Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜெனீவாவில் தொடர்ச்சியான இராஜதந்திர சந்திப்புக்களில் புலம்பெயர் தமிழர் மனித உரிமைகள் குழு
Page 1 of 1

ஜெனீவா ஐ .நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என்று பலருடனும் தொடர்ச்சியான சந்திப்புக்களை நடாத்தி வருகின்றது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில், கனேடிய தமிழர் காங்கிரஸ் ( Canadian Tamil Congress), அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை ( United States Tamil Political Action Council), பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ( Tamil Youth Organisation United Kingdom ) ஆகிய அமைப்புக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழுவே இந்த முதற்கட் சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்காவினால் இலங்கைக்கெதிராக கொண்டு வரப்படவிருக்கும் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கும்படி உறுப்பு நாடுகளை வலியுறுத்தியும், தமிழ் மக்களுக்கெதிராக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை எடுத்துக்கூறியுமே இந்த சந்திப்புக்கள் நடைபெற்று வருகின்றன.
அதேசமயம், இந்த தீர்மானம் தமிழ் மக்கள் வலியுறுத்தி வரும் நீதி தொடர்பிலோ அன்றி அவர்களின் அரசியல் உரிமைகள் தொடர்பிலோ காத்திரமான எந்த ஒரு அம்சத்தையும் கொண்டிருக்கவில்லை என்ற தமிழ் மக்களது கவலையையும் ஏமாற்றத்தையும் அவர்கள் எடுத்துக் கூறி வருகின்றனர்.
இதுவரை நடைபெற்ற சந்திப்புக்கள் நம்பிக்கை அளிப்பதாகவும் தீர்மானம் தொடர்பில் இதுவரை முடிவு எதனையும் எடுக்காத நாடுகள் தம்முடனான சந்திப்பில் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும் இக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மற்றும் கற்றுக்கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவின் அறிக்கை ஏன் பயனற்ற ஒன்று என்பது பற்றிய ஆங்கில, ஸ்பானிய மற்றும் பிரெஞ்சு மொழிகளிலான ஆவணம் ஒன்றை இவர்கள் கூட்டத்தொடரில் கலந்துகொண்டிருப்பவர்களுக்கு வழங்கி வருவதுடன், தமிழ் மக்களுக்கெதிராக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை விளக்கும் CD க்கள் மற்றும் பிரசுரங்களையும் விநியோகித்து வருகின்றனர்.
கூட்டத்தொடர் திங்கட்கிழமை ஆரம்பமாவதற்கு முன்னர் கடந்த வெள்ளிக்கிழமை அன்றே ஜெனீவா சென்றிருந்த இக் குழுவினர் பூர்வாங்க வேளைகளில் ஈடுபட்டதுடன் சில சந்திப்புக்களிலும் கலந்து கொண்டனர்.
கடந்த திங்களன்று ஆரம்பமான ஆணைக்குழுவின் கூட்டத்தொடரின் உள்ளக அமர்வுகளிலும் இவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தொடர் முடியும் வரை இக் குழுவினர் ஜெனீவாவில் தங்கியிருந்து செயற்பட இருக்கின்றனர்.
இவர்களுக்கு உதவியாக மலேசியா உட்பட மேலும் பல நாடுகளில் இருந்து பல்வேறு தமிழ் அமைப்புக்களையும் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் இன்னும் சில தினங்களில் இணையவிருக்கின்றனர்.
ஈ.பீ. டீ.பீ யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவின் மகன் அருண் தம்பிமுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் ஆகியோர் உட்பட சுமார் 60 ற்கும் அதிகமான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கடும் பிரசார முயற்சியில் இக் கூட்டத்தொடரில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே வேளை, இலங்கையில், ஊடகங்கள் மூலமும் ஆர்ப்பாட்டங்கள் மூலமும் இலங்கைக்கெதிராக ஒரு பெரும் சர்வேதேச ரீதியிலான ஆபத்து உருவாகியிருப்பதாக சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்தும் வேலைகளையும் இலங்கை அரசாங்கம் செய்து வருகிறது.
ஜெனீவாவில் இலங்கைக்கெதிராக சர்வதேச ரீதியாக இன்று உருவாகியிருக்கும் பாதகமான நிலைமை, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அவர்களது சுயநிர்ணய அடிப்படையில் விடுதலையை வென்றெடுப்பதற்கும் நீதியை பெற்றுக்கொள்வதற்குமான போராட்டத்தின் பல்வேறுபட்ட நடவடிக்கைகளில் மேலும் ஒரு படிக்கல்லாகவே பிரித்தானிய தமிழர் பேரவை கருதுகின்றது.

Similar topics
» ஜெனீவாவில் ஜூன் 12–ந் தேதி தொடங்கும் ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழ
» இஸ்லாமிய மனித உரிமைகள்...
» ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக சையத் அல் ஹுசைன்
» ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிரான தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு
» எங்கள் பிள்ளைகளை தந்துவிடு' இருக்கும் இடத்தைச் சொல்லிவிடு மனித உரிமைகள் தின ஆர்ப்பாட்டத்தில்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum