சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Khan11

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

+18
jafuras
ஜனநாயகன்
எந்திரன்
ansar hayath
முfதாக்
ராகவா
Muthumohamed
rammalar
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
மீனு
mufees
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
நண்பன்
சிபான்
ahmad78
22 posters

Page 4 of 37 Previous  1, 2, 3, 4, 5 ... 20 ... 37  Next

Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Tue 21 Feb 2012 - 15:40

First topic message reminder :

பெப்ரவரி 19
1600 - பெருவின் ஹுவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்தது.
1674: இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 3 ஆவது ஆங்கில – டச்சு யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக டச்சு காலனியான அமெரிக்காவின் நியூ ஆம்ஸ்டர்டம் பிராந்தியம் இங்கிலாந்துக்கு ஒப்படைக்கப்பட்டு, அதன் பெயர் நியூ யோர்க் என மாற்றப்பட்டது.
1807: அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி ஆரோன் பர் கைது செய்யப்பட்டார்.
1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
1861: ரஷ்யாவில் பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.

1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
1942: சுமார் 250 ஜப்பானிய விமானங்கள், அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை தாக்கின. 243 பேர் பலி.
1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை - 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
1959: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.
1968 - சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அநுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
1978: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சைப்பிரஸில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானமொன்றை எகிப்திய படையினர் மீட்க முயன்றபோது இரு நாடுகளின் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 15 எகிப்திய வீரர்கள் பலி.
1985: ஸ்பெய்ன் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 148 பேர் பலி.
1986: மீர் விண்வெளி நிலையத்தை சோவியத் யூனியன் விண்ணுக்கு ஏவியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Thu 17 May 2012 - 11:07

மே 1717


1590: டென்மார்க்கை சேர்ந்த இளவரசி ஆன், ஸ்கொட்லாந்து மகாராணியாக முடிசூடப்பட்டார்.

1792: நியூயோர்க் பங்குச் சந்தை திறக்கப்பட்டது.

1914: நோர்வே மன்னராக டென்மார்க்கின் முடிக்குரிய இளவரசர் கிறிஸ்ரியன் பிரெட்ரிக், நோர்வே நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார்.

1865: சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது.

1940: பெல்ஜியம் மீது ஜேர்மனி படையெடுத்தது.

1980: தென்கொரிய அரசாங்கம் ஜெனரல் சுன் டூ ஹ்வானின் கட்டுப்பாட்டில் வந்தது.

1983: லெபனானிலிருந்து இஸ்ரேலிய படையினர் வாபஸ் பெறப்படுவது தொடர்பாக, லெபனான், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் ஒப்பந்தமொன்று கையெழுத்திடப்பட்டது.

1990: உளவியல் நோய்களின் பட்டியலிலிருந்து ஓரின சேர்க்கையை உலக சுகாதார ஸ்தாபனம் நீக்கியது.

1997: லோரன்ட் கபீலாவின் படைகள் ஸயர் நாட்டின் தலைநகர் கின்ஷசாவுக்குள் பிரவேசித்தன. அந்நாட்டிற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2007: வட கொரியா, தென் கொரியாவுக்கிடையில் முதல் தடவையாக ரயில் சேவைகள் இடம்பெற்றன.

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Ntstock


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Fri 18 May 2012 - 11:33

மே 18.



1498: போர்துக்கேய மாலுமி வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிகோடு துறைமுகத்தை அடைந்தார்.

1756: பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் 7 ஆண்டு போர் தொடங்கியது.

1803: பிரான்ஸுக்கு எதிராக பிரிட்டன் போர் பிரகடனம் செய்தது.

1804: நெப்போலியன் போனபார்ட் பிரான்ஸின் மன்னராக பிரெஞ்சு நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டார்.

1917: அமெரிக்காவில் இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்வதற்கு அந்நாட்டு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

1974: இந்தியா தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.

2006: இந்து ராஜ்யமான நேபாளத்தில் முடியாட்சியை நீக்கவும் மதசார்பற்ற நாடாக மாற்றவும் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2009: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பலியானதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Mon 21 May 2012 - 6:13

மே 19

1536: பிரித்தானிய மன்னர் 8 ஆம் ஹென்ரியின் இரண்டாவது மனைவி ஆன் பேலெய்ன், தேசத்துரோகம் மற்றும் தகாத உறவு குற்றச்சாட்டின் காரணமா சிரச்சேதம் செய்யப்பட்டார்.
1919: துருக்கிய சுதந்திரப் போர் ஆரம்பம்.
1991: குரோஷியர்கள் சுதந்திர தனிநாடாகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2009: இலங்கையில் 26 வருடகால யுத்தம் முடிவுற்றதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தல் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
2009: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அறிவித்தார்.
2010: தாய்லாந்தில் அரசாங்கத்தற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முறியடிக்கும் நடவடிக்கையை இராணுவத்தினர் நிறைவு செய்தனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Mon 21 May 2012 - 6:19

மே 20


526: சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 3 லட்சம் பேர் பலியாகினர்.

1835: நவீன கிறீஸின் முதலாவது மன்னராக ஒட்டோ தெரிவு செய்யப்பட்டார்.

1902: அமெரிக்காவிடமிருந்து கியூபா சுதந்திரம் பெற்றது.

1932: அமேலியா எர்ஹார்ட் எனும் பெண், அத்திலாந்திக் சமுத்திரத்தை தனியாக விமானத்தில் கடக்கும் பயணத்தை கனடாவிலிருந்து ஆரம்பித்தார். மறுநாள் அவர் அயர்லாந்தை வந்தடைந்தார்.

1940: போலந்தின் அஸ்விட்ஸ் நகரில் ஜேர்மனியின் நாஜி ஆட்சியாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட வதை முகாம்களுக்கு கைதிகள் கொண்டுவரப்படத் தொடங்கினர்.

1965: பாகிஸ்தானின் விமானமொன்று எகிப்தின் கெய்ரோ நகரில் விபத்துக்குள்ளானதால் 119 பேர் பலி.

1980: கனடாவிலிருந்து கியூபெக் மாநிலம் தனிநாடாக பிரிவது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பில் பிரிவிணைக்கு எதிராக 60 சதவீத கியூபெக் மக்கள் வாக்களித்தனர்.

2000: பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயர்- செரி பிளேயர் தம்பதிக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. 150 வருடகாலத்தில் பதவியிலிருக்கும் போது தந்தையாகிய முதலாவது பிரித்தானிய பிரதமரானார் டொனி பிளேயர்.

2002: கிழக்குத் திமோர் தனிநாடாகியதை போர்த்துக்கல் அங்கீகரித்ததன் மூலம் கிழக்குத் திமோரில் 23 வருடகால இந்தோனேஷிய ஆட்சி முடிவுக்கு வந்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Mon 21 May 2012 - 6:19

மே 21

1502: அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள செயின்ட் ஹெலினா தீவை போர்த்துக்கேய ஆராய்ச்சியாளர் ஜயோ டா நோவா கண்டறிந்தார். இத்தீவிலேயே நெப்போலியன் சிறைவைக்கப்பட்டு இறந்தார்.
1851: கொலம்பிய நாட்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

1904: சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (ஃபீபா) பாரிஸ் நகரில் ஸ்தாபிக்கப்பட்டது.

1927: அத்திலாந்திக் சமுத்திரத்தில் ஆராய்ச்சிக்கூடமொன்றை நிர்மாணித்த முதல் நாடாகியது சோவியத் யூனியன்.

1990: வடக்கு யேமனும் தெற்கு யேமனும் ஒன்றிணைக்கப்பட்டது.

1991: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீ பெரம்புத்தூரில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலியானார்.

1994: தான்ஸானியாவின் விக்டோரியா ஏரியில் கப்பலொன்று மூழ்கியதால் சுமார் 1000 பேர் பலி. 2003: அல்ஜீரியாவில் பூகம்பத்தினால் சுமார் 2000 பேர் பலி.

2006: சேர்பியா –மொன்ரேனேக்ரோவிலிருந்து பிரிந்து தனிநாடாகுவதற்கு ஆதரவாக மொன்ரேநேக்ரோ மக்கள் வாக்களித்தனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 23 May 2012 - 6:59

மே 22

334: மகா அலெக்ஸாண்டரின் மெசிடோனிய படை பேர்சியவின் 3 ஆம் டேரியஸ் மன்னின் படையை தோற்கடித்தது.
1762: சுவீடனும் பிரஸ்யாவும் ஹம்பர்க் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1809: வியன்னாவுக்கு அருகில் நடைபெற்ற அஸ்பேர்ன் ஈஸ்லிங் யுத்தத்தில் நெப்போலியன் முதல் தடவையாக தோற்கடிக்கப்பட்டு துரத்தப்பட்டார்.
1906: அமெரிக்காவில் ரைட் சகேதரர்கள் தமது 'பறக்கும் இயந்திரத்திற்கான' காப்புரிமையைப் பெற்றனர்.
1915: ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 227 பேர் பலி.
1958: இலங்கையில் இனக்கலவரம் இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
1960: சிலியில் 9.5 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. சுமார் 6000 பேர் பலியாகினர். இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய பூகம்பம் இதுவாகும்.
1962: அமெரிக்காவில் விமானமொன்றில் குண்டு வெடித்ததால் 45பேர் பலியாகினர்.
1968: அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கியொன்று 99 பேருடன் கடலில் மூழ்கியது.
1972: இலங்கையில் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டது. இலங்கை குடியரசாகியது. சிலோன் எனும் அதன் பெயர் ஸ்ரீலங்காவாக மாற்றப்பட்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 23 May 2012 - 7:00

மே 23

1430: பிரான்ஸின் வீரமங்கை ஜோன் ஒவ் ஆர்க் பர்கன்டிய படையினரால் கைது செய்யப்பட்டாள்.
1568: ஸ்பெய்னிடமிருந்து பிரிவதாக நெதர்லாந்து சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1805: இத்தாலிய மன்னனாக பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போர்னபார்ட் முடிசூட்டப்பட்டார்.
1846: மெக்ஸிகோ ஜனாதிபதி மரியானோ பரதீஸ் உத்தியோகபூர்வமற்ற வகையில் அமெரிக்கா மீது யுத்தப் பிரகடனம் செய்தார்.
1915: முதலாவது உலக யுத்தத்தில் நேச நாடுகளின் பக்கம் சேர்ந்த இத்தாலி ஆஸ்திரிய-ஹங்கேரி மீது போர் பிரகடனம் செய்தது.
1949: ஜேர்மன் சமஷ்டி குடியரசு (மேற்கு ஜேர்மனி) ஸ்தாபிக்கப்பட்டது.
1951: திபெத் மக்களின் அமைதியான விடுதலைக்காக திபெத்தியர்கள் சீனாவுடன் 7 அம்ச உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டனர்.
1995: ஜாவா எனும் கணினி மொழியின் முதல் பதிப்பு வெளியாகியது.
1998: வட அயர்லாந்து சமாதான உடன்படிக்கைக்கு ஆதரவாக 75 சதவீதமான வட அயர்லாந்து மக்கள் வாக்களித்தனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sat 26 May 2012 - 6:50

மே 24


1798: பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக அயர்லாந்தில் கிளரச்சி ஆரம்பித்தது.

1832: முதலாவது கிறீஸ் இராஜ்ஜியம் லண்டன் மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டது.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 ERI(1)

1844: சாமுவேல் மோர்ஸ் முதலாவது டெலிகிராவ் தகவலை அமெரிக்காவின் பழைய உயர் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து அமெரிக்க தலைநகரிலுள்ள தனது உதவியாளர் அல்பிரட் வெய்லுக்கு அனுப்பினார்.

1948: அரபு - இஸ்ரேல் யுத்தத்தில் இஸ்ரேலின் கிப்புட்ஸ் நகரை எகிப்து கைப்பற்றியது.

1976: முதலாவது கொன்கோர்ட் விமான சேவை லண்டனிலிருந்து வாஷிங்டனுக்கு ஆரம்பிக்கப்பட்டது.

1980: ஈரானில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்களை விடுவிக்குமாறு சர்வதேச நீதிமன்றம் கோரியது. எனினும் அடுத்த ஜனவரி வரை அக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை.

1991: எத்தியோப்பியாவிடமிருந்து எரித்திரியா சுதந்திரம் பெற்றது.

1991: எத்தியோப்பியாவிலுள்ள யூதர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தது.

1994: 1993 ஆம் அண்டின் உலக வர்த்தக நிலைய குண்டுத்தாக்குதலில் குற்றவாளிகளாக காணப்பட்ட நால்வருக்கு 240 வருடகால சிறைத்தண்டனை அனுபவிக்கப்பட்டது.

2000: தென் லெபனானிலிருந்து 22 வருடங்களின்பின் இஸ்ரேலிய படைகள் வெளியேறின.

2001: 15 வயதான ஷேர்ப்பா டெம்பா டிஷேரி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மிக இளமையான நபர் எனும் சாதனைக்குரியவரானார்.
2002: அமெரிக்காவும் ரஷ்யாவும் மொஸ்கோ உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sat 26 May 2012 - 6:52

மே 25

1837: பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக கனடாவின் கியூபெக் மாநிலத்தில் கிளர்ச்சி இடம்பெற்றது.

1865: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் பலி.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Bang(5)

1946: ட்ரான்ஸ்; ஜோர்தான் நாடாளுமன்றம் முதலாம் அப்துல்லாவை அமீராக தெரிவு செய்தது.

1953: அமெரிக்காவின் முதலாவதும் கடைசியுமான அணு ஆட்லரி சோதனை நடைபெற்றது.

1961: பிரிட்டனைச் சேர்ந்த ஜோ பிரவுன் தலைமையிலான குழுவொன்று உலகின் 3 ஆவது மிக உயரமான சிகரமான கஞ்சன்ஜுங்காவின் உச்சியை முதல் தடவையாக அடைந்தது.

1961: தசாப்தத்தின் இறுதிக்குள் அமெரிக்கர்கள் சந்திரனை அடைவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி சூளுரைத்தார்.

1963: ஆபிரிக்காவில் வெள்ளையின ஆட்சிக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் 32 நாடுகள் ஒன்றிணைந்து ஆபிரிக்க ஐக்கிய ஸ்தாபனத்தை ஸ்தாபித்தன.

1979: அமெரிக்க விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 271 பேர் பலி.

1981: பஹ்ரெய்ன், குவைத், ஓமான், கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து வளைகுடா கூட்டுறவு சபையை ஸ்தாபித்தன.

1985: பங்களாதேஷில் வீசிய சூறாவளியினால் சுமார் 10000 பேர் பலி.

1997: சியாரா லியோன் ஜனாதிபதி டெஜான் கப்பா சதிப்புரட்சி மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

2001: அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயதான எரிக் வீஹென்மாயர் பார்வையற்ற முதல் நபரானார்.

2002: சீன விமானமொன்று தாய்வான் நீரிணையில் வீழ்ந்ததால் 225 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sat 26 May 2012 - 6:53

மே 26


1293: ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 30,000 பேர் பலி.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Kamkura1

1822: நோர்வேயில் தேவாலயமொன்றில் ஏற்பட்ட தீயினால் 116 பேர் பலி. நோர்வேயில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ அனர்த்தம் இதுவாகும்.

1868: அமெரிக்க ஜனாதிபதி அன்ட்ரூ ஜோன்ஸனுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை விசாரணையில் ஒரு வாக்கினால் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டார்.

1917: அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளியினால் 101 பேர் பலி.

1918: ஜோர்ஜிய ஜனநாயக குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.

1966: பிரிட்டனிடமிருந்து கயானா சுதந்திரம் பெற்றது.

1983: ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியினால் 104 பேர் பலி.

1986: ஐரோப்பிய கொடி அங்கீகரிக்கப்பட்டது.

1991: தாய்லாந்து விமானமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 223 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 May 2012 - 7:44

:!+: :!+:


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Tue 29 May 2012 - 6:50

மே 27

1941: ஜேர்மன் யுத்தக் கப்பலான பிஸ்மார்க், அத்திலாந்திக் சமுத்திரத்தின் வடக்கில் மூழ்க்கடிக்கப்பட்டது. 2100 பேர் பலியாகினர்.

1960: துருக்கியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. ஜனாதிபதி செலால் பயாரும் அவரின் அமைச்சர்களும் பதவிநீக்கப்பட்டனர்.

1963: கென்யாவின் முதலாவது பொதுத் தேர்தலில் ஜோமோ கென்யாட்டா தலைமையிலான கட்சி வெற்றியீட்டியது.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Nehru(2)

1964: இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு காலமானார்.

1967: அவுஸ்திரேலிய பூர்வீக குடிமக்களையும் சனத் தொகைக் கணக்கெடுப்பிற்கு உட்படுத்தி அவர்களுக்கும் நன்மைகள் வழங்குவதற்கான சட்டங்களை ஏற்படுத்துவதற்கு அதிகாரமளிக்கும் சட்டமூலத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலிய மக்கள் வாக்களித்தனர்.

1996: ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சின், செச்னிய தீவிரவாதிகளை முதல் தடவையாக சந்தித்து யுத்த நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

1997: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனுக்கு எதிராக பாலியல் தொந்தரவு வழக்குத் தொடர பௌலா ஜோன்ஸ் எனும் பெண்ணுக்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

1999: யூகோஸ்லாவிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக் மற்றும் நால்வர் மீது மனித குலத்திற்கு எதிரான மற்றும் போர்க் குற்றம் புரிநத்தாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டது.

2006: இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 6600 பேர் பலி..


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Tue 29 May 2012 - 6:51

மே 28
1940: ஜேர்மனியிடம் பெல்ஜியம் சரணடைந்தது.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 PAK(1)

1952: கிறீஸில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1964: பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டது.

1977: அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் 165 பேர் பலி.

1995: ரஷ்யாவில் ஏற்பட்ட பூகம்பததினல் குறைந்தபட்ம் 2000 பேர் பலியாகினர்.

1998: பாகிஸ்தான் அணுகுண்டுகளை வெடிக்கச் செய்து சோதனை நடத்தியது. அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகள் பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதித்தது.

2004: ஈராக்கில் சதாம் ஹுஸைனின் நீண்ட கால எதிர்ப்பாளரான ஆயத் அலாவி பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Tue 29 May 2012 - 6:52

மே 29

1864: மெக்ஸிகே மன்னர் முதலாம் மெக்ஸிமிலியன் (ஆஸ்திரியாவில் பிறந்தவர்) முதல் தடவையாக மெக்ஸிகோவை சென்றடைந்தார்.
1867: ஆஸ்திரிய - ஹங்கேரிய பேரரசு ஸ்தாபிக்கப்பட்டது. வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 EDMAND

1903: சேர்பிய மன்னர் அலெக்ஸாண்டர் ஓப்ரெனோவிக் அவரின் மனைவி ட்ராகாவும் தலைநகர் பெல்கிரேட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.

1948: ஐ.நா. சமாதானப் படை ஸ்தாபிக்கப்பட்டது.

1953: நியூஸிலாந்தைச் சேர்ந்த எட்மன்ட் ஹிலாரியும் நேபாளத்தைச் சேர்ந்த டென்ஸிங் நோர்கேயும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர்கள் எனும் சாதனைக்குரியவர்களாகினர்.

1988: பெல்ஸியத்தில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியொன்றின்போது மதிலொன்று சரிந்து வீழ்ந்ததால் 39 பேர் பலியானதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

1990: ரஷ்ய ஜனாதிபதியாக பொரிஸ் யெல்ட்சின் தெரிவானார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by *சம்ஸ் Fri 1 Jun 2012 - 11:37

சிறந்த பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sat 2 Jun 2012 - 6:43

மே 30
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Zia(1)1431: பிரெஞ்சு வீரப் பெண்ணான ஜோன் ஒவ் ஆர்க்கிற்கு ஆங்லேயே ஆதிக்க விசாரணைக்குழுவினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தீயிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1967: நைஜீரியாவின் 'பயாப்ரா' பிராந்தியம் சுதந்திரப் பிரகடனம் செய்ததையடுத்து சிவில் யுத்தம் மூண்டது.

1967: இஸ்ரேலுக்கு எதிராக எகிப்தும் ஜோர்தானும் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டன.

1972: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஜப்பானிய செம்படையின் இஸ்ரேலிய பிரிவினால் 24 பேர் கொல்லப்பட்டனர்.

1981: பங்களாதேஷ் ஜனாதிபதி ஸியாவுர் ரஹ்மான் இராணுவத்தின் கிளர்ச்சிக் குழுவொன்றினால் கொல்லப்பட்டார்.

1996: ஆப்கானிஸ்தானில் பூகம்பத்தினால் 5000 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sat 2 Jun 2012 - 6:44

மே 31

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Jaffnalibrary

526: துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 250000 பேர் பலி.

1859: லண்டன் பிக் பென் கடிகாரம் முதல் தடவையாக ஒலித்தது.

1889: அமெரிக்காவில் அணைக்கட்டொன்று உடைந்ததால் சுமார் 2200 பேர் பலி

1935: பாகிஸ்தானின் குவேட்டா பிராந்தியத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 40,000 பேர் பலி.

1962: மேற்கிந்திய சம்மேளன கூட்டரசு கலைக்கப்பட்டது.

1970: பெரு நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் 47,000 பேர் பலி.

1981: ஆசியாவின் மிகப் பெரிய நூல் நிலையங்களில் ஒன்றாக விளங்கிய யாழ் நூல் நிலையம் சுமார் 70,000 நூல்களுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

1985: அமெரிக்காவில் பூகம்பத்தினால் 76 பேர் பலி.



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sat 2 Jun 2012 - 6:46

ஜூன் 01

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 King-Brendra%20(1)

1215: பெய்ஜிங் நகரம் செங்கிஸ் கான் தலைமையிலான மொங்கோலிய படையினால் கைப்பற்றப்பட்டது.

1533: இங்கிலாந்தின் அரசியாக ஆன் போலெய்ன் முடிசூடினார்.

1812: பிரிட்டன் மீது யுத்தப் பிரகடனம்செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் மெடிசன் நாடாளுமன்றத்தை கோரினார்.

1979: ஸிம்பாப்வேயில் வெள்ளையின ஆட்சி முடிவுக்கு வந்தது.

1990: அமெரக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ், சோவியத் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவ் ஆகியோர் இரசாயன ஆயுத உற்பத்தியை முடிவுக்கு கொண்டுவரும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

2001: நேபாள மன்னர் பிரேந்திரா, ராணி, ஐஸ்வர்யா மற்றும் பல அரச குடும்பத்தினர் உட்பட 9 பேர் முடிக்குரிய இளவரசர் திபேந்திராவினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இளவரசர் திபேந்திராவும் தன்னைதானே சுட்டுக்கொன்றதாக அறிவிக்கப்பட்டது.

2009: பிரேஸிலில் இருந்து பிரான்ஸ் நோக்கி புறப்பட்ட பிரெஞ்சு விமானம் அத்திலாந்திக் சமுத்திரத்தில் வீழ்ந்தால் விமானத்திலிருந்த 228 பேரும் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sat 2 Jun 2012 - 6:47

ஜூன் 2


1886: அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளீவ்லன்ட், பிரான்செஸ் போல்சொம் எனும் பெண்ணை வெள்ளை மாளிகையில் திருமணம் செய்தார். வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Queen_Elizabeth_IIவெள்ளை மாளிகையில் வைத்து திருமணம் செய்த முதல் ஜனாதிபதி இவராவார்.

1946: இத்தாலியில் மன்னராட்சியை ஒழித்து குடியரசாக்குவதற்கு ஆதரவாக சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் வாக்களித்தனர் .

1953: பிரித்தானிய மகா ராணியாக இரண்டாம் எலிஸபெத் முடிசூடினார்.

1979: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர், தனது சொந்த நாடான போலந்துக்கு விஜயம் செய்தார். கம்யூனிஸ்ட் நாடான போலந்துக்கு விஜயம் செய்த முதலாவது பாப்பரசர் இவராவார்.

1985: பெல்ஜியத்தில் கால்பந்தாட்டப் போட்டியொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 39 பேர் பலியானதையடுத்து, இங்கிலாந்து கழகங்கள் இங்கிலாந்துக்கு வெளியே ஐரோப்பாவில் போட்டிகளில் பங்குபற்ற ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கம் தடை விதித்தது.

1999: பூட்டானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 6 Jun 2012 - 6:40

ஜூன் 03
1839: சீன அதிகாரி லீன் சே ஹூவினால் பிரித்தானியர்களின் 12 இலட்சம் கிலோகிராம் ஓபியம் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் இரு நாடுகளுக்கிடையிலான முதலாவது ஓபியம் யுத்தத்திற்கு வழிவகுத்தது.

1937: பிரிட்டனின் மன்னர் 8 ஆம் எட்வர்ட், ஏற்கெனவே இரு தடவை திருமணமான வல்லிஸ் சிம்ஸன் எனும் அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தார். இத்திருமணம் காரணமாக அவர் அரசுரிமையை இழக்க நேரிட்டது.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Duke-&-duchess

1962: பிரெஞ்சு விமானமொன்று பாரிஸ் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதால் 130 பேர் பலி.

1963: அமெரிக்க விமானமொன்று பசுபிக் சமுத்திரத்தில் விழுந்ததால் 101 பேர் பலி.

1969: தென் வியட்நாம் கரையோரத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலிய விமானந்தாங்கி கப்பலொன்று மோதியதால் அமெரிக்க யுத்த கப்பல் இரண்டாக உடைந்தது.

1982: லண்டனில், இஸ்ரேல் தூதுவர் ஷ்லோமோ ஆர்கோ துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.

1984: சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவில் மறைந்திருந்த சீக்கிய தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் 'ஒபரேஷன் புளூ ஸ்டார்' எனப் பெயரிடப்பட்டபட்ட தாக்குதலை ஆரம்பித்தது.

1998: ஜேர்மனியில் இடம்பெற்ற ரயில் விபத்தினால் 101 பேர் பலி.

2006: சேர்பியா- மொன்டேனேக்ரோ கூட்டரசிலிருந்து பிரிந்து மொன்டேனேக்ரோ சுதந்திரப் பிரகடனம் செய்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 6 Jun 2012 - 6:43

ஜூன் 04
1896: பெற்றோலில் இயங்கும் தனது வாகனத்தின் முதல் சோதனை ஓட்டத்தை ஹென்ரி போர்ட் வெற்றிகரமாக நடத்தினார்.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 PROTEST(3)

1917: ஊடக, இலக்கிய, இசைத்துறைக்கான புளிட்ஸர் விருது முதல் தடவையாக வழங்கப்பட்டது.

1928: சீனக் குடியரசு ஜனாதிபதி ஸாங் ஸுவோலின் ஜப்பானிய முகவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

1961: கிழக்கு ஜேர்மனிக்குள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் செல்வதை தடுக்கும் வகையில் கிழக்கு ஜேர்மனியுடன் ஒப்பந்தம் செய்யப்போவதாக சோவியத் அதிபர் நிகிட்டா குருசேவ் வியன்னா மாநாட்டில் அச்சுறுத்தினார்.

1967: பிரித்தானிய விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 72 பேர் பலி.

1970: பிரிட்டனிடமிருந்து டொங்கா சுதந்திரம் பெற்றது.

1988: சோவியத் யூனியன் ரயிலொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 91 பேர்பலி. 1500 பேர் காயம்.

1989: ஈரானிய இஸ்லாமிய குடியரசின் ஆன்மீக தலைவராக ஆயதுல்லா கொமேய்னி தெரிவுசெய்யப்பட்டார்.

1989: சீனாவின் தியன்னமென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் சீன இராணுவத்தினரால் துப்பாக்கியால் சுடப்பட்டும் இராணுவத் தாங்கிகள் ஏற்றப்பட்டும் கொல்லப்பட்டனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 6 Jun 2012 - 6:47

ஜூன் 5


1849: டென்மார்க் அரசிலமைப்பின்படி முடிக்குரிய இராஜ்ஜியமாகியது.

1917: அமெரிக்காவில் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு ஆரம்பமாகியது.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 6-day-war

1942: 2 ஆம் உலக யுத்தத்தில் பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா மீது அமெரி;க்கா யுத்தப் பிரகடனம் செய்தது.

1944: பிரித்தானிய குண்டு வீச்சு விமானங்கள் நோர்மன்டி கரையோரத்தில் ஜேர்மன் நிலைகள் மீது சுமார் 5000 தொன் எடையுள்ள குண்டுகளை வீசின.

1967: எகிப்து, ஜோர்டான், சிரியா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. 6 நாள் யுத்தம் ஆரம்பம்.

1959: முதலாவது சிங்கப்பூர் அரசாங்கம் பதவியேற்றறது.

1968: படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடியின் இளைய சகோதரரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ரொபர்ட் எவ். கென்னடி துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தார். மறுநாள் அவர் உயிரிழந்தார்.

1975: 6 நாள் யுத்தத்தின்பின் சுயஸ் கால்வாய் முதல் தடவையாக திறக்கப்பட்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 6 Jun 2012 - 6:49

ஜூன் 06

1644: சீனாவில் மிங் வம்ச ஆட்சி முடிந்து குய்ங் வம்ச ஆட்சி ஆரம்பமாகியது. இது 1912 வரை தொடர்ந்தது.

1674: மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவாஜி மன்னராக முடிசூட்டப்பட்டார்.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Bomby

1752: மொஸ்கோ நகரில் ஏற்பட்ட பாரிய தீயினால் 18000 வீடுகள் உட்பட பெரும் எண்ணிக்கையான கட்டிடங்கள் அழிந்தன.

1808: நெப்போலியன் போனபார்ட்டின் சகோதரரர் ஜோஸப் போனபார்ட் ஸ்பெய்ன் மன்னராக முடிசூடினார்.

1859: அவுஸ்திரேலியாவில் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து பிரிந்து குயின்ஸ்லாந்து மாநிலம் ஸ்தாபிக்கப்பட்டது.

1882: பம்பாய் நகரில் வீசிய சூறாவளியினால் சுமார் 100,000 பேர் பலி.

1944: 2 ஆம் உலக யுத்தத்தில், ஜேர்மனிக்கு எதிராக நேச நாடுகளைச் சேர்ந்த சுமார் 155,000 துருப்புகள் பிரான்ஸின் நோர்மண்டி கடற்கரையில் தரையிறங்கின.

1981: இந்தியாவில் ரயிலொன்று பாலத்திலிருந்து விலகி, பக்மதி நதியில் விழுந்ததால் 300 இற்கும் அதிகமானோர் பலி.

1993: மொங்கோலியாவில் முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sat 9 Jun 2012 - 12:17

ஜூன் 07
1654: பிரான்ஸில் 14 ஆம் லூயி மன்னரானார்.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Cricket1

1692: ஜமைக்காவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 1600 பேர் பலியாகினர்.

1905: சுவீடனிலிருந்து பிரிவதற்கு நோர்வே நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

1945: வெளிநாட்டில் வசித்த நோர்வே மன்னர் 7 ஆம் ஹக்கோன், 5 வருடங்களின்பின் குடும்பததுடன் தாயகம் திரும்பினார் .

1975: முதலாவது உலகக்கிண்ணப் போட்டி இங்கிலாந்தில் ஆரம்பமாகியது

1989:; ஈராக்கின் அணு உலையை இஸ்ரேலிய விமானங்கள குண்டுவீசி அழித்தன.

1989: சூரினாம் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் விமானத்திலிருந்த 187 பேரில் 176 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sat 9 Jun 2012 - 12:19

ஜூன் 08


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Rocket1783: ஐஸ்லாந்தின் லேக்கி எரிமலை வெடித்தது. தொடர்ச்சியாக 8 மாதங்கள் எரிமலை குழம்பு வெளியாகிய நிலையில் சுமார் 9000 பேர் பலியாகினர். 7 வருடகால பஞ்சம் ஆரம்பித்தது.

1941: 2 ஆம் உலக யுத்தத்தில் சிரியா, லெபனான் மீது நேச நாடுகள படையெடுத்தன.

1953: அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் டோர்னடோ சுழற்காற்றினால் 115 பேர் பலி.

1959: அமெரிக்க தபால் திணைக்களம் ஏவுகணை மூலம் தபால் அனுப்புவதற்கான சோதனையை மேற்கொண்டது. அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பலான யூ.எஸ்.எஸ். பார்பெரோவிலிருந்து தபால்கள் அடங்கிய ஏவுகணையொன்று ஏவப்பட்டது. எனினும் இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை.

1984: அவுஸ்திரேலியாவின் நியூசௌத் வேல்ஸ் மாநிலத்தில் ஒருபாலினத் திருமணம் சட்டபூர்வமானதாக்கப்பட்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 4 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 37 Previous  1, 2, 3, 4, 5 ... 20 ... 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum