சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள் Khan11

'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள்

Go down

'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள் Empty 'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள்

Post by ahmad78 Tue 28 Feb 2012 - 15:08

'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள் 250pxcloudsoverafrica
'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள்


இன்றைய நவீன அறிவியலறிஞர்கள் மற்றும் வானியல் வல்லுனர்கள் மேகங்களின் வகைகளைப் பற்றியும், அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் பல அறிய தகவல்களை சேகரித்துள்ளனர். வானியல் வல்லுனர்கள் தகவல்ப்படி, மழை மேகங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான காற்றினாலும், மேகக் கூட்டங்களினாலும் ஓன்று திரட்டப் பட்டு இணைந்து தமக்குரிய வடிவத்தைப் பெறுகின்றன. மேகங்களின் கூட்டத்தில் ஒரு வகையான மேகமே திரள் கார்முகில்(cumulonimbus cloud) மேகமாகும். இந்த திரள் கார்முகில் எனும் மேகம் எங்கனம் உருவாகின்றது? அவை எவ்வாறு மழை மற்றும் ஆலங்கட்டி (hail) மழையைப் பொழிகின்றது? மின்னல்கள் எவ்வாறு தோன்றுகின்றன? போன்ற பல கேள்விகளுக்கான தகவல்களை சேகரித்துள்ளனர்.

கீழ்க்காணும் படிகளின் மூலம் திரள் கார்முகில் மேகங்கள் மழையை உருவாக்குகின்றன:


1. மேகங்கள் காற்றினால் உந்தப்படுதல்:
சின்ன சின்ன துகள்களாக பிரிந்து கிடக்கும் மேகங்களை காற்று உந்துவதனால் திரள் கார்முகில் மேகங்கள் உருவாகின்றன. இந்த சிறிய துகள்களான மேகங்களை நாம் முகிற் கூட்டத்திரள் (cumulus cloud)என்கிறோம்.

'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள் Thequranonclouds002

படம் 1. செயற்கைக்கோள் புகைப்படம் மேகங்கள் காற்றினால் B,C மற்றும் D பகுதிகளில் ஒன்று சேருவதைக் காணலாம். அம்புக்குறி காற்றின் திசையை குறிக்கிறது.
'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள் Thequranonclouds003
படம் 2. சிறிய துகள்களான முகிற் கூடத்திறல் மேகங்கள் அதன் இணைப்பு பகுதியான அடிவானத்தின் பக்கம் ஒன்று சேருகின்றன.


2. இணைதல்:


இச்சிறிய மேகக் கூட்டங்கள் காற்றின் உந்துதலால் ஒன்றோறொன்று இணைந்து பெரிய மேகங்களை அதாவது கார் முகில்திரள் மேகங்களை உருவாக்குகின்றன.
'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள் Thequranonclouds004
படம் 3A. தனித் தனியாக பிரிந்து இருக்கும் முகிற் கூட்டதிரள் மேகங்கள். (3B). சிறிய மேகங்கள் ஒன்றிணைவதால் மேல்நோக்கு காற்றின் மின்னோட்டத்தினால் அடுக்காக உயரத் தொடங்குகின்றன. நீர் துளிகள் ' .' என்பதால் குறிப்பிடப்பட்டுள்ளது.


3. அடுக்கு வரிசை:


சிறிய மேகக்கூட்டங்கள்(முகிற் கூட்ட திரள்) ஒன்றோறொன்று இணையும் போது உருவாகும் பெரிய(திரள் கார்முகிற்) மேகங்களினுள் மேல் நோக்கிய காற்று மின்னோட்டம்(updraft) அதிகரிக்கின்றது. இத்திரள் கார்முகில் மேகத்தின் மையப் பகுதியில் மற்ற ஓரப் பகுதிகளை விட காற்றின் மின்னோட்டம் வலிமையானதாக இருக்கும். இந்த மேல் நோக்கு காற்று மின்னோட்டத்தின் காரணமாக மேகப் பகுதிகள் செங்குத்தாக உயரத் தொடங்குகிறது. (பார்க்க படம்: 3B, 4&5). இம்மேகங்கள் செங்குத்தாக உயருவதினால் மேகத்தின் உடல் இழுக்கப் பட்டு வளிமண்டலத்தில் பரந்து குளிர்வான பகுதியை தோற்றுவிக்கும். ஆதலால் இம்மேகங்களிலுள் நீர்த் துளிகளும் மற்றும் ஆலங்கட்டிகளும் உருவாகிப் பின் அவைகள் இன்னும் அதிக அதிகமாக கூடத் தொடங்குகின்றன. எப்போது இந்த நீர்த் துளிகளும், ஆலங்கட்டிகளும் மேகத்தில் அதிகரித்து அதன் உச்சநிலையை தொடுகின்றதோ காற்றின் மின்னோட்டத்தின் உதவியால் மழை மற்றும் ஆலங்கடிகளாய் பொழிகின்றது.


'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள் Thequranonclouds005
படம் 4. திரள்கார்முகில் மேகம். அவை அடுக்குகளாய் உயர்ந்து பின் மழை பொழியத் தொடங்குகின்றது.


அல்லாஹ்(swt) தனது திருக் குர்ஆனில் கூறுகிறான்:


(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; (அல்-குர்ஆன்: 24:43)


இன்று வானியல் வல்லுனர்கள் செயற்கைக்கோள், கணிப்பொறி உள்ளிட்ட பல நவீன உபகரணங்களை பயன்படுத்தி மேகங்களின் வடிவத்தையும், அவை இணைவதைப் பற்றியும், அதன் செயல்பாடுகளைப் பற்றியும் இத்தகைய தகவலைப் பெற்றுள்ளனர். மேலும் காற்றின் திசை, ஈரத்தன்மை மற்றும் காற்றழுத்தம் அவைகளின் வேறுபாடுகளை அறிய பல நவீன கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு சேகரிக்கப்பட்ட உண்மையான தகவலைத் தான் 1400 ஆண்டுகளுக்கு முன் இறக்கப்பட்ட இறை வேதமான திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியிருக்கின்றான். அதே வசனத்தில் இறைவன் கூறுகின்றான்:


இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. (அல்-குர்ஆன்: 24:43)


பனிக்கட்டி மழை பொழியும் திரள் கார் முகில் மேகங்கள் சுமார் 25,000 அடி முதல் 30,000 அடிவரை (4.7 to 5.7 மைல்கள்) உயரம் வரை உயர்ந்த மலைகளைப் போன்று வளரக்கூடியது என்று வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். அல்லாஹ்(SWT) இதைத்தான் குர் ஆனில் 'வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து' என்று கூறுகின்றான்.


'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள் Thequranonclouds006
படம் 5. மலை போன்று உயர்ந்து நிற்கும் திரள் கார் மேகம்(cumulonimbus cloud).


பொருளடர்ந்த இவ்வசனத்தில் அல்லாஹ்(SWT) 'மின்னொளி' அதாவது மின்னல் பற்றி கூறியிருக்கின்றான். ஆலங்கட்டி மழையுடன் மின்னலை ஏன் சம்பந்தபடுத்தினான்? மின்னல்கள் உருவாக ஆலங்கட்டி ஒரு முக்கிய காரணியாக இருக்குமோ? என்றெல்லாம் கேள்விகள் எழலாம். மேகங்களில் உள்ள பனிக்கட்டிகள் மேகத்தின் அதிக குளிர்ச்சியான நீர்த்துளிகள் மற்றும் பனிப் படிகங்களின் வழியாக கீழே விழும்போது மேகங்கள் மின்னூட்டம் பெறுகின்றன என்று 'இன்றைய வானிலை' என்ற புத்தகம் மின்னலைப் பற்றி கூறுகின்றது.


மேகங்களினுள் இருக்கும் திரவ நீர்த்துளிகள் பனிக்கட்டிவுடன் மோதும் போது, அவை உறைந்து உள்ளுறை வெப்பத்தினை(Latent Heat) வெளிப்படுத்துகிறது. இதனால் பனிக்கட்டியின் வெளிப்புறம் சுற்றியிருக்கும் பனிப்படிகங்களைக் காட்டிலும் வெதுவெதுப்பாக இருக்கும். எப்பொழுது இந்த வெதுவெதுப்பான பனிக்கட்டிகள் சுற்றியுள்ள பனிப்படிகங்களைக் தொடுகின்றதோ அப்பொழுதுதான் முக்கியமான மின்னியல் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.


'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள் Thequranonclouds007
படம் 6. மின்னல்


குளிர்சியானப் பனிப்படிகங்களிலிருந்து வெதுவெதுப்பான பனிக் கட்டியின் இலக்கிற்கு எலெக்ட்ரான் பாய்ச்சல் நிகழ்கின்றது. இதனால் பனிக்கட்டி எதிர் மின்னோட்டம் பெறுகின்றது. இதைப்போன்ற நிகழ்வுதான் அதிக குளிர்ச்சியான நீர்த் துளிகள் பனிக்க்கட்டியுடன் மோதும் போதும் நிகழ்கின்றன. இதனால் குளிர்ச்சியான நீர்த்துளிகள் நேர் மின்னோட்டம் பெற்று சிறிய பனித் துளிகளாகப் பிரிந்து விடுகின்றது. குறைவான எடை கொண்ட இந்த சிறிய நேர் மின்னோட்டம் காற்றின் மேல் நோக்கு விசையால் மேகத்தின் மேல் பகுதிக்கு எடுத்துசெல்லப் படுகிறது. இறுதியாக பனிக்கட்டி எதிர் மின்னோட்டம் பெற்று மேகத்தின் கீழ் பகுதியில் தங்கிவிடுகிறது. எனவே மேகத்தின் கீழ் பகுதி எதிர் மின்னோட்டம் பெறுகின்றது. இந்த எதிர் மின்னோட்டம் மேகத்திலிருந்து மின்னலை வெளிப்படுத்துகின்றது. இவற்றிலிருந்து பனிக்கட்டிகள் மின்னல் தோன்ற ஒரு முக்கிய காரணியாக இருப்பதாக நாம் தீர்மானிக்கலாம்.


அல்லாஹ்(SWT) இவ்வாறாக தனது வசனத்தில் மழையைப் பற்றியும், பனிக்கட்டிகளைப் பற்றியும் மற்றும் மின்னல்களைப் பற்றியும் விவரிக்கின்றான். இறைவன் கூறும் இவ்வசனங்களின் விளக்கங்களை இன்றைய நவீன அறிவியலின் உதவிகொண்டு நாம் அறிகின்றோம். இத்தகைய பல்வேறு அறிவியல் நுட்பங்களை தன்னுள் கொண்டிருக்கின்ற அருள் மறை திருக்குர்ஆன் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனிடமிருந்துதான் இறக்கப்பட்டது என்பதை நிச்சயமாக கூறமுடியும். 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன் கூறுவது போன்று நுட்பங்களைக் எந்த மனிதனாலும் கூறியிருக்க முடியாது என்பது உறுதியாகிறது. ஆகவே வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே! அவனிடமிருந்து முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மூலம் இவ்வுலகிற்கு அளிக்கப் பட்ட அருட்கொடையே கண்ணியமிக்க திருக்குர்ஆன் என்று நான் சாட்சி கூறுகிறேன்.
நன்றி: http://naharvu.blogspot.in


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum