சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

இஸ்லாம் புனித மார்க்கம். Khan11

இஸ்லாம் புனித மார்க்கம்.

Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:21

இஸ்லாம் புனித மார்க்கம். 406969_269208306469822_181118195278834_793106_406117391_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:22

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்:

நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும் குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும். குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆல இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

உங்களில் சிறந்தவர்கள் குர்ஆனைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால் அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:22

இஸ்லாம் புனித மார்க்கம். 374191_267007886689864_181118195278834_786154_1006112327_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:23


يَا بَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا ۖ وَلِبَاسُ التَّقْوَىٰ ذَٰلِكَ خَيْرٌ ۚ ذَٰلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ

ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.(07:26)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:23

இஸ்லாம் புனித மார்க்கம். 384070_255974824459837_181118195278834_758991_236745304_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:24

தொழுகை கவலையைப் போக்கும்

தொழுகை, அல்லாஹ்வினால் தனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வழியாக மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட ஒர் அன்பளிப்பு. இது தனது அடியார்கள் மீது அல்லாஹ் விதித்த முதல் கடமை. இதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் தன் இறைவனோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறான். ஒருவனுக்கு மனகஷ்டங்கள், சஞ்சலங்கள், கவலைகள் ஏற்படும் போது, தன் இறைவனை அழைத்து பிராத்தித்து; அவனிடம் தனது கோரிக்கைகளை வைப்பது இயல்பு. அப்போது அல்லாஹ்விற்காக இரண்டு ரக்அத்கள் தொழுது தனது தேவைகளை வேண்டும் போது மனதிற்கு ஆறுதல் ஏற்படுகிறது. இவனது கோரிக்கையை இறைவன் விரைவாக நிறைவேற்றும் நிலை உருவாகிறது.

நபி (ஸல்) அவர்களுக்கு ஏதாவது கஷ்டங்கள், பிரச்சனைகள், ஏற்படும்போது, உடனே தொழுகையில் ஈடுபடுவார்கள் என, ஹுதைபா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை (துன்பம்) சிக்கல் பயம் உண்டாக்கும் செயல் நேர்ந்து விட்டால் உடனே தொழகையின் பக்கம் விரைந்து செல்வார்கள்.(அஹ்மது)

என்னுடைய கண்குளிர்ச்சி தொழுகையின் தான் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நஸயீ, அஹ்மது)

நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை அழைத்து, பிலாலே! தொழுகைக்கு அழைப்புக் கொடுப்பீராக! அதன் மூலம் என் மனதிற்கு நிம்மதி ஏற்படட்டும் என்று கூறுவார்கள்.(அஹ்மது)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:24

இஸ்லாம் புனித மார்க்கம். 310349_240236296033690_181118195278834_706689_1621992689_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:25

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்(03:185)


எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹ்வின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை.(03:145)


நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே.(04:178)


உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது(56:60)
32:11.


“உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.(32:11)


உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை(06:61
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:26

இஸ்லாம் புனித மார்க்கம். 307276_236196829770970_181118195278834_692141_1599166880_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:26

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்.
*இறைநம்பிக்கையாளன்*

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள், பிணங்கிக்கொள்ளாதீர்கள், (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த ஒரு முஸ்லிமும் தம் சகோதரனுடன் முன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல்: புஹாரி (4045).


இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும் அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பது இல்லை. மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், சண்டையில் தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா (ரழி). நூல் : ஹாகிம்.


பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,)
அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.(03:134)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:29

இஸ்லாம் புனித மார்க்கம். 311084_234451433278843_181118195278834_686130_1614054209_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:29

*பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்.*

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை நோக்கும் போது அவர்கள் மனிதர்களுடன் மட்டுமல்ல தன்னைப் படைத்த இரட்சகனுடனும் பிற படைப்பினங்களுடனும் பண்பாடாக நடந்துகொண்டார்கள் என்பதை காணமுடிகிறது.


*படைத்த இறைவனுடன் :

படைத்த இறைவனுக்கு முற்றிலும் நன்றியுள்ளவர்களாக நடந்து கொண்டார்கள். தனது முன் பின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப் பட்டிருந்தும் கூட இரவிலே கண்விழித்து கால்கள் வீங்க வீங்க நின்று வணங்கி அவனுக்கு சுஜுது செய்து நன்றிக்கடன் செலுத்தக் கூடியவர்களாக காணப்பட்டார்கள். இந்த நிலையை கண்ணுற்ற அன்னாரது அன்பு மனைவி ஆயிஷா (ரழி) அவர்கள் கேட்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதரே உங்களுடைய முன் பின் பாவங்கள் மன்னிக்கப் பட்டிருந்தும் நீங்கள் ஏன் இந்தளவு சிரமப்பட வேண்டும் என கேட்கிறார்கள், அதற்கு நபியவர்கள் ‘நான் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்கவேண்டாமா? என வினவினார்கள்” (புகாரி, முஸ்லிம்)

*நோயாளிகளுடன்

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல் அவர்கள் ஒரு கிராமவாசியை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி ஸல் அவர்கள் நலம் விசாரிக்கச் சென்றால் ''கவலைப்பட வேண்டாம்! இறைவன் நாடினால் இது (உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்'' என்று கூறுவார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி)

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றால் தமது வலது கரத்தால் அவரை தடவிக் கொடுத்து அல்லாஹ்¤ம்ம ரப்பன்னாஸ், அத்ஹ¢பில் பஃஸ, இஷ்ஃபி, அன்த்தஷ்ஷாஃபீ, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக, ஷிஃபாஅன் லாயுஃகாதிரு ஸகமா'' என்று பிரார்த்திப்பார்கள். அதன் பொருள், ''யா அல்லாஹ்! மனிதர்களின் இரட்சகனே! நோயைப் நீக்குவாயாக! அறவே நோயில்லாமல் குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.'' (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:30

*தனது மனைவிமாருடன்

அண்ணலார் (ஸல்) அவர்கள் தனது மனைவிமாருக்கு அன்பு காட்டினார்கள், அவர்களுக்கு வீட்டு வேலைகளை செய்து கொடுத்தார்கள், அவர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துகளை ஏற்றுக்கொண்டார்கள், அவர்களுடன் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியிருக்கிறார்கள் இப்படி எல்லாவிதத்திலும் மனைவியரை மகிழ்வித்திருக்கிறார்கள்.
எனவே தான் அவர்கள் : “உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியிடம் சிறந்தவரே, நான் எனது மனைவிமாரிடம் சிறந்தவனே” என குறிப்பிட்டார்கள். (திர்மிதி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது மனைவி ஆயிஷா (ரழி) அவர்களுடன் ஓட்டப்பந்தயம் நடத்திய செய்தி (அபூ தாவூத் என்ற நபிமொழித் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

*தனது தோழர்களுடன் :

நபித் தோழர் அனஸ் (ரழி) பின்வருமாறு அறிவிக்கிறார்கள் : “நபி (ஸல்) அவர்களுக்கு ஒருவர் கைலாகு செய்தால் கையைக் கொடுத்தவர் தனது கையை விடுவித்துக் கொள்ளும்வரை நபியவர்கள் தனது கையை விடுவித்துக்கொள்ள மாட்டார்கள், மேலும் சந்திக்க வந்தவர் தனது முகத்தை திருப்பிக்கொள்ளும் வரை நபியவர்கள் தனது முகத்தை திருப்பிக்கொள்ள மாட்டார்கள், மேலும் அவர்கள் தனது முழங்கால்கள் வெளியில் தெரியும் விதத்தில் அமர்ந்ததே கிடையாது” (அபூதாவூத், திர்மிதி)

அவர்களுக்கு மரியாதையை செலுத்துவதற்காக அடுத்தவர்கள் எழுந்து நிற்பதைக் கூட நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். எனவே தான் “யார் அடுத்தவர்கள் எழுந்து நின்று தனக்கு மரியாதையை செலுத்த வேண்டும் என விரும்புகின்றாரோ அவர் நரகத்தில் தனது ஒதுங்குமிடத்தை எடுத்துக் கொள்ளட்டும்” என எச்சரித்தார்கள். (அபூ தாவூத்)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:30

*குழந்தைகளோடு

சிறு குழந்தைகளோடு கூட அண்ணலார் (ஸல்) அவர்கள் பண்போடு தான் நடந்துகொண்டார்கள். “அவர்கள் சிறுவர்களை கடந்து சென்றால் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டு செல்வார்கள்” என்பதாக நபித் தோழர் அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)

தொழுகை நடத்தும் போது தனது பேரக் குழந்தை உமாமாவை தூக்கிக் கொண்டு தொழுகை நடத்துவார்கள். சுஜூது செய்யும் போது கீழே வைப்பார்கள்.(புகாரி, முஸ்லிம்)


*பணியாட்களுடன்.
:
அவ்வாறே தனது பணியாட்களுடனும் மிகவும் பணிவோடும் பண்போடும் நடந்து கொண்டார்கள். அனஸ் (ரழி) என்ற நபித் தோழர் பின்வருமாறு குறிப்பிடுகிறார் : “நான் 20 வருடங்கள் நபியவர்களுக்கு பணிவிடை செய்து வந்தேன், ஒருதடவையேனும் எனக்கு “சீ” என்ற வார்த்தை கூட சொன்னது கிடையாது, மேலும் ஏன் செய்தீர்? ஏன் செய்ய வில்லை? என்று என்னிடம் கேட்டதும் கிடையாது” என குறிப்பிடுகிறார்கள். (புகாரி, முஸ்லிம்)

“நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் தனது பணியாளர்களையோ, தனது மனைவியரையோ அல்லது எந்த ஒருவரையும் தனது கையால் அடித்தது கிடையாது. போர்களத்தை தவிர என்பதாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்” (முஸ்லிம்)


நபி (ஸல்) அவர்களின் நற்குணம் பற்றி பேசித்தீர்க்க முடியாது. அவர்களின் முழு வாழ்வும் நற்குனமாகவே காணப்பட்டது.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.



“நபியே நீர் நற்குணத்தின் உன்னத நிலையில் இருக்கின்றீர்” (அத் 68 : 4 )

இன்ஷா அல்லாஹ்.


அண்ணலார் அவர்களின் அழகிய வழிமுறையை பின்பற்றி நாமும் நம்மால் இயன்ற அளவு நன்மையைய் செய்து அல்லாஹ்வின் பேரருளை அடைந்து கொள்வதற்கு முயற்சி செய்வோம்.!!!
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:31

இஸ்லாம் புனித மார்க்கம். 310160_232615196795800_181118195278834_680509_354589747_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:31

தாயின் கருவறையில் சிசுவின் விதி நிர்ணயிக்கப் படுதல்

உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே ...போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை – போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது” என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் செர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்)என்று கூறினார்கள்.
இப்னு மஸ்ஊத் (ரலி). புஹாரி : 3208
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:32

‘அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர், ‘யா அல்லாஹ்! இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது ‘அலக்’ (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது சதைத் துண்டாக இருக்கிறது’ என்று கூறி வருவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்கும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

புஹாரி : 318 அனஸ் (ரலி).

நாங்கள் பகீவுல் கர்கத் (என்னும் பொது) மையவாடியில் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து உட்கார்ந்ததும் நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்து கொண்டோம். அவர்களிடம் ஒரு சிறிய கைத்தடி இருந்தது. நபி (ஸல்) அவர்கள் தலைகுனிந்தவர்களாகத் தம் கைத்தடியால் தரையைக் கீறிக் கொண்டு, ‘உங்களில் யாரும் அல்லது எந்த ஆத்மாவும் அதன் இருப்பிடம் சொர்க்கமா அல்லது நரகமா என்பது பற்றித் தீர்மானிக்கப்படாமலில்லை. அது தீய நிலையுடையதா, நற்பேறுடையதா என்பதும் நிர்ணயிக்கப்படாமலில்லை’ எனக் கூறினார்கள். உடனே ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! அப்படியாயின் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதை நம்பி (நற்) செயல்களில் ஈடுபடுவதை நாம் விட்டுவிடலாமா? ஏனெனில் நம்மில் யார் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாக நல்லவர்களின் செயல்களில் ஈடுபடுவார்கள்; யார் தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாகத் தீயவர்களின் செயல்களில் ஈடுபடுபவர்கள் தாமே?’ என்றதும், நபி (ஸல்) அவர்கள், ‘நம்மில் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளவர்களுக்கு நற்செயல்கள் செய்வது எளிதாக்கப்படும்; தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளவர்களுக்குத் தீய காரியங்கள் எளிதாக்கப்படும்” என்று கூறிவிட்டு, ‘தர்மம் கொடுத்து, பயபக்தியுடன் நடந்து, நல்லவற்றை உண்மையாக்குகிறவர்…” என்ற (திருக்குர்ஆன் 92:5,6) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:32

இஸ்லாம் புனித மார்க்கம். 302403_231711433552843_181118195278834_677416_146962167_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:32

இறைவனின் கருணைய்


ஒரு முறை நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த பொழுது, ஒரு மனிதர் வந்தார். அவர் தமது ஒரு போர்வைக்குள் எதையோ சுருட்டி எடுத்து வந்திருந்தார். 'இறைத்தூதரே, நான் அடர்ந்த தோப்பைக் கடந்து வரும் பொழுது சில பறவைக் குஞ்சுகள் கீச்சிடும் ஒலியைச் செவியுற்றேன். அவற்றைப் பிடித்து என்னுடைய போர்வைக்குள் மறைத்துக் கொண்டேன் எங்கிருந்தோ பறந்து வந்த தாய்ப் பறைவ, என்னுடைய தலைக்கு மேல் வட்டமிடத் தொடங்கியது. எனவே, நான் போர்வையைச் சிறிது விலக்கி குஞ்சுகளை அந்தத் தாய் பறவைக்குக் காண்பித்தேன். அப்பறவை அவற்றின் மேல் அமர்ந்தது. அவை அனைத்தையும் போர்வைக்குள் சுருட்டிக் கொண்டேன். இதே அவற்றைக் கொண்டு வந்திருக்கிறேன்' என்று கூறினார். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உடனடியாக அந்தப் பறவைகளை விட்டு விடும்படி கூறினார்கள். அவரும் அவ்வாறே செய்தார் ஆயினும் அந்தத் தாய்ப் பறவை குஞ்சுகளைப் பிரியாமல் அணைத்துக் கொண்டது அக்காட்சியைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கிருந்த தோழர்களிடம் வினவினார்கள்: 'குஞ்சுகள் மீது இப்பறவைக் குறித்து நீங்குள் ஆச்சரியப்படுகிறீர்களா? உண்மையைக் கொண்டு என்னை (தூதரhக) அனுப்பிய இறைவன் மீது சத்தியமாக, இந்தத் தாய்ப் பறவை தனது குஞ்சுகள் மீது காட்டுகின்ற கருணையை விடவும் அதிகமான கருணையை இறைவன் தனது அடியார்கள் மீது பொழிகின்றான்.' பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இக்குஞ்சுகளை தாய்ப் பறவையோடு கொண்டு போய் பிடித்த இடத்திலேயே விட்டு விடு' என்று அம்மனிதருக்குக் கட்டளையிட்டார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.
அறிவிப்பாளர் : ஆமிர் அல்ராமி
ஆதாரம் : அபூதாவூத்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘ஷைத்தான் இறைவனிடம் உன்னுடைய அடியார்களை அவர்கள் உயிருடன் உள்ளவரை வழிகெடுத்துக்கொண்டே இருப்பேன்’ என்று கூறினார். இறைவன், ‘அவர்கள் என்னிடம் பாவமன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கும் வரை என்னுடைய கருணையினால் மன்னித்துக் கொண்டே இருப்பேன்’ என்று கூறினான். (ஆதாரம் : அஹ்மத்)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:33

தன் இரு பெண் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு என்னிடத்தில் ஓர் ஏழைப் பெண் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்களைக் கொடுத்தேன். அவ்விரு குழந்தைகளுக்கும் (ஆளுக்கு) ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்து விட்டு, ஒரு பேரீச்சம் பழத்தைத் தான் சாப்ப...ிடுவதற்காக தனது வாய்க்குக் கொண்டு சென்றார். அப்போது அவ்விரு குழந்தைகளும் தங்களுக்கு சாப்பிடத் தருமாறு கேட்டன! தான் சாப்பிட நினைத்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரு துண்டுகளாகப் பிய்த்து (குழந்தைகளிடம்) கொடுத்தார். அந்தப் பெண்ணின் அச்செயல் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அவர் செய்த அந்தக் காரியத்தை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், “இதன் மூலம் அல்லாஹ் அப்பெண்ணுக்கு சுவனத்தை விதித்து விட்டான்” என்றோ அல்லது “அப்பெண்ணுக்கு நரகிருந்து விடுதலை அளித்து விட்டான்” என்றோ கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:38

இஸ்லாம் புனித மார்க்கம். 407522_286348454749155_100001220073420_917356_352134857_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:38

இஸ்லாம் புனித மார்க்கம். 399711_307637995935558_285466878152670_983116_252591647_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 20:39

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு...

✖ பொறாமை கொள்ளாதீர்கள்:

பொறாமை கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். தான் பெறாத ஒன்றை பிறர் பெறும் போது ஏற்படும் ஒருவகை உணர்வே பொறாமை உணர்வாகும். சிலர் தாம் பெற்றிருப்பதைத் தனக்குக் கீழே உள்ளவர்கள் பெறும் போதும் பொறாமை கொள்வர்.

பொறாமை நெருக்கமானவர்களுக்கு மத்தியில் தான் ஏற்படும். வெளிநாட்டில் இருக்கும் ஒருவன் மீது இந்தியாவில் இருப்பவன் பொறாமை கொள்ள மாட்டான். அடுத்து ஒரே துறையில் இருக்கும் இருவருக்கிடையே தான் பொறாமை ஏற்படும். ஆனால் பெண்களின் பொறாமை ஆச்சர்யமானது. தனது குடும்பத்திலேயே பொறாமை குணம் உள்ளவர்களும் இருக்கின்றனர். சில பெண்கள் தமது குடும்ப வாழ்வில் பல சிரமங்களை சந்தித்திருப்பர்.இந்த சந்தர்ப்பத்தில் அந்தப் பெண் பெரும் இன்பத்தை நிறுத்த ஏதேனும் செய்ய முடிந்தால் செய்வார்கள். அப்படி இல்லையென்றால் புறம் பேசி, கோள் சொல்லி அல்லது அவதூறு கூறி அவளது கௌரவத்தைக் குறைக்க முயல்வார்கள். இந்தப் பொறாமைக் குணத்தால் மன அமைதி கெடுகின்றது.அல்லாஹ்வின் அதிருப்திக்கும், மக்களின் வெறுப்புக்கும் ஆளாக நேரிடுகின்றது. இது தேவைதானா?

நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள்’ என அல்லாஹ்வின் தூதர் ஏவியுள்ளதை எடுத்து நடக்கக் கூடாதா?

‘அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியதற்காக இம் மனிதர்கள் மீது அவர்கள் பொறாமை கொள்கின்றனரா?’ (4:54)

அல்லாஹ் உங்களில் ஒருத்திக்கு அழகான கணவனை அல்லது குழந்தைகளை வழங்கியதற்காகப் பொறாமை கொள்கிறீர்களா? அல்லாஹ் ஒருத்திக்கு பணத்தையும் பேரையும் புகழையும் வழங்கியிருப்பதற்காக உங்களுக்குப் பொறாமை ஏற்படுகின்றதா? அப்படியாயின் நீங்கள் அல்லாஹ்வை அல்லவா குறை காண்கின்றீர்கள்?

நீங்கள் பொறாமைக்காரியாக இருந்தால் உங்கள் நிம்மதியையும் மன அமைதியையும் நீங்களே கெடுத்துக் கொள்வீர்கள். நீங்கள் யார் மீது பொறாமை கொள்கிறீர்களோ அவர்கள் சந்தோசப்படும் போதெல்லாம் உங்களுக்குக் கவலையை ஏற்படும். இது தேவை தானா?

உங்களோடு கூட இருப்பவர்கள் வாழ்வில் சந்தோசங்களை அனுபவிக்கும் போது அவர்கள் மீது பொறாமை கொள்வதை விட்டு விட்டு அவர்களை வாழ்த்தக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைக்காதது உங்கள் நண்பருக்கோ உறவுக்காரருக்கோ கிடைத்திருக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.உங்கள் உள்ளத்தில் ஷைத்தான் புகுந்து விளையாட இடமளிக்காதீர்கள். பொறாமைக் குணம் எட்டிப் பார்க்கும் போதே அல்லாஹ் தான் நாடியதை நாடியவர்களுக்கு வழங்குவான். இதைப்பற்றி நான் எதற்கு அலட்டிக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.

நீங்கள் பிறர் மீது பொறாமை கொள்ளக் கூடாது. பிறர் உங்கள் மீது பொறாமை கொள்ளும் விதத்தில் நடந்து கொள்ளவும் கூடாது. இதிலும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாழ்வில் வளங்களையும், உயர்வையும் அடையும் போது கர்வம் கொள்ளாதீர்கள். நீங்கள் அடையும் வளங்களால் உங்களைச் சூழ இருப்பவர்களும் நலம் பெறும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். அதே வேளை பிறரின் பொறாமையால் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்க பின்வரும் விடயங்களில் அதிக அக்கறை செலுத்துங்கள்.

1. பொறாமைக்காரனின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள்

►இன்னும் பொறாமைக்காரன் பொறாமைப் படும்போது ஏற்படும் தீங்கை விட்டும் (நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என நபியே! நீர் கூறுவீராக!’ (113:5)

2.அல்லாஹ்வை அஞ்சி தக்வாவுடன் வாழுங்கள்

►எவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்கிறாரோ அவருக்கு அவன் ஒரு வழியை ஏற்படுத்து வான்’ (65:2) என்ற குர்ஆன் வசனத்தை மனதில் கொள்ளுங்கள்.

3. அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து தவக்குலுடன் வாழுங்கள்

►எவர் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கின்றாரோ, அவருக்கு அவனே போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தனது காரியத்தை நிறைவேற்றுபவன். ‘ (65:3)

என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.இதன் மூலம் அல்லாஹ்வின் உதவியைப் பெறலாம்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum