by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 9 of 37 • 1 ... 6 ... 8, 9, 10 ... 23 ... 37
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
பெப்ரவரி 19
1600 - பெருவின் ஹுவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்தது.
1674: இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 3 ஆவது ஆங்கில – டச்சு யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக டச்சு காலனியான அமெரிக்காவின் நியூ ஆம்ஸ்டர்டம் பிராந்தியம் இங்கிலாந்துக்கு ஒப்படைக்கப்பட்டு, அதன் பெயர் நியூ யோர்க் என மாற்றப்பட்டது.
1807: அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி ஆரோன் பர் கைது செய்யப்பட்டார்.
1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
1861: ரஷ்யாவில் பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.
1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
1942: சுமார் 250 ஜப்பானிய விமானங்கள், அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை தாக்கின. 243 பேர் பலி.
1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை - 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
1959: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.
1968 - சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அநுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
1978: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சைப்பிரஸில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானமொன்றை எகிப்திய படையினர் மீட்க முயன்றபோது இரு நாடுகளின் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 15 எகிப்திய வீரர்கள் பலி.
1985: ஸ்பெய்ன் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 148 பேர் பலி.
1986: மீர் விண்வெளி நிலையத்தை சோவியத் யூனியன் விண்ணுக்கு ஏவியது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1513 – கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் பிரெஞ்சுப் படைகளை வென்றான்.
1780 – தென் கரோலினாவில் காம்டன் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் அமெரிக்கப் படைகாளை வென்றனர்.
1819 – இங்கிலாந்து, மான்செஸ்டரில் அரசுக்கெதிராகக் கிளர்ந்த கிளர்ச்சியாளர்கள் அடக்கப்பட்டதில் 11 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
1865 – 4 ஆண்டுகள் ஸ்பானியரின் பிடியில் இருந்த டொமினிக்கன் குடியரசு மீண்டும் விடுதலை பெற்றது.
1868 – பெருவில் அரிக்கா (இன்றைய சிலியில்) இடம்பெற்ற 8.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 25,000 பேர் கொல்லப்பட்டனர்.
1945 – ஜப்பானியப் பிரதமர் கண்டாரோ சுசுக்கி மீது கொலை முயாற்சி மேற்கொள்ளப்பட்டது.
1945 – சீனாவின் கடைசி மன்னன் பூயி சோவியத் படைகளினால் கைப்பற்றப்பட்டான்.
1964 – தென் வியட்நாமில் அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் டோங் வான் மின் பதவியகற்றப்பட்டார்.
1987 – அமெரிக்காவின் மிச்சிகனில் MD-82 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர். செசிலியா சீசான் என்ற 4-வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது.
2005 – வெனிசுவேலாவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 160 பேர் உயிரிழந்தனர்.
2006 – இந்தியாவில் இம்பால் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
-
படத்திலிருப்பவர்:-
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
(பெப்ரவரி 18, 1836 - ஆகஸ்ட் 16, 1886
----------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1969: அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் சூறாவளியினால் 248 பேர் பலி.
1979: சோவியத் யூனியனின் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதால் 156 பேர் பலி.
1988: பாகிஸ்தான் விமானமொன்று விபத்துக்குள்ளானதால், அதில் பயணம் செய்த பாகிஸ்தான் ஜனாதிபதி முஹமட் ஸியா உல் ஹக், அமெரிக்கத் தூதுவர் ஆர்னோல்ட் ரபேல் ஆகியோர் பலியாகினர்.
1988: வெள்ளை மாளிகை பணிப்பெண்ணான மோனிகா லெவின்ஸ்கியுடன் தகாத தொடர்பு வைத்திருந்ததை அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் அந்நாட்டு மக்களிடம் ஒப்புக்கொண்டார்.
1999: துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 17,000 பேர் பலியாகினர்.
2005: பங்களாதேஷில் 300 இடங்களில் சுமார் 500 குண்டுகள் வெடித்தன.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1917: கிறீஸ் நாட்டின் தெஸலோனிகி நகரில் ஏற்பட்ட தீயின் காரணமாக சுமார் 70,000 வீடுகள் அழந்தன.
1920:அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கான, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் அங்கீகரிக்கப்பட்டது.
1971: வியட்நாமிலிருந்து அவுஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் தமது படைகளை வாபஸ் பெற்றன.
2005: இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட மின்சார தடங்கல் காரணமாக சுமார் 10 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
2008: பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரவ், எதிர்கட்சிகளின் பாரிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ராஜினாமா செய்தார்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1862 | மினசோட்டாவில் லகோட்டா பழங்குடியினர் நியூ ஊல்ம் குடியேற்றத்திட்டத்தைத் தாக்கி பல வெள்ள்ளையர்களைக் கொன்றனர். | |
1895 | கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது. | |
1915 | முதலாம் உலகப் போர்: ஒட்டோமான் பேரரசுப் படைகளுக்கெதிராகஆர்மீனியர்கள் தாக்குதலைத் தொடுத்தனர். | |
1919 | ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை அடைந்தது. | |
1934 | ஜெர்மனியில் பியூரர் பதவியை ஏற்படுத்த நாட்டின் 89.9% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர். | |
1944 | இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நட்பு நாடுகளின் உதவியுடன் பாரிஸ் தாக்குதலைத் தொடுத்தது. | |
1945 | ஹோ ஷி மின் தலைமையில் வியெட் மின் படைகள் வியெட்நாமின் ஹனோய் நகரைக் கைப்பற்றினர். | |
1946 | கல்கத்தாவில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலகத்தில் 3000 பேர் கொல்லப்பட்டனர். | |
1953 | பனிப்போர்: அமெரிக்காவின் சிஐஏயின் உதவியுடன் ஈரானின் முகமது மொசாடெக்கின் அரசு கவிழ்க்கப்பட்டு ஷா முகமது ரேசா பாலாவி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது. | |
1960 | சோவியத்தின் ஸ்புட்னிக் 5 விண்கலம் பெல்கா, ஸ்ட்ரெல்கா என்ற இரு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் கொண்டு சென்றது. | |
1980 | சவுதி அரேபியாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்குகையில் தீப்பிடித்ததில் 301 பேர் கொல்லப்பட்டனர். | |
1981 | லிபியாவின் இரு போர் விமானங்களை சிட்ரா குடாவுக்கு மேலாக அமெரிக்க விமானங்கள் இடைமறித்து சுட்டுவீழ்த்தின. | |
1989 | போலந்தின் பிரதமராக சொலிடாறிற்றி தொழிற்சங்கவாதி டாடியூஸ் மசவியேஸ்கி அதிபர் ஜாருசெல்ஸ்கியினால் தெரிவுசெய்யப்பட்டார். 42 ஆண்டுகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் முதல் கம்யூனிஸ்ட் அல்லாத பிரதமர் இவரே ஆவார். | |
1991 | ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் சோவியத் அதிபர் மிகைல் கர்பசோவ் கிறிமியா என்ற சுற்றுலா மையத்தில் ஓய்வெடுக்கும் போது கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். | |
1981 | லிபியாவின் இரு போர் விமானங்களை சிட்ரா குடாவுக்கு மேலாக அமெரிக்க விமானங்கள் இடைமறித்து சுட்டுவீழ்த்தின. | |
2002 | செச்னிய படையினரின் ஏவுகணைத் தாக்குதலில் ரஷ்ய ஹெலிகொப்டர் சிக்கியதால் 118 படையினர் பலி. | |
2003 | ஈராக்கில் ஐ.நா. தலைமையகம் மீது நடந்த கார் குண்டுத் தாக்குதலில் ஈராக்கிற்கான ஐ.நா. தூதுவர் சேர்ஜியோ வியேரா டி மெலோ உட்பட 22 பேர் பலியாகினர். | |
2009 | ஈராக்கில் நடந்த தொடர்குண்டுவெடிப்புகளில் 101 பேர் பலி 565 பேர் காயம். |
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
636 | அரபுப் படைகள் பைசண்டைன் பேரரசிடம் இருந்து சிரியா, பாலஸ்தீனம் ஆகியவற்றைக் கைப்பற்றினர். | |
1000 | ஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபன் என்பவனால் உருவாக்கப்பட்டது. | |
1858 | சார்ள்ஸ் டார்வின் இயற்கைத் தேர்வுமூலமான கூர்ப்புக்கொள்கையை வெளியிட்டார். | |
1866 | அமெரிக்க அதிபர் அண்ட்ரூ ஜோன்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். | |
1944 | முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சை ஜேர்மனியப் படைகள் கைப்பற்றின. | |
1917 | இலங்கையில் ஒரு ரூபாய்த் தாள் வழங்கப்பட்டது. | |
1940 | மெக்சிக்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் ரஷ்யப் புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி படுகாயமுற்று அடுத்த நாள் மரணமானார். | |
1944 | இரண்டாம் உலகப் போர்: ருமேனியா மீது சோவியத் ஒன்றியம் தாக்குதலை ஆரம்பித்தது. | |
1948 | "இலங்கை குடியுரிமை சட்டம்" இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 10 இலட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர். | |
1953 | ஐதரசன் குண்டைத் தாம் சோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. | |
1960 | செனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது. | |
1968 | பனிப்போர்: 200,000 வார்சா ஒப்பந்த நாடுகளின் படைகள் செக்கோஸ்லவாக்கியாவினுள் புகுந்தன. | |
1975 | நாசா வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது. | |
1977 | நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது. | |
1988 | ஈரான் – ஈராக் போர்: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது. | |
1991 | எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது. | |
1997 | அல்ஜீரியாவில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். | |
2002 | ஸ்பெய்னில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 146 பேர் பலி. | |
2006 | அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006: கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணமால் போனார்கள். | |
2006 | நமது ஈழநாடு பணிப்பாளர், முன்னாள் யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமகராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார். |
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1770 | கப்டன் ஜேம்ஸ் குக் கிழக்கு அவுஸ்திரேலியாவில் தரையிறங்கி அதனை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டான். | |
1821 | ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது. | |
1831 | கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார். | |
1842 | டாஸ்மானியாவின் தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது. | |
1863 | அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கன்சாஸ் மாநிலத்தில் லோரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது. | |
1911 | லியனார்டோ டா வின்சியின் ஓவியமான மோனா லிசா பாரிசின் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது. | |
1920 | சேர் ஏ. கனகசபை இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவானார். | |
1942 | இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போர் ஆரம்பமானது. | |
1945 | இரண்டாம் உலகப் போர்: சாலமன் தீவுகள் தொடர் சமர் முடிவடைந்தது. | |
1959 | ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் 50வது மாநிலமாக இணைக்கப்பட்டது. | |
1963 | தெற்கு வியட்நாமின் குடியரசு இராணுவத்தினர் நாட்டின் பௌத்த தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர். | |
1968 | சோவியத் தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகளின் படையினர் செக்கோஸ்லவாக்கியாவைக் கைப்பற்றின. | |
1969 | ஆஸ்திரேலியனான மைக்கல் டெனிஸ் ரொஹான் என்பவன் ஜெருசலேமின் அல் அக்சா மசூதிக்குத் தீ வைத்தான். | |
1983 | பிலிப்பீன்ஸ் எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார். | |
1986 | கமரூனில் நியோஸ் ஆற்றில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 1,800 பேர் வரையில் கொல்லப்பட்டனர். | |
1991 | லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது. | |
1991 | சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது. | |
1879 | அயர்லாந்தில் கன்னி மரியாள் காட்சி கொடுத்ததாக அறிவிக்கப்பட்டது. | |
1982 | லெபனானிற்கு சரவ்தேச கண்காணிப்பு படை அனுப்பட்டது. | |
2001 | யூகோஸ்லாவியாவுக்கு சமாதான படையை அனுப்ப நேட்டோ தீர்மானித்தது. | |
2001 | தஜிகிஸ்தானில் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது. | |
2007 | சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது. |
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1639 | பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னை) அமைத்தார்கள். | |
1642 | இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் ஆங்கில நாடாளுமன்றத்தை "துரோகிகள்" என வர்ணித்தான். ஆங்கில உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. | |
1717 | ஸ்பானியப் படைகள் சார்டீனியாவில் தரையிறங்கினர். | |
1770 | ஜேம்ஸ் குக் தனது ஆட்களுடன் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையை அடைந்தான். | |
1780 | கப்டன் ஜேம்ஸ் குக்கின் கப்பல் (HMS Resolution) இங்கிலாந்து திரும்பியது. (ஹவாயில் குக் கொல்லப்பட்டான்). | |
1798 | ஐரியக் கிளர்ச்சிக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகள் அயர்லாந்தில் தரையிறங்கினர். | |
1831 | வேர்ஜீனியாவில் நாட் டர்னர் தனது தாக்குதலை ஆரம்பித்தான். 50 வெள்ளையினத்தினரும், பல நூற்றுக்கணக்கான கறுப்பின அமெரிக்கர்களும் கொல்லப்பட்டனர். | |
1848 | நியூ மெக்சிகோ ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது. | |
1860 | பிரித்தானியக் கடற்படையின் உதவியுடன் கரிபால்டியின் படைகள் சிசிலியில் இருந்து இத்தாலியின் பெரும்பரப்பினுள் நுழைந்தனர். | |
1864 | 12 நாடுகள் இணைந்து ஹென்றி டியூனாண்ட் தலைமையில் ஜெனீவாவில் செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தார்கள். | |
1875 | சக்காலின் மற்றும் கூரில் தீவுகள் தொடர்பாக ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உடன்பாடு எட்டப்பட்டது. | |
1910 | கொரியா-ஜப்பான் இணைப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரையில் கொரியா ஜப்பானின் ஆட்சியின் கீழ் இருந்தது. | |
1911 | பாரிசில் களவெடுக்கப்பட்ட மோனா லிசா ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. | |
1914 | முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில், பிரித்தானியாவும் ஜேர்மனியும் முதன் முதலில் நேரடியாகப் போரில் ஈடுபட்டனர். | |
1926 | தென்னாபிரிக்கா, ஜோகானஸ்பேர்க்கில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. | |
1932 | தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது. | |
1941 | இரண்டாம் உலகப் போர்: ஜெர்மன் படைகள் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கை அடைந்தனர். லெனின்கிராட் மீதான முற்றுகை ஆரம்பமானது. | |
1942 | இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி மீது பிரேசில் போரை அறிவித்தது. | |
1944 | இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் ருமேனியாவைக் கைப்பற்றியது. | |
1949 | கனடாவில் 8.1 அளவு நிலநடுக்கம் பதிவாகியது. | |
1962 | பிரெஞ்சு அதிபர் சார்ல்ஸ் டி கோல் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது. | |
1972 | ரொடீசியா ஒலிம்பிக் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது. | |
1978 | சண்டினீஸ்டா படைகள் நிக்கராகுவாவின் தேசிய அரண்மனையைக் கைப்பற்றினர். | |
1989 | நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்ட்டது. | |
1991 | சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராவ்தா பத்திரிகை மூடப்பட்டது. |
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
நன்றியுடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1541: பிரெஞ்சு கடலோடியான ஜாக் கார்ட்டியர் கனடாவின் கியூபெக் நகரத்திற்கு அருகில் தரையிறங்கினார்.
1765: பர்மா – சியாமிய யுத்தம் ஆரம்பமாகியது.
1839: ஹொங்கொங்கை பிரிட்டன் கைப்பற்றியது. சீனாவுடனான யுத்தத்திற்கு தயாராகுவதற்கான தளமாக ஹொங்கொங்கை பிரிட்டன் பயன்படுத்தியது.
1914: ஜேர்மனிக்கு எதிராக ஜப்பான் போர் பிரகடனம் செய்தது.
1938: அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் இன்னிங்ஸ் ஒன்றில் இங்கிலாந்து வீரர் லென் ஹட்டன் 364 ஓட்டங்களைப் பெற்று புதிய சாதனை படைத்தார்.
1939: ஜேர்மனயும் சோவியத் யூனியனும் மோதல்தவிர்ப்பு உடன்படிக்கை செய்துகொண்டன.
1989: அவுஸ்திரேலியாவில் 1645 விமானிகள் ராஜினாமா.
1990: சோவியத் யூனியனிலிருந்து பிரிவதாக ஆர்மேனியா பிரகடனம் செய்தது.
1990: வளைகுடா யுத்தத்தை தவிர்ப்பதற்காக ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் மேற்குலக 'விருந்தினர்கள்' பலருடன் தொலைக்காட்சியில் தோன்றினார். அவர்கள் பணயக்கைதிகள் என மேற்குநாடுகளால் விமர்சிக்கப்பட்டது.
1990: தாம் ஒன்றிணையப்போவதா கிழக்கு ஜேர்மனியும்மேற்கு ஜேர்மனியும் அறிவித்தன.
1996: அமெரிக்கர்களுக்கு எதிராக ஒசாமா பின்லேடன் போர்ப் பிரகடனம்.
2000: பஹ்ரெய்னில் இடம்பெற்ற விமான விபத்தில் 143 பேர் பலி.
2011: லிபியாவில் தேசிய இடைக்கால கவுன்ஸிலின் படைகள் பொப் அல் அஸீஸா நகரை கைபற்றியதன் பின்னர் கேணல் கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1349: ஜேர்மனியின் மேய்ன்ஸ் நகரில் ஒருவித கொள்ளை நோய்க்கு காரணம் எனக்கூறி சுமார் 6000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1608: இந்தியாவுக்கு இங்கிலாந்தின் முதலாவது உத்தியோகபூர்வ பிரதிநிதி அனுப்பப்பட்டார்.
1814: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி. மீது படையெடுத்த இங்கிலாந்து துருப்புகள் வெள்ளை மாளிகைக்கு தீ வைத்தன.
1931: பிரான்ஸ், சோவியத் யூனியனுக்கிடையில் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1949: நேட்டோ அமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் அமுலுக்குவந்தது.
1954: அமெரிக்காவில் கம்யூனிஸட் கட்டுப்பாட்டுச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதமாக்கப்பட்டது.
1954: பிரேஸிலில் இராணுவப் புரட்சியினால் பதவி நீக்கப்பட்ட ஜனாதிபதி கெடுலியோ, பதவி நீக்கப்பட்டு சில மணித்தியாலங்களில் வார்காஸ் தற்கொலை செய்துகொண்டார்.
1991: சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பதவியிலிருந்து மிகைல் கொர்பசேவ் விலகினார்.
1995: வின்டோஸ் 95 மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது.
2004: ரஷ்ய விமானமொன்று செச்சினய தற்கொலை பேராளியினால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டதால் 89 பேர் பலி.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1609: கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கி செயற்படுத்திக் காட்டினார்.
1768: ஜேம்ஸ் குக் தனது முதல் நாடுகாண் பயணத்தை ஆரம்பித்தார்.
1830: பெல்ஜிய புரட்சி ஆரம்பம்
1825: பிரேஸிலிடமிருந்து பிரிவதாக உருகுவே சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1920: வார்ஸோ யுத்தத்தில் சோவியத் யூனியன் படைகளை போலந்து படைகள் ஆச்சரியகரமாக தோற்கடித்தன.
1933: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 9,000 பேர் பலி.
1944: பாரிஸ் நகரத்தை ஜேர்மனியிடமிருந்து நேசநாடுகளின் படைகள் மீளக் கைப்பற்றின.
1991: சோவியத் யூனியனிலிருந்து பிரிவதாக பெலாரஸ் சுதந்திர பிரகடனம் செய்தது.
2003: இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதல்களில் 52 பேர் பலி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1920: அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் 19 ஆவது திருத்தச்சட்டம் அமுலுக்கு வந்தது.
1957: கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோவியத் யூனியன் வெற்றிகரமாக பரிசோதித்ததாக சோவியத் யூனியனின் டாஸ் செய்திச்சேவை அறிவித்தது.
1978: முதலாம் அருளப்பர் சின்னப்பர் பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டார்.
2003: அமெரிக்காவின் கொலம்பிய விண்வெளி ஓடம் விபத்துக்குள்ளானமை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது.
2008: ஜோர்ஜியா நாட்டிலிருந்து பிரிந்த குடியரசுகளான அப்காஸியா மற்றும் தெற்கு ஒசேஷியாவின் சுதந்திரப் பிரகடனங்களை ரஷ்யா அங்கீகரித்தது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1813: ட்ரெஸ்டன் யுத்தத்தில் பாரிய ஆஸ்திரிய, ரஷ்ய படைகளை பிரெஞ்சு மன்னன் நெப்போலியனின் படைகள் தோற்கடித்தன.
1859: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் பெற்றோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் முதலாவது வெற்றிகரமான வர்த்தக எண்ணெய் கிணறு அமைக்கப்படுவதற்கு இது வழிவகுத்தது.
1986: பிரிட்டன் - ஸான்ஸிபார் நாடுகளுக்கிடையிலான யுததம் 45 நிமிடங்களில் முடிவுற்றது.
1916: ஆஸ்திரியா- ஹங்கேரிக்கு எதிராக ருமேனியா போர்ப் பிரகடனம் செய்தது.
1921: அரேபிய கிளர்ச்சியத் தலைவரின் மகனை ஈராக்கின் மன்னர் முதலாம் பைஸாலாக பிரிட்டன் நியமித்தது.
1971: சாட் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சதிப்புரட்சி முயற்சி தோல்வியுற்றது.
1979: இந்தியாவுக்கான பிரிட்டனின் கடைசி வைஸ்ராயும் சுதந்திர இந்தியாவின் முதல் ஆளுநர் நாயகமுமாக பணியாற்றிய மௌன்ட்பேட்டன் பிரபு அயர்லாந்தில் ஐ.ஆர்.ஏ. போராளிகளின் குண்டுத் தாக்குதலில் பலியானார்.
1991: சோவியத் யூனியனிடமிருந்து பிரிவதாக மோல்டோவா சுதந்திரப் பிரகடனம் செய்தது.
2003: செவ்வாய் கிரகம் பூமிக்கு 55,758,005 கிலோமீற்றர் தொலைவில் காணப்பட்டது. 60,000 வருடகாலத்தில் செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக நெருக்கமாக காணப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
சிஷெல்ஸ் - தேசிய நாள்
618 - லீ யுவான் சீனாவின் பேரரசனாக முடி சூடினான். டாங் அரச வம்சம் அடுத்த மூன்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது.
1429 - ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலப் படையினரைத் தோற்கடித்தன.
1767 - பிரெஞ்சு மாலுமி சாமுவெல் வாலிஸ் பசிபிக் பெருங்கடலில் டாகிட்டி தீவை முதன் முதலாகக் கண்டான்.
1778 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவின் பிலடெல்ஃபியா நகரை விட்டு பிரித்தானியப் படைகள் அகன்றன.
1812 - 1812 போர்: அமெரிக்கக் காங்கிரஸ் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவித்தது.
1815 - வாட்டர்லூவில் நிகழ்ந்த போரில் நெப்போலியன் பொனபார்ட் தோல்வியுற்றதை அடுத்து தனது அரச பதவியை இரண்டாவதும் கடைசித் தடவையாகவும் இழந்தான்.
1869 - இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.
1908 - ஜப்பானியக் குடியேற்றம் பிரேசிலை ஆரம்பமாகியது. 781 பேர் சாண்டொஸ் நகரை அடைந்தனர்.
1923 - எட்னா மலை வெடித்ததில் 60,000 பேர் வீடற்றவராயினர்.
1948 - மலேசியாவில் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியையடுத்து அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
1953 - எகிப்தில் மன்னராட்சி முடிவடைந்ததை அடுத்து குடியரசாகியது.
1953 - அமெரிக்க வான்படை விமானம் ஒன்று டோக்கியோவுக்கு அருகில் வீழ்ந்து எரிந்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
1965 - வியட்நாம் போர்: தெற்கு வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணிப் போராளிகளின் தளங்களை அமெரிக்க விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.
1979 - சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இரண்டாம் சால்ட் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது..
1981 - கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர்.
1981 - அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1983 - சாலஞ்சர் விண்ணோடம்: சலி றைட் விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார்.
1985 - விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.
2001 - நாகா கிளர்ச்சிக்காரருக்கும் இந்திய அரசுப்படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை நீடிக்க மணிப்பூரில் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
2004 - ஜெனீவாவில் cern எனப்படும் ஐரோப்பிய துகள்-இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் 2 மீட்டர் உயரமுடைய நடராஜர் சிலை நிறுவப்பட்டது.
2006 - கசக்ஸ்தான் கஸ்சாட் என்ற தனது முதலாவது செய்மதியை அனுப்பியது.
Read more at: http://www.penmai.com/forums/interesting-facts/17699-today-history-23.html#ixzz24ptp5TD6
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1825: பிரேஸிலின் சுதந்திரத்தை போர்த்துக்கல் அங்கீகரித்தது.
1835: அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் ஸ்தாபிக்கப்பட்டது.
1907: கனடாவில் பாலமொன்று உடைந்ததால் 75 தொழிலாளர்கள் பலி.
1910: ஜப்பான் - கொரியா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, கொரியாவில் ஜப்பானிய ஆட்சி அமுலுக்கு வந்தது.
1944: ஜேர்மனியின் நாஸி படைகளுக்கு எதிராக 60,000 ஸ்லோவாக்கிய துருப்பினர் கிளர்ச்சி செய்தனர்.
1949: சோவியத் யூனியன் தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியது.
1950: கொரிய யுத்தத்தில் பங்கேற்க பிரித்தானிய படைகள் கொரியாவுக்குச் சென்றன.
1996: நோர்வேயில் இடம்பெற்ற விமான விபத்தில் 141 பேர் பலி.
1997: அல்ஜீரிய கிராமமொன்றில் 98 கிராமவாசிகள் ஆயுதபாணி குழுவொன்றினால் கொல்லப்பட்டனர்.
2005: அமெரிக்காவில் கத்ரினா சூறாவளியினால் 1836 பேர் பலியாகினர்.
2007: அமெரிக்காவில் அணுவாயுதங்கள் தாங்கிய 7 ஏவுகணைகள் மினோட் விமானப்படைத் தளத்திலிருந்து பார்க்ஸ்டேல் விமானப்படைத்தளத்திற்கு முறையானஅனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
அனைத்துலக காணாமற்போனோர் நாள்
1574 - குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவாகிறார்.
1791 - இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் கப்பல் ஆஸ்திரேலியாவில் மூழ்கியதில் 4 கைதிகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.
1813 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியா-புருசியா-ரஷ்யக் கூட்டுப் படைகளினால் தோற்கடிக்காப்பட்டனர்.
1813 – அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர் அலபாமாவில் ஆங்கிலக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.
1835 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
1897 - மடகஸ்காரில் அம்பிக்கி நகரை பிரான்ஸ் கைப்பற்றியது.
1918 - விளாடிமிர் லெனின் ஃபான்யா கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.
1941 - இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் மீதான தாக்குதல் ஆரம்பமாயிற்று.
1945 - பிரித்தானியரிடம் இருந்து ஹொங்கொங்கை ஜப்பான் விடுவித்தது.
1984 - டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
1990 - தத்தர்ஸ்தான் ரஷ்ய சோவியத் சோசலிசக் குடியரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1991 - அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1992 - மண்டைதீவில் இலங்கைக் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்று விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.
1999 - கிழக்குத் தீமோர் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
Read more at: http://www.penmai.com/forums/interesting-facts/17699-today-history-24.html#ixzz256nR6tQB
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1920: முதல் வானொலி செய்தி அறிக்கை அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலில் ஒலிபரப்பாகியது.
1957: மலாயா கூட்டமைப்பு (மலேஷியா) பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
1962: ட்ரினிடாட் அன்ட் டுபாக்கோ சுதந்திரம் பெற்றது.
1986: அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் 67 பேர் பலி.
1986: சோவியத் யூனியனில் பயணிகள் கப்பலொன்று மூழ்கியதால் 423 பேர் பலி.
1991: கஸகஸ்தான் சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1987: தாய்லாந்தில் இடம்பெற்ற விமான வித்தில் 83 பேர் பலி.
1997: பிரித்தானிய இளவரசரி டயானாவும் அவரின் காதலர் டோடி அல் பயாட், அவர்களின் கார் சாரதி ஹென்றி போல் ஆகியோர் பாரிஸ் நகரில் இடம்பெற்ற கார் விபத்தில் பலியாகினர்.
1999: ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 65 பேர் பலி.
2005: ஈராக்கின் பாக்தாத் நகரில் பாலமொன்றில் ஏற்பட் சனநெரிசலால் 1199 பேர்பலி.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1715: ஐரோப்பாவில் மிக நீண்டகாலம் (72 வருடங்கள்) ஆட்சி செய்த பிரான்ஸின் 14 ஆம் லூயி மன்னர் காலமானார்.
1894: அமெரிக்காவில் இடம்மபெற்ற காட்டுத்தீயினால் 400 இற்கம் அதிகமானோர் பலி.
1923: ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் ஒரு லட்சம் பேர் பலியாகினர்.
1939: போலந்து மீது ஜேர்மனி படையெடுத்தது. இதன்மூலம் ஐரோப்பாவில் 2 ஆம் உலக யுத்தம் ஆரம்பமாகியது.
1969: லிபியாவில் மன்னர் இத்ரிஸ் வெளிநாடு சென்றிருந்தபோது கேணல் கடாபி தலைமையிலான இராணுவ படையொன்று புரட்சி நடத்தி, நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றியதுடன் லிபியாவை குடியரசாக பிரகடனப்படுத்தியது.
1971: ஜோர்டான் மன்னர் ஹூஸைனை படுகொலை செய்ய பலஸ்தீன கெரில்லாக்களால் முயற்சிக்கப்பட்டது.
1983: தெரிய விமானமொன்றை சோவியத் யூனியன் சுட்டுவீழ்த்தியது. இதனால் விமானத்திலிருந்த 269 பேரும் பலியாகினர்.
1985: டைட்டானிக் கப்பல் சிதைவுகளை அமெரிக்க- பிரெஞ்சு ஆய்வுக்குழுவொன்று கண்டறிந்தது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1666: லண்டனில் ஏற்பட்ட தீவிபத்தினால் சுமார் 10,000 கட்டிடங்கள் அழிந்தன.
1945: 2 ஆம் உலக யுத்தத்தில் நேசநாடுகளிடம் ஜப்பான் நிபந்தனையற்ற வகையில் சரணடைந்தது.
1946: இந்தியாவில் இந்திய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.
1992: நிக்கரகுவாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 116 பேர்பலி.
1998: சுவிஸ் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 229 பேர் பலி.
1998: ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ருவாண்டா மேயர் ஒருவரான ஜீன் போல் அகாயெசுவை குற்றவாளியாகக் கண்டது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1783: அமெரிக்க சுதந்திரப் புரட்சி யுத்தமானது பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாரிஸ் உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.
1939: ஜேர்மனி மீது. பிரான்ஸ், பிரிட்டன், நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா ஆகியன சுதந்திரப் பிரகடனம் செய்தன.
1945: 2 ஆம் உலக யுத்தத்தில் நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்ததையடுத்து. சீனாவில் 3 நாட்களுக்கு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.
1971 கட்டார் சுதந்திர நாடாகியது.
1987: புரூண்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1997: வியட்நாமில் இடம்பெற்ற விமான விபத்தில் 64 பேர் பலி.
2004: ரஷ்யாவில் பாடசாலையொன்றை முற்றுகையிட்டு சுமார் 1100 மாணவர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்த செச்னிய தீவிரவாதிகளிடமிருந்து மாணவர்களை மீட்கும் நடவடிக்கையின்போது சுமார் 335 மாணவர்கள் கொல்லப்பட்டனர். .
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
476 – கடைசி ரோமப் பேரரசன் ரொமூலஸ் ஆகுஸ்டஸ் முடிதுறந்தான்.
1666 – லண்டன் மாநகரில் மூன்று நாட்களாக இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதிகமான வீடுகள் அழிந்தன.
1781 – லாஸ் ஏஞ்சலஸ் நகரம் ஸ்பானிய ஆளுநரான ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது.
1870 – பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் பதவியில் இருந்து அகற்றப்பட்டான். அரசி யூஜின் தனது பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினாள். மூன்றாவது குடியரசு அமைக்கப்பட்டது.
1884 – குற்றவாளிகளை ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சுக்கு அனுப்பும் கொள்காஇயை பிரித்தானியா கைவிட்டது.
1886 – 30 ஆண்டுகள் போரின் பின்னர் அப்பாச்சி பழங்குடிகளின் தலைவன் ஜெரனிமோ தனது படைகளுடன் அரிசோனாவில் சரணடைந்தான்.
1888 – தான் கண்டுபிடித்த படம்பிடிகருவிக்கு ஜார்ஜ் ஈஸ்ட்மன் கோடாக் என்பதை வர்த்தகக் குறியீடாக காப்புரிமை பெற்றுக் கொண்டார்.
1939 – இரண்டாம் உலகப் போர்: நேபாளம் ஜெர்மனி மீது போரை அறிவித்தது.
1939 – இரண்டாம் உலகப் போர்: ஐரோப்பியப் போரில் ஜப்பான் நடுநிலையை அறிவித்தது.
1951 – கண்டங்களுக்கிடையேயான முதலாவது நேரடித் தொலைக்காட்சி ஜப்பானில் இடம்பெற்ற அமைதி மாநாஅட்டில் இருந்து இருந்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஒளிபரப்பப்பட்டது.
1956 – வன்தட்டு நினைவகத்தைக் கொண்ட உலகின் முதலாவது கணினியை ஐபிஎம் அறிமுகப்படுத்தியது.
1963 – சுவிஸ் எயார் விமானம் சுவிட்சர்லாந்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணஞ் செய்த அனைத்து 80 பேரும் கொல்லப்பட்டனர்.
1970 – சல்வடோர் அலெண்டே சிலி நாட்டின் அதிபரானார்.
1971 – அலாஸ்காவில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 111 பேரும் கொல்லப்பட்டனர்.
1972 – ஐக்கிய அமெரிக்காவின் மார்க் ஸ்பிட்ஸ் ஜெர்மனியின் மியூனிக் நகரில் இடம்பெற்ற 1972 ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சலில் ஏழாவது தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்தார்.
1978 – அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1996 – கொலம்பிய புரட்சி இராணுவப் படையினர் கொலம்பியாவின் இரணுவ முகாமொன்றைத் தாக்கினர். மூன்று வாரங்கள் நீடித்த இக்கரந்தடிப் போரில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – இஸ்ரேலின் டெல் அவீவ் நகரின் பாடசாலை ஒன்றின் அடியில் கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஒரு புதைகுழிக் குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
2007 – சூறாவளி ஃபீலிக்ஸ் நிக்கராகுவாவைத் தாக்கியதில் பலத்த நிலச்சரிவுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!
1887: இங்கிலாந்தின் எக்ஸ்டர் நகரில் இடம்பெற்ற தீவிபததில் 186 பேர் பலி.
1960: அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மொஹமட் அலி (அப்போது கஸியஸ் கிளே) ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
1972: ஜேர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின்போது 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை 'கறுப்பு செப்டெம்பர்' எனும் பலஸ்தீன தீவிரவாதிகள் குழுவினர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
1975: அமெரிக்க ஜனாதிபதி ஜெரால்ட் போர்ட்டை படுகொலை செய்ய முயற்சிக்கப்பட்டது.
1980: உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை போக்குவரத்து சுரங்கம் (16 கிலோமீற்றர்) சுவிட்ஸர்லாந்தில் திறந்துவைக்கப்பட்டது.
1986: மும்பையிலிருந்து நியூயோர்க் சென்ற அமெரிக்க விமானமொன்றை தீவிரவாதிகள் கடத்தியதையடுத்து கராச்சி விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் 22 பேர் பலி.
1997: அன்னை திரேஸா தனது 87ஆவது வயதில் காலமானார்.
2005: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் விமானமொன்று குடியிருப்பு பகுதியில் வீழ்ந்ததால் விமானத்திலிருந்த 104 பேரும் தரையிலிருந்த 39 பேரும் பலி.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 9 of 37 • 1 ... 6 ... 8, 9, 10 ... 23 ... 37
» (மிக அரிய வீடியோக்கள்)வரலாற்றில் இன்றைய தினம்...
» வரலாற்றில் இன்று ( மே 17 )
» வரலாற்றில் இன்று: மே 01
» வரலாற்றில் இன்று: ஏப்ரல் 12
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு