சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தோட்டுப்பாய் மூத்தம்மா.. Khan11

தோட்டுப்பாய் மூத்தம்மா..

2 posters

Go down

தோட்டுப்பாய் மூத்தம்மா.. Empty தோட்டுப்பாய் மூத்தம்மா..

Post by பர்ஹாத் பாறூக் Mon 12 Mar 2012 - 14:07

பாலமுனை பாறூக்கின் விரைவில் வெளிவரவுள்ள மற்றுமொரு குறுங்காவியமான தோட்டுப்பாய் மூத்தம்மா நூலின் முன்னட்டை...


தோட்டுப்பாய் மூத்தம்மா.. 425190_3039537985198_1165490844_32547239_442985089_n
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

தோட்டுப்பாய் மூத்தம்மா.. Empty Re: தோட்டுப்பாய் மூத்தம்மா..

Post by முனாஸ் சுலைமான் Mon 12 Mar 2012 - 14:23

கவிஞர் பாலமுனை பாறூக் அவர்களின் கவிதைகள் நானும் நிறையவே படித்திருக்கிறேன் இன்னும் அவரது கவிதைகளை மிண்டும் மீண்டும் படிக்க தூண்டும் அப்படியான கவிஞரின் புதிய படைப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தோட்டுப்பாய் மூத்தம்மா.. Empty Re: தோட்டுப்பாய் மூத்தம்மா..

Post by பர்ஹாத் பாறூக் Mon 12 Mar 2012 - 14:28

தோட்டுப்பாய் மூத்தம்மா குறுங்காவியத்திற்கு பேராசிரியர் செ. யோகராசா வழங்கிய முன்னுரை


முஸ்லீம் மக்களின் பண்பாட்டுக் கோலங்களை பதிவு செய்திருக்கும் முற்போக்கான படைப்பு

தமிழ் இலக்கிய மரபிலே காவிய வடிவம் முக்கியமான தொன்றாகவுள்ளது. 'காவிய காலம்" என்றொரு சிறந்த ஆய்வு நூல் கூட பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டுள்ளது. ஏறத்தாழ 16ம் நூற்றாண்டிலிருந்து காவியத்தின் ஒடுங்குதசைக் காலம் ஆரம்பித்தது என்பது அன்னாரது கருத்து. எனினும், காலனித்துவ ஆட்சி காரணமாக ஏற்பட்ட நவீனமயமாக்கல் சூழலில் அக்காவிய மரபு புத்துயிர்ப்பு எய்தியது. நவீன கவிதை முன்னோடியான பாரதியாரே 'பாஞ்சாலி சபதம்(இந்திய விடுதலை, பெண் விடுதலை), குயில் பாட்டு (காதல்-இயற்கை-தமிழ்-சமய தத்துவம்-புதுவகை வடிவம்- பரிசோதனை முயற்சி என பன்முக வாசிப்புக்குரிய உள்ளடக்கம்) என்பவற்றை சிருஷ்டித்து நவீன காவிய முன்னோடியுமாகின்றார்.

பாரதியாருக்குப் பின் நவீன காவிய மரபு தமிழ்நாட்டில் பொதுவாக கற்பனையும் இலட்சியமுமான உலகை உருவாக்கிய சூழலில் ஈழத்துக் கவிஞர்கள் ஒரு சிலர் அவ்வழிச் சென்றனராயினும் பலர் 'நவீன" காவிய மரபிற்கு தடமமைத்து வந்துள்ளனர். இவ்வழி, கவிஞர் அப்துல் காதிறுலெப்பை (முஸ்லீம் சமூகக் குறைபாடுகள் பற்றிய செய்னம்பு நாச்சியார் மான்மியம்), பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை (சீதனப்பிரச்சினை பற்றிய சீதனக்காதை), காரை செ. சுந்தரம்பிள்ளை (சாதி சீதனம் அரசியல் பிரச்சினைகள் சார்ந்த காவேரி), மஹாகவி (சாதிப்பிரச்சினை பற்றிய கண்மணியாள் காதை, அன்றாட வாழ்க்கை பற்றிய ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம், விஞ்ஞான புனைவு சார்ந்த கந்தப்பசதகம்), நீலாவணன் (சாதிப்பிரச்சினை பற்றிய பட்டமரம், குடும்ப பிரச்சினை பற்றிய வடமீன், அன்றாட வாழ்க்கை பற்றிய வேளாண்மை), இ.முருகையன் (விஞ்ஞான புனைவு சார்ந்த நெடும்பகல்), நுஃமான் (சாதிப்பிரச்சினை பற்றிய கோயிலின் வெளியே, வர்க்கப்பிரச்சனை பற்றிய நிலமென்னும் நல்லாள் முதலியன), எஸ்.பொ.(தந்தையார் நினைவு பற்றிய அப்பையா காவியம்), மு.பொன்னம்பலம் (உலக அரசியல் பற்றிய பொறியில் அகப்பட்ட தேசம்), வ.ஐ.ச. ஜெயபாலன் (ஈழவிடுதலை போராட்டம் பற்றிய ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்), நிலாந்தன் (வன்னி வரலாறு பற்றிய மண் பட்டினம்), அஷ்வகோஸ் (போர்க்கால வாழ்வு பற்றிய வனத்தின் அழைப்பு), றஸ்மி (இயற்கை அனர்த்தம் பற்றிய ஆயிரம் கிராமங்களை தின்ற ஆடு), ஆகியோர் இவ்வேளையில் நினைவு கூரத்தக்கவராகின்றனர். இத்தகையோர் வரிசையில் இந்நூலாசிரியர் பாலமுனை பாறூக் அவர்களும் உள்ளடங்குவாரா? என்பதே கேட்கப்படவேண்டிய கேள்வியாகின்றது.

பாலமுனை பாறூக் அண்மையில் கொந்தளிப்பு (2010) என்றொரு நவீன குறுங்காவியத்தை எழுதியிருந்தமை இலக்கிய ஆர்வலர்கள் அறிந்த விடயமே. குறுங்காவியமான கொந்தளிப்பு முஸ்லீம் மக்களது சமூகப்பிரச்சினைகள்(மீனவர், விவசாயிகள் ஆகியோரின் வாழ்க்கை பிரச்சினைகள்) அரசியல் நெருக்கடிகள் (உ-ம். சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை) பண்பாட்டு மாற்றங்கள் ஆகிய பலவற்றையும் ஆர்ப்பாட்டமில்லாமல் அழகான கோட்டுச் சித்திரங்களாக பதிவு செய்திருந்தது. பனித்துளிகள் நடம்புரியும் புல்லின் இதழ்களில் வானம் முழுவதும் அடங்குவது போன்று கச்சிதமான உத்திகளைக் கையாண்டதனூடாக குறுங்காவியத்தினுள் பலவிடயங்களையும் கொண்டுவருவது கவிஞருக்கு சாத்தியமாகி இருந்தது. நல்லதொரு நாவல் வாசிப்பு அனுபவத்தை வாசகர்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் அது வழங்கியிருந்தது.

'தோட்டுப்பாய் மூத்தம்மா" எனும் இக்காவியம், 'கொந்தளிப்பு" வழியில் செல்லாது வேறு சில புதிய உலகங்களை சிருஷ்டித்துள்ளது. நீண்டகாலமாக நிலவிவரும் சமூக பிரச்சினை என்ற விதத்தில் பொருத்தமற்ற திருமண முயற்சியினால் முஸ்லீம் குடும்பப் பெண்ணான செய்னம்புவுக்கு ஏற்படும் மனப்போராட்டங்களும், விவாகரத்தினை மேற்கொள்வதும் பின்னர் தந்தையின் முயற்சியினால் ஏர்வை வண்டி இசுமாயிலை மறுமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்வதும், ஊருக்கு உதவுவதும் கணவர் மறைந்த பின்னர் அநாதரவான நிலையில் வாழ்ந்து இறுதியில் மரணிப்பதுமே இக்காவியத்தின் உள்ளடக்கமாகிறது.

பொருத்தமற்ற திருமண முயற்சியினால் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் சச்சரவு பற்றி ஈழத்துப்படைப்பாளிகள் பலரும் அவ்வப்போது கவிதைகள், சிறுகதைகள், எழுதி வந்துள்ளனர். எழுத்தாளன் ஒருவனுக்கு ஏற்பட்ட மனத்துயரினை அவலச்சுவை மேலோங்க 'தத்தைவிடு தூது" என்ற நவீன பிரபந்தமாக படைத்திருந்தார் பத்தொன்பதாம் நூற்றாண்டிறுதியில் தி.த. சரவணமுத்துப்பிள்ளை. ஐம்பதுகளின் இறுதியில் புரட்சிக்கமால் அவ்வாறான பிரச்சினையை எதிர்கொண்ட குடும்பத்துப் பெண்ணொருத்தி தனது கணவனைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்வதான முடிவோடு சிறுகதையொன்றினை எழுதியிருந்தார். பித்தன் அத்தகைய சிறுகதையொன்றிலே பிரச்சினைக்கு தீர்வாக குடும்ப விலகலை வழங்கியிருந்தார். இந்நிலையில், பாலமுனை பாறூக் போடியாரான தந்தையையே மறுமண முடிவெடுக்கச் செய்து, செய்னம்புவுக்கு ஏழைத் தொழிலாளி ஒருவனை மணம் செய்விப்பதான தீர்வினைத் தந்திருப்பது, முற்கூறிய படைப்புகளோடு ஒப்பிடும் போது இக்காவியத்திற்கு முற்போக்கான குணாம்சத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இக்கவிஞரது நோக்கு குடும்பப் பிரச்சினைகளிலொன்றினைப் பற்றிப் பேசுவது மட்டுமன்றி முஸ்லீம் மக்களது பண்பாட்டுக் கோலங்களை பதிவு செய்வதாகவும் காணப்படுகின்றமை கவனத்திற்குரியது. கவிஞர் அப்துல் காதிறுலெவ்வை, முஸ்லீம் மக்களது திருமணச் சடங்கு முறைமைபற்றி மட்டுமே எடுத்துரைக்க, இக்கவிஞர், திருமணச் சடங்கு முறைமை மட்டுமன்றி, மையத்துச் சடங்கு, பிறப்புச் சடங்கு, பெரியபிள்ளைச் சடங்கு முதலானவை பற்றியும் சுவையோடு விவரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இக்காவியத்தின் பாத்திர வார்ப்புப் பற்றியும் விதந்துரைக்க இடமுண்டு. முற்குறிப்பிடப்பட்ட ஈழத்து நவீன காவியங்கள் எவற்றிலும் பெண் பாத்திரங்களுக்கு முதன்மை இடம் வழங்கப்படவில்லை. மாறாக, இக்காவியம் பெண்ணுக்கு முதன்மை அளிக்கின்றதென்பதனை இக்காவியத்தின் தலைப்புக்கூட வெளிப்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது. பெண் பாத்திரம் என்ற நிலையில் தோட்டுப்பாய் மூத்தம்மா முக்கியத்துவம் பெறுவது போன்று அதனைவிட ஒருபடி மேலாக விளிம்பு நிலைப்பாத்திரம் என்ற விதத்தில் ஏர்வை வண்டி இசுமாயில் சிறப்பானதொரு பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விருபாத்திரங்களினதும் குணாம்ச விபரிப்பு பற்றியும் செயற்பாடுகள் பற்றியும் அவை போதுமான அளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதுபற்றியும் விரிவஞ்சி எதுவும் குறிப்பிடாமல் அப்பொறுப்பினை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன்.

ஒரு இலக்கிய சிருஷ்டி எந்தவொரு உன்னதமான நோக்கத்துடன் உருவானாலும் வாசகருக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அது அமைவதவசியமே. ஆரம்பகாலத்தமிழ் நாவல்கள் 'மகிழ்வளிப்பது" என்கின்ற அம்சத்தை வெளிப்படையாகவே குறிப்பிட்டிருப்பது இவ்வேளை நினைவுக்கு வருகின்றது (இத்தகைய நோக்கு மட்டுமே படைப்பின் இலட்சியமாயிருப்பின் அது பொழுதுபோக்கான படைப்பு உருவாக்கத்திற்க்கு வழிவகுத்துவிடும் என்பதையும் மனங்கொள்வதவசியமாகும்). இக்காவிய வாசிப்பும் அத்தகைய மகிழ்வ ட்டலில் வாசகர் திளைத்திருக்கும் வாய்ப்பினை ஆங்காங்கே தந்திருக்கின்றதென்பது மிகையன்று. ஓர் உதாரணத்தை மட்டும் இங்கு தருகின்றேன். செய்னம்பு பற்றிய வர்ணனை பின்வருமாறு வெளிப்பட்டு வாசகரை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்கிறது.

'கவர்ச்சியினை வெளித்தள்ளாக்
காந்தப்பூ செய்னம்பூ
அவயவங்கள் மூடிநிற்கும்
அடக்கப்பூ!
அமைதியாய் பேசுகின்ற
அழகுப்பூ!
வார்த்தைகளை அளந்து திர்க்கும்
வாசப்பூ
இப்பொழுது
அவர் நினைவில்
ஏன் பூத்தாள் செய்னம்பூ..?"

தேடல் மிகுந்த வாசகருக்கு இரசிகமணியான பண்டிதமணி சி. கணபதிபிள்ளை பழந்தமிழ் இலக்கியமான கலித்தொகைத் தலைவன் பற்றி பின்வருமாறு வர்ணிப்பது நினைவிற்கு வரவே செய்யும்.
'அவன் ஏன் நகைத்தான்? அது சாதாரன நகையாயில்லை நகைப் பூங்கொத்து. அரும்பு நகை. மொட்டு நகை. போது நகை. பூநகை என்று பல நகைகள் அந்த நகையுட் காணப்படுகின்றன..."

இறுதியாக, இக்காவியத்தில் கவிஞர் கையாண்டுள்ள கவிதைவடிவம் பற்றியும் ஒரு குறிப்புக் கூற வேண்டியுள்ளது. முற்குறிப்பிட்ட காவியங்கள் மரபுக்கவிதை வடிவங்களை பின்பற்றி உள்ளன. அன்றேல் புதுக்கவிதை வடிவங்களை கொண்டமைந்துள்ளன. மாறாக இக்காவியத்தில் அவ்விருவகை வடிவங்களும் அன்றி இன்னொருவிதமான கவிதை வடிவம் கையாளப்படுகின்றது. இன்னொரு விதமாகக் கூறின் மரபுக்கவிதை நெகிழ்ச்சி பெற்றுள்ள நிலையில் வெளிப்படுகின்றதெனலாம். தமிழகக் கவிஞரான திருச்சிற்றம்பலக் கவிராயரே இத்தகையதொரு வடிவத்தை அறிமுகப்படுத்தியவராகக் கருதுகின்றேன். அவருக்குப் பின் அவ்வடிவம் அதிக செல்வாக்குப் பெறவில்லையாயினும் அவ்வப்போது கவிஞர் சிலர் கையாண்டு வந்துள்ளனர். ஈழத்தில் பாலமுனை பாறூக் தமது காவியங்களிலே அத்தகைய கவிதை வடிவத்தை இறுகப் பற்றி இருப்பது விதந்துரைக்கபட வேண்டியதாகிறது.

இதுவரைக் கூறியவற்றை தொகுத்து நினைவு கூர்கின்ற போது, ஆரம்பத்தில் கூறிய ஈழத்து நவீன காவிய கவிஞர் வரிசையில் 'கொந்தளிப்பு" ஊடாக தன்னை இணைத்துக் கொண்ட பாலமுனை பாறூக் இக்காவியத்தினூடாக தனது இருப்பை மேலும் உறுதி செய்துள்ளார் என்று துணிந்து கூறலாம்.


வாழ்த்துக்களுடன்,
பேராசிரியர் செ. யோகராசா,
மொழித்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்.
வந்தாறுமூலை
இலங்கை.

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

தோட்டுப்பாய் மூத்தம்மா.. Empty Re: தோட்டுப்பாய் மூத்தம்மா..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum