சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

குர்ஆன்-பற்றி அறிவோம்.. Khan11

குர்ஆன்-பற்றி அறிவோம்..

5 posters

Go down

குர்ஆன்-பற்றி அறிவோம்.. Empty குர்ஆன்-பற்றி அறிவோம்..

Post by ராகவா Wed 18 Sep 2013 - 12:57

குர்ஆன் அல்லது திருக்குர்ஆன் (Qur'an, القرآن)இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். முகம்மது நபிக்கு இறைவனால் அருளப்பட்டதாக குர்ஆன் நம்பப்படுகின்றது. மொத்தமாக அன்றி சிறுக சிறுக கால நேரத்திற்கு ஏற்ப குர்ஆன் அருளப்பட்டது. இது சூரா எனப்படும் 144 அத்தியாயங்களை கொண்டது.
குர்ஆன்-பற்றி அறிவோம்.. 352px-FirstSurahKoran

உள்ளடக்கம்

1. தோற்றுவாய்
2. பசு மாடு
3. இம்ரானின் சந்ததிகள்
4. பெண்கள்
5. ஆகாரம்
6. ஒட்டகம்
7. சிகரங்கள்
8. வெற்றிப்பொருள்கள்
9. மன்னிப்பு தேடுதல்
10. யூனுஸ்
11. ஹூது
12. யூஸுப்
13. இடி
14. இப்ராஹீம்
15. மலைப்பாறை
16. தேனி
17. இஸ்ராயீலின் சந்ததிகள்
18. குகை
19. மர்யம்
20. தாஹா
21. நபிமார்கள்
22. ஹஜ்
23. விசுவாசிகள்
24. பேரொளி
25. பிரித்தறிவித்தல்
26. கவிஞர்கள்
27. எறும்புகள்
28. வரலாறுகள்
29. சிலந்தி
30. ரோமப் பேரரசு
31. லுக்மான்
32. சிரம் பணிதல்
33. சதிகார அணியினர்
34. ஸபா
35. படைப்பவன்
36. யாஸீன்
37. அணிவகுப்புகள்
38. ஸாத்
39. கூட்டங்கள்
40. ஈமான் கொண்டவர்
41. ஹாமீம் ஸஜ்தா
42. கலந்தாலோசித்தல்
43. பொன் அலங்காரம்
44. புகை
45. முழந்தாளிடுதல்
46. மணல் திட்டுகள்
47. முஹம்மது
48. வெற்றி
49. அறைகள்
50. ஃகாஃப்
51. சூராவளி
52. மலை
53. நட்சத்திரம்
54. சந்திரன்
55. அளவற்ற அருளாளன்
56. மாபெரும் நிகழ்ச்சி
57. இரும்பு
58. தர்க்கித்தல்
59. ஒன்று கூட்டுதல்
60. பரிசோதித்தல்
61. அணிவகுப்பு
62. வெள்ளிக் கிழமை
63. நயவஞ்சகர்கள்
64. நஷ்டம்
65. விவாகரத்து
66. விலக்குதல்
67. ஆட்சி
68. எழுதுகோல்
69. நிச்சயமானது
70. உயர்வழிகள்
71. நூஹ்
72. ஜின்கள்
73. போர்வை போர்த்தியவர்
74. போர்த்திக்கொண்டிருப்பவர்
75. மறுமை நாள்
76. காலம்
77. அனுப்பப்படுபவை
78. பெரும் செய்தி
79. பறிப்பவர்கள்
80. கடுகடுத்தார்
81. சுருட்டுதல்
82. வெடித்துப் போதல்
83. நிறுவை மோசம் செய்தல்
84. பிளந்து போதல்
85. கிரகங்கள்
86. விடிவெள்ளி
87. மிக்க மேலானவன்
88. மூடிக் கொள்ளுதல்
89. விடியற்காலை
90. நகரம்
91. சூரியன்
92. இரவு
93. முற்பகல்
94. விரிவாக்கல்
95. அத்தி
96. இரத்தக்கட்டி
97. கண்ணியமிக்க இரவு
98. தெளிவான ஆதாரம்
99. அதிர்ச்சி
100. வேகமாகச் செல்லுபவை
101. திடுக்கிடசெய்யும் நிகழ்சி
102. பேராசை
103. காலம்.
104. புறங்கூறல்
105. யானை
106. குறைஷிகள்
107. அற்பப் பொருட்கள்
108. மிகுந்த நன்மைகள்
109. காஃபிர்கள்
110. உதவி
111. ஜுவாலை
112. ஏகத்துவம்
113. அதிகாலை
114. மனிதர்கள்

முன்பே குர் ஆன் பற்றி விளக்கம் இருந்தால் இதை நீக்கவும்..
நன்றி:தளம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

குர்ஆன்-பற்றி அறிவோம்.. Empty Re: குர்ஆன்-பற்றி அறிவோம்..

Post by பானுஷபானா Wed 18 Sep 2013 - 13:11

பகிர்வுக்கு நன்றீ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குர்ஆன்-பற்றி அறிவோம்.. Empty Re: குர்ஆன்-பற்றி அறிவோம்..

Post by ராகவா Wed 18 Sep 2013 - 13:12

வரலாறு

திருகுர்ஆனின் தோற்றம்
குர்ஆன்-பற்றி அறிவோம்.. Iqra
திருகுர்ஆனின் 96வது அத்தியாயமான "இரத்தக்கட்டி"-ன் ஆரம்பம். கிரா குகையில் வைத்து முதன் முதலாக முகம்மது நபிக்கு கற்றுக்கொடுக்கப்பட வசனமாக நம்பப்படுவது

திருகுர்ஆனின் 96வது அத்தியாயமான "இரத்தக்கட்டி"-ன் ஆரம்பம். கிரா குகையில் வைத்து முதன் முதலாக முகம்மது நபிக்கு கற்றுக்கொடுக்கப்பட வசனமாக நம்பப்படுவது
முகம்மது நபி தனது ஓய்வு நேரங்களில் மெக்காவின் அருகில் இருக்கும் கிரா குகையில் தியானம் இருப்பது வழக்கம். அவ்வாறான ஒரு நாளில் குகையில் இருந்து திரும்பி வந்த முகம்மது தனது மனைவி கதீசாவிடம், தன்னை குகையில் சந்தித்த ஒரு வானவர் தனக்கு இறைவனின் செய்தியை அறிவித்ததாக கூறினார். அவ்வாறு அவர் அறிவித்ததாக கூறிய செய்தியே திருகுர்ஆனின் தொடக்கம் ஆகும். அன்று தொடங்கி தனது இறப்பு வரையில் சுமார் 23 வருடங்கள் அவர் இவ்வாறான இறைவசனங்கள் கிடைக்கப் பெறுவதாக கூறினார். ஆனால் இவ்வாறு கூறப்பட வசனங்கள் வரிசைக்கிரமமாக கூறப்படவில்லை. முன்னும் பின்புமாக பல வசனங்கள் இருந்தன. பின் அவை எவ்வாறு தொகுக்கப்பட வேண்டும் எனபதையும் முகம்மது நபியே கற்பித்தார். வானவர் யிப்ரயீலே தனக்கு இதை கற்பித்ததாகவும், ஒவ்வொரு வருடமும், அவர் இதை தனக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி செல்வதாகவும் முகம்மது நபி கூறினார்.
குர்ஆன்-பற்றி அறிவோம்.. 287px-Surat_al-Fatiha_inscribed_upon_the_shoulder_blade_of_a_camel

ஒட்டகத்தின் எலும்பில் எழுதப்பட்ட திருகுர்ஆனின் வசனங்கள்
முகம்மது நபி கூறிய திருகுர்ஆன் வசனங்கள் அவரது தோழர்களால் மனனம் செய்யப்பட்டும், காய்ந்த களிமன் சட்டங்கள், பனை ஓலைகள், விலங்குகளின் தோல் மற்றும் எலும்புகளில் ஆகியவற்றில் எழுதப்பட்டும் பாதுகாக்கப்பட்டன. மேலும் இசுலாமியர்கள் தங்களின் பிராத்தனைகளின் போது, திருகுர்ஆனின் வசனங்களை உச்சரிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர். இதன் மூலமும் திருகுர்ஆனின் வசனங்கள் சுலபமாக மனனம் செய்யபட்டன. இருப்பினும் முகம்மது நபியின் காலத்தில் திருகுர்ஆன் முழுமையாக எழுத்து வடிவில் தொகுக்கப்படவில்லை.

திருகுர்ஆன் தொகுப்பு

முகம்மது நபியின் மறைவுக்கு பின்பு இசுலாமியர்களின் முதல் கலீபாவான அபூபக்கரின் ஆட்சிக் காலத்தில் யமாமா போர் ஏற்பட்டது. பொ.ஆ 633ல் ஏற்பட்ட இந்த போரின் போது திருகுர்ஆனை மனனம் செய்த இசுலாமியர்களில் 70க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். இதில் திருகுர்ஆனை முழுமையாக மனனம் செய்தவரும், பலருக்கு அதை கற்பித்தவருமான சலீமின் மரணம் மிக முக்கியமானது. இதனைத் தொடர்ந்து அபுபக்கரைச் சந்தித்த உமர் பின் கத்தாப், திருகுர்ஆனின் பிரதிகளை எழுத்து வடிவில் தொகுக்க வேண்டிய கட்டாயத்தை தெரிவித்தார். இதற்கு முதலில் தயங்கிய அபூபக்கர், பின்னர் உமரின் கோரிக்கையை ஏற்று சைத் பின் சாபித் என்பவரை இந்த தொகுக்கும் பணிக்கு நியமித்தார்.
சைத் பின் சாபித், முகம்மது நபியின் வீட்டிலும் மற்றவர்களிடம் இருந்த திருகுர்ஆனின் எழுத்துப் பிரதிகளை சேகரிக்கத் தொடங்கினார். கூடவே திருகுர்ஆனை மனனம் செய்தவர்கள் மூலமாகவும் புதிய எழுத்துப் பிரதிகளையும் உருவாக்கினார். பின்னர் இவை பலமுறை முகம்மது நபியால் கற்பிக்கப்பட்ட வரிசையின்படி சரிபார்க்கப்பட்ட பின் மூல பிரதி தயாரிக்கப்பட்டு அபுபக்கரின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டது. அவரின் மரணத்திற்கு பின் அந்த மூலப் பிரதி, உமர் பின் கத்தாப் மூலம் அவரின் மகளும், முகம்மது நபியின் மனைவியுமான கப்சாவை வந்தடைந்தது.

திருகுர்ஆன் நகலாக்கம்

குர்ஆன்-பற்றி அறிவோம்.. 800px-Uthman_Koran_Taschkent_a
சமர்கன்ட் கையெழுத்துப் பிரதிகள். உதுமானின் காலத்திய திருகுர்ஆனின் கையெழுத்துப்பிரதியாக நம்பப்படுவது.
அபுபக்கர் காலத்தில் திருகுர்ஆன் தொகுக்கப்பட்ட போதிலும், அது முழுமையான மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. மேலும் இது ஒரே புத்தக வடிவில் இல்லாமல், தனித்தனி அத்தியாயங்களாகவே தொகுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருகுர்ஆனை கற்பிப்பதில் பல தவறுகள் ஏற்படத் தொடங்கின. குறிப்பாக நான்காவது கலீபாவான உதுமான் காலத்தின், இசுலாமிய பேரரசு எகிப்து முதல் பாரசீகம் வரை பரந்து விரிந்திருந்தது. இந்த காலத்தில் பல பிரதேசங்களில் இருந்த கல்வியாளர்கள் தங்களுக்கு தெரிந்த அளவிலே திருகுர்ஆனை கற்பிக்க முற்பட்டனர். இது பல இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து திருகுர்ஆனை தொகுக்கும் பணி மீண்டும் சைத் பின் சாபித்தால் தொடங்கப்பட்டது. முன்பு தொகுக்கப்பட்ட மூலப்பிரதிகளை கப்சாவிடம் இருந்து பெற்ற சைத் பின் சாபித், உதுமானின் அறிவுரைப்படி அதை புத்தக வடிவில் தொகுக்கத் தொடங்கினார். இதன் படி அளவில் பெரியதாக இருக்கும் அத்தியாயங்களில் தொடங்கி அளவில் சிறியதாக இருக்கும் அத்தியாயங்கள் வரை வரிசைக் கிரமமாக தொகுக்கப்பட்டன. பின்னர் இந்த வரிசையிலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. இறுதியாக தொகுக்கப்பட்ட திருகுர்ஆன், உதுமானால் அதிகாரப்பூர்வமான திருகுர்ஆன் பிரதியாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற அத்தியாய வரிசைகளில் இருந்த மற்ற திருகுர்ஆன்கள் அழிக்கப்பட்டன.
தொடர்ந்த நாட்களில் மீண்டும் சைத் பின் சாபித்தின் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, புதிய திருகுர்ஆன் தொகுப்புகளை நகல் எடுக்கும் பணி தொடங்கப்பட்டது. இவ்வாறு நகல் எடுக்கப்பட்ட திருகுர்ஆன்கள் இசுலாமிய பேரரசின் பிற பகுதிகளுக்கு அனுப்பப் பட்டதோடு, அவற்றில் இருந்து வேறு நகல்கள் எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டன.. இந்த திருகுர்ஆனின் நகல்களே அடிப்படையிலேயே இன்றளவும் திருகுர்ஆன் தயாரிக்கப்படுகின்றன.

பிற சேர்க்கைகள்

குர்ஆன்-பற்றி அறிவோம்.. 800px-Quran-Mus%27haf_Al_Tajweed


படிப்பதற்கு ஏதுவான வகையில் வெவ்வேறு நிறங்களுடனும், நிறுத்தக் குறிகளுடனும் அச்சடிக்கப்பட்ட திருகுர்ஆன்
திருகுர்ஆனின் தொகுப்பானது புத்தக வடிவில் தொகுக்கப்பட்ட பின்பு, மேலும் சிலரால் இதில் இன்னும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இவை திருகுர்ஆனின் வசனங்களில் அன்றி திருகுர்ஆனை படிப்பதற்கு ஏதுவாக அதன் நடைத் தொகுப்பில் செய்யப்பட்டன.

யுசூவு

திருகுர்ஆனின் மொத்த வார்த்தைகளின் அடிப்படையில், அது 30 பெரும் பாகங்களாக பிரிக்கப்பட்டன. இவை யுசூவு (ஜுஸ்வு) என அழைக்கப்படுகின்றது. ஒருவர் ஒரு மாதத்தில், மொத்த திருகுர்ஆனையும் படித்து முடிக்கும் வகையில் அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்சில்

முப்பது பாகங்கள் போல, வாரத்திற்கு ஒரு முறை முழு திருகுர்ஆனையும் படித்து முடிக்கும் வகையில் குரான் ஏழு பிரிவாகவும் சிலரால் பிரிக்கப்பட்டுள்ளது. இது மன்சில் என அழைக்கப்படுகின்றது. இதன் அடையாளம் திருகுர்ஆனின் ஓரங்களில் குறிப்பிடப்படுகின்றன.

ருகூவு

பிராத்தனையின் போது, ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு வசனங்களை உச்சரிக்கலாம் என கனக்கிடும்படி திருகுர்ஆனின் அத்தியாயங்கள் சிலரால் பிரிக்கப்பட்டன. இவை ருகூவுகள் என அழைக்கப்படுகின்றன. இவை திருகுர்ஆனின் ஓரங்களில் ع எனும் எழுத்தால் குறிக்கப்படுகின்றன.

மக்கீ, மதனீ


திருகுர்ஆனின் வசனங்கள் அவை முகம்மது நபியால் கூறப்பட்ட இடங்களின் அடிப்படையில் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டன. மெக்காவில் வைத்து கூறப்பட்ட வசனங்கள் மக்கீ எனவும், மதினாவில் வைத்து கூறப்பட்ட வசனங்கள் மதனீ எனவும் அழைக்கப்பட்டன. சில திருகுர்ஆன் பதிப்புகளில் இவை ஒவ்வொரு வசனங்களின் தலைப்பிலும் குறிக்கப்பட்டன.

குரான் மொழிபெயர்ப்பு


குர்ஆன்-பற்றி அறிவோம்.. Alcoran_de_Mahomet_1647
1647ல் அச்சிடப்பட்ட இலத்தீன் குரான்

அரபு மொழியில் இருக்கும் குரானின் வசனங்கள் இறைவனின் நேரடி வார்த்தைகள் என்ற இசுலாமிய நம்பிக்கையின் காரணமாக, குரானை மொழிபெயர்ப்பது பல காலம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும் உதுமானல் தொகுக்கப்பட்ட குரானானது பழைய அரபு மொழியை கொண்டு எழுதப்பட்டது. அதில் உயிர், மெய் குறியீடுகள் கிடையாது. எனவே இதை மொழிபெயர்க்கும் போது அர்த்தங்கள் மாற வாய்ப்புண்டு எனவும் கருதப்பட்டது.
இருப்பினும் முகம்மது நபியின் காலத்திலேயே சில அத்தியாயங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. சாபர் பின் அபுதாலிப் என்பவரால், மரியம் அத்தியாயத்திலுள்ள முதல் நாற்பது வசனங்கள் அம்காரிக்கு மொழிபெயர்க்கப்பட்டது. போலவே சல்மான் என்பவரால் குரானின் முதல் அத்தியாயமான அல்-பாத்திகா பாரசீகத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது.
பொ.ஆ 884ல், சிந்து மாகாணத்தை ஆண்டு வந்த இந்து அரசரான மெகுருக் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில் அப்துல்லா பின் உமர் என்பரின் தலைமையில் எழுதப்பட்டதே குரானின் முழுமையான முதல் மொழிபெயர்ப்பு ஆகும். ஆகினும் இது எந்த மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை. இதன் பிறகு இராபர்ட் என்பவரால் 1143ல் இலத்தீன் மொழிக்கு குரான் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதன் அச்சுப்பதிப்பு 1543ல் வெளிவந்தது. தொடர்ந்து இடாய்ச்சு, பிரெஞ்சு ஆகிய மொழிகளுக்கும் குரான் மொழிபெயற்கப்பட்டது. முதல் ஆங்கில குரான் 1649ல் வெளிவந்தது. அலெக்சான்டர் ரூசு என்பவர் இதை மொழிபெயர்த்திருந்தார்.

தமிழ் குரான்

தமிழில் முதல் குரான் மொழிபெயர்ப்பு 1943ல் வெளிவந்தது. அப்துல் கஃகீம் பாகவி என்பவரால் இது எழுதப்பட்டது. தொடர்ந்து, முகம்மது ஃசான் என்பவரால் 1983ல் மற்றொரு மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டது. இன்று பல அமைப்புகள் மற்றும் பதிப்பகத்தால் குரான் தமிழாக்கங்கள் வெளியிடப்படுகின்றன.

இசுலாமில் குரானின் முக்கியத்துவம்

குரான் இசுலாய கலாச்சாரத்தின் மிக முக்கியமான அங்கம் ஆகும். இதில் உள்ளவை இறைவனின் நேரடி வார்த்தைகள் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. உலகின் மிகவும் தூய்மையான, அழிவற்ற, மாற்றமில்லாத ஒரே பொருள் குரான் என்பது இசுலாமின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. மேலும் இது மனிதர்களுக்கு இறைவனின் புறத்திலிருந்த வந்த கடைசிக் கொடை எனவும் சொல்லப்படுவதுண்டு. குரான் முகம்மது நபிக்கு கொடுக்கப்பட்ட நாளாக கருதப்படும் லைலத்துல் கத்ர், இசுலாமிய வணக்க வழிபாட்டின் முக்கிய இரவு ஆகும். ஆயிரம் மாதங்களுக்கு சமாமான ஒரு இரவாக இது இசுலாமியர்களால் மதிக்கப்படுகின்றது.
இசுலாமிய வாழ்வியல் மற்றும் சட்டம் ஆகியவற்றின் முக்கிய மூல நூலாக குரான் திகழ்கின்றது. மனிதனின் அன்றாட வாழ்வியல் நடைமுறைகள் தொடங்கி சட்ட திட்டம் வரை அனைத்திற்குமான ஆதாரக் குறிப்புகள் இதிலிருந்தே பெறப்படுகின்றன. இசுலாமிய சரியத் சட்டங்களும் குரான் கூறும் கருத்துக்களின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இசுலாமிய வணக்கத்திலும் குரானின் வசனங்களே படிக்கப்படுகின்றன. மேலும் இதன் புனிதத்தன்மையை தெளிவாக்கும் பொருட்டு, குரானை அசுத்தமான நிலையில் தொடவோ அல்லது வாசிக்கவோ இசுலாம் தடைசெய்துள்ளது. உழு எனப்படும் அங்கசுத்தி முறையில் தம்மை சுத்தப்படுத்திக் கொள்வது குரானை தொடும்முன் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிமாக்கப்பட்டுள்ளது.

இசுலாமிய கலைகளில் குரானின் தாக்கம்

இசுலாமியக் கலைகளில், குறிப்பாக இசுலாமிய கட்டடக்கலையில் குரானின் தாக்கம் அதிகம். மனித மற்றும் விலங்குகளின் சிலைகளை உருவாக்குவதற்கான இதன் தடையை அடுத்து அவ்வாறான சிலைகள் மற்றும் சித்திரங்கள் இல்லாத வகையில் பல கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. இவற்றிற்கு மாற்றாக மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய மலர் அலங்காரங்கள் மற்றும் குரானின் வசனங்கள் அந்த கட்டிடங்களில் செதுக்கப்பட்டன. இது புதிய இசுலாமிய கட்டிடக்கலையின் தொடக்கமாக அமைந்தது.
அதே போல தோட்டக்கலையிலும், குரானின் ஆதிக்கம் இருந்தது. இசுலாமிய கலீபாக்களின் காலத்தில், அவர்களின் அரண்மனைகள், பள்ளிவாயில்கள், சமாதிகள் போன்றவற்றை சுற்றி தோட்டங்கள் அமைக்கப்பட்டன. இவை குரானில் கூறப்படும் சொர்க்கத்தின் அமைப்பை ஒத்து வடிவமைக்கப்பட்டன. இவ்வகையான தோட்ட அமைப்பு முறை பிற்காலத்தில் இசுலாமிய தோட்டக்கலை என அறியப்பட்டு பிரபலமானது. இவை தவிர்த்து, இசுலாமிய எழுத்தணிக்கலை, ஒவியங்கள், கண்ணாடிப் பொருட்கள், செராமிக் மற்றும் நெசவுக்கலை போன்றவற்றிலும் குரானின் தாக்கம் உள்ளது.
குர்ஆன்-பற்றி அறிவோம்.. 800px-Ceiling_in_Alhambra
மம்லுக் காலத்திய கண்ணாடி விளக்கு.


நுணுக்கமான வேலைபாடுகளுடன் கூடிய மாடம். இடம்-அல்கம்பிரா மாளிகை, எசுப்பானியம்.
குர்ஆன்-பற்றி அறிவோம்.. 398px-Mosque_lamp_Met_91.1.1534
குர்ஆன்-பற்றி அறிவோம்.. Caligrafia_arabe_pajaro

இசுலாமிய எழுத்தணிக்கலையின் மாதிரி. குரானின் வசனங்களைக் கொண்டு எழுதப்பட்ட கொக்கு.

குர்ஆன்-பற்றி அறிவோம்.. 800px-Taj_Mahal_5

நன்றி:விக்கிப்பீடியா
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

குர்ஆன்-பற்றி அறிவோம்.. Empty Re: குர்ஆன்-பற்றி அறிவோம்..

Post by நண்பன் Wed 18 Sep 2013 - 13:20

:/ :/ :/ :”@: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குர்ஆன்-பற்றி அறிவோம்.. Empty Re: குர்ஆன்-பற்றி அறிவோம்..

Post by *சம்ஸ் Wed 18 Sep 2013 - 15:10

தகவலுக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குர்ஆன்-பற்றி அறிவோம்.. Empty Re: குர்ஆன்-பற்றி அறிவோம்..

Post by Muthumohamed Wed 18 Sep 2013 - 16:49

சிறந்த பதிவுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குர்ஆன்-பற்றி அறிவோம்.. Empty Re: குர்ஆன்-பற்றி அறிவோம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum