சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பொன்சேகா தொடர்பில் கேட்ட பத்திரிகை ஆசிரியர்! எச்சரித்தார் கோத்தபாய!! Khan11

பொன்சேகா தொடர்பில் கேட்ட பத்திரிகை ஆசிரியர்! எச்சரித்தார் கோத்தபாய!!

Go down

பொன்சேகா தொடர்பில் கேட்ட பத்திரிகை ஆசிரியர்! எச்சரித்தார் கோத்தபாய!! Empty பொன்சேகா தொடர்பில் கேட்ட பத்திரிகை ஆசிரியர்! எச்சரித்தார் கோத்தபாய!!

Post by mufees Sun 27 May 2012 - 20:48

May 27th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.


ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட சரத் பொன்சேகா தொடர்பில் கேட்ட பத்திரிகையாளர் மீது ஏறிப் பாய்ந்துள்ளார் பசில் ராஜபக்ஷ.

அத்துடன் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் அதுபற்றித் தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் திரும்பத் திரும்பக் கூறியுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச,தொடர்ந்து அது பற்றிக் கேள்வி எழுப்பினால் நேர்காணலை நிறுத்தி விடுவேன் என பத்திரிகை ஆசிரியரொருவரிடம் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் இருந்த வெளியாகும் ‘சண்டேலீடர்‘ வாரஇதழின் ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்சுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு சீறிப் பாய்ந்துள்ளார்.

சரத் பொன்சேகா தொடர்பாக ‘சண்டேலீடர்‘ பத்திரிகை ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்ஸ் எழுப்பிய கேள்விகளும், அதற்கு கோத்தாபய ராஜபக்ச வழங்கிய சீற்றமான பதில்களும் வருமாறு:

கேள்வி – சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி ஏன் பொதுமன்னிப்பு வழங்கினார்? ஏன் இப்போது?

பதில் – சரத் பொன்சேகா குறித்த எதற்கும் பதில் சொல்ல விரும்பவில்லை. சரத் பொன்சேகா பற்றிய கேள்விகள் வேண்டாம். பிபிசி கூட கேட்டது, நான் கூறினேன் எதைப் பற்றியும் எனக்குத் தெரியாது என்று. அது என்னுடன் தொடர்புடைய விடயமல்ல.

கேள்வி – அனைத்துலக அழுத்தங்களால் தான் இது நடந்ததாக, பலர் நம்புகிறார்கள், குறிப்பாக வொசிங்டனில் இருந்து?

பதில்- எனக்குத் தெரியாது. ஜனாதிபதியிடம் கேளுங்கள். எனக்குத் தெரியாது. இது என்னுடன் தொடர்புடைய விடயம் அல்ல. அதுபற்றி என்னால் கருத்துக்கூற முடியாது. ஏனென்றால்,அதுபற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. எனக்கு அதில் அக்கறையில்லை.

எனக்கு புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, பாதுகாப்பு போன்ற பரப்புகளில் கவனம் செலுத்த நிறைய வேலைகள் உள்ளன. அவற்றை நாம் முன்நகர்த்த வேண்டியுள்ளது. நிறைய அபிவிருத்தி வேலைகள் உள்ளன. இந்த தேவையற்ற மோதலுக்குள் நுழைய விரும்பவில்லை.

கேள்வி – ஆனால், இந்தக் கேள்வியை ஒவ்வொரும் கேட்கின்றரே. இப்போது சரத் பொன்சேகாவுக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது?

பதில் – ஒருவருமே இந்தக் கேள்விகளை எழுப்பவில்லை. ஊடகங்கள் மட்டும் தான் எழுப்புகின்றன. போருக்குப் பின்னர் எப்படி முன்னேறலாம் என்று தான் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். நான் எல்லோருக்கும், இராஜதந்திரிகளுக்கும், சொல்ல என்ன இருக்கிறது. தேவையற்ற விடயங்களில் நாம் ஏன் தலையிட வேண்டும்.

கேள்வி – நல்லது, அவர் உங்களின் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்தவர். சிறையில் அடைக்கப்பட்டவர்.

பதில் – எனக்குத் தெரியாது. நீங்கள் ஜனாதிபதியிடம் கேளுங்கள். நான் விரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நான் எதையும் அறியவில்லை. எனக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. நான் உறங்குவதில்லை என்பதை நீங்கள் பார்க்க முடியும்.

அங்கே கண்ணிவெடி அகற்றப்படுகிறது. மீள்குடியமர்வு நடக்கிறது. அங்கே பல மாற்றங்களை நாம் செய்ய வேண்டியுள்ளது. போருக்குப் பின்னர் இயல்புநிலையை உருவாக்க நாம் முயற்சிக்கிறோம்.

கேள்வி – சரி, உங்களுடன் தொடர்புடைய ஒரு விடயம் குறித்து நான் கேள்வி எழுப்ப முடியுமா? ஜனாதிபதி தேர்தல் நடந்தவுடன் சரத் பொன்சேகாவை கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தீர்கள் என்பது சரியா? பொதுமன்னிப்பு வழங்குவதற்கு ஆதரவளித்தீர்களா? ஏன்?

பதில் – எனக்குத் தெரியாது… எனக்குத் தெரியாது. நாள் கருத்துக் கூற விரும்பவில்லை. இதனுடனேயே நிற்பீர்களாக இருந்தால், நான் நேர்காணலை நிறுத்தி விடுவேன். நாம் முன்னே செல்ல வேண்டியுள்ளது. நான் ஒரு அதிகாரி மட்டுமே. ஒரு செயலாளர்.

நான் நாளாந்த விவகாரங்கள் குறித்தே அதிக ஆர்வம் கொண்டுள்ளேன். நான் முழுமையாக பாதுகாப்புடன் தொடர்புடைய செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு வருகிறேன் என்று கோத்தாபய ராஜபக்ச பதிலளித்துள்ளார்.பொன்சேகா தொடர்பில் கேட்ட பத்திரிகை ஆசிரியர்! எச்சரித்தார் கோத்தபாய!! Kottabaya-60x60
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» மியான்மரில் வெளிநாட்டு பத்திரிகை ஆசிரியர் கைது
» சசிகலா குடும்பத்தினரின் சமீபகால எல்லை மீறிய அட்டகாசங்கள்; பத்திரிகை ஆசிரியர் ஊடாக ஜெயலலிதாவுக்கு
» பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபஷ் உஷ்பெகிஸ்த்தான் விஜயம்.
» ஏப்ரல் 3 உலக பத்திரிகை சுதந்திர நாள்!
» இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கோத்தபாய கடும் விசனம்....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum