சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

வலிமைக்கு வழிகாட்டும் ‘தண்ணீர்விட்டான்’ மருத்துவக் குணங்கள் Khan11

வலிமைக்கு வழிகாட்டும் ‘தண்ணீர்விட்டான்’ மருத்துவக் குணங்கள்

Go down

வலிமைக்கு வழிகாட்டும் ‘தண்ணீர்விட்டான்’ மருத்துவக் குணங்கள் Empty வலிமைக்கு வழிகாட்டும் ‘தண்ணீர்விட்டான்’ மருத்துவக் குணங்கள்

Post by mufees Mon 11 Jun 2012 - 20:57

une 11th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

சதாவரி, சல்லகட்டா, சதாவல்லி, சதாவேரி, சதாமூலம், நீர்வாளி, நாராயணி, சீக்குவை என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மூலிகைத் தாவரம் தண்ணீர்விட்டான். இயற்கையான சூழ்நிலையில் காடுகளில் கொடிகளாக வளரும் இது அடர்த்தியான பச்சை நிறத்தில் இருக்கும். இதன் வேர்கள் கிழங்குகள் போன்று சதைப்பற்றும் நீர்த்தன்மையும் கொண்டு இருக்கும்.இதன் இலைகள் மற்றும் வேர்கள் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. உலர்ந்த நிலையில் தண்ணீர்விட்டான் வேர் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

குளிர்ச்சித் தன்மையும் இனிப்புச் சுவையும் கொண்ட தண்ணீர்விட்டான் வேர்கள், உடலைப் பலமாக்கவும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யவும் உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றவும் ஆண்மையை அதிகரிக்கச் செய்யவும் அருமருந்தாகவும் பயன்படுகிறது.

பசுமையான தண்ணீர்விட்டான் வேர்களை நீரில் நன்றாக அலசிச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சுத்தம் செய்த வேர்களை நீர்த்தன்மை போக வெயிலில் உலர்த்தி எடுத்து நன்கு இடித்துத் தூளாக்கிக் கொள்ள வேண்டும். தண்ணீர்விட்டான் வேர்த் தூள் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டு அதனைப் பசுவின் நெய்யோடு சேர்த்து நாள் ஒன்றுக்கு காலை, மாலை என இரு வேளைகள் உட்கொண்டு வர வேண்டும். இதனால், சோர்வு நீங்கி உடல் நன்கு பலம் பெறும்.

சுத்தம் செய்து உலர்த்தி இடித்துப் பொடித்த தண்ணீர்விட்டான் வேர்த் தூளை தினமும் காலை, மாலை இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு உட்கொண்டு ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பால் குடிக்க வேண்டும். 30 நாட்கள் வரை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். இதனால், இளமை மிடுக்கு உண்டாவதோடு ஆண்மை பெருகும்.

பசுமையான தண்ணீர்விட்டான் வேரை நீரில் அலசிச் சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். நான்கு ஸ்பூன் அளவு வேர்ச் சாற்றுடன் இரண்டு ஸ்பூன் அளவு சர்க்கரை கலந்து உட்கொள்ள வேண்டும். இதனால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகமான ரத்தபோக்குக் கட்டுப்படும்.

கால்களில் உண்டாகும் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர்விட்டான் வேர்ச்சாறு எடுத்து தினமும் காலையிலும், இரவில் படுக்கைக்குப் போகும் முன்பும், கால்களிலும் பாதங்களிலும் நன்கு பூச வேண்டும். தொடர்ந்து பூசிவந்தால் கால் எரிச்சல் கட்டுப்படும்.
வலிமைக்கு வழிகாட்டும் ‘தண்ணீர்விட்டான்’ மருத்துவக் குணங்கள் Thaneervitan-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum