Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நெல்லை நிகழ்ச்சிகள்: கவிஞர் லதாராணி பங்கேற்பு
+4
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
Atchaya
யாதுமானவள்
8 posters
Page 1 of 1
நெல்லை நிகழ்ச்சிகள்: கவிஞர் லதாராணி பங்கேற்பு
நெல்லை, மார்ச் 21-பெரியாரின் பெருந் தொண்டர் குவைத் செல்லபெருமாள் தொடங்கியுள்ள வீரமணி மோகனா சமூக நீதி அறக்கட் டளை குவைத்தின் முதல் நிகழ்ச்சியாக திராவிடக் கழகத்தின் உறுப்பினர் திரு காசி அவர்களின் துணைவி யாரும் பெரியாரின் தொண்டருமான மறைந்த சண்முக வடிவு அம்மையார் அவர்கள் தன்னுடைய உடலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல் லூரிக்கு தானமாக வழங்கியுள்ளதையும், இவரைத் தொடர்ந்து பெரியாரின் சீரிய தொண்டர் ராமர் அவர்களும் மருத்துவக் கல்லூரிக்கு தனது உடலைத் தானமாகத் தந்துள்ளதையும் நினைவு கூறி இவர் களின் இம்மகத்தான காரியத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தி லும், உடல் தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற் படுத்த வேண்டும் என்ற அரிய நோக்கத்திலும் திருமதி சண்முக வடிவு அம்மையாரின் முதலா மாண்டு விழாவினை ஏற்பாடு செய்திருந்தார். திருநெல்வேலியில் தந்தை பெரியார் கணினி மய்யத் தில் 07-03-12 அன்று நடைபெற்ற இவ்விழா வில் பெரியார் பன் னாட்டு மய்யம் குவைத் கிளைச் செயலாளர், கவி ஞர் லதாராணி பூங்கா வனம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற் றினார்.
"நினைப்பும் செய லும்" என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையில் உடல் தானம் எதற்குக் கொடுக்க வேண்டும்? அதனால் என்ன பயன்? உயிரற்ற மனித உடல்கள் மருத்துவமனைக்குக் கொடுப்பதன் மூலம் மருத் துவக் கல்லூரி மாணவர் கள் எவ்வாறு பயன் பெறுகிறார்கள் என்பதை மிக விளக்கமாகக் கூறி னார். மனிதனின் உயிரற்ற உடல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மனித உடற் கூறியல் படிப்பதற்கும், அறுவை சிகிச்சை பயிற் சிக்கும், அறுவை சிகிச் சையில் புதிய புதிய உத் திகள் கண்டுபிடிக்கவும் அறுவை சிகிச்சையை மேலும் எளிதாக்கவும் மற்றும் நாளொன்றுக்கு புதிய புதிய நோய்களாக தோன்றிக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் அந்த நோய்களை முற்றி லும் அழிக்கவும் புதிய மருந்துகள் கண்டுபிடித்து அவற்றைச் செயல்படுத்தி சோதிக்கவும் என எண் ணற்ற வகைகளில் மனி தனின் உயிரற்ற உடல் உதவியாக இருப்பதை அறியாமல் மக்கள் இந்த உடலை மண்ணில் புதைத்து புழு பூச்சிகளுக்கு இரை யாக்கியும் எரியூட்டி சாம் பலாக்கியும் வீணடித்துக் கொண்டிருக்காமல் நமது அடுத்துவரும் தலை முறையினர் நோயற்ற குறையற்ற ஊனமற்ற சந்த தியர்களாக வாழ, நாம் நம்முடைய வாழ்வு முடிந்த பின் இந்த உடல் களை தானமாகத் தர வேண்டும் என்று கூறினார்.
எதிர்கால சந்ததியினருக்கும்...
இன்றைய சமுதாய முன்னேற்றத்திற்காக மட்டும் சிந்திப்பவர்க ளல்ல நம் திராவிட கழகத்தினர். எதிர்கால சந்ததியர் நலனுக்காகவும் சிந்திப்பவர்கள்தான் பெரியார் காட்டிய பகுத் தறிவுப் பாதையில் நடந்து செல்லும் நம் திராவிடக் கழகத்தினர் என்று கூறி னார். சமுதாய முன் னேற்றத்தின் ஒவ்வொரு படியிலும் முதல் தடம் பதிப்பவர்களாக விளங் கும் நமது திராவிடக் கழக பெரியார் தொண் டர்கள் உடல் தானம் செய்வதிலும் தமிழகத் தில் முதன்மையானவர் களாக அனைவருக்கும் எடுத்துக் காட்டாகவும், மக்களிடையே உடல் தானம் குறித்த விழிப்பு ணர்ச்சி ஏற்படுத்துபவர் களாகவும் உள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறினார்.
விழாவிற்கு நெல்லை மாவட்ட திராவிடக் கழக மண்டலச் செயலாளர் பால்ராசேந்திரம் தலைமை ஏற்று சிறப்பாக நடத்தினார். தென்காசி திராவிட கழக மாவட்டத் தலைவர் டேவிட் செல்லத் துரை முன்னிலை வகிக்க, நெல்லை மாவட்ட பகுத் தறிவாளர் கழக அமைப் பாளர் இரா.வேல்முருகன் வரவேற்புரை அளிக்க, நெல்லை மாவட்ட செய லாளர் ராசேந்திரன் அறி முக உரையாற்ற விழா வினைத் தொகுத்து வழங் கியும் தொடக்கவுரை வழங்கியும் முத்தமிழ் அவர்கள் சிறப்பித்தார். விழாவின் நிறைவில் உடற் கொடை அளித்த அமரர். திருமதி சண்முக வடிவு அம்மையாரின் துணைவர், பெரியார் பெருந்தொண் டர் காசி நன்றி அறிவித் தார்.
உடற் கொடையளிக்க முன்வந்தோர்
இவ்விழாவில் மேலும் பன்னிரண்டு திராவிட கழகத் தோழர்கள் தங்கள் மறைவிற்குப் பின் தங்கள் உடல்களைத் தானமாகத் தருவதாக தங்கள் பெயர் களை மருத்துவமனையில் பதிவு செய்த சான்றிதழை கவிஞர் . திருமதி . லதா ராணி பூங்காவனம் அவர் கள் கழகத் தோழர்களுக்கு வழங்கினார். விழாவில் வீரமணி மோகனா சமூக நீதி அறக்கட்டளை சார் பாக கவிஞர் . லதாராணி பூங்காவனம் அவர்களுக்கு உடற்கொடை சொற் பொழிவின் நினைவுப் பரிசினை அறக்கட்டளை தலைவர் திரு. லியாகத் அலி அவர்கள் அளித் தார்.
விழாவிற்கு முனைவர். தலைமையாசிரியர் (ஓய்வு) வாய்.மு.கும்ப லிங்கம் அவர்களும், சிற்பி பாமா அவர்களும், பெரியாரடியான் அவர் களும் மற்றும் உடற் கொடை அளித்த பெரி யார் தொண்டர் ராமர் அவர்களின் துணைவி யார் திருமதி லீலா ராமர் அவர்களும் மற்றும் திருநெல்வேலி இந்துக் கல்லூரியின் ஆசிரியர் நீலகிருஷ்ண பாபு, சந் தானம் இன்னும் ஏனை யோர் வந்து விழாவினைச் சிறப்பித்து பெருமை படுத்தினர்.
அறக்கட்டளை தலை வர் லியாகத் அலி பேசும் போது தந்தை பெரியா ருக்குப் பின் இக்கழகம் அழிந்துவிடுமென்று எதிரிகள் நினைத்திருந் தனர். ஆனால் தமிழர் தலைவர்.ஆசிரியர் அய்யா கி. வீரமணி அவர் களின் அயராத உழைப் பும் அவருக்கு உற்ற துணையாக இருக்கும் அவர்துணைவியார் மோகனா அம்மையாரின் ஒத்துழைப்பினாலும் மற் றும் கழக தொண்டர் களின் ஒத்துழைப்பி னாலும் இக்கழகம் உல கெங்கிலும் கிளை பரப்பி பிரமிப்பூட்டும் அள விற்கு வளர்ந்துவிட்டது. அதில் ஒரு கிளையாகத் தான் குவைத்திலிருந்து நாங்கள் இங்கு வந்து நம் கழகத்தாரின் உடற் கொடை என்ற இந்த மகத்தான பணிக்கு விழா எடுத்துக் கொண்டிருக்கி றோம் எனக் கூறினார்.
விழா சிறப்புற நடை பெற அறக்கட்டளையின் காப்பாளர் பெரியாரின் பெருந்தொண்டர் குவைத் செல்லப்பெரு மாள் அவர்கள் தன் னுடைய வாழ்த்தினைத் தெரிவித்திருந்தார். மேலும் ஒவ்வொரு வரு டமும் உடற்கொடை கொடுத்த நம்முடைய கழகத் தொண்டர்களின் நினைவு கூறும் விழாவை செய்வதாக கூறியுள்ளார்.
இராவண காவியம்
சிறப்புற நடந்த இவ் விழாவினைத் தொடர்ந்து கவிஞர். லதாராணி பூங் காவனம்அவர்கள் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் தமிழியல் ஆய்வு மையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு 09 -03 -12 அன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் "இராவணகாவியம்" அறிமுக உரையாற்றினார். கல்லூரியின் தமிழ் மாண வர்கள் மற்றும் கணினி பயிலும் மாணவர்களென அனைவரும் மிக்க ஆவ லுடன் இராவண காவி யத்தைக் கேட்டு வியப் புற்றனர்.தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் இராவணகாவியம் குறித்த பலகேள்விகளைக் கேட்டு அறிந்தனர். "இராவண காவியம்" புத்தகம் எங்கு கிடைக்குமென்று மிகுந்த ஆவலுடன் கேட்டறிந் தனர். இராவண காவி யத்தைப் படிக்க அவர் களுக்கிருந்த ஆர்வம் கண்டு வியப்பாக இருந் ததாக இராவண காவிய சொற்பொழிவாளர் கவி ஞர் லதாராணி பூங்கா வனம் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நெல்லை நிகழ்ச்சிகள்: கவிஞர் லதாராணி பங்கேற்பு
தங்களின் வேண்டுகோளின்படி பதிவில் இணைக்க இயலவில்லை. ஆனால், கிருஷ்ணாலயாவில் இணைத்துவிட்டேன். தொடர்பு கொண்டமைக்கு நன்றி அக்கா!
Re: நெல்லை நிகழ்ச்சிகள்: கவிஞர் லதாராணி பங்கேற்பு
சிறப்பானதொரு விடயம் சிறப்புற நடந்தேறியதை எங்களோடும் பகிர்ந்து கொண்ட எங்கள் புரட்சிக்கவி அக்கா அவர்களுக்கு நன்றிகள்
உங்களின் சேவை இன்னும் பெருகி புகளடைய வாழ்த்துகள்
உங்களின் சேவை இன்னும் பெருகி புகளடைய வாழ்த்துகள்
Re: நெல்லை நிகழ்ச்சிகள்: கவிஞர் லதாராணி பங்கேற்பு
Atchaya wrote:அக்கா கிருஷ்ணாலயா பாருங்கள்!
பார்த்தேன் . நன்றி ரவி!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நெல்லை நிகழ்ச்சிகள்: கவிஞர் லதாராணி பங்கேற்பு
நேசமுடன் ஹாசிம் wrote:சிறப்பானதொரு விடயம் சிறப்புற நடந்தேறியதை எங்களோடும் பகிர்ந்து கொண்ட எங்கள் புரட்சிக்கவி அக்கா அவர்களுக்கு நன்றிகள்
உங்களின் சேவை இன்னும் பெருகி புகளடைய வாழ்த்துகள்
மிக்க நன்றி ஹாஷிம்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நெல்லை நிகழ்ச்சிகள்: கவிஞர் லதாராணி பங்கேற்பு
நடந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி .பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் சேவைகள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: நெல்லை நிகழ்ச்சிகள்: கவிஞர் லதாராணி பங்கேற்பு
:!+: அக்கா உங்களின் சேவை புகழடைய வாழ்த்துக்கள் .
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: நெல்லை நிகழ்ச்சிகள்: கவிஞர் லதாராணி பங்கேற்பு
kalainilaa wrote:நடந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி .பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் சேவைகள்
நன்றி கலை
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நெல்லை நிகழ்ச்சிகள்: கவிஞர் லதாராணி பங்கேற்பு
பார்த்திபன் wrote: :!+: :!+:
மிக்க நன்றி பார்த்திபன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நெல்லை நிகழ்ச்சிகள்: கவிஞர் லதாராணி பங்கேற்பு
mufees wrote: :!+: அக்கா உங்களின் சேவை புகழடைய வாழ்த்துக்கள் .
நன்றி mufees
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நெல்லை நிகழ்ச்சிகள்: கவிஞர் லதாராணி பங்கேற்பு
சிறப்பான கவிஞரும் ஒரு சிறந்த மேடைப்பேச்சாளருமான யாதுமானவள் அக்காவுக்கு நன்றி உங்கள் தமிழ் பயனம் கவிப்பயனம் தொடர பிரார்த்திக்கிறேன். :!@!: #heart
Re: நெல்லை நிகழ்ச்சிகள்: கவிஞர் லதாராணி பங்கேற்பு
@. @. @. @. @. @.முனாஸ் சுலைமான் wrote:சிறப்பான கவிஞரும் ஒரு சிறந்த மேடைப்பேச்சாளருமான யாதுமானவள் அக்காவுக்கு நன்றி உங்கள் தமிழ் பயனம் கவிப்பயனம் தொடர பிரார்த்திக்கிறேன். :!@!: #heart
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» "டிவி'யில் வன்முறை நிகழ்ச்சிகள்: குழந்தைகளுக்கு தூக்கம் போச்சு!
» நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள்
» செல்வாக்கை இழக்கும் கலை நிகழ்ச்சிகள்...
» கந்துவட்டி, நிலமோசடியில் நெல்லை முதலிடம்: உளவுத்துறை அதிகாரி
» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
» நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள்
» செல்வாக்கை இழக்கும் கலை நிகழ்ச்சிகள்...
» கந்துவட்டி, நிலமோசடியில் நெல்லை முதலிடம்: உளவுத்துறை அதிகாரி
» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum