ஆண்டிலிருந்து 2011
ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வரை 4024 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வந்துள்ளன.
உலகின் பல்வேறு அமைப்புகள் மேற்கொண்ட தரப்படுத்தல்களின் ஊடாக இலங்கை முன்னேற்றமான
நிலைமைக்கு சென்றுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum