Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இஸ்லாம் புனித மார்க்கம்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
இஸ்லாம் புனித மார்க்கம்.
First topic message reminder :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வீண்விரயமும் பெருமையும் இல்லாமல் சாப்பிடுங்கள். தர்மம் செய்யுங்கள். (விரும்பிய ஆடையை) அணிந்துகொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : நஸயீ 2512
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வீண்விரயமும் பெருமையும் இல்லாமல் சாப்பிடுங்கள். தர்மம் செய்யுங்கள். (விரும்பிய ஆடையை) அணிந்துகொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : நஸயீ 2512
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "இளைஞர் சமுதாயமே! உங்களில்
தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும் அதற்கு இயலாதோர் நோன்பு நோற்று கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளார் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்
நூல்: முஸ்லிம் 2712 —
தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும் அதற்கு இயலாதோர் நோன்பு நோற்று கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளார் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்
நூல்: முஸ்லிம் 2712 —
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சிரமகாலச் சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும் பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும் ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவை உங்கள் (தகுதிகள் உயர்வதற்கான) முன்னேற்பாடுகளாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).
நூல்: முஸ்லிம் 369 —
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).
நூல்: முஸ்லிம் 369 —
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.
தம் குதிகால்களைக் கழுவா(மல் உளூச் செய்துக் கொண்டிருந்)த ஒருவரை நபி (ஸல்) அவர்கள் கண்டு, "(உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகால்களுக்கு நரக வேதனைதான்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).
நூல்: முஸ்லிம் 356
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).
நூல்: முஸ்லிம் 356
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.
இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.
நூல்: புகாரி 5642.
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.
இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.
நூல்: புகாரி 5642.
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.
(சிறுவனாயிருந்த) என்னை என் தாயாரின் சகோதரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகனுக்கு (பாதங்களில்) நோய் கண்டுள்ளது' என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (அன்புடன்) என் தலையை வருடிக் கொடுத்து என் சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கசுத்தி செய்து மிச்சம் வைத்த தண்ணீரிலிருந்து சிறிது பரும்னேன். பிறகு நான் அவர்களின் முதுகுக்குப் பின்னே நின்று கொண்டு அவர்களின் இரண்டு தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படும் பித்தானைப் போன்றிருந்தது.
அறிவிப்பவர் :சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 6352.
அறிவிப்பவர் :சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 6352.
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.
அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்' என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்' என்று பதிலளித்தார்கள்.
அபூ ஷுரைஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 6026
அபூ ஷுரைஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 6026
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.
ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
திருக்குர்ஆன் 7:200
திருக்குர்ஆன் 7:200
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.
நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்! என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5855
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5855
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் (உளு மற்றும் குளியல் மூலம்) தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் போதும், அவர்கள் காலணி அணியும் போதும், தலைவாரிக் கொள்ளும்போதும் தம்மால் இயன்ற வரை வலப்பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.
அறிவிப்பாளர் ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) கூறினார்.
(இந்த ஹதீஸை) இதற்கு முன் (இராக்கில் உள்ள) 'வாஸித்' நகரில் வைத்து அஷ்அஸ்(ரஹ்) அறிவித்தபோது 'நபி(ஸல்) அவர்கள் தம் செயல்கள் அனைத்திலும் (வலப் பக்கத்தை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்)' என்று (கூடுதலாகக்) கூறியிருந்தார்கள். புகாரி 5380
நபி(ஸல்) அவர்கள் (உளு மற்றும் குளியல் மூலம்) தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் போதும், அவர்கள் காலணி அணியும் போதும், தலைவாரிக் கொள்ளும்போதும் தம்மால் இயன்ற வரை வலப்பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.
அறிவிப்பாளர் ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) கூறினார்.
(இந்த ஹதீஸை) இதற்கு முன் (இராக்கில் உள்ள) 'வாஸித்' நகரில் வைத்து அஷ்அஸ்(ரஹ்) அறிவித்தபோது 'நபி(ஸல்) அவர்கள் தம் செயல்கள் அனைத்திலும் (வலப் பக்கத்தை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்)' என்று (கூடுதலாகக்) கூறியிருந்தார்கள். புகாரி 5380
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.
இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொள்கிறாரோ, அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2:256)
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.
உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?' என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேறு யாரை?' என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்
புகாரி 7320.
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்
புகாரி 7320.
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.
உடலில் இருந்து வெளியேறும் ஒன்(றான வாயுக்காற்)றைக் கேட்டு எவரும் சிரிப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ (ரலி)
நூல்: புகாரி 6042
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ (ரலி)
நூல்: புகாரி 6042
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.
கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் , நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது... என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
நூல்: புகாரி 3445 —
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
நூல்: புகாரி 3445 —
Re: இஸ்லாம் புனித மார்க்கம்.
ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம். திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான். 'நீ உனது ஏட்டைப் படித்து பார்! உனது கணக்கைப் பார்க்க நீயே போதும்' (என்று அவனிடம் கூறப்படும்). (அல்குர்ஆன் 17:13,14)
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» இஸ்லாம் இது புனித மார்க்கம்.
» இஸ்லாம் புனித மார்க்கம்.01
» இஸ்லாம் புனித மார்க்கம்.02
» இஸ்லாம் புனித மார்க்கம். 03
» இஸ்லாம் புனித மார்க்கம்.04
» இஸ்லாம் புனித மார்க்கம்.01
» இஸ்லாம் புனித மார்க்கம்.02
» இஸ்லாம் புனித மார்க்கம். 03
» இஸ்லாம் புனித மார்க்கம்.04
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum