Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெற்றோரைப் பேணுவோம்
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
பெற்றோரைப் பேணுவோம்
நல்லோர்கள் வாழ்வை நாம் புரட்டிப் பார்த்தால் அவர்கள் பெற்றோர் நலன் பேணுவதில்பெரும் அக்கறை எடுத்துக்கொண்ட விதத்தைப் படித்து மெய்சிலிர்த்துப் போகிறோம்.
பின்வரும் நிகழ்வுகளை வாசியுங்கள் சுப்ஹானல்லாஹ் இந்தளவு பேற்றோரைப் பேண முடியுமா என்று மூக்கில் விரல் வைத்து வியப்பின் விளிம்பைத் தொடுவீர்கள்.
இமாம் ஜைனுல் ஆபிதீன்( ரஹ்) சிறந்த ஒரு 'தாபிஈ'.
அவர்களிடம் கேட்கபட்டது: ''நீங்கள் தாயைக் கவனிப்பதில் கண்ணுங்கருத்துமாய் உள்ளவர்கள். ஆனாலும் ஒருமுறை கூட தாயாருடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டதில்லையே. ஏன்?''
அவர்கள் கூறிய பதில்: என் தாயின் பார்வையில் பட்டு அவர்கள் மனம் விரும்பிய ஏதேனும் ஒரு உணவுப் பகுதியை நான் கவனிக்காமல் அள்ளி உண்டுவிடுவேனோ அதன் காரணமாக அவர்களைப் புண்படுத்திய குற்றத்திற்கு ஆளாகிவிடுவேனோ'' என்று அஞ்சுகிறேன்.
முஹம்மது இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் தாயாரிடம் உரையாடும்பொழுது குரலைத் தாழ்த்தி தனிந்த குரலில் பேசுவார்கள். பார்க்கிறவர்கள் ''என்ன இப்னு சீரீனுக்கு ஏதாவது உடம்புக்கு முடியலையா?'' அடங்கி ஒடுங்கி அமைதியாக பேசுகிறாரே'' என்று கேட்பார்களாம்.
இப்னு அவ்னில் முஸ்னீ ரஹ் அவர்களும் அப்படித்தானாம். ஆனால் ஒருமுறை அவர்களை அவரது தாயார் சற்று தூரத்தில் நின்றிருந்ததால் சப்தமிட்டு அழைக்க இவர்களும் சப்தமிட்டு குரல் கொடுத்தார்களாம். நம்மைப் பொருத்தவரை இதுவெல்லாம் நம் வாழ்வில் அன்றாட நிகழ்வு. ஆனால் அவர்களோ அதைப் பெருங்குற்றமாக நினைத்து இரண்டு அடிமைகளை உரிமையிட்டு அதற்கு பரிகாரம் தேடினார்கள். :!+:
தல்க் இப்னு ஹபீப் (ரஹ்) அவர்களின் வாழ்வு மிக மிக ஆச்சரியம். அவர்கள் தன் தாயின் தலையைத் தடவி முத்தமிடுவார்கள்; தாய் கீழிருக்கும்போது மாடிக்கு இவர்கள் ஏறியதே இல்லை. தாயின் பாதத்தின் கீழ்தான் சுவனம் உள்ளது அந்த தாயின் தலைக்கு மேல் நம் பாதம் இருப்பதா? அவர்கள் மனம் அதற்கு இடம் தரவே இல்லை.
விவேகானந்தர் ஒருமுறை அமெரிக்காவிற்கு பிரச்சாரம் செய்யக் கிளம்பினார். அம்மாவிடம் பயணம் சொன்னார். அப்போது அம்மா மகனே அதோ அந்த கத்தியை எடுத்து என்னிடம் தந்துவிட்டுப் போ என்றார். அந்த அவசர நேரத்திலும் கத்தியை எடுத்துக் கொடுத்தார் என்பது ஆச்சரியமல்ல. கத்திமுனையை தன் பக்கமாக பிடித்துகொண்டு பிடியை தாயாரிடம் நீட்டினார். கொடுக்கும் அவசரத்தில் கத்தி குத்தினால் அது என் கையாக வேண்டுமானால் இருக்கட்டும் என் தாயின் கையில் ஒரு கீறல் விழுவதைக்கூட சம்மதியேன். ''மகனே நீ மக்களுக்கு உபதேசம் செய்ய தகுதியானவன். போய்விட்டு வெற்றியோடு திரும்பி வா'' என்று அந்த தாய் வாழ்த்தி வழியனுப்பினாள்.
இறுதி காலத்தில் இப்படியும் மக்கள் மாறிவிடுவார்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்:
ஒருவன் தன் நண்பனுக்கு தரும் முக்கியத்துவத்தை தன் தந்தைக்கு தரமாட்டான்; மனைவியை மெச்சுவான்; தாயை இம்சிப்பான் இப்படி பெரும்பாலோரின் மனநிலை மாறும் என்று மாநபி சொன்னது இன்று பொய்த்துப் போய்விடவில்லை.
இமாம் ஸஅதி (ரஹ்) குலிஸ்தானில் சுவையான நிகழ்வு ஒன்றைக் குறிப்பிடுகிறார்கள்: அவர்கள் மக்காவிற்கு ஹஜ்ஜு செய்ய சென்றிருந்தபொழுது அங்கு ஒரு இளைஞரை சந்தித்தார்கள். தம்பி, உங்களுக்கு எந்த ஊர்?'' அதற்கு அவன் தனது ஊரைக் குறிப்பிட்டான். ''அப்படியா? நான் அந்த ஊருக்கு வந்துள்ளேனே. நீ யாருடைய மகன்?'' ''நான் இன்னாருடைய மகன்'' அவன் தனது தந்தையின் பெயரைக் கூறினான். ''அடடா.. உனது தந்தை எனக்கு நண்பராயிற்றே அவர் முன்பு ஒரு தடவை ஹஜ்ஜுக்கு வந்திருந்தபொழுது நானும் வந்திருந்தேன். அவர் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் இடத்தில் நின்றுகொண்டு தனக்கு ஒரு ஆண் குழந்தை தந்தருளுமாறு இறைஞ்சினார். அதன்மூலம் பெறப்பட்ட குழந்தையா நீ? நல்லது. உன்னைப் பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீ ஊருக்குத் திரும்பியதும் எனது சலாமை உன் தந்தைக்கு தெரியப்படுத்து'' என்று கூறி அவனிடமிருந்து விடைபெற்றார்கள். சில அடிகள்தான் எடுத்து வைத்திருப்பார்கள். அதற்குள் அவன் அவர்களைக் கைதட்டிக் கூப்பிட்டு ''நீங்கள் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் இடம் என்று கூறினீர்களே. அது எங்கே உள்ளது?'' என்றான். ''ஏனப்பா அதைக் கேட்கிறாய்'?''
''என் தந்தையை இறைவன் சீக்கிரம் எடுத்துக்கொள்ளட்டும் என்று அவ்விடத்தில் நின்று நான் துஆ கேட்கப்போகிறேன்'' என்றானாம். இமாம் ஸஅதி அப்படியே ''ஷாக்'' ஆயிட்டாங்களாம். இந்த மாதிரி பிள்ளைகளாக நாம் இருக்கக்கூடாது.
மேலும் படிக்க..
sadhak-maslahi.blogspot.com/2012/05/blog-post_24.html
Similar topics
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» மூத்தோரைப் பேணுவோம்
» பெற்றோர்களை பேணுவோம்!
» உடல் நலம் பேணுவோம்
» சமூக நலன் பேணுவோம்
» மூத்தோரைப் பேணுவோம்
» பெற்றோர்களை பேணுவோம்!
» உடல் நலம் பேணுவோம்
» சமூக நலன் பேணுவோம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum