சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு எதிராக அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம் Khan11

பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு எதிராக அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

2 posters

Go down

பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு எதிராக அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம் Empty பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு எதிராக அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Post by முனாஸ் சுலைமான் Sun 29 Apr 2012 - 20:04

பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு எதிராக அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம் Mirror01(40)தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும், குறித்த பள்ளிவாசலை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் ஏகமனதான கண்டனத் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று வெள்ளிக்கிழமை சபையின் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் பிரேரணையினை தவிசாளர் - சபையில் முன்வைத்தார்.

பிரதேச சபையின் தவிசாளர் நசீர் - பிரேரணையினை முன்வைத்து உரையாற்றுகையில்,

'தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதலானது முஸ்லிம் மக்களின் மனங்களில் வேதனையினை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு சமூகத்தின் மதஸ்தலத்தினையும் உடைப்பதற்கு அடுத்த சமூகத்தவருக்கு உரிமைகள் கிடையாது.

ஜெனீவாவில் ஏற்பட்ட கண்டத்திலிருந்து இந்த அரசாங்கத்தினையும், ஆட்சியாளர்களையும் எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் நாடுகளுமே காப்பாற்றியிருந்தனர். இவ்வாறானதொரு நிலையில், நன்றி கெட்டதனமாக முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதானது வேதனையானதொரு விடயமாகும்.

தம்புள்ள விவகாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் எடுத்திருக்கும் நிலைப்பாடுகளும், சொல்லியிருக்கும் செய்திகளும் குறிப்பிடத்தக்கவை. அவரின் பாதையினைப் பின்பற்றியே இன்று இந்த சபையில் தம்புள்ளை விவகாரத்துக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தினை எடுத்துள்ளோம்.

அம்பாறை மாவட்டம் முழுவதும் நேற்று இடம்பெற்ற ஹர்த்தால் மற்றும் அமைதி ஆர்ப்பாட்டங்கள் மூலம் இந்த அரசுக்கு சிறந்ததொரு செய்தி முன்வைக்கப்பட்டுள்ளது. இதைப் புரிந்து கொண்டு இந்த விடயத்தில் ஜனாதிபதி தீர்க்கமானதொரு முடிவினை எடுக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

எமது சமூகத்துக்காகக் குரல் கொடுப்பதற்காகவே – மக்கள் இந்த சபைக்கு எம்மைத் தெரிவு செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், இன்று சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தம்புள்ளை பள்ளி விவகாரத்தில் மௌனிகளாக இருப்பது வெட்கக்கேடானதொரு விடயமாகும்.

தமிழரோ, முஸ்லிமோ அல்லது கிறிஸ்தவரோ - எந்த சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களின் மத உரிமை மதிக்கப்பட வேண்டும், அவர்கள் கண்ணியமாக நடத்தப்படுதல் வேண்டும்' என்றார்.

இவ்விவகாரம் தொடர்பில் சபையின் மு.கா. உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் பேசுகையில்,

'ஓவ்வொரு மதஸ்தானம் இருக்கும் இடமும் அந்தந்த மதத்தவர்களுக்கு புனித பூமிதான். இன்று நாட்டில் ஏற்பட்டிருப்பது சுயநலவாதப் போக்காகும். எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களின் நிலங்கள் புனித பூமி எனும் பெயரில் அபகரிக்கப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவி உடையுடன் குண்டர்கள் போன்று வெளியிலிருந்து சிலரைத் திரட்டி வந்து பள்ளிவாசலை உடைத்த கொடுமையினை உலகமே பார்த்தது.

நாட்டின் இறைமையைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்த நன்றியினைக் கூட, இந்தப் பேரினவாதிகள் ஒரு கணம் நினைத்துப் பார்க்கவில்லை என்பது வேதனையளிக்கின்றது.

மேலும், பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என்று நாட்டின் பிரதம மந்திரியே தீர்மானமொன்றினை எடுத்திருப்பது - நாட்டின் இன ஐக்கியத்துக்கு குந்தகத்தினை ஏற்படுத்தும் ஒரு விடயமாகவே பார்க்கப்படுகிறது.சண்டித்தனத்தின் மூலம் நாட்டின் சிறுபான்மை சமூகங்களை ஒடுக்கவும் அடக்கவும் நினைப்பது அராஜகமான செயற்பாடாகும்' என்றார்.

பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவரும், அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான எம்.எல்.எம். பாரீன் இதன் போது உரையாற்றுகையில்,

'தம்புள்ளை விவகாரம் அரசியலுக்கு அப்பாற்பட்டுச் சிந்திக்க வேண்டிய சமூக விடயமாகும். இவ் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஜனாதிபதியுடன் பேசி ஒரு சிறந்த தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும்.

அவ்வாறு முடியாது விட்டால், தொடர்ந்தும் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருப்பதில் சமூகத்துக்கு எவ்விதமான நன்மைகளும் ஏற்படப் போவதில்லை' என்றார்.

மேற்படி சபை அமர்வின் போது, தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் தமது கைகளில் கறுப்புப் பட்டிகளை அணிந்திருந்தனர். குறித்த கண்டனத் தீர்மானம் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுகளுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, சபையின் உதவித் தவிசாளர் எம்.ஏ. அன்சில், உறுப்பினர்களான ஐ.எல். மனாப், ஏ.எல். அமானுல்லா, என்.எல். யாசிர் ஐமன், ஏ.எல். சுபைதீன் மௌலவி, எதிர்க்கட்சித் ஆகியோரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு எதிராக அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம் Empty Re: பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு எதிராக அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Post by kalainilaa Mon 30 Apr 2012 - 12:07

நாமும் நமது எதிர்ப்பை கூறுவோம்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு எதிராக அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம் Empty Re: பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு எதிராக அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Post by முனாஸ் சுலைமான் Mon 30 Apr 2012 - 14:49

@. @.
kalainilaa wrote:நாமும் நமது எதிர்ப்பை கூறுவோம்
@. @. :”@: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு எதிராக அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம் Empty Re: பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு எதிராக அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி தொடர்பாக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை
» அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்
» தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்டசபையில் நிறைவேற்றம்
» ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி செளமித்ரா சென் பதவி நீக்க தீர்மானம்-ராஜ்யசபாவில் நிறைவேற்றம்
» நிந்தவூர் பிரதேச சபை ஆளுங் கட்சி உறுப்பினர்கள் இருவர் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum