சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Today at 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Today at 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Today at 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Today at 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Yesterday at 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Yesterday at 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

நபிமொழி : Khan11

நபிமொழி :

Go down

நபிமொழி : Empty நபிமொழி :

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 22:16

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...



அன்புச்சகோதரர்களுக்கு :

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)



நபிமொழி :


சந்திக்கும்போது கைகுலுக்குதல்



பராஉ(ரலி) அறிவிக்கின்றார்கள்:



''இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து, அவ்விருவரும் கைகுலுக்கினால், அவ்விருவரும் பிரியும் முன் அவ்விருவரின் குற்றம் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 887)



அபூதர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நன்மையானவற்றில் எதையும் நீ குறைவாக எண்ணிவிடாதே! (அது) உன் சகோதரனை சிரித்த முகத்துடன் நீ சந்திப்பதாக இருப்பினும் சரியே! என்று என்னிடம் நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 892)



அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நபி(ஸல்) அவர்கள், ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்களை முத்தமிட்டார்கள். (அப்போது அங்கிருந்த) அக்ரஉ இப்னு ஹாபிஸ்(ரலி) அவர்கள், எனக்கு பத்து குழந்தைகள் உண்டு. அவர்களில் எவரையும் நான் முத்தமிடமாட்டேன் என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், ''இரக்கமில்லாதவன், (இறைவனால்) இரக்கம் காட்டப்படமாட்டான்'' என்று கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 893)

நோயாளியை நலம் விசாரித்தல்

பராஇ இப்னு ஆஸிப்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நோயாளியை விசாரித்தல், ஜனாஸாவில் கலந்து கொள்ளுதல், தும்மியவனுக்கு பதில் கூறுதல், நீதியைப் பேணுதல், அநீதம் இழைக்கப்பட்டவனுக்கு உதவுதல், விருந்திற்கு அழைத்தால் செல்லுதல், ஸலாமை பரப்புதல் ஆகியவற்றை எங்களுக்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 894)

அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஒரு முஸ்லிம் மீது மற்றொரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து : 1) ஸலாமிற்கு பதில் கூறுதல், 2) நோயாளியை விசாரித்தல், 3) ஜனாஸாவில் கலந்து கொள்தல், 4) விருந்தை ஏற்றுக் கொள்ளல், 5) தும்மியவருக்கு பதில் கூறுதல் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 895)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர் எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் -நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: ( புகாரி,முஸ்லிம் )

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

அன்புடன் சத்தியப்பாதை குழுமம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழி : Empty Re: நபிமொழி :

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 22:17

இறைதூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்

தான் கொடுத்த அன்பளிப்பை திரும்ப பெற்றுகொள்பவனின் நிலையானது, நாயின் நிலையை ஒத்திருக்கிறது.
வாந்தி எடுத்துவிட்டு பின்னர் தான் எடுத்த வாந்தியை நோக்கிச்சென்று அதை தின்கிறது நாய்.


அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ் (ரலி)
ஆதாரம் : முஸ்லிம் 3317


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழி : Empty Re: நபிமொழி :

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 22:17

இறைதூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்

மன முடிக்க தகாத ஆண் துணையின்றி எந்த பெண்ணும் பயணிக்கக்கூடாது.
மன முடிக்க தகாத ஆண் உறவினர் இருக்கும் போது தான் பெண்களை பிற ஆண்கள் சந்திக்க வேண்டும்.


அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ் (ரலி)
ஆதாரம் : புகாரி 862


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழி : Empty Re: நபிமொழி :

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 22:17

அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:



''நிச்சயமாக அல்லாஹ், மறுமை நாளில், ''ஆதமின் மகனே! நான் நோயாளியாக இருந்தேன். என்னை நீ விசாரிக்கவில்லையே?'' என்று கேட்பான். ''இறைவா! நீயோ உலக மக்களின் இறைவன். நான் எப்படி உன்னை நோய் விசாரிப்பது?'' என்று மனிதன் பதில் அளிப்பான். ''என் அடியான் இன்னவன் நோயாளியாக இருந்தான். அவனை நீ விசாரிக்கவில்லை என்பதை அறியவில்லையா? நீ அவனின் நோய் பற்றி விசாரித்திருந்தால், அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா?'' என்று அல்லாஹ் கூறிவிட்டு, ''ஆதமின் மகனே! உன்னிடம் நான் உணவு கேட்டு வந்தேன். எனக்கு நீ உணவு தரவில்லையே!'' என்று கூறுவான். ''இறைவா! நீயோ உலக மக்களின் இறைவன். உனக்கு எப்படி உணவளிப்பேன்?'' என்று மனிதன் கேட்பான்.



''என் அடியான் இன்ன நபர் உன்னிடம் உணவு கேட்டு வந்து, அவனுக்கு நீ உணவு தரவில்லை என்பதை அறியவில்லையா? நீ அவனுக்கு உணவு தந்திருந்தால்,அங்கே என்னைக் கண்டிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா?'' என்று இறைவன் கேட்டுவிட்டு, ''ஆதமின் மகனே! உன்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டேன். எனக்கு நீ குடிக்கத் தரவில்லை!'' என்று கூறுவான். ''இறைவா! நீயோ உலக மக்களின் இறைவன். உனக்கு நான் எப்படி குடிக்கத் தருவேன்'' என்று மனிதன் கேட்பான். ''என் இன்ன அடியான் உன்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டான். அவனுக்கு நீ குடிக்கத் தரவில்லை. நீ அவனுக்கு குடிக்கத் தந்திருந்தால், அதை என்னிடம் (இன்று) நீ பெற்றிருப்பாய் என்பதை அறியவில்லையா? என்று அல்லாஹ் கூறுவான். இதை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 896)



அபூமூஸா (ரலி) அறிவிக்கின்றார்கள்:



''நோயாளியை நலன் விசாரியுங்கள். பசித்தவனுக்கு உணவளியுங்கள். அடிமையை விடுவியுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 897)



ஸவ்பான் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஒரு முஸ்லிம், தன் முஸ்லிமான சகோதரனை நலன் விசாரித்தால், அவனிடமிருந்து அவன் பிரியும் வரை சொர்க்கத்தின் 'குர்ஃபத்'ல் இருந்து கொண்டிருப்பான்'' என நபி(ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தின் ''குர்ஃபத்'' என்றால் என்ன?'' என்று கேட்கப்பட்டது ''சொர்க்கத்தின் பழம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 898)



''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர் எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் -நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: ( புகாரி,முஸ்லிம் )





'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழி : Empty Re: நபிமொழி :

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum