சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஒரே தரத்தில் கம்ப்யூட்டர் கல்வி வேண்டும்! Khan11

ஒரே தரத்தில் கம்ப்யூட்டர் கல்வி வேண்டும்!

Go down

ஒரே தரத்தில் கம்ப்யூட்டர் கல்வி வேண்டும்! Empty ஒரே தரத்தில் கம்ப்யூட்டர் கல்வி வேண்டும்!

Post by பார்த்திபன் Wed 18 Jan 2012 - 9:36

டி.சி.எஸ். ராமதுரை - இந்தியாவில் ஐ.டி. துறை காலூன்ற காரணமாக இருந்தவர். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சேங்காலிபுரத்தைச் சேர்ந்தவர். கம்ப்யூட்டர் என்றால் என்னவென்றே நமக்குத் தெரியாத காலத்தில் அமெரிக்காவுக்குச் சென்று கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தைப் படித்ததோடு, நம் நாடு பல லட்சம் கோடி ரூபாயை சம்பாதிக்க காரணமாக இருந்தவர். டி.சி.எஸ். நிறுவனத்தின் சி.இ.ஓ. மற்றும் எம்.டி.யாக இருந்த ராமதுரை, ஓய்வு பெற்றபின் தற்போது அதே நிறுவனத்தின் துணை சேர்மனாக இருக்கிறார்.

கடந்த ஐம்பது ஆண்டு களுக்கும் மேலாக டி.சி.எஸ். நிறுவனம் வளர்ந்த விதத்தை 'த டி.சி.எஸ். ஸ்டோரி... அண்ட் பியான்ட்’ என்கிற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். இந்தப் புத்தகத்தை வெளியிட அண்மையில் சென்னை வந்திருந்த அவர் நாணயம் விகடனுக்காக அளித்த ஸ்பெஷல் பேட்டி இனி:
இன்று ஐ.டி. துறை எப்படி இருக்கிறது? கடந்த காலத்தில் இருந்த மாதிரி வளர்ச்சி இனி இத்துறையில் இருக்காது என்கிறார்களே!
''நம் நாட்டில் அரசுத் துறையாக இருந்தாலும் சரி, தனியார் துறையாக இருந்தாலும் சரி, கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தின் பயன்பாடு குறைந்த அளவே இருக்கிறது. பல்வேறு மட்டங்களில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தைப் பெரிய அளவில் கொண்டு வருவதன் மூலமே அரசாங்கமும், தனியார் நிறுவனங்களின் அனைத்து நடவடிக்கைகளும் சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படை யானதாக அமையும். இந்த முக்கியமான மாற்றம் நிகழ வேண்டுமெனில், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் இன்னும் பெரிய அளவில் வந்தாக வேண்டும். எனவே, ஐ.டி. துறைக்கு நல்ல எதிர்காலம் இருப்பதை மறுக்கவே முடியாது.
ஆனால், ஏற்கெனவே செய்துவந்த வேலையையே எல்லா ஐ.டி. நிறுவனங்களும் செய்து வந்தால் பிரகாசிக்க முடியாது. நமது பலம் என்ன, எதில் நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும், போட்டி நிறுவனத்திற்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை ஒவ்வொரு நிறுவனமும் கண்டுபிடித்து, அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு செயல்பட்டால் வளர்ச்சி வேகம் குறைய வாய்ப்பே இல்லை.''
இன்று ஐ.டி. துறை சந்திக்கும் சவால்கள் என்னென்ன?
''மிக முக்கியமான சவால் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட கல்வியாக இருக்கிறது. ஐ.ஐ.டி. யில் படிக்கும் மாணவர் களின் தரம் ஒரு மாதிரியாக இருக்கிறது, என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மாணவர் களின் தரம் வேறு மாதிரியாக இருக்கிறது. இதனால், படித்து முடித்து வேலைக்குச் சேருகிற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காலஅளவுகளில் நாங்கள் பயிற்சி தர வேண்டியிருக்கிறது. ஒரே தரத்திலான கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தருகிற மாதிரி கல்வி நிறுவனங்களை மாற்றி அமைக்க வேண்டும்.
இரண்டாவது, பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் ஒரே மாதிரி செயல்படுவதிலிருந்து மாறுபட்டு, தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முயற்சிக்க வேண்டும். உதாரணமாக, ஒரு ஐ.டி. நிறுவனம் இன்ஷூரன்ஸ் தொடர்பான சாஃப்ட்வேர் களை உருவாக்குவதை தன் திறமையாகக் கொண்டு, அதில் பேர் சொல்லும்படி இருக்கலாம்.
மூன்றாவது, ஐ.டி. தொடர் பாக நமது கண்டுபிடிப்புகள் அனைத்தையும் பேடன்ட் செய்தால் மட்டுமே நமக்கான உரிமையை நாம் எதிர்காலத்தில் நிலைநாட்டி, அதற்கான பலனை அடைய முடியும்.''
டி.சி.எஸ்.ஸின் பலம் என்ன, பலவீனம் என்ன?
''மிகப் பெரிய பலம் என்றால் மனிதவளம். மிகத் திறமையான கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் எங்கள் நிறுவனத்தில் இருக்கிறார்கள். மிக முக்கிய மான புராஜெக்டுகளை செய்த அனுபவம் இன்னொரு பெரிய பலம். டாடா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனம் என்பது இன்னொரு பெரிய பலம். எங்களிடம் வேலையை ஒப்படைப்பவர்கள் நிம்மதியாகத் தூங்கலாம்.
அந்த அளவுக்கு நாங்கள் அவர்களுக்கு பக்க துணையாக இருப்போம். பலவீனம் என்று சொல்வதைவிட ஒரு சின்ன கவலை என்னவென்றால், பெரிதாக வளர்ந்துவிட்ட டி.சி.எஸ். நிறுவனத்தின் சைஸ், அதாவது அளவு. இந்த அளவு குறையாமல், அதே நேரத்தில் புதிது புதிதாக புதுமை (இன்னோவேஷன்) படைக்க வேண்டும்.''
''தமிழ்நாட்டிலிருந்து நிறைய மாணவர்கள் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வருகிறார்கள். இவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?''
''பள்ளி மாணவர்கள் டியூசன் போய் சில பாடங்களை நன்றாக கற்றுக் கொள்கிற மாதிரி, கம்ப்யூட்டர் படிக்கும் மாணவர்களும் சில கோர்ஸ் களை படித்து, திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு, எந்த விஷயத்தை எப்படி பேச வேண்டும், நம்பிக்கையோடு நடந்து கொள்வது எப்படி என்கிற சாஃப்ட் ஸ்கில்-லை வளர்த்துக் கொள்ள வேண்டும். திறமையும் அதை சரியாக வெளிப்படுத்தும் திறனும் இருந்தால், வேலை கிடைக்காமல் போகாது.''
''இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதுபோல மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி வரும் என்கிறார்களே!''
''நெருக்கடி வந்தால் அதை ஒரு புதிய வாய்ப்பாகத்தான் கருத வேண்டும். நெருக்கடி வரும்போது நாம் செலவுகளைக் குறைக்க முயற்சிப்போம். பொருட்கள், மனித உழைப்பு வீணாவதைத் தடுப்போம். பல்வேறு வகையில் புதுமைகளைக் கொண்டுவர யோசிப்போம். பல துறைகளில் வந்திருக்கும் புதிய முயற்சிகளை நமது தொழிலில் கொண்டு வர அது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இதற்கு மற்ற துறைகளில் என்னென்ன விஷயங்கள் நடந்திருக்கிறது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.''
''கார்ப்பரேட் கவர்னன்ஸ் என்பது எந்த அளவுக்கு முக்கியம்?''
''எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் இதுதான் அடிப்படை. கார்ப்பரேட் கவர்னன்ஸ் இல்லாத நிறுவனத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வராது. மக்களின் நம்பிக்கையை இழந்த நிறுவனங்கள் ஜெயிக்க முடியாது. கார்ப்பரேட் கவர்னன்ஸ் என்பது லட்சுமண கோடு மாதிரி. அதை தாண்டிச் சென்றால், நாம் நம்பிக்கை இழந்துவிடுவோம். மக்களின் மனத்தைக் கொண்டுதான் நிறுவனங்கள் நடக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. நாம் செலவழிக்கிற ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு தரவேண்டும். நம் நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் எந்தவிதமான சோதனைக்கும் தயாராக இருக்க வேண்டும். இந்த மாதிரியான ஒரு கலாசாரத்தை உயரதிகாரிகள் முதல் சாதாரண ஊழியர்கள் வரை கொண்டு வரவேண்டும்.''
''தேசிய திறன் வளர்ப்பு குழு (National Skill Development Council) தொடர்பாக பிரதமரின் ஆலோசகராக என்ன செய்ய நினைக்கிறீர்கள்?''
''ஒவ்வொரு ஆண்டும் 15 முதல் 24 வயதுள்ள 15 முதல் 18 மில்லியன் வரையிலான இளைஞர்கள் புதிதாக வேலை வாய்ப்பைத் தேடி வருகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் எப்படி வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பதற்கான வழிவகைகளை கண்டறிவது முக்கியமான வேலை.
குறிப்பாக, 2022-க்குள் 500 மில்லியன் பேரை வேலை பார்க்கும் திறமைசாலிகளாக உருவாக்க வேண்டும். தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த திறமைசாலிகளை உருவாக்குவது எப்படி என்பதைக் கண்டு பிடித்து, அதை நடைமுறைப் படுத்துவதே நான் செய்யப் போகும் முக்கிய மான வேலை. அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் கூட்டாகச் சேர்ந்து உழைப்பதன் மூலமே இதை சாத்தியமாக்க முடியும்.''

''சங்கீதம் பிடிக்கும்!''
''நிறைய சங்கீதம் கேட்பேன். கர்நாடக இசை, இந்துஸ்தானி என தனிமையில் இருக்கும் போதெல்லாம் இசையோடு கழிப்பேன். நிறைய படிப்பேன். சுயசரிதையில் ஆரம்பித்து டெக்னிக்கல் சமாசாரங்கள் வரை எந்த புத்தகம் வேண்டுமானாலும் விரும்பிப் படிப்பேன். இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்குச் சுற்றுலா போவேன். கல்கியின் பொன்னியின் செல்வனை இப்போது திரும்ப படிக்க ஆரம்பித்திருக்கிறேன். நான் தமிழில் அதிகம் படிக்க முடியாமல் போனதற்குக் காரணம், நேரமின்மைதான்!''
என் லட்சியம்..!
''என்னால் எவ்வளவு பேருக்கு முடியுமோ, அத்தனை பேருக்கும் ஒரு வாய்ப்பு தந்து வாழ்க்கையில் முன்னுக்குக் கொண்டு வரவேண்டும்!''
நிறைவேறாத ஆசை..?
''இன்றைய இளைஞர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளைப் பார்க்கும் போது, நானும் 23 வயது இளைஞனாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே!''
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum