சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Today at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Today at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Today at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Today at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Today at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Today at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Today at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Today at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Today at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Today at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Today at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Today at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Today at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Today at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Today at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Yesterday at 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Yesterday at 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Yesterday at 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Yesterday at 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

தமிழக மற்றும் கேரள எம்.பி.,க்களுக்கு இடையே, கடுமையான வாக்குவாதம், திருமாவளவன் உண்ணாவிரதம்  Khan11

தமிழக மற்றும் கேரள எம்.பி.,க்களுக்கு இடையே, கடுமையான வாக்குவாதம், திருமாவளவன் உண்ணாவிரதம்

Go down

தமிழக மற்றும் கேரள எம்.பி.,க்களுக்கு இடையே, கடுமையான வாக்குவாதம், திருமாவளவன் உண்ணாவிரதம்  Empty தமிழக மற்றும் கேரள எம்.பி.,க்களுக்கு இடையே, கடுமையான வாக்குவாதம், திருமாவளவன் உண்ணாவிரதம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Dec 2011 - 7:16

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, தமிழக மற்றும் கேரள எம்.பி.,க்களுக்கு இடையே, நேற்று கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. "அணை பலவீனமாக இருப்பதால், இனியும் புதிய அணை கட்ட தாமதிக்கக் கூடாது' என, கேரள எம்.பி.,க்களும், "இந்த விவகாரம் கோர்ட்டில் இருக்கும்போது, தேவையற்ற வதந்திகளை பரப்பி, இரு மாநில மக்களுக்கு மத்தியில் நிலவும், சுமுக உறவை கெடுக்கக் கூடாது' என, தமிழக எம்.பி.,க்களும் வாதிட்டனர்.



திருமாவளவன் உண்ணாவிரதம் :

லோக்சபா நேற்று காலை கூடியதும், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யான திருமாவளவன் எழுந்து, முல்லை பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக பேச முயன்றார். கேரளாவுக்குள் தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், சபரிமலைக்குச் சென்ற தமிழக பக்தர்கள் இடையூறு செய்யப்படுவதையும் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார். இப்பிரச்னை குறித்து பேச தனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டபடி இருந்தார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, சபையை விட்டு வெளிநடப்பு செய்தார்.

வெளியே வந்த திருமாவளவன் நேராக பிரதான வாயிலுக்குச் சென்றார். வாயிலின் எதிரில் உள்ள காந்தி சிலை முன் அமர்ந்தார். கேரள அரசின் போக்கை தட்டிக் கேட்க, மத்திய அரசு தயங்குகிறது. இதைக் கண்டித்து, நாள் பூராவும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். அங்கு அமைதியாக அமர்ந்த அவர், தன்னுடன் போஸ்டர்களையும் வைத்திருந்தார். அதில், "சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்து', "வதந்திகளை பரப்பி பயமுறுத்தாதே', "வதந்திகளை கிளப்பி பீதியை ஏற்படுத்தாதே' என்ற வாசகங்கள் இருந்தன.


முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டின் இரு சபைகளிலும், நேற்று, தமிழக மற்றும் கேரள எம்.பி.,க்கள் பலரும், தங்களின் வாதங்களை கடுமையாக பதிவு செய்தனர். ராஜ்யசபாவில் பூஜ்ஜிய நேரத்தின் போது, இந்த விவகாரம் குறித்து, தமிழக, கேரள எம்.பி.,க்கள் பலருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. எம்.பி.,க்கள் பேசியதாவது:

திருச்சி சிவா ( தி.மு.க.,): முல்லை பெரியாறு அணை பிரச்னையில், தமிழகம் வஞ்சிக்கப்பட்டால், ஐந்து தென்மாவட்டங்களில் வறட்சி ஏற்படும். குடிநீர் மற்றும் நீர்ப்பாசன தேவை என, அம்மாவட்டங்களின் அடிப்படைத் தேவைகள் எல்லாமே பாதிக்கப்படும்.

மைத்ரேயன் ( அ.தி.மு.க.,): சுப்ரீம் கோர்ட்டில் விவகாரம் இருக்கும் போது, வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்திகளை பரப்பி, தேவையற்ற பதட்டத்தை உருவாக்கப் பார்க்கின்றனர். கோர்ட் தீர்ப்பின்படி, நடக்க முன்வர வேண்டுமே தவிர, சட்டம் -ஒழுங்கை பாதிக்கும் வகையில் நடவடிக்கைகளில், கேரளா இறங்க கூடாது.

சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்): இந்த விஷயத்தை தீர்ப்பதற்கென்றே, ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்ட நிபுணர் குழுவை அமைத்து, சுப்ரீம் கோர்ட் ஆராய்ந்து வருகிறது. தங்களது அச்சத்தையோ, குறைகளையோ, சந்தேகங்களையோ தெரிவிக்க, கேரளா விரும்பினால், அந்த குழுவிடம் தான் முறையிட வேண்டும். அதை விட்டுவிட்டு, உணர்ச்சி வசப்பட்டு தேவையற்ற காரியங்களில் இறங்கிடக் கூடாது.

பி.ஜே.குரியன் (கேரள எம்.பி.,): தமிழகத்துக்கு சொட்டு தண்ணீர் கூட குறை வைக்காமல் தர, கேரளா தயாராக உள்ளது. அதே சமயம், ரூர்க்கி ஐ.ஐ.டி., அளித்த அறிக்கையின்படி, அணை உடைந்தால் பெரும் சேதம் உருவாகும். பூகம்பத்தை தாங்கி நிற்கின்ற தொழில்நுட்ப திறனுடன், 116 ஆண்டுகளுக்கு முன் அணை கட்டியிருக்க முடியாது. எனவே, புதிய அணை கட்டுவதே சரியான தீர்வாக அமையும்.

டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கட்சி): காவிரி நீர் பங்கீட்டிலும், கோர்ட் தீர்ப்பு மதிக்கப்படவில்லை. தமிழகம் தான் பாதிக்கப்படுகிறது. இப்பிரச்னையிலும் அப்படியே நடக்கிறது. லாரி ஓட்டுனர்கள், அய்யப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அணை பலமாக இருக்கும் வரை, புதிய அணை என்ற கேள்வியே தேவையில்லை.

ராஜா (இந்திய கம்யூ.,): அறிவியல் வல்லுனர்களின் வழிகாட்டுதல்படியே, இப்பிரச்னையை அணுக வேண்டும். மத்திய அரசு தலையிட்டு, இரு மாநில முதல்வர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இரு மாநில உறவு பாதிக்கப்படக் கூடாது.

டாக்டர் சீமா (கேரள எம்.பி.,): வண்டிப் பெரியாறு பகுதியில், கடந்த பல மாதங்களாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு தான் இப்பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும். அணை உடைந்தால், இடுக்கி அணையில் அந்த தண்ணீர் போய் சேரும் என்று, ஒரு வாதம் கூறப்பட்டாலும், எத்தனை நாளைக்கு இந்த பயத்திலேயே மக்கள் உயிர் வாழ்ந்திட முடியும். விரைவில் புதிய அணை கட்ட வேண்டும்.

கண்டித்து அமர வைத்த சபாநாயகர்: லோக்சபாவிலும், முல்லை பெரியாறு அணை விவகாரம் கிளப்பப்பட்டது. கேரள எம்.பி.,க்களும், அ.தி.மு.க., எம்.பி.,க்களும் மோதிக் கொண்டனர். காங்கிரஸ் எம்.பி.,க்களான தாமஸ், ஆண்டோ ஆண்டனி, கேரள காங்கிரசின் ஜோஸ்மணி மற்றும் மார்க்சிஸ்ட் எம்.பி.,க்களான சம்பத், பிஜுரமேஷ் ஆகியோர் எழுந்து, முல்லை பெரியாறு அணை விவகாரத்தை கிளப்பப் பார்த்தனர். அதற்கு பதிலடியாக, தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க., எம்.பி.,க்களும், ஈரோடு கணேச மூர்த்தியும் எழுந்து வாக்குவாதம் செய்தனர். அப்போது, அமைச்சர் நாராயணசாமி எழுந்து, கேரள எம்.பி.,க்களை சமாதானம் செய்தார். பூஜ்ஜிய நேரத்தின் போதும், இப்பிரச்னையை கிளப்ப கேரள எம்.பி.,க்கள் முயன்றனர். அப்போது, சபாநாயகர் மீரா குமார் கோபமுற்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு, இப்போது தான் சபை அலுவல்கள் நடைபெற துவங்கியுள்ளன. வேண்டுமென்றே, சபை அலுவல்களை தடை செய்ய முயல்கிறீர்களா என கூறி, சத்தம் போட்டார். இதையடுத்து, கேரள எம்.பி.,க்கள் அமைதி காத்தனர். பின்னர், அலுவல்கள் வழக்கம் போல தொடர்ந்து நடைபெற்றன.


தமிழக மற்றும் கேரள எம்.பி.,க்களுக்கு இடையே, கடுமையான வாக்குவாதம், திருமாவளவன் உண்ணாவிரதம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» கேரள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு 2 மடங்கு ஊதிய உயர்வு
» காந்தி சிலை முன் தமிழக எம்.பி. உண்ணாவிரதம்
» கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தலைமறைவு- லீஸ் வலைவீச்சு
» கேரள அரசுக்கெதிரான போராட்டத்தில் தமிழக மக்கள் அணி திரள்வதால் எல்லையோரம் பதற்றம்
» பெப்ரவரி இறுதியில் உண்ணாவிரதம்; தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum