Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''
2 posters
Page 1 of 1
''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''
''சார், எனக்கு பிஸினஸ் செய்யணும்னு ஆசையா இருக்கு!''
இந்த தொடரைத் தொடர்ந்து படித்த மாணிக்கம் சமீபத்தில் எனக்கு போன் செய்தபோது இப்படிச் சொன்னார். மாணிக்கத்தின் சொந்த ஊர் திண்டுக்கல். பி.காம். பட்டதாரி. என்னைச் சந்திக்க ஆசைப்பட்டார். நேரில் வரச் சொன்னேன், உடனே வந்தார். துடிப்பான இளைஞர்.
'சார், பிஸினஸ் பண்ணணும்; ஒரு பிஸினஸ்மேனா ஆகணும்!'' - அவர் விருப்பம் அவர் குரலிலேயே நன்றாகத் தெரிந்தது.
'என்ன பிஸினஸ் செய்ய ஆசைப்படறீங்க, மாணிக்கம்?''
'அதைத்தான் சார் தீர்மானிக்கணும். என் அப்பா திண்டுக்கல்லில் பெரிய கட்டட கான்ட்ராக்டர். அம்மாவுக்கு கவர்மென்ட் உத்தியோகம். அவங்களுக்கு நான் ஒரே வாரிசு. ஒரு கோடி ரூபாய் வரை பணம் போடலாம். ஐடியா மட்டும்தான் சார் வேணும்.''
''பிஸினஸ் தொடங்கி நடத்த, அதில் ஜெயிக்க பணம் வேணாம்; படிப்பு வேணாம்; செல்வாக்கு நிறைந்த சொந்தங்களோ, நண்பர்களோகூட வேணாம். ஜெயிக்கும் வெறியும் ஐடியாவும் மட்டும் இருந்தாபோதும் என்கிறது என் உறுதியான நம்பிக்கை, அனுபவம்!'' ஏதோ ஒரு துடிப்பில் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று புறப்பட்டு, தப்புந்தவறுமாக ஏதேதோ செய்து, அதனால் பணமும் திறமையும் துடிப்பும் கொண்ட ஓர் இளைஞனின் எதிர்காலம் பாழாகிவிடக்கூடாதே என்கிற அக்கறையில் என் கருத்துக்களைக் கொஞ்சம் வெளிப்படையாகவே சொன்னேன். நான் சொன்ன கருத்துக்கள் மாணிக்கத்துக்குப் பிடிக்கவில்லை. கோபத்தோடு புறப்பட்டார்.
ஒரு வாரம் ஓடியது. மாணிக்கத்திடமிருந்து இ-மெயில் வந்தது.
''வணக்கம். நான் உங்களைச் சந்தித்து பிஸினஸ் ஐடியா கேட்டபோது நீங்கள் எனக்கு ஊக்கம் தரவில்லை. எனவே, நானே ஒரு மார்க்கெட்டிங் ஏஜென்ஸியை தொடங்கி நடத்த முடிவு செய்துவிட்டேன். அடுத்த சில வருடங்களில் உங்களைவிடப் பெரிய ஆளாக வருவேன்!'' என்று அந்த இ-மெயிலில் எழுதி இருந்தார் மாணிக்கம்.
''வாழ்த்துக்கள்!'' என்று பதில் அனுப்பிவிட்டு, இரண்டொரு நாட்களுக்குப் பிறகு இன்னொரு விரிவான கடிதத்தை அவருக்கு எழுத ஆரம்பித்தேன். அந்தக் கடிதம் இதோ:
''அன்புள்ள மாணிக்கத்துக்கு, பிஸினஸ்மேன் ஆக வேண்டும் என்கிற உங்கள் துடிப்பு எனக்குப் புரிகிறது. உங்கள் நிலை சைக்கிளை சரியாக ஓட்டக் கற்றுக் கொள்ளாமலே அதை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் போக நினைக்கும் குழந்தை நிலை. என் நிலையோ, சைக்கிளை சரியாக கற்றுக் கொள்ளாத நிலையில் போக்குவரத்து மிகுந்த சாலையில் விபத்தில் சிக்காமல் பள்ளிக்குப் போய்வர வேண்டுமே என்று நினைக்கிற ஒரு அப்பாவின் மனநிலை.
உங்களைப் போன்ற இளைஞர்களை நிறைய சந்தித்திருக்கிறேன். அவர்களிடம் கையில் கொஞ்சம் பணமிருக்கிறது. ஆனால், என்ன பிஸினஸ் செய்வது என்பது பற்றி ஐடியா அவர்களுக்குக் கொஞ்சமும் இல்லை. எதைச் செய்வது, எதைச் செய்யக்கூடாது என்று தெரியாத நிலையில், உங்களிடம் பணமிருக்கும் விஷயத்தைச் சிலர் தெரிந்து கொண்டால், உங்களை உற்சாகப்படுத்துகிற மாதிரி நைஸாகப் பேசி, போணியாகாத தொழிலில் உங்களை இறக்கிவிட்டு, கடைசியில் உங்களையே போண்டியாக்கி விடுவார்கள். என்னால் உங்களை நிச்சயமாக அப்படிச் செய்ய முடியாது. யாரிடமும் நீங்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதுதான் என் அக்கறையே ஒழிய, உங்கள் பிஸினஸ் உற்சாகத்தைக் குறைக்க வேண்டும் என்பதல்ல.
மாணிக்கம், முதலில் உங்கள் அடிப்படைத் திறமை என்னவென்று கண்டுபிடியுங்கள்.
வாழ்க்கையில், பிஸினஸில் வெற்றியின் மந்திரச் சாவி உங்கள் அடிப்படைத் திறமை என்ன என்று கண்டுபிடித்து அதை மிகச் சரியாகப் பயன்படுத்துவதுதான். எதை நம்மால் பிரமாதமாகச் செய்ய முடியுமோ அதுதான் நம் அடிப்படைத் திறமை.
சச்சின் செஸ் ஆடப் போயிருந்தால், விஸ்வநாதன் ஆனந்த் கிரிக்கெட் ஆட வந்திருந்தால் ஜொலித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? ஏ.ஆர்.ரஹ்மான் முழுநேர நடிகராக முயற்சி செய்திருந்தால், ரஜினி மியூசிக் டைரக்டராகி இருந்தால் ஜெயித்திருப்பார்களா? நிச்சயம் மாட்டார்கள். காரணம், ரஹ்மானின் திறமை துள்ள வைக்கும் இசையில்தான் இருக்கிறது. ரஜினியின் திறமை உற்சாகமான ஸ்டைல் நடிப்பில்தான் இருக்கிறது.
தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல, கம்பெனி களுக்கும் அடிப்படைத் திறமை உண்டு. பைக் என்றால் ஹீரோ ஹோண்டா, ஐ.டி. என்றால் இன்ஃபோசிஸ், தரம் என்றால் டி.வி.எஸ்., மைசூர்பாகு என்றால் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என ஒவ்வொரு கம்பெனியும் தங்கள் அடிப்படைத் திறமையைக் கண்டறிந்து அதில் தங்கள் முத்திரையைப் பதித்திருக்கின்றன.
ஹென்றி ஃபோர்டு பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 1900 காலகட்டம். அமெரிக்காவில் பணக்காரர்கள் மட்டுமே கார் வாங்கக்கூடிய நிலை. சாதாரண மனிதனும் கார் வாங்க வேண்டுமென்று ஃபோர்டு ஆசைப்பட்டார். அசெம்பிளி லைன் என்னும் உற்பத்திமுறையைக் கண்டுபிடித்தார். இந்த புரட்சிகரமான முறையால், போட்டி கம்பெனிகள் ஒரு காரை முழுதாகத் தயாரிக்க 180 நிமிடங்கள் எடுத்தபோது, ஃபோர்டு கம்பெனியால் 93 நிமிடங்களில் தயாரிக்க முடிந்தது. தயாரிப்பு விலை கணிசமாகக் குறைந்தது. 1908-ல் சாமானியனும் வாங்கும் விலையில் மாடல் டி Model T என்னும் காரை ஃபோர்டு அறிமுகம் செய்தார். அவரது அடிப்படைத் திறமை என்ன தெரியுமா? குறைந்த விலையில் கார் தயாரிக்கும் அடிப்படைத் திறமை!
ரிலையன்ஸின் அடிப்படைத் திறமை எண்ணெய் சுத்திகரிப்பு என்கிற தொழிலில் வெளிநாட்டு கம்பெனிகளையும் விஞ்சி நிற்பது. நமக்கு சோபிக்க முடியாத பல தொழில்களில் இறங்கி நஷ்டப்படுவதைவிட, நமக்கு நன்கு தெரிந்த தொழிலில் கலக்குவதுதான் அடிப்படைத் திறமை.
இந்த அடிப்படைத் திறமை Core competency என்கிற சித்தாந்தத்தை உலகத்துக்கு எடுத்துச் சொன்னது யார் தெரியுமா? கோயம்புத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத் என்ற பேராசிரியர் சி.கே.பிரகலாத். இந்த பிஸினஸ் குருவிடம் ஆலோசனை கேட்காத பெரிய அமெரிக்க பிஸினஸ் நிறுவனங்களே இல்லை.
மாணிக்கம், இப்போதாவது நான் உங்களுக்குச் சொல்ல வருவதை முழுதாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் அடிப்படைத் திறமை என்னவென்று கண்டுபிடியுங்கள். அதற்கான முயற்சியில் உங்களை ஒருமுகப்படுத்துங்கள்.
வாய்ப்புகள் வரும்போது தானே நம் அடிப்படைத் திறமைகளைக் கண்டுபிடிக்க முடியும்? வாய்ப்புகள் வராவிட்டால் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? இரண்டு புத்தகங்கள் பற்றிய விவரம் தருகிறேன். இந்த புத்தகங்களில் இருக்கும் தேர்வுகளை எழுதுங்கள். உங்களை நீங்களே அறிந்துகொள்ள, உங்கள் அடிப்படைத் திறமைகளைப் புரிந்துகொள்ள இந்த தேர்வுகள் மிகவும் உதவும்.
1. StrengthsFinder 2.0
ஆசிரியர் - Tom Rath
வெளியிட்டவர்கள் - Gallup Press, USA
2. Test your own aptitude
ஆசிரியர் - Jim Barrett & Geoff Williams
வெளியிட்டவர்கள் - Kogan Page India Press Pvt. Limited, New Delhi .

பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: ''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''
வோவ்
அருமையான அறிவுரைக் களஞ்சியம் நீங்கள்,
எதோ செய்ய வேண்டும் எனத் துடிக்கிற இதயங்கழுக்கு...
தங்களின் சுய தரம் செய்ய வேண்டும் என நன்கு விளங்கும் படியாக
எழிய நடையில் சொல்லி இருக்கிறீர்கள்.
அதற்காய் நீங்கள் எடுத்துக் கொண்ட கதை மிகவும் நன்று...
வாழ்த்துக்கள் நண்பரே...
இன்னும் இன்னும் எதிர் பார்க்கிறேன்.
”””உங்கள் நிலை சைக்கிளை சரியாக ஓட்டக் கற்றுக் கொள்ளாமலே அதை எடுத்துக்
கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் போக நினைக்கும் குழந்தை நிலை. என் நிலையோ,
சைக்கிளை சரியாக கற்றுக் கொள்ளாத நிலையில் போக்குவரத்து மிகுந்த சாலையில்
விபத்தில் சிக்காமல் பள்ளிக்குப் போய்வர வேண்டுமே என்று நினைக்கிற ஒரு
அப்பாவின் மனநிலை”””
ஒரு கவிதை போல அழகாய் இருக்கிறது இந்த வரிகள்...

முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» ஹலோ…மை டியர் சன் – ஒரு பக்க கதை
» மிஸ்டர் சாத்தான்
» டியர் Mr. பில் கேட்ஸ்
» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
» மிஸ்டர் சாத்தான்
» டியர் Mr. பில் கேட்ஸ்
» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum