Latest topics
» சிறுகதை – கொலுசு!by rammalar Today at 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Today at 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Today at 8:44
» பொன்மொழிகள்
by rammalar Yesterday at 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Yesterday at 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
நீங்கள் கார் வைத்திருக்க தகுதியானவரா?
2 posters
Page 1 of 1
நீங்கள் கார் வைத்திருக்க தகுதியானவரா?
ஆசைப்படாதவர்கள் இன்றைக்கு யார் இருக்கிறார்கள்! அதிலும் கார் வாங்க வேண்டும்; மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு ரிலாக்ஸாக வெளியே சென்று வர வேண்டும் என்று விரும்பாதவர்கள் யார்! குறிப்பாக இரண்டு சக்கர வாகனத்தில் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து திரிந்து கொண்டிருப்பவர்களுக்கு கார் வாங்குவது லட்சியக் கனவாகவே இருக்கிறது. கார் வாங்க ஆசைப்படுவது நியாயமான ஆசைதான் என்றாலும், பொருளாதார ரீதியாக அதற்கான நிதி வலுவுடன் இருக்கிறோமா என்பதை ஒருமுறைக்கு இருமுறை நம்மை நாமே செக் செய்து பார்த்துக் கொண்டு வாங்குவதுதான் நீடித்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். இல்லாவிட்டால், காரை வாங்கியும் கன்னத்தில் கைவைக்க வேண்டிய நிலைக்கு கொண்டுவந்து விட்டுவிடும்!
கார் வைத்துக் கொள்ள நமக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? கடன் வாங்கி கார் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? இவைகுறித்து நிதி ஆலோசகர் சுதா சூரியகுமாரிடம் கேட்டோம்...
''பெரிய செல்வந்தர்களாக இல்லாமல் மிடில் கிளாஸ் லெவலில் இருப்பவர்களுக்கு தான் இந்த ஆலோசனைகள் தேவை... அப்படிப்பட்டவர்கள் கார் வாங்க முடிவு செய்தால், முதலில் சுயமாக கார் ஓட்டக் கற்றுக் கொள்வது அவசியத்திலும் அவசியம். அப்படி இல்லாமல் டிரைவர் போட்டு ஓட்ட வேண்டும் என்றால் அதற்கே ஒரு குறிப்பிட்ட தொகை தேவைப்படும். இன்றைய நிலையில் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏழாயிரம் ரூபாய்க்கு குறைவாக ஒரு நல்ல டிரைவர் கிடைக்க வாய்ப்பில்லை.
அடுத்த முக்கிய செலவு, பெட்ரோல். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 200 ரூபாய் என்று வைத்துக் கொண்டால்கூட மாதத்திற்கு 6,000 ரூபாய் வரை செலவாகும். கார் பார்க்கிங் செய்ய இடம் இருந்தால் உங்கள் வீட்டிலேயே காரை நிறுத்திக் கொண்டுவிடலாம். ஆனால், பார்க்கிங் இடம் இல்லாதவர்கள் அதற்கான இடத்தை வாடகைக்குத்தான் பிடிக்க வேண்டும். இப்போதெல்லாம் அதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வரை கேட்கிறார்கள். இது ஏரியாவுக்கு ஏரியா மாறவும் செய்கிறது. இதுபோக, பராமரிப்பு வகையில் சில ஆயிரங்கள் ஆக வாய்ப்புண்டு. இந்த செலவுகளுக்கு ஏற்ற வருமானம் இருக்கு; தவிர, காருக்கான தேவையும் இருக்கிறது என்பவர்கள் தைரியமாக கார் வாங்கலாம். ஆனால், அந்தளவுக்கு வருமானம் கிடைக்காது என்கிறவர்கள் தயவு செய்து கார் வாங்கும் முடிவை கொஞ்ச காலம் தள்ளிப்போடலாம்.
முக்கியமாக வீட்டுக் கடன் அல்லது வேறு ஏதாவது முக்கிய கடன் இருப்பவர்கள் கார் வாங்குவது குறித்து யோசித்துக் கொள்வதே நல்லது.
ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டியையும் முதலையும் கஷ்டப்பட்டு கட்டிக் கொண்டிருக்கும்போது, காருக்கான கடனை சரிவரக் கட்ட முடியாமல் போய் பிரச்னையில் சிக்கிவிட வாய்ப்பிருக்கிறது' என்றவர், லோன் வாங்கி கார் வாங்க நினைக்கிறவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை அடுக்கினார்.
''கார் வாங்குபவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், நாம் வாங்கும் காருக்கு ரீசேல் வேல்யூ இருக்கிறதா என்பதுதான். கடன் வாங்கி கார் வாங்க நினைப்பவர்களுக்கு ஏழு வருடம் வரை இ.எம்.ஐ. கட்டும் வசதியுடன் வங்கியில் கடன் கொடுக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி, கார் கடனுக்கான வட்டி விகிதம் 12-14%. பொதுவாக மூன்றாண்டு கால அவகாசத் திற்குள் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் மாத இ.எம்.ஐ. சுமார் 9,700 ரூபாய் (வட்டி விகிதம் 12%) கட்ட வேண்டியிருக்கும். ஐந்தாண்டு கால அவகாசத்திற்குள் மூன்று லட்சம் கடன் என்கிற பட்சத்தில் மாத இ.எம்.ஐ. 6,600 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். அதே போல் ஏழு ஆண்டுகால அவகாசத்தில் மூன்று லட்சம் என்கிறபோது 5,400 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். பொதுவாக கார் கடனை பொறுத்தவரை மூன்று வருடத்துக்குள் முடித்து விடுவதுதான் நல்லது. மாத இ.எம்.ஐ. குறைவாக இருக்குமே என்ற எண்ணத்தில் அதிக கால அவகாசத்தில் காரை வாங்கினால் கடன் முடியும் நேரத்தில் காரின் மதிப்பு பாதாளத்துக்குப் போயிருக்கும்! ரீசேல் வேல்யூ மிகவும் குறைவாகிவிடும்.
அடுத்த முக்கிய விஷயம், காருக்கான தேவை அதிகம் இருப்பவர்கள் டீசல் காரையும், காருக்கான தேவை குறைவாக இருப்பவர்கள் பெட்ரோல் காரையும் வாங்கிக் கொள்வது சிறந்தது. இதனால் செலவுகளும் குறைய வாய்ப்பிருக்கிறது'' என்றார்.
இனிமேற்கொண்டு கார் வாங்க நினைக்கிறவர்கள் மேற்சொன்ன விஷயங்களை ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்துப் பார்த்து முடிவு செய்வது நல்லது.

பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: நீங்கள் கார் வைத்திருக்க தகுதியானவரா?
என்னைப்போன்றோருக்கு அவசியமான தகவல் நன்றி பார்தீபன் சிறந்த தகவலுக்கு :”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள்?
» A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள்?
» கார் ஒட்டுபவரா நீங்கள்? இந்தமாதிரி முடியுமா?
» பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம்
» நாட்டின் பிரதமர் பதவிக்கு இவர் தகுதியானவரா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|