சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 15:58

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம் Khan11

பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம்

Go down

பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம் Empty பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jul 2011 - 23:34

பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம் Images

சவுதி அரேபியாவில் கார் ஓட்டுவது தொடர்பாக, அந்நாட்டு பெண்கள் "டிவிட்டர்', "பேஸ்புக்' வாயிலாக
விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், "பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம்' என்று, ஜப்பான் நாட்டின் "சுபரு' கார் தயாரிப்பு கம்பெனிக்கு பெண்கள், மொபைல்போன் மூலம் குறுந்தகவல்கள் அனுப்பி வருகின்றனர்.

உலக நாடுகளில் சவுதி அரேபியாவைத் தவிர, வேறு எந்த நாட்டிலும் பெண்கள் கார் ஓட்டுவதற்குத் தடை இல்லை. சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு, அந்நாட்டு இஸ்லாமிய மதகுருக்களின் வாய்மொழி தடை உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. பெண்கள் கார் ஓட்ட அந்நாட்டு மன்னர்களில் சிலர் அனுமதித்த போதும், இஸ்லாமிய மதகுருக்களின் வாய்மொழி உத்தரவால், கார் ஓட்டும் பெண்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக கார் ஓட்டும் உரிமைக்காக போராடி வந்தாலும், நடப்பாண்டில் பெண்கள் அதிகளவில் அக்கறை செலுத்தி, இதற்காக போராடி வருகின்றனர். இவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் ஆதரவு தெரிவித்துள்ளார்.



அரபு நாடுகளில் சர்வதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஓரளவிற்கு அதில் வெற்றி பெற்று வருகின்றனர். அரபு நாட்டு மக்கள் "டிவிட்டர்', "பேஸ்புக்' வாயிலாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதே முறையை, சவுதி அரேபிய பெண்களும் தற்போது பயன்படுத்த களத்தில் இறங்கியுள்ளனர். மேலும், "யூ டியூப் டாட் காம்' பயன்படுத்தி, கார் ஓட்டும் போட்டோக்களை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இத்துடன் நின்று விடாமல், பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, ஜப்பான் நாட்டிற்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம் என்று, அந்நாட்டின் "சுபரு' கார் தயாரிப்பு கம்பெனிக்கு சவுதி பெண்கள் மொபைல்போன் மூலம் குறுந்தகவல்கள் அனுப்பி வருகின்றனர்.

அரபு நாடுகளில் மக்களின் கிளர்ச்சியை அடுத்து, நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் "பேஸ்புக்' பயன்படுத்தும் பெண்கள் சதவீதம் 32 முதல் 33.5 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக, துபாய் அரசு பள்ளி ஆய்வில் தெரிய வந்துள்ளது.அரபு நாடுகளில் "பேஸ்புக்' பயன்படுத்தும் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகளவில் "பேஸ்புக்' பயன்படுத்தும் பெண்களின் சதவீதம் 61 சதவீதமாக உள்ளது.
சவுதியில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை மறுக்கப்பட்ட போதும், அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள். மேலும், சமீபத்தில், உலகிலேயே பெண்களுக்கான பெரிய பல்கலைக்கழகம் ரியாத்தில் திறக்கப்பட்டது. ஆனால், வேலைவாய்ப்பு என்று வரும்போது, நிலைமை தலைகீழாக உள்ளது.

கடந்த 2009ம் ஆண்டில், சவுதியில் பெண்களில் 17 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்றி வந்தனர். ஐக்கிய அரபு எமிரேட்டில் 42 சதவீத பெண்களும், கத்தாரில் 50 சதவீதப் பெண்களும் பணிபுரிந்து வருகின்றனர். பெண்கள் அதிகளவில் வேலையில் இல்லாதபோதும், அந்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகளவில் நிலவி வருகிறது. அந்நாட்டைச் சேர்ந்தவர்களை விட வெளிநாட்டினர் தான், அதிகளவில், தொழிலாளர்களாக, டிரைவர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

அந்நாட்டில், பெண்கள் தனியாக வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. இவர்கள் சார்பில் வர்த்தகத்தை நிர்வகிக்க, ஆண் காப்பாளர்களை நிர்வகிக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால் பெண்கள் வர்த்தகத்தில் நீடிக்க முடியாமல், இறுதியில் கைவிட்டு விடுகின்றனர். இது அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தடையாக இருந்து வருகிறது.

இதனால், சவுதி பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய ஆர்வம் செலுத்தி வருகின்றனர். துபாயில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதால், அங்கு வர்த்தகத்தில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம் Empty Re: பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jul 2011 - 23:35



பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum