சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Khan11

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

+18
jafuras
ஜனநாயகன்
எந்திரன்
ansar hayath
முfதாக்
ராகவா
Muthumohamed
rammalar
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
மீனு
mufees
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
நண்பன்
சிபான்
ahmad78
22 posters

Page 35 of 37 Previous  1 ... 19 ... 34, 35, 36, 37  Next

Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Tue 21 Feb 2012 - 15:40

First topic message reminder :

பெப்ரவரி 19
1600 - பெருவின் ஹுவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்தது.
1674: இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 3 ஆவது ஆங்கில – டச்சு யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக டச்சு காலனியான அமெரிக்காவின் நியூ ஆம்ஸ்டர்டம் பிராந்தியம் இங்கிலாந்துக்கு ஒப்படைக்கப்பட்டு, அதன் பெயர் நியூ யோர்க் என மாற்றப்பட்டது.
1807: அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி ஆரோன் பர் கைது செய்யப்பட்டார்.
1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
1861: ரஷ்யாவில் பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.

1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
1942: சுமார் 250 ஜப்பானிய விமானங்கள், அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை தாக்கின. 243 பேர் பலி.
1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை - 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
1959: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.
1968 - சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அநுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
1978: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சைப்பிரஸில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானமொன்றை எகிப்திய படையினர் மீட்க முயன்றபோது இரு நாடுகளின் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 15 எகிப்திய வீரர்கள் பலி.
1985: ஸ்பெய்ன் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 148 பேர் பலி.
1986: மீர் விண்வெளி நிலையத்தை சோவியத் யூனியன் விண்ணுக்கு ஏவியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 23 Oct 2013 - 15:38

ஒக்டோபர் 21


1512:  புரட்டஸ்தாந்து மத ஸ்தாபகர் மார்ட்டின் லூதர், ஜேர்மனியின் விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.

1520: பேர்டினான்ட் மகலன் தென் அமெரிக்காவில் அத்திலாந்திக் பசுபிக் சமுத்திரங்களை இணைக்கும் மகலன் நீரிணை என அறியப்பட்ட நீரிணையை கண்டுபிடித்தார்.

1805: நெப்போலிய யுத்தத்தில், ஆங்கிலேயே தளபதி நெல்சன் தலைமையிலான படைகள் பிரெஞ்சு, ஸ்பானிய கூட்டுப்படைகளை ஸ்பானிய கரையோரத்தில் தோற்கடித்தன.

1805: ஆஸ்திரிய ஜெனரல் மெக் தனது படைகளை நெப்போலியனின் படைகளிடம் சரணடையச்செய்தார். 30 அயிரம் படையினர் கைது செய்யப்பட்டனர்.

1816: மலேஷியாவின் பெனாங் ஜோர்ஜ் டவுனில் வண. ஹட்சிங்ஸினால் இலவச பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பழைமையான ஆங்கில மொழிப்பாடசாலை இதுவாகும்.

1824: போரட்லண்ட் சீமெந்துக்கு ஜோசப் அஸ்பிடின் காப்புரிமைசெய்தார்.

1854: புளோரன்ஸ் நைட்டிங்கேலும் மேலும் 38 தாதிகளும் கிறீமியன் யுத்த களத்திற்கு சேவைக்காக அனுப்பப்பட்டனர்.

1945: பிரான்ஸில் பெண்களுக்கு முதல்தடவையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

1959: விண்வெளிப்பயண முன்னோடியான வார்னர் வொன் பிரவுன் உட்பட ஜேர்மன் விஞ்ஞானிகள் பலர் அமெரிக்க இராணுவத்திலிருந்து நாஸா நிறுவனத்திற்கு ஜனாதிபதி டி.ஐஸனோவரினால் மாற்றப்பட்டனர்.

1933 லீக் ஒவ் நேசனிலிருந்து அடோல்வ் ஹிட்லர் தலைமையிலான ஜேர்மனி விலகியது.

1944: முதலாவது கமிகாஸ் தாக்குதல்: ஜப்பானிய விமானமொன்றின் மூலம் எச்.எம்.ஏ.எஸ். அவுஸ்திரேலியா கப்பல்;மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

1967: வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டனர்.

1969: சோமாலியாவில் இடம்பெற்ற சதிப்புரட்சியை அடுத்து சயீட் பாரே ஆட்சியைக் கைப்பற்றினார்.

1983: மீற்றர் அளவு, 7 ஆவது நிறுவை- அளவை மாநாட்டில் நிர்ணயம் செய்யப்பட்டது. வெற்றிடத்தில் 1/299,792,458  பங்கு விநாடியில் ஒளி பயணம் செய்யும் தூரமே ஒரு மீற்றர் என அங்கீகரிக்கப்பட்டது.

1987: யாழ் வைத்தியசாலையில் இந்திய அமைதிப் படையினரால் 70 தமிழ்பொதுமக்கள், மருத்துவர்கள், தாதிகள், ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1994: வடகொரியா, அணுவாயுத சோதனைகளை நிறுத்துவத்றகும் தனது அணுசக்தித் திட்டங்களை பார்வையிடப்படுவதற்கும் இணங்கி, அமெரிக்காவுடன் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டது.

1994: தென்கொரியாவின் சியோல் நகரில் பாலமொன்று இடிந்து வீழ்ந்து 32 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 23 Oct 2013 - 15:40

ஒக்டோபர் 22


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Images(952)1838: போர்த்துக்கலில் மன்னன் பெர்னாண்டோ, ஆண் வாரிசின்றி இறந்ததால் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான போட்டி சிவில் யுத்தத்திற்கு வழிவகுத்தது.
1707: மத்தியத் தரைக்கடலில் சிசிலி தீவுக்கருகில் நான்கு பிரித்தானிய கப்பல்கள் தவறான முறையில் செலுத்தப்பட்டதன் காரணமாக கடலில் மூழ்கி ஆயிரக்கணக்கான படையினர் பலியாகினர்.
1784: அலாஸ்கா பிராந்தியத்தின் கோடியாக் தீவில் ரஷ்யா கொலனியொன்றை ஆரம்பித்தது.
1797: பாரிஸில் 1000 மீற்றர் (3200 அடி உயரத்திலிருந்து)  அந்ரே ஜாக் கார்னரின் என்பவர் முதல் பரசூட் மூலம் குதித்தார். உலகின் முதலாவது பரசூட் குதிப்பாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
1877: ஸ்கொட்லாந்து சுரங்க விபத்தில் 207 பேர் பலி.
1924: மேடைப்பேச்சாற்றலை வளர்க்கும் சர்வதேச அமைப்பான 'டோஸ்ட்மாஸ்ட்டர் இன்டர்நெஷனல்' ரால்ப் சி ஸ்மெட்லியினால் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
1944: பிரித்தானிய விமானப்படை விமானங்கள் ஜேர்மனியின் கசெல் நகரில் தாக்குதல். 10 ஆயிரம் பேர் பலி.
1953: பிரான்ஸிடமிருந்து லாவோஸ் சுதந்திரம் பெற்றது.
1957: வியட்நாம் யுத்தத்தில் முதல் அமெரிக்க படைவீரர் பலி.
1960: பிரான்ஸிடமிருந்து மாலி சுதந்திரம் பெற்றது.
1962: கியூபாவில் சோவியத் அணுஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி அறிவித்தார்.
1963: கனடாவின் தேசிய கொடியை நாடாளுமன்ற பல்கட்சி குழுவொன்று வடிவமைத்தது.
1975: சோவியத் யூனியனின் வனேரா9 விண்கலம் வெள்ளி கிரகத்தில் தரையிறங்கியது.
2007: அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளினால் பாரிய தாக்குதல்.
2008: சந்திரயான்-1 விண்கலத்தை இந்தியா சந்திரனுக்கு ஏவியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by பானுஷபானா Wed 23 Oct 2013 - 15:44

பகிர்வுக்கு நன்றி அஹமட்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 23 Oct 2013 - 15:46

 ஒக்டோபர் 23



கி.மு.42: ரோமன் குடியரசின் சிவில் யுத்தத்தில் மார்க் அன்டனி, ஒகஸ்டஸ் சீசர் ஆகியோர் புரூட்டஸின் படைகளை தோற்கடித்தனர். புரூட்டஸ் தற்கொலை செய்துகொண்டார்.

1915: நியூயோர்க்கில் பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி சுமார் 25000 – 33000 பெண்கள் இணைந்து பேரணியொன்றை நடத்தினர்.

1917: ரஷ்யாவில் ஒக்டோபர் புரட்சிக்கு லெனின் அழைப்பு விடுத்தார்.

1929: நியூயோர்க் நகரிலிருந்து லொஞ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விமான சேவை ஆரம்பம். அமெரிக்கக் கண்டத்தை கடக்கும் விதமான முதலாவது விமான சேவை இது.

1983: லொபனானின் பெய்ரூத் நகரில் இடம்பெற்ற வாகன குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கப் படையினர் பலி. அன்று நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் 58 பிரெஞ்சு படையினரும் பலியாகினர்.

1992: ஜப்பானிய சக்கரவர்த்தி அகிஹிட்டோ சீனாவுக்கு விஜயம். சீன மண்ணில் காலடி வைத்த முதலாவது ஜப்பானிய மன்னர் இவர்.

1998: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவும் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசீர் அரபாத்தும் "சமாதானத்திற்கான நிலம் " ஒப்பந்தத்தை அங்கீகரித்தனர்.

2002: ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் திரையரங்கொன்றில் 700 பேர் செச்னிய தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக்கப்பட்டனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by நண்பன் Wed 23 Oct 2013 - 15:59

1998: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவும் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசீர் அரபாத்தும் "சமாதானத்திற்கான நிலம் " ஒப்பந்தத்தை அங்கீகரித்தனர்.
யாருக்கு யார் அங்கிகாரம் கொடுப்பது !* !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by *சம்ஸ் Thu 24 Oct 2013 - 11:30

தகவலுக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Thu 24 Oct 2013 - 16:27

ஒக்டோபர் 24


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Un-logo11795: போலந்து நாட்டை ரஷ்யா, ஆஸ்திரியா , பிரஷ்யா ஆகியன தமக்கிடையில் பிரித்துக்கொண்டன.
1945: ஐக்கிய நாடுகள் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1946: அமெரிக்காவின் வி-2 ரொக்கட் மூலம் விண்வெளியிலிருந்து பூமி முதல் தடவையாக படம்பிடிக்கப்பட்டது.
1948: பனிப்போர் என்ற சொற்பதம் முதல் தடவையாக பயன்படுத்தப்பட்டது. யுத்தம் குறித்த அமெரிக்க செனட் விசாரணைக்குழுவின் முன் பேசுகையில் பேர்னார்ட் புரூச் என்பவர் இதைப் பயன்படுத்தினார்.
1949: நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

1990: இத்தாலியப் பிரதமர் கியூலியோ அன்ட்ரியோட்டி தமது நாட்டில் நேட்டோவின் கிளாடியோ எனும் இரகசிய படையினர் இருப்பதை நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

2003: கொண்கோர்ட் பயணிகள் விமானத்தின் கடைசிப் பயணம் -நியூயோர்க்கிலிருந்து லண்டனுக்கு மேற்கொள்ளப்பட்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sun 27 Oct 2013 - 15:44

ஒக்டோபர் 25


1760: பிரிட்டனில் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் ஆட்சிக்கு வந்தார்.

1920;: பிரிட்டனில் 74 நாட்கள் உண்ணாவிரதமிருந்த பின்னர், சின்பெய்ன் அமைப்பின் டெரன்ஸ் மெக்ஸ்வினி மரணமடைந்தார்.

1945: நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்தபின், தாய்வான் நிர்வாகத்தை சீனக்குடியரசு கைப்பற்றியது.

1962: ஐ.நாவில் உகண்டா அங்கத்துவம் பெற்றது.

1962: நெல்சன் மண்டேலாவுக்கு 5 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

1964: பிரிட்டனிடமிருந்து  ஸாம்பியா சுதந்திரம் பெற்றது. ஜனாதிபதியாக கவுண்டா பதவியேற்றார்.

1971: ஐ.நா. அமைப்பில் சீனக்குடியரசுக்குப் பதிலாக சீன மக்கள் குடியரசு அங்கத்துவம் பெற்றது.

1983: கிறனடாவில் இராணுவப் புரட்சியில் பிரதமர்  மௌரிஸ் பிஷப், கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டின் மீது அமெரிக்கத் துருப்புகள் படையெடுத்தன.

1984: எத்தியோப்பியாவில் 1984 ஆம் ஆண்டில் பட்டினியால் மரணமானதையடுத்து ஐரோப்பிய நாடுகள் அவசர உதவிகளை வழங்கின.

1991: 10 நாள் யுத்தத்தின்பின் ஸ்லோவினியாவிலிருந்து கடைசி யூகோஸ்லாவிய படைவீரர் வெளியேறினார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sun 27 Oct 2013 - 15:46

ஒக்டோபர் 26


1597: இம்ஜின் யுத்தத்தில் 300 கப்பல்களைக் கொண்ட ஜப்பானிய கடற்படையை கொரிய தளபதி யின் சுன் சின், 13 கப்பல்களைக் கொண்ட கடற்படை மூலம் வெற்றிகொண்டார்.
1640: ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்ள்ஸுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
1775: அமெரிக்க சுதந்திரப் புரட்சியை இராணுவ ரீதியாக அடக்குவதற்கு இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜோர்ஜ் அனுமதியளித்தார்.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 PARK
1905: சுவீடனிடமிருந்து நோர்வே சுதந்திரம் பெற்றது.
1947:காஷ்மீர் மஹாராஜா தனது இராஜ்ஜியத்தை இந்தியாவுடன் இணைக்க சம்மதித்தார்.
1967: ஈரானின் மன்னராக மொஹமட் ரெஸா பஹ்லவி முடிசூடிக்கொண்டார்.
1979: தென்கொரிய ஜனாதிபதி பார்க் சுங் ஹீ, அந்நாட்டு புலனாய்வுத்துறைத் தலைவர் கிம் ஜே கியூவினால் விருந்தொன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
1994: 46 வருடகால யுத்தத்தின் பின் இஸ்ரேல்- ஜோர்டான் நாடுகளுக்கிடையில் சமாதான ஒப்பந்தம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sun 27 Oct 2013 - 15:47

ஒக்டோபர் 27



1275: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரம் உருவாக்கப்பட்டது.
1806: பிரெஞ்சு இராணுவம் ஜேர்மனியின் பேர்லின் நகருக்குள் நுழைந்தது.
1904 நியூயோர்க் பாதாள ரயில் சேவை சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1922: தென்னாபிரிக்க ஒன்றியத்துடன் இணையும் திட்டத்தை ரொடீஸியா வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் நிராகரித்தது.
1936: பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் 8 ஆம் எட்வர்ட் இளவரசரை மணப்பதற்காக திருமதி வல்லிஸ் சிம்ஸன் தனது கணவரை விவகாரத்துக்கு செய்வதற்கு விண்ணப்பித்தார்.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Ayub-khan
1958: பாகிஸ்தானின் முதலாவது ஜனாதிபதி இஸ்கந்தர் மிர்ஸா, ஜெனரல் அயூப்கான் தலைமையிலான இராணுவப் புரட்சி மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இது பாகிஸ்தானின் முதலாவது இராணுவப் புரட்சியாகும்.
1961: மௌரிட்டானியா, மொங்கோலியா ஐ.நா.வில் இணைந்தன.
1971: கொங்கோ ஜனநாயக குடியரசின் பெயர் ஸயர் என மாற்றப்பட்டது. (1997 இல் அந்நாட்டிற்கு மீண்டும் கொங்கோ எனப் பெயரிடப்பட்டது).
1991: சோவியத் யூனியனிடமிருந்து துருக்மேனிஸ்தான் சுதந்திரம் பெற்றது.
1999: ஆர்மேனிய நாடாளுமன்றத்தின் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தி, பிரதமர் வஸ்ஜென் சார்ஜிஸ்யான் உட்பட 6 பேரை கொன்றனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by *சம்ஸ் Mon 28 Oct 2013 - 17:32

சிறந்த தகவல் பகிர்விற்கு நன்றி தோழரே என்றும் தொடருங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Fri 1 Nov 2013 - 9:25

ஒக்டோபர் 28

    
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Liberty1707 ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தில் 5000 பேர் பலி.

1886: நியூயோர்க் துறைமுகத்தில் அமெரிக்க சுதந்திரச் சிலை ஜனாதிபதி குரோவர் கிளீவ்லாண்டினால் திறந்துவைப்பு.

1891 ஜப்பானிய வரலாற்றில் மிகப்பெரிய பூகம்பமான (8.0 ரிக்டர்) மினோ ஒவாரி பூகம்பம் ஏற்பட்டது. 7273 பேர் பலி.
1918: ஆஸ்திரியா-ஹங்கேரியிடமிருந்து செக்கஸ்லோவாக்கியா சுதந்திரம் பெற்றது.
1954: நவீன நெதர்லாந்து இராஜ்ஜியம் சமஷ்டி முடியாட்சி இராஜ்ஜியமாக ஸ்தாபிக்கப்பட்டது.
1962: கியூபாவிலிருந்து தனது அணுவாயுதங்களை அகற்ற சோவியத் யூனியன் சம்மதித்தது.

2007: ஆர்ஜென்டீனாவில் முதலாவது பெண் ஜனாதிபதியாக கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கேர்ச்னர் தெரிவானார்.
2009: பாகிஸ்தானில் பெஷாவரில் இடம்பெற்ற பாரிய குண்டுத்தாக்குதலில் 117 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Fri 1 Nov 2013 - 9:26

ஒக்டோபர் 29

    
1422: பிரான்ஸில் 7 ஆம் சார்ள்ஸ், மன்னராக முடிசூடினார்.
 
1859: மொராக்கோவுக்கு எதிராக ஸ்பெய்ன் யுத்தப் பிரகடனம்.
1863: 18 நாடுகள் ஜெனீவாவில் சந்தித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை அமைப்பதற்கு இணங்கின.
 
1922: இத்தாலிய மன்னர் 3 ஆம் விக்டர் இமானுவல், பெனிட்டோ முஸோலினியை பிரதமராக நியமித்தார்.
1923: ஒட்டோமான் இராஜ்ஜியம் கலைக்கப்பட்டபின் துருக்கி குடியரசாகியது.
 
1941: லிதுவேனியாவில் ஜேர்மன் படைகளால் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 WA1857526
1960: பின்னாளில், முஹம்மட் அலி என அறியப்பட்ட, கஸியஸ் கிளே தனது முதலாவது தொழிற்சார் குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றார்.

1961: ஐக்கிய அரபுக் குடியரசிலிருந்து சிரியா வெளியேறியது.

1964: தான்கானீய்காவும் ஸான்ஸிபாரும் இணைந்து தான்ஸானியா குடியரசு உருவாக்கப்பட்டது.

1969: கணினிகளுக்கிடையிலான முதலாவது இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.

1998: தென்னாபிரிக்காவில் வெள்ளையின நிறவெறி ஆட்சிக்காலம் குறித்து  ஆராய நியமிக்கப்பட்ட 'உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்' அறிக்கை வெளியிடப்பட்டது.

1998: ஜோன் கிளென் என்பவர் 77 ஆவது வயதில் விண்வெளிக்குச் சென்றதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற மிக வயதான நபர் எனும் சாதனைக்குரியவரானார்.

1999: இந்தியாவின் ஒரிசாவில் பாரிய சூறாவளி தாக்கியது. 10 ஆயிரம் பேர் பலியானதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.
 
2002: வியட்நாமின் ஹோசிமின் சிட்டி கடைத்தொகுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 இற்கும் அதிகமானோர் உயரிழந்தனர்.
 
2004: செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு ஒஸாமா பின்லேடன் நேரடி பொறுப்பேற்பதாகக் கூறும் வீடியோவை அல் ஜெஸீரா  தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

2004: ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ரோமில் சந்தித்து ஐரோப்பிய அரசியலமைப்புக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

2005: இந்தியாவின் டெல்லியில் நடந்த குண்டுத்தாக்குதலில் 60 பேர் பலி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Fri 1 Nov 2013 - 9:27

ஒக்டோபர் 30

    
701: கிரேக்கத்தில் 6ஆம் ஜோன் தனது கத்தோலிக்க பாப்பரசர் வாழ்வை ஆரம்பித்தார்.

1137: அபுலியாவின் ரானூஃப் இற்கும் சிசிலியாவின் 2ஆம் ரொஜெருக்குமிடையில் “றிக்னனோ“ யுத்தம்.

1270: 8ஆவதும் இறுதியுமான சிலுவைப்போர் தொடங்கப்பட்டது.

1340: றியோ சலாடோ யுத்தம்

1389: பிரான்ஸ் மன்னன் 6ஆவது சார்ளெஸ் - பாப்பரசர் 7ஆவது கிளமென்ஸை சந்தித்தார்.

1485: இங்கிலாந்தின் மன்னனாக 7ஆவது ஹென்றி முடிசூடினார்.

1502: வஸ்கொட காமா 2ஆவது தடவையாக இந்தியாவின் கேரளைாவிலுள்ள கோழிக்காட்டுக்கு வருகை தந்தார்.

1894: டானியல் கூப்பர் - மணிக்கூட்டுக்கு காப்புரிமை பெற்றார்.

1922: பெனிட்டோ முஸோலினி - இத்தாலியில் அரசொன்றை நிறுவினார்.

1957: ஸ்புட்னிக்-2 விண்கலத்தில் செல்லும் நாயின் பெயர் “லைக்கா“ என சோவியத் யூனியன் அறிவித்தது.

1979: எஸ்-203 என்னும் விண்வெளி வாகனத்தை நாசா அறிமுகம் செய்தது.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Laika1


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Fri 1 Nov 2013 - 9:29

ஒக்டோபர் 31

    
1876: இந்தியாவில் வீசிய கடும் சூறாவளியினால் 2 இலட்சம் பேர் பலியாகினர்.
1941: அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ். ரெயூபன் ஜேம்ஸ் எனும் கப்பல் ஜேர்மன் படையினரால் மூழ்கடிக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனியினால் மூழ்கடிக்கப்பட்ட முதலாவது அமெரிக்க கடற்படைக் கப்பல் இதுவாகும்.

1956: சுயஸ் கால்வாயை திறக்க நிர்ப்பந்திப்பதற்காக, எகிப்தின் மீது பிரித்தானிய பிரெஞ்சு படைகள் குண்டுத்தாக்குதல் நடத்தின.

1984: இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் 1000 இற்கு மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

2000: சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானமொன்று நிர்மாணக் கருவியொன்றுடன் மோதியதால் பயணிகள் சிப்பந்திகள் உட்பட 79 பேர் பலி.    
2000: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதல் தடவையாக மனிதர்கள் தங்குவதற்கு அனுப்பப்பட்டனர்.   

2003: மலேஷியாவில் 22 வருடங்கள் பிரதமராக பதவி வகித்த மஹதிர்   மொஹமட் இராஜினாமாச் செய்தார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Fri 1 Nov 2013 - 9:30

நவம்பர் 01

   
1179: பிரான்ஸில் இரண்டாம் பிலிப், மன்னராக முடிசூட்டப்பட்டார்.

1520: மகலன் நீரிணை என அறியப்படும் பகுதிக்கூடாக பேர்டினானான்ட் மகலன் முதல் தடவையாக பயணம் செய்தார்.

1755: போர்த்துக்கலின் லிஸ்பன் நகரில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் 60,000-90,000 பேர் பலியாகினர்.

1800: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் வெள்ளை மாளிகையில் வசித்த முதல் ஜனாதிபதியானார்.

1886: கொழும்பு ஆனந்தாக் கல்லூரி 36 மாணவர்களுடன் புறக்கோட்டை மலிபன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

1894: ரஷ்யாவில் இரண்டாம் நிக்கலஸ் புதிய ஸார் மன்னராக பதவியேற்றார்.

1911: சண்டையின் போது விமானத்திலிருந்து குண்டுவீச்சுத் தாக்குதல், முதல் தடவையாக இத்தாலி- துருக்கி யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டது.

1947: நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகியன ஐ.நா.வில் இணைந்தன.

1948: சீனாவில் தெற்கு மஞ்சூரியா பகுதியில் சீன வர்த்தக கப்பலொன்று வெடித்து மூழ்கியதால் 6,000 பேர் பலி.

1956: இந்தியாவில் கேரளா, ஆந்திரப்பிரதேசம், மைசூர் (கர்நாடகா) ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

1970: பிரான்ஸில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 146 பேர் பலி.

1981: அன்டிகுவா பார்படோஸ் ஆகியன பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றன.

1993: மாஸ்ரிக்ட் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் ஐரோப்பிய யூனியன்  முறைப்படி உருவாக்கப்பட்டது.

2000:  ஐ.நா.வில் சேர்பியா இணைந்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா Sun 9 Feb 2014 - 17:22

வரலாற்றில் இன்று
பிப்ரவரி
9


1885 - முதலாவது ஜப்பானியர் ஹவாய் தீவை வந்தடைந்தனர்.
1895 - வில்லியம் மோர்கன் Volley Ball-ஐக் கண்டுபிடித்தார்.
1900 - டேவிஸ் கோப்பை டென்னிஸ் பந்தயம் ஆரம்பிக்கப்பட்டது.
1942 - அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் (Day Light Savings) அறிமுகப்படுத்தப்பட்டது.
1949- வ.உ. சிரம்பரனார் தூத்துக்குடியில் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்.
1965 - அமெரிக்க தாக்குதல் படைப்பிரிவு முதற்தடவையாக தென் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது.
1969 - போயிங் 747 ரக விமானம் உலகிலேயே முதன்முறையாக தனது பயணத்தைத் தொடங்கியது. அது விமான உலகில் ஜம்போ யுகத்தைத் தோற்றுவித்தது.
1971 - அப்பல்லோ 14 விண்கலம் மூன்று அமெரிக்கர்களுடன் பூமி திரும்பியது.
1975 - சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது.
1986 - ஹேலியின் வால்மீன் சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by *சம்ஸ் Sun 9 Feb 2014 - 18:19

தகவல் பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா Mon 10 Feb 2014 - 13:38

வரலாற்றில் இன்று
பிப்ரவரி
10


1846 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.
1870 - கிறிஸ்தவப் பெண்கள் இளையோர் அமைப்பு (YWCA) நியூயோர்க் நகரில் அமைக்கப்பட்டது.
1914 - யாழ்ப்பாணத்தின் அரச அதிபராக சார்ள்ஸ் கம்பர்லாண்ட் நியமிக்கப்பட்டார்.
1931 - புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.
1948 - மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கும், ஆப்தேவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1969 - தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.
1996 - IBM நிறுவனம் உருவாக்கிய "டீப் புளூ" (Deep Blue) என்ற சதுரங்கக் கணினி செஸ் விளையாட்டில் உலக முதற்தர வீரரான Garry Kasparov வைத் தோற்கடித்தது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by rammalar Mon 10 Feb 2014 - 13:43

பகிர்வு அருமை..
-

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 A-new-era-begins-as-Pacific-Young-Women-s-Leadership-Alliance-formed_medium
A small group of thoughtful people could change the world.
Indeed, it's the only thing that ever has - Margaret Mead
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா Mon 10 Feb 2014 - 13:45

rammalar wrote:பகிர்வு அருமை..
-

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 A-new-era-begins-as-Pacific-Young-Women-s-Leadership-Alliance-formed_medium
A small group of thoughtful people could change the world.
Indeed, it's the only thing that ever has - Margaret Mead
 :”@: 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா Tue 11 Feb 2014 - 7:52

வரலாற்றில் இன்று
பிப்ரவரி
11


உலக நோயாளிகள் நாள்
கிமு 660 - ஜிம்மு பேரரசரினால் ஜப்பான் அமைக்கப்பட்டது.
1659 - சுவீடன் படைகளின் கோப்பன்ஹேகன் நகரத் தாக்குதல் பலத்த உயிரிழப்புகளுடன் முறியடிக்கப்பட்டது.
1752 - அமெரிக்காவின் முதலாவது மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது.
1826 - லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் அமைக்கப்பட்டது.
1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
1953 - சோவியத் ஒன்றியம் இஸ்ரவேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.
1960 - சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
1990 - தென்னாப்பிரிக்காவின் இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நெல்சன் மண்டே (Nelson Mandela) விடுதலை செய்யப்பட்டார். 1993 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற திரு. மாண்டேலா அடுத்த ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவின் முதல் பல இன தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார்.
1997 - டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது.
2005 - ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by rammalar Tue 11 Feb 2014 - 7:57

பயனுள்ள தகவல்...
-
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Images?q=tbn:ANd9GcSFavU2LjS7eIfPuUh1Mcjt5MTM9hoCAcME1kQr_SoXiFW3x8VC
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா Wed 26 Feb 2014 - 18:20

வரலாற்றில் இன்று
பிப்ரவரி
26


1606 - டச்சு நாடுகாண்பயணி வில்லெம் ஜான்சூன் ஆஸ்திரேலியாவைக் கண்ட முதலாவது ஐரோப்பியர்.
1794 - கோப்பன்ஹேகன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.
1815 - நெப்போலியன் பொனபார்ட் எல்பாவில் இருந்து தப்பினான்.
1935 - ரேடாரை Robert Waston Watt என்பவர் கண்டுபிடித்தார். S.M.Tucker என்பவர்தான் அதற்கு ரேடார் என்ற பெயரைச் சூட்டினார்.
1936 - இராணுவத்தினர் ஜப்பான் அரசைக் கவிழ்க்க இடம்பெற்ற புரட்சி தோல்வியில் முடிந்தது.
1991 - உலகம் பரவிய வலையை (WWW) அறிமுகப்படுத்திய டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்ற உலகின் முதலாவது இணைய உலாவியை அறிமுகப்படுத்தினார்.
1993 - நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
1993 - நியூயார்க்கில் உலக வர்த்தக மையக் கட்டடத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அந்தத் தாக்குதலை நடத்திய Sheik Omar Abdel Rahman-க்கு வாழ்நாள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. அதே உலக வர்த்தக மையக் கட்டடங்களைத் தான் 2001 செப்டம்பர் 11-ம் தேதி தாக்கித் தகர்த்தனர் தீவிரவாதிகள்.
2001 - ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ராகவா Fri 28 Feb 2014 - 21:31

வரலாற்றில் இன்று
பிப்ரவரி
28


இந்திய தேசிய அறிவியல் நாள்
1784 - ஜோன் வெஸ்லி மெதடிஸ்த திருச்சபையை ஆரம்பித்தார்.
1854 - அமெரிக்காவின் குடியரசுக் கட்சி (The Republican Party) ஆரம்பிக்கப்பட்டது.
1928 - இராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டது.
1935 - வொலஸ் கரோதேர்ஸ் என்பவரினால் நைலோன் கண்டுபிடிக்கப்பட்டது.
1948 - பிரிட்டிஷ் படைகள் இந்தியாவை விட்டு வெளியேறின.
1953 - ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
1984 - ஆங்கில பாப் பாடகர் மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் (Michael Jackson), Los Angeles- ல் நடைபெற்ற GrammY விருது வழங்கும் விழாவில் எட்டு விருதுகளை வென்று முந்திய சாதனையான முறியடித்தார்.
1991 - முதலாம் வளைகுடாப் போர் முடிவுற்றது.
2002 - அகமதாபாத்தில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - இந்தியாவில் சத்தீஷ்கார் மாநிலத்தில் தாண்டிவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுக்கள் நடாத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
2007 - புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 35 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 35 of 37 Previous  1 ... 19 ... 34, 35, 36, 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum