சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by rammalar Thu 13 Aug 2020 - 19:13

» பயன்_தரும்_குறிப்புகள்!
by rammalar Thu 13 Aug 2020 - 19:09

» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 37 Khan11

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Page 37 of 37 Previous  1 ... 20 ... 35, 36, 37

Go down

Sticky வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Tue 21 Feb 2012 - 15:40

First topic message reminder :

பெப்ரவரி 19
1600 - பெருவின் ஹுவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்தது.
1674: இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 3 ஆவது ஆங்கில – டச்சு யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக டச்சு காலனியான அமெரிக்காவின் நியூ ஆம்ஸ்டர்டம் பிராந்தியம் இங்கிலாந்துக்கு ஒப்படைக்கப்பட்டு, அதன் பெயர் நியூ யோர்க் என மாற்றப்பட்டது.
1807: அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி ஆரோன் பர் கைது செய்யப்பட்டார்.
1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
1861: ரஷ்யாவில் பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.

1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
1942: சுமார் 250 ஜப்பானிய விமானங்கள், அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை தாக்கின. 243 பேர் பலி.
1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை - 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
1959: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.
1968 - சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அநுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
1978: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சைப்பிரஸில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானமொன்றை எகிப்திய படையினர் மீட்க முயன்றபோது இரு நாடுகளின் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 15 எகிப்திய வீரர்கள் பலி.
1985: ஸ்பெய்ன் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 148 பேர் பலி.
1986: மீர் விண்வெளி நிலையத்தை சோவியத் யூனியன் விண்ணுக்கு ஏவியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by jaleelge on Tue 24 Jun 2014 - 0:39

அனுராகவன் wrote:வரலாற்றில் இன்று
ஜுன்
23


1532 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சுவாவும் புனித ரோமப் பேரரசின் ஐந்தாம் சார்ல்சுக்கு எதிராக இரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.
1565 - மால்ட்டா மீதான முற்றுகையின் போது ஒட்டோமான் பேரரசின் கடற்படைத் தளபதி கொல்லப்பட்டான்.
1658 - இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர்.
1757 - இந்தியாவில் பலாசி என்ற இடத்தில் வங்காளத்தின் கடைசி நவாப் சிராஜ் உல் டாவுலா தலைமையிலான இந்திய இராணுவத்தினரை பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் தோற்கடித்தனர்.
1758 - ஏழாண்டுகள் போர்: பிரித்தானியப் படைகள் ஜெர்மனியில் கிரெஃபீல்ட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளை வென்றனர்.
1760 - ஏழாண்டுகள் போர்: ஆஸ்திரியா புரூசியாவை வென்றனர்.
1772 - இங்கிலாந்தில் அடிமைத் தொழில் சட்ட விரோதமாக்கப்பட்டது
1794 - உக்ரேனின் கீவ் நகரில் யூதக் குடியேற்றத்துக்கு ரஷ்யாவின் பேரரசி இரண்டாம் கத்தரீன் அனுமதி அளித்தாள்.
1868 - கிறிஸ்தோபர் ஷோல்ஸ் தட்டச்சியந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1894 - பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.
1919 - எஸ்தோனியாவின் விடுதலைப் போரில் வடக்கு லாத்வியாவில் செசிஸ் என்ற இடத்தில் ஜெர்மனியப் படைகள் தோற்ற இந்நாள் எஸ்தோனிய வெற்றி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
1942 - இரண்டாம் உலகப் போர்: முதன் முதலாக அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சு வாயு அறையில் சேர்ப்பதற்காக முதல் தொகுதி யூதர்கள் பாரிசில் இருந்து தொடருந்தில் அனுப்பப்பட்டனர்.
1942 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் போர் விமானம் ஒன்று தவறுதலாக வேல்சில் தரையிறங்கியபோது கைப்பற்றப்பட்டது.
1945 - ஜப்பானிய இராணுவத்துக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற ஒகினவா சண்டை அமெரிக்காவின் வெற்றியுடன் முடிவடைந்தது.
1948 - சிங்கப்பூரில் அனைவருக்கும் அடையாளக் கார்டுகள் வழங்கப்பட்டன. அடையாளக் கார்டு இல்லாமல் காணப்படுவது குற்றம் என்று அறிவிக்கப்பட்டது.
1956 - கமால் நாசர் எகிப்தின் அதிபரானார்.
1960 - பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.
1961 - அண்டார்க்டிக் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. அண்டார்க்டிக்கா கண்டம் அமைதியான அறிவியல் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்ற ஒப்பந்தத்தில் 23 நாடுகள் கையெழுத்திட்டன.
1985 - அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் 9500மீ உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியாவின் போயிங் விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்.
1990 - மல்தாவியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.

இவ்வளவு சிறப்பான நாளா இன்றைய தினம்...??????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Wed 25 Jun 2014 - 14:00

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 37 10443310_747024425335693_9166218662456189245_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Sat 28 Jun 2014 - 11:24

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 37 28-1
வரலாற்றில் இன்று: ஜூன் 28!!!

வரலாற்றில் இன்று: யூன் 28

ஜூன் 28 (June 28) கிரிகோரியன் ஆண்டின் 179ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 180ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 186 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1389 – ஒட்டோமான் மற்றும் செர்பியப் படைகள் கொசோவோவில் போரை ஆரம்பித்தன. இப்போர் ஒட்டோமான் இராணுவத்தினர் தென்கிழக்கு ஐரோப்பாவைக் கைப்பற்ற உதவியது.
1519 – ஐந்தாம் சார்ல்ஸ் புனித ரோமப் பேரரசின் மன்னனானான்.
1651 – 17ம் நூற்றண்டின் மிகப் பெரும் போர் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஆரம்பமானது.
1763 – ஹங்கேரியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1776 – ஜார்ஜ் வாஷிங்டனை கடத்தத் திட்டமிட்டதற்காக அவரது மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த “தொமஸ் ஹின்க்கி” தூக்கிலிடப்பட்டான்.
1880 – அவுஸ்திரேலியாவின் காட்டுக் கொள்ளைக்காரன் நெட் கெலி பிடிபட்டான்.
1881 – ஆஸ்திரியாவும் சேர்பியாவும் இரகாசிய உடன்பாட்டை எட்டின.
1904 – “நோர்ஜ்” என்ற டென்மார்க் நாட்டுப் பயணிகள் கப்பல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சிறி திட்டு ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 635 பேர் கொல்லப்பட்டனர்.
1914 – ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், மற்றும் அவனது மனைவி சோஃபி இருவரும் சேர்பியாவில் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணியாக அமைந்தது.
1919 – முதலாம் உலகப் போர்: பாரிசில் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.
1922 – ஐரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1940 – சோவியத் ஒன்றியம் பெசராபியாவை ருமேனியாவிடம் இருந்து கைப்பற்றியது.
1950 – வட கொரியா சியோலைக் கைப்பற்றியது.
1964 – மால்க்கம் எக்ஸ் ஆபிரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்.
1967 – கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1994 – ஓம் ஷின்றிக்கியோ என்ற மதவழிபாட்டுக் குழுவினர் ஜப்பானில் மட்சுமோட்டோ என்ற இடத்தில் நச்சு வாயுவைப் பரவச் செய்ததில் 7 பேர் கொல்லப்பட்டு 660 பேர் காயமடைந்தனர்.
2004 – ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா ஈராக்கியர்களிடம் ஒப்படைத்தது.

பிறப்புகள்

1703 – ஜோன் வெஸ்லி, மெதடிசத்தை அறிமுகப்படுத்தியவர். (இ. 1791)
1907 – தாவீது அடிகள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர் (இ. 1981)
1921 – பி. வி. நரசிம்ம ராவ், இந்தியாவின் 9வது பிரதமர் (இ. 2004)
1937 – எஸ். எஸ். கணேசபிள்ளை, வானொலி, மேடை நடிகர் (இ. 1995
1940 – முகமது யூனுஸ், வங்காள தேசத்தைச் சேர்ந்த பொருளியலாளர், நோபல் பரிசு பெற்றவர்.
1940 – கர்பால் சிங், மலேசிய வழக்கறிஞர், அரசியல்வாதி (இ. 2014)

இறப்புகள்

1836 – ஜேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர் (பி. 1751)
1914 – பிரான்ஸ் பேர்டினண்ட், ஆஸ்திரிய இளவரசர் (பி. 1863)
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 22:53

வரலாற்றில் இன்று
ஜுலை
2


1578 - மார்ட்டின் புரோபிஷர் கனடாவின் பஃபின் தீவைக் கண்டார்.
1698 - தொமஸ் சேவரி முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
1853 - ரஷ்யா துருக்கியின் மீது படையெடுத்தது. கிரிமியப் போர் ஆரம்பமானது.
1876 - மொண்டெனேகிரோ துருக்கி மீது போரை அறிவித்தது.
1881 - அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். இவர் செப்டம்பர் 19இல் மரணமானார்.
1940 - சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
1962 - முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது.
1966 - பிரெஞ்சு இராணுவத்தினர் பசிபிக் பெருங்கடலில் அணுவாயுதச் சோதனையை நிகழ்த்தினர்.
1976 - 1954 முதல் பிரிந்திருந்த வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம்கள் மீண்டும் இணைந்து கொண்டன
2002 - உலகத்தை பலூனில் தனியே இடைவேளை விடாது பறந்த முதல் மனிதர் என்ற பெருமையை அமெரிக்க கோடீஸ்வரரான ஸ்டீவ் ஃபொசெட் பெற்றார். டந்து வந்த தொலைவு 31,380 கிலோ மீட்டர்
2004 - ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 on Thu 3 Jul 2014 - 9:23

தொடருங்கள் தம்பி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Nisha on Thu 3 Jul 2014 - 21:05

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 37 10468372_10201144460733925_2432122707363518735_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 19:04

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 37 10487374_752115304826605_3745483298292974147_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Mon 14 Jul 2014 - 6:25

வரலாற்றில் இன்று
ஜுலை
13


ஆங்கில Rock இசை உலகின் ஜாம்பவான்களான Mick Jagger, Tina Turnerm Madonna, Bob Dylan, Paul McCartney போன்றோர் முதன்முதலாக ஒன்று கூடி ஊதியம் இல்லாமலே இசை மழை பொழிந்தனர்.
1174 - ஸ்கொட்லாந்தின் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் இரண்டாம் ஹென்றியின் படையினரால் கைப்பற்றப்பட்டான்.
1643 - இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில் ஹென்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் வோலர் தலைமையிலான நாடாளுமன்ற சார்புப் படைகளைத் தோற்கடித்தனர்.
1844 - இலங்கையில் காவற்துறை நீதிமன்றங்கள் (police courts) அமைக்கப்பட்டன.
1869 - இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.
1908 - லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாகப் பெண்கள் பங்குபற்றினர்.
1878 - பெர்லின் உடன்படிக்கை: சேர்பியா, மொண்டெனேகுரோ, ருமேனியா ஆகிய நாடுகள் ஒட்டோமான் பேரரசில் இருந்து முழுவதுமாக விடுதலை பெற்றன.
1923 - லாஸ் ஏஞ்சலீசில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் "ஹாலிவுட் குறியீடு" அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இது "ஹாலிவுட்லாந்து" என எழுதப்பட்டாலும் பின்னர் 1949 இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.
1930 - முதலாவது உலகக் கோப்பை காற்பந்தாட்டப் போட்டிகள் உருகுவாயில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.
1941 - இரண்டாம் உலகப் போர்: மொண்டெனேகுரோ மக்கள் அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1977 - மின்சார இழப்பினால் நியூ யோர்க் நகரம் 25 மணி நேரம் இருளில் மூழ்கியதில் பல கொள்ளைச் சம்பவங்களும் பல்வேறு சமூக விரோத நிகழ்வுகளும் இடம்பெற்றன.
1997 - சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.
2001 - சீனாவின் பெய்ஜிங் நகரம் 2008க்கான ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குத் தகுதி பெற்றது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by rammalar on Mon 14 Jul 2014 - 18:44

*_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15779
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Mon 14 Jul 2014 - 18:47

வரலாற்றில் இன்று
ஜூலை-14


1223 - எட்டாம் லூயி பிரான்சின் மன்னனாக முடி சூடினான்.
1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளபாடங்களைக் கைப்பற்றினர்.
1865 - எட்வர்ட் வைம்ப்பர் தனது உதவியாட்களுடன் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மாட்டர்ஹோர்ன் மலையின் உச்சியை முதற்தடவையாக எட்டினார். இவர்கள் திரும்பி வருகையில் இவருடன் வந்த 4 பேர் உயிரிழந்தனர்.
1867 - Alfred Nobel பிரிட்டனில் Surrey என்னுமிடத்தில் dynamite வெடிகுண்டின் செயல்திறனை நேரடியாகச் செய்து காட்டினார்.
1889 - பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் "சர்வதேச தொழிலாளர் பாராளுமன்ற" நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது
1933 - ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர்த்து அனைத்து அரசியற் கட்சிகளும் தடை செய்யப்பட்டன
1942 - ஜெர்மனியின் ரகசியப் போலீசான Gestapo - வின் தலைவரைக் கொன்றதற்காக 700 யூகோஸ்லாவியர்கள் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1958 - ஈராக்கியப் புரட்சி: ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலவரானார்.
1965 - மரைனர் 4 செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.
1967 - நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.
1989 - பிரெஞ்சுப் புரட்சியின் 200 ஆவது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது.
1995 - MP3 பெயரிடப்பட்டது.
1995 - இலங்கை இராணுவத்தினரின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
2002 - பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.
2007 - ஐரோப்பாவில் மரபுவழி இராணுவப் படைகள் குறித்த உடன்பாட்டில் இருந்து ரஷ்யா விலகியது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by rammalar on Mon 14 Jul 2014 - 18:50

ஜூலை 14, 2008 - தமிழ்-ஜப்பானிய மொழியியல் அறிஞர் சுசுமு ஓனோ மறைந்த நாள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15779
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Tue 29 Jul 2014 - 19:46


வரலாற்றில் இன்று
ஜுலை
29


1014 - பைசண்டைன் பேரரசன் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான்.
1030 - டானியர்களிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நோர்வேயின் இரண்டாம் ஓலாப் சமரில் ஈடுபட்டு இறந்தான்.
1567 - முதலாம் ஜேம்ஸ் ஸ்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1830 - பிரான்சின் பத்தாம் சார்ல்ஸ் முடி துறந்தான்.
1851 - 15 யுனோமியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1899 - முதலாவது ஹேக் ஒப்பந்தம் நெதர்லாந்தில் ஹேக் என்ற இடத்தில் கைச்சாத்திடப்பட்டது.
1907 - சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற் படியாக இருந்தது.
1921 - ஹிட்லர் ஜேர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரானார்.
1944 - இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1948 - இரண்டாம் உலகப் போர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மீண்டும் லண்டனில் ஆரம்பமாகின.
1957 - அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
1959 - ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது
1981 - இங்கிலாந்தின் St.Paul தேவாலயத்தில் இளவரசர் சார்ல்சை மணந்து கொண்டார் இளவரசி Diana Spencer.
1987 - ஆங்கிலக் கால்வாயூடாக யூரோ சுரங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் ஐக்கிய இராச்சிய பிரதமர் மார்கரட் தாட்சர், மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா மித்தரான் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
1987 - இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை - இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
1987 - இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது இலங்கை இராணுவத்தினன் ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.
2005 - ஏரிஸ் (குறுங்கோள்) கண்டுபிடிக்கப்பட்டது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Fri 8 Aug 2014 - 18:57

வரலாற்றில் இன்று
ஆகஸ்ட்
8


1509 - கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசின் மன்னனாக முடிசூடினான். இவனது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது
1768 - ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை பிளைமவுத்தில் இருந்து ஆரம்பித்தான்.
1908 - வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் "லெ மான்ஸ்" என்ற இடத்தில் மேற்கொண்டார்.
1942 - பம்பாயில் நடந்த சில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில் பண்டிட் ஜவஹர்லால் நேரு முன்மொழிய சர்தார் வல்லபாய் படேல் வழி மொழிய 'வெள்ளையனே வெளியேறு' தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
1943 - இந்திய தேசியப் படையின் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் பொறுப்பேற்றார்
1945 - ஐநா சாசனம் ஐக்கிய அமெரிக்காவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐநாவில் இணைந்த மூன்றாவது நாடு இதுவாகும்.
1947 - பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.
1967 - ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது.
1973 - தென் கொரிய அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அதிபர்) கின் டாய்-ஜுங் கடத்தப்பட்டார்
1988 - மியான்மாரில் மக்களாட்சியை வலியுறுத்தி 8888 எழுச்சி நிகழ்ந்தது.
1989 - ஓர் இரகசிய இராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து நாசா கொலம்பியா விண்ணோடத்தை விண்ணுக்கு அனுப்பியது.
1990 - ஈராக் குவெய்த்தைக் கைப்பற்றி அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
2000 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினரின் எச். எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
2007 - நாசா விண்வெளி ஆய்வு மையம் என்டெவர் விண்ணோடத்தை கிறிஸ்டினா மெக்காலீப் என்ற ஆசிரியர் உட்பட ஏழு விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Sat 9 Aug 2014 - 19:18

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 37 10552373_724136940973586_8070639286192172746_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Sat 9 Aug 2014 - 19:20

வரலாற்றில் இன்று
ஆகஸ்ட்
9


உலக மண்ணின் மைந்தர் நாள்
கிமு 48 - ஜூலியஸ் சீசர் பம்பீயை சமரில் தோற்கடித்தான். பம்பீ எகிப்துக்கு தப்பி ஓடினான்.
378 - ரோமப் பேரரசன் வேலென்ஸ் தலைமையிலான பெரும் படை எகிப்தில் தோல்வியடைந்தது. மன்னனும் அவனது பாதிப்பங்குப் படையினரும் கொல்லப்பட்டனர்
1173 - பீசா சாயும் கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே முடிவுற்றது.
1892 - தோமஸ் அல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.
1902 - ஏழாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடிசூடினான்.
1907 - இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆகஸ்ட் 1 இல் ஆரம்பிக்கப்பட்ட சாரணிய இயக்கத்தின் முதல் பாசறை முடிவடைந்தது.
1942 - வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவக்கியதற்காக மகாத்மா காந்தி உட்படப் பல இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பம்பாயில் கைது செய்யப்பட்டார்.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நகரான நாகசாக்கியின் மீது ஐக்கிய அமெரிக்கா வீசிய கொழுத்த மனிதன் எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டு 70,000 முதல் 90,000 வரையான பொதுமக்களை அதே இடத்தில் கொன்றது.
1965 - சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனி நாடாகியது.
1972 - உகாண்டா அதிபர் இடி அமீன் அந்நாட்டிலுள்ள 60,000 ஆசியர்களையும் 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தவிட்டார்
1974 - அமெரிக்காவின் 37-வது அதிபர் Richard Nixon வாட்டர்கேட் ஊழல் காரணமாகப் பதவி விலகினார். அமெரிக்க வரலாற்றிலேயே பதவி விலக நேர்ந்த முதல் அதிபர் இவர்
1991 - யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஜூலை 10இல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும் 2000ம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Mon 11 Aug 2014 - 22:31

வரலாற்றில் இன்று
ஆகஸ்ட்
11


கிமு 2492 - ஆர்மீனியா அமைக்கப்பட்டது
கிமு 480 - பாரசிகர்கள் கிரேக்கர்களை கடற்சமரில் வென்றனர்.
கிமு 586 - ஜெருசலேமில் சொலமன் மன்னனால் கட்டப்பட்ட முதலாவது ஆலயம் பாபிலோனியர்களினால் அழிக்கப்பட்டது.
355 - நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட குளோடியஸ் சில்வானஸ் ரோமப் பேரரசனாகத் தன்னை அறிவித்தான்.
1786 - மலேசியாவில் பெனாங்க்கில் கப்டன் பிரான்சிஸ் லையிற் என்பவனால் பிரித்தானியக் குடியேற்றம் அமைக்கப்பட்டது.
1804 - இரண்டாம் பிரான்சிஸ் ஆஸ்திரியாவின் முத்லாவது மன்னன் ஆனான்.
1812 - இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கபட்டது.
1898 - அமெரிக்கப் படைகள் புவெர்ட்டோ ரிக்கோவின் மயாகெஸ் நகரினுள் நுழைந்தன.
1920 - லாத்வியாவின் அதிகாரத்தை போல்ஷெவிக் ரஷ்யாவிடம் வழங்கும் உடன்பாடு லாத்வியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் ஏற்பட்டது.
1954 - கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு பற்றிய 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டு மாண்டனர்.
1960 - பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது.
1968 - பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது.
1975 - போர்த்துக்கீசத் தீமோரில் உள்நாட்டுக் கலவரம் ஆரம்பித்ததில் அதன் ஆளுநர் "மாரியோ லெமொஸ் பிரெஸ்" தலைநகர் டிலியை விட்டுத் தப்பினார்.
1984 - வானொலி ஒன்றிற்காக தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க அதிபர் ரொனால்ட் றேகன் கூறியது: "எனது சக அமெரிக்கர்களே, ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்".
1984 - எண்பதுகளில் திடல்தட மன்னனாக விளங்கிய Carl Lewis ஒலிம்பிக் போட்டிகளில் தனது நான்காவது தங்கப் பதக்கத்தை வென்றார். அதன் மூலம் Jesse Owens 1936 இல் நிகழ்த்திய சாதனையை அவர் சமன் செய்தார்
1995 - அமெரிக்க அதிபர் கிளிண்டன் அணுகுண்டுச் சோதனைகளுக்குத் தடை விதித்தார்
1999 - ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.
2003 - ஆப்கானிஸ்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ நாடுகள் அனுப்பின.
2003 - ஜெமா இஸ்லாமியா இயக்கத் தலைவர் ரிதுவான் இசாமுதீன் (ஹம்பாலி) பாங்கொக் நகரில் கைது செய்யப்பட்டார்.
2006 - யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Tue 12 Aug 2014 - 21:46

வரலாற்றில் இன்று
ஆகஸ்ட்
12


ஈழம்: புலிப்படை என்னும் ஆயுதக்குழு தொடக்கம் 1961
கிமு 30 - மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள்.
1281 - மொங்கோலியப் பேரரசன் குப்ளாய் கானின் கடற்படைகள் ஜப்பானை அணுகும் போது சூறாவளியில் சிக்குண்டு இறந்தனர்.
1480 - ஒட்டோமான் படையினர் இஸ்லாம் மதத்திற்கு மாற ஒப்புக்கொள்ளாத 800 கிறிஸ்தவர்களை தலையை சீவிக் கொன்றனர்.
1499 - வெனிசியர்களுக்கும் ஒட்டோமான் துருக்கியர்களுக்கும் இடையில் முதற் போர் இடம்பெற்றது.
1833 - சிக்காகோ அமைக்கப்பட்டது.
1851 - ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1853 – நியூசிலாந்து சுயாட்சி பெற்றது.
1877 - அசாப் ஹோல் என்பவர் செவ்வாய்க் கோளின் டெய்மோஸ் என்ற சந்திரனைக் கண்டுபிடித்தார்.
1883 - கடைசி குவாகா (வரிக்குதிரை வகை) ஆம்ஸ்டர்டாமில் இறந்தது.
1952 - மொஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள், கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.
1953 - சோவியத் ஒன்றியம் ஜோ 4 என்ற தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை நடத்தியது.
1960 - எக்கோ I என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.
1964 - இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.
1978 - ஜப்பானும் மக்கள் சீனக் குடியரசும் தமக்கிடையே நட்புறவு, அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
1981 - ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது
1985 - ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2ம் கட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1988 - இரண்டாம் உலகப் போரின் holocost கொடுமைக்கு ஆளானோருக்கு ஒன்றேகால் பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீட்டுத் தொகை வழங்க சுவிஸ் வங்கிகள் ஒப்புக்கொண்டன
1990 - வீரமுனைப் படுகொலைகள், 1990: அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1990 - அமெரிக்கா, தென் டகோட்டாவில் டிரன்னொசோரஸ் என்னும் டைனசோரின் முழுமையான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
2000 - கே-141 கூர்ஸ்க் என்ற ரஷ்யக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியின் போது 118 பேருடன் பாரெண்ட்ஸ் கடலில் மூழ்கியது.
2005 - ஸ்ரீ லங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில், நீச்சல் தடாகத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்
2005 - மாலை தீவுகளில் அரசுக்கெதிராக கிளர்ச்சி இடம்பெற்றது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா on Sun 17 Aug 2014 - 12:43

வரலாற்றில் இன்று
171807 - ராபர்ட் ஃபுல்ட்டனின் முதலாவது அமெரிக்க நீராவிப்படகு நியூ யார்க்கில் இருந்து புறப்பட்டது. இதுவே உலகின் முதலாவது வர்த்தக நீராவிப்படகு ஆகும்
1862 - லக்கோட்டா பழங்குடியினர் அமெரிக்காவின் மினசோட்டாவில் வெள்ளையினக் குடியேற்றவாதிகள் மீது தாக்குதலைத் தொடுத்தனர்.
1939 - த வைசார்ட் ஒஃப் ஓஸ், முதற்தடவையாக நியூ யோர்க் நகரில் காண்பிக்கப்பட்டது.
1943 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் எட்டாவது வான்படையினர் ஜெர்மனியில் தமது 60 குண்டுவீச்சு விமானங்களை இழந்தனர்.
1943 - இரண்டாம் உலகப் போர்: வின்ஸ்டன் சேர்ச்சில், பிராங்கிளின் ரூஸ்வெல்ட், கனடா பிரதமர் வில்லியம் லயன் மக்கென்சி கிங் ஆகியோர் கலந்து கொண்ட கியூபெக் மாநாடு ஆரம்பமானது.
1945 - இந்தோனேசியா விடுதலையை அறிவித்தது.
1947 - இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது.
1958 - பயனியர் 0 சந்திரனைச் சுற்ற அனுப்பப்பட்டது. புறப்பட்ட 77 செக்கன்களில் இது அழிந்தது.
1960 - காபொன் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1962 - கிழக்கு ஜெர்மனியில் இருந்து பேர்லின் சுவரைக் கடந்து தப்பித்துச் செல்ல முயன்ற 18-வயது பேட்டர் ஃபெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சுவரைக் கடந்து செல்ல முயன்று இறந்த முதலாவது நபர் இவராவார்.
1970 - வெனேரா 7 விண்கலம் ஏவப்பட்டது. வேறொரு கோளில் இருந்து (வெள்ளி) வெற்றிகரமாகத் தகவல்களை அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்
1982 - முதலாவது இறுவட்டு (CD) ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.
1988 - பாகிஸ்தான் அதிபர் ஜியாவுல் ஹக்கும் அமெரிக்கத் தூதர் Arnold Raphel - ம் உட்பட முப்பது பேர் சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் ஆகாயப் படை விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. அனைவரும் கொல்லப்பட்டனர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Nisha on Tue 30 Sep 2014 - 9:17

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 37 10641153_349683408545622_5344250587433980912_n
இன்று சர்வதேச இதய தினமாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by பானுஷபானா on Tue 30 Sep 2014 - 9:40

Nisha wrote:வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 37 10641153_349683408545622_5344250587433980912_n
இன்று சர்வதேச இதய தினமாம்!

அப்படினா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Muthumohamed on Tue 30 Sep 2014 - 20:24

இதயத்தை பாதுகாப்போம் தகவலுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Nisha on Sat 4 Oct 2014 - 10:19

அக்டோபர் 4: இன்று சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா பிறந்த தினம்! (1884)


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 37 1455017_745003552239411_9030707073990585541_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky உலக உணவு நாள் (அக்.16 1979)

Post by சுறா on Thu 16 Oct 2014 - 18:25

உலக உணவு நாள் ஆண்டு தோறும் அக்டோபர் 16-ம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945-ம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979-ம் ஆண்டில் இவ்வமைப்பின் 20-வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டு மந்திரி பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150-ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

2008-ம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் ''கருப்பொருள் உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்'' என்பதாகும்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சிகள்:-

1813 - ஆறாவது கூட்டணி நாடுகள் நெப்போலியன் பொனபார்ட் மீது லீப்சிக் நகரில் தாக்குதலை ஆரம்பித்தன.

1834 - லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் தொன்மைப் பொருட்கள் பல எரிந்து சேதமடைந்தன.

1905 - ரஷ்ய ராணுவம் எஸ்தோனியாவில் மக்கள் கூட்டமொன்றின் மீது சுட்டதில் 94 பேர் கொல்லப்பட்டனர்.

1905 - பிரித்தானிய இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது.

1923 - வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1934 - குவோமின்டாங்குகளுக்கு எதிரான சீனக் கம்யூனிஸ்டுக்களின் தாக்குதல் ஆரம்பமானது.

1939 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மீதான ஜெர்மனிய வான்படையின் முதலாவது தாக்குதல் இடம்பெற்றது.

1942 - பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

1949 - கிரேக்க கம்யூனிசத் தலைவர் நிக்கலாஸ் சக்காரியாடிஸ் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தார். கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1951 - பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் லியாகட் அலிகான் ராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1964 - மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

1973 - ஹென்றீ கிசிங்கர், லே டுக் தோ அமைதிக்கான நோபல் பரிசு பெற்றனர்.

1975 - கிழக்குத் திமோரில் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஐந்து பேர் இந்தோனிசியப் படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1984 - தென்னாபிரிக்காவின் டெஸ்மண்ட் டூடு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

1996 - குவாத்தமாலாவில் கால்பந்து போட்டி நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 84 பேர் கொல்லப்பட்டனர்.

1998 - சிலியின் முன்னாள் சர்வாதிகாரி ஆகுஸ்டோ பினொச்சே லண்டனில் கைது செய்யப்பட்டார்.

2003 - தமிழ் விக்கிப்பீடியாவில் முதலாவது கட்டுரை சிரின் எபாடி பற்றி எழுதப்பட்டது.

2006 - ஈழப்போர்: இலங்கை, ஹபரணையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 102 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

2006 - இலங்கையில் 1987-ல் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இணைக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லுபடியற்றது என்று இலங்கை உயர் நீதிமன்றம் அறிவித்தது.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Nisha on Thu 16 Oct 2014 - 18:37

பகிர்வுக்கு நன்றி சுறாசார்!

வரலாற்றில்  இன்று எனும் திரி ஓடிகிட்டிருந்ததே! அதனுடன் இணைக்கட்டுமா!

திரி வரலாறு பகுதியில் நகர்த்தப்பட்டது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by சுறா on Thu 16 Oct 2014 - 18:38

செய்யுங்க செய்யுங்க.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 37 of 37 Previous  1 ... 20 ... 35, 36, 37

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum