Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சமூக நலன் பேணுவோம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
சமூக நலன் பேணுவோம்
இவ்வுலகில் அல்லாஹு தஆலாவின் பிரதிநிதியாகப் படைக்கப்பட்டுள்ள மானிடர்கள் யாவரும் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் தான் படைக்கப்பட்டுள்ளார்கள் என்பது ஹதீஸ்களின் வாயிலாக நாம் அறியும் உண்மை.
ரஸ¥ல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘ஆதமுடைய சந்ததிகள் யாவரும் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டுள்ளனர்.’
தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டுள்ள நாம் எம்மைப் படைத்த இறைவனிடம் சதா தவறுகளில் இருந்தும் பாவங்களில் இருந்தும் மீட்சி பெற இறைஞ்சிய வண்ணமே இருக்க வேண்டும். ரஸ¥ல் (ஸல்) அவர்கள் கூட ஒரு நாளைக்கு நூற்றுக்கு அதிகமான தடவைகள் இறைவனிடத்தில் பாவ மீட்சிக்காக இறைஞ்சியதாக ஹதீஸ்களின் வாயிலாக நாம் அறிகிறோம்.
தீய செயல்களைப் புரியாத அந்த உத்தம தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு நாளைக்கு இவ்வாறு நூற்றுக்கும் அதிகமான தடவைகள் இறைஞ்சுவார்கள் என்றால் சதா பாவத்திலேயே மூழ்கியிருக்கின்ற நாம் இறைவனிடத்தில் எமது பாவ மீட்சிக்காக சதா இறைஞ்சிய வண்ணமே இருக்க வேண்டும் என்பது தெளிவான ஒரு விடயமாகும்.
இவ்வையகத்தில் வாழ்கின்ற எம்மால் எம்மை அறியாமல் அல்லது அறிந்து நாம் செய்கின்ற பாவங்களை பெருமையாக எம்முடன் வாழ்கின்ற ஏனைய மக்களிடத்தில் பகிரங்கப்படுத்துவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இதனை அல்லாஹு தஆலா திருமறையில் கூறும் போது,
‘நிச்சயமாக எவர்கள் முஃமீன்களுக்கிடையே மானக் கேடான காரியம் பரவுவதை விரும்புகின்றார்களோ அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரும் வேதனை உண்டு.’
(அல்குர்ஆன் – 24 : 19)
‘ஹஜ்ரத் அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவில நான் செவி மடுத்தேன். ‘என் உம்மத்தினர்கள் அனைவரும் ஈடேற்றம் பெறுவர். (தங்கள் பாவங்களை) பகிரங்கப் படுத்துபவர்களைத் தவிர ஒரு மனிதர் இரவில் ஒரு (பாவமான) செயலைச் செய்து விட்டு காலையில் எழுகிறார். அல்லாஹ் அவரது பாவத்தை மறைத்திருந்தான்.
ஆனால் அவர் (மற்றொரு மனிதனிடம்) இன்னாரே நேற்று இரவு நான் இன்ன இன்ன (பாவங்களைச்) செய்தேன் என்று கூறுகிறார்கள். இது பாவங்களைப் பகிரங்கப்படுத்துவதில் நின்றும் உள்ளதாகும். அவரது பாவத்தை அவரது இரட்சகன் மறைத்தவராக இரவைக் கழித்தார். (பின்னர்) பகலில் அவரே அல்லாஹ்வின் திரையை நீக்குபவராக ஆகிவிட்டார்.’
(புஹாரி முஸ்லிம்)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சமூக நலன் பேணுவோம்
மேலே பார்த்த அல்குர்ஆன் வசனத்தில் இருந்தும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழியில் இருந்தும் பாவகரமான செயல்களைப் பகிரங்கப் படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொண்டோம்.
இவ் அல்குர்ஆன் வசனமும் இப்பொன் மொழியும் தெரியாத சிலர் தங்களுடைய பாவங்களை ஏனைய மனிதர்களிடத்தில் பெருமையாக பேசிக் கொள்கின்றார்கள். இவ்வாறு பேசுவது தங்களுக்கு கெளரவம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்வ சாதாரணமாக அவர்கள் நேற்று இரவு பார்த்த சினிமாப் படங்களைப் பற்றிய விவரணங்களைப் பரிமாறிக் கொள்வதை இன்று நாம் எம் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கின்றோம்.
குற்றங் குறைகளை, பாவமான காரியங்களை வெளிப்படுத்துவதினூடாக தீமையான காரியங்களை மறைமுகமாக நாம் ஊக்குவிக்கின்றோம். இது எமது பகிரங்க விரோதியான ஷைத்தானின் பண்பாகும்.
எவர் ஒருவர் மற்றொருவருக்கு ஒரு நன்மையான காரியத்தை கற்றுக் கொடுக்கின்றாரோ அல்லது அவ்வம¨லைப் புரியுமாறு ஏவுகின்றாரோ அவ்வமலை அவர்தன் வாழ நாள் பூராகவும் எடுத்து நடக்கும் வரை அவ்வமலைப் புரிபவருக்கு கொடுக்கப்படும் நன்மையைப் போன்றே அவ்வமலைப் புரிவதற்காக வழிகாட்டியவருக்கும் கொடுக்கப்படும் அமல் செய்தவரின் நன்மையில் இருந்து ஒன்றும் குறைக்கப்படமாட்டாது.
இன்னும் அம்மனிதர் யாருக்கெல்லாம் உபதேசித்து கற்றுக்கொடுத்து நன்மையான காரியங்களைச் செய்யுமாறு உபதேசிக்கின்றாரோ அவ்வத்தனை பேர்கள் செய்த நன்மையிலும் முதலில் வழிகாட்டியவருக்கும் பங்குண்டு.
இதேபோன்று தீமையான காரியங்களை நாம் பகிரங்கப்படுத்துவதினூடாக எம்மைச் சூழ வாழ்கின்றவர்கள் அத்தகைய தவறுகளைச் செய்தால் அல்லது அத்தவறு எங்கே சென்று முடிகின்றதோ அதுவரை அத்தவறை அறிமுகப்படுத்திய எமக்கு அப்பாவத்தில் பங்கு வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: ‘யார் நேர்வழியின்பால் அழைக்கின்றாரோ, அவருக்கு அந்நேர் வழியைப் பின்பற்றுபவர்களுடைய நற்கூலிகள் போன்றவை உண்டு. அவர்களின் நற்கூலிகளில் எதுவும் குறையாது. யார் தீய வழியின் பால் அழைக்கின்றாரோ, அவருக்கு அத்தீய வழியைப் பின்பற்றுபவர்களின் பாவங்கள் போன்றவை உண்டு. அதனால் அவர்களின் பாவங்களில் எதுவும் குறைவதில்லை.’ (முஸ்லிம்)
ஓர் உயரிய நோக்கத்திற்காகப் படைக்கப்பட்ட நாம் அல்லாஹு தஆலாவினது பிரதிநிதி என்ற வகையில் எமது பொறுப்புக்களைச் செய்வனே செய்து நன்மையான காரியங்களை ஒருவருக்கொருவர் உபதேசித்து அமல் செய்து, பரப்புவதினூடாக இறை அன்பைப் பெற்று ஜெயசீலர்களின் கூட்டத்தில் சேர்ந்து கொள்ள எல்லாம் வல்ல நாயன் அருள்புரிவானாக.
தொகுப்பு : அஷ்ஷெய்க்
எம். யு. எம். காமில் (கபூரி)

Similar topics
» நலன் தரும் நம்பிக்கை வழிபாடுகள்
» பெற்றோர்களை பேணுவோம்!
» பெற்றோரைப் பேணுவோம்
» மூத்தோரைப் பேணுவோம்
» உடல் நலம் பேணுவோம்
» பெற்றோர்களை பேணுவோம்!
» பெற்றோரைப் பேணுவோம்
» மூத்தோரைப் பேணுவோம்
» உடல் நலம் பேணுவோம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum