Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெண்களுக்கு பர்தா அவசியம் ஏன்?
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
பெண்களுக்கு பர்தா அவசியம் ஏன்?
Assalamu Alaikum wa rahmatullahi wa barakatuhu... பெண்களுக்கு பர்தா அவசியம் ஏன்? ஆண்களின் இச்சையை தூண்டாத வகையில் பெண்கள் அணியக்கூடிய ஒரு கண்ணியமான உடையையே இஸ்லாம் பர்தா என்கிறது. இந்த பர்தா பெண்களின் சுதந்திரத்தை எந்த வகையிலும் பறிக்கவில்லை. முஸ்லிம் பெண்களுக்கு கடமையாக்கப்பட்ட பர்தா பின்வருமாறு இருத்தல் வேண்டும். 1.குறைத்தது முகத்தையும் கைகளையும் தவிர உடம்பின் ஏனைய பாகங்கள் எல்லாவற்றையும் மறைப்பது. 2. உடல் உறுப்புக்களைப் பார்க்கக் கூடிய அளவில் அந்த ஆடைகள் மெல்லியதாக இருக்கக் கூடாது. 3. ஆடைகள் மிகவும் இறுக்கமின்றி நெகிழ்வானதாக இருக்க வேண்டும். 4. ஆண்களின் ஆடைகளின் பிரதிபலிப்பைப் போல பெண்களின் ஆடை இருக்கக் கூடாது. 5. மற்ற சமூகப் பெண்களின் உடைகள் போல இருக்கக் கூடாது. 6.வாசனை திரவியங்கள் தடவிய ஆடையாக இருக்கக் கூடாது. (ஒரு பெண் மணம் பூசி அதன் வாசனையை நுகரும் வண்ணம் அவர்களைக் கடந்து போவாளாயின் அவள் ஒரு விபச்சாரியென நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் - இந்த ஹதீஸை இமாம் அஹமத், அந்நிஸாஈ ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்). 7. நமது செல்வச் செழிப்பை எடுத்து காண்பிப்பது போன்ற, அதாவது காட்சிப் பொருளாக ஆடம்பரமான ஆடைகளை பர்தாவாக அணியக் கூடாது. பெண் என்பவள் மறைக்கப்பட வேண்டியவள். அவள் தனது உடல் அழகை வெளிகாட்ட அரைகுறையாகவும் கவர்ச்சியாகவும் ஆடை அணிவது வெட்கக்கேடான செயலாகும். அல்குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆதாரம்:- பெண்கள் பர்தா அணிவதைப் பற்றி அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் பல இடங்களில் கூறியிருக்கிறான். அல்லாஹுவின் திருத்தூதர் முஹம்மது(ஸல்) நவின்றுள்ளதாக பல ஹதீஸ்களும் தெரிவிக்கின்றன. திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான். "நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும் அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக்கிருபையுடையவனாக இருக்கிறான்". (அல்குர்ஆன்-33:59) இதன் மூலம் பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்தியிருக்கிறான். மேலும் பெண்கள் எத்தகைய பண்புகளுடன் இருக்க வேண்டும் என்பதை பற்றியும், மஹரமற்ற ஆண்களுக்கு தன் அலங்காரங்களை காண்பிக்கக் கூடாது என்பது பற்றியும் கீழ்க் கண்ட வசனம் விளக்குகிறது. மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: "தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்; தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்; மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம். அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ¤வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31) நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: "உலகில் தன் கணவனுக்கல்லாது மற்றவர்களுக்கு தன்னை அழகுபடுத்தி திரியும் பெண்ணின் நிலை மறுமையின் இருளைப் போன்றதாகும். அங்கு எவ்வித ஒளியும் இருக்கமாட்டாது. (திர்மிதீ - 1167) எனவே, ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாக அல்லாஹுவின் கட்டளைக்கு கீழ்படியும் விதமாக பர்தா அணிய வேண்டும். பர்தா இல்லாவிட்டால் ஏற்படும் விபரீதங்கள்:- ஒரு பெண்ணுக்கு இயல்பாகவே அமைந்துள்ள அச்சம், மடம், நாணம், பயர்ப்பு, அடக்கம் போன்ற பண்புகளுக்கு ஏற்ற விதமாகவே பர்தாவும் அமைந்துள்ளது. எந்த ஒரு பெண்ணையும் கண்கள் கண்ட பிறகு தான் மனம் அவள் பேரில் நாட்டம் கொள்கிறது. பர்தா அணிவதினால் கண்களுக்கு திரையிட்டாற் போலிருக்கும் தகாத எண்ணங்கள் தோன்றாது. எத்தகைய கட்டுப்பாடும் இல்லாத மற்ற சமூகப் பெண்கள் ஏன் பர்தா அணியாத நம் இஸ்லாமியப் பெண்களும் பொது இடங்களிலும், அலுவலகங்கள், கல்லூரி பாடசாலை போக்குவரத்து போன்றவற்றிலும் அனுபவிக்கும் துன்பங்கள் தொந்தரவுகள் ஏராளம். நாம் தினந்தோறும் நாளேடுகள், தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள் வழியாக எவ்வளவோ விஷயங்களை அறிந்து கொண்டுதானிருக்கிறோம். பர்தா அணிந்த ஒரு பெண்ணும் பர்தா அணியாத ஒரு பெண்ணும் தெருவில் நடந்து செல்லும் போது இவ்விருவரில் ஆண்கள் யாரை கிண்டல் கேலி செய்வார்கள் என்று ஜாகிர் நாயக் என்னும் அறிஞர் நிகழ்ச்சி ஒன்றின் போது மக்களைப் பார்த்துக் கேட்டார். பர்தா அணியாத பெண்ணைத் தான் என்று எல்லோரும் ஒட்டுமொத்தமாக பதில் சென்னார்கள். ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பெண்கள் உடையணிவதே ஆண்களை குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று பெங்களூர் இன்ஸ்டியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கூறுகிறது. பல்வேறு மாநிலங்களில் பெண்கள் அணியும் ஆடைக்குறித்து வங்க தேசம் உட்பட நமது நாட்டில் 125 கல்லூரிகளில் 20000 மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணிவது நம் நாட்டில் பெருகிவரும் குற்றங்களுக்கு காரணமாக அமைகிறது. இது ஆண்களையும் குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று 75 சதவீத மாணவர்கள் கூறினார்கள் என்று அந்த நிறுவனம் கூறுகிறது. (ஆதாரம் - தினமலர் ஜூன் 2-ம் தேதி 2001-ம் ஆண்டு) தமிழகத்தில் ஒன்பது மாதகாலங்களில் மட்டும் கற்பழிப்பு-445 வழக்குகளும், பாலியல் பலாத்காரம்-1614 வழக்குகளும், பெண்களை கடத்தியதாக-224 வழக்குகளும், ஆபாசமாய் பேசியதாக-2422 வழக்குகளும், வரதட்சணை கொடுமை-904 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என இந்த தகவலை சமூகநலத்துறை அமைச்சர் ப.வளர்மதி சட்டபேரவையில் தெரிவித்தார். (ஆதாரம் - தினமணி நவம்பர் 11-ம் தேதி 2001-ம் ஆண்டு) பர்தா இல்லாததினால் ஏற்பட்டுள்ள இத்தகைய விபரீதங்களை தடுக்கும் விதமாக இனிமேலாவது நம் சகோதரிகள் பர்தா உடுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும். பர்தா சுதந்திரத்தை பறிக்கவுமில்லை, பாதிக்கவுமில்லை, எங்கள் முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை என வாழ்ந்து காட்டியவர்கள்: பர்தா சுதந்திரத்தை பறிக்கவுமில்லை, பாதிக்கவுமில்லை, எங்கள் முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை என வாழ்ந்து காட்டிக்கொண்டிருப்போர் எண்ணற்ற பேர் உள்ளனர். எனக்குத் தெரிந்த சில மருத்துவர்கள், வேலைக்குச்செல்லும் என் சில தோழியர்கள் பர்தா அணிந்து தான் அவரவர் அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள். பிரபலமானவர்களைப் பற்றி சொல்வதென்றால் கேரள நாட்டை சேர்ந்த கமலா சுரய்யாவை குறிப்பிடலாம். இவர் கேரளாவின் மிக புகழ் பெற்ற எழுத்தாளர். 1999-ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தான் இஸ்லாத்தை தழுவியதற்கு இரண்டு காரணங்களை கூறுகிறார். ஒன்று பர்தா மற்றொன்று இஸ்லாம் பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பு (பார்க்க : https://www.facebook.com/photo.php?fbid=391662820852796). உலகில் உள்ள ஆடைகளில் மிகவும் அழகானது பர்தா என்று குறிப்பிடுகிறார். நான் எப்பொழுதும் பர்தா உடுத்தியவளாகவே இருக்க விரும்புகிறேன். அது ஆத்மார்த்தமான பாதுகாப்பு அளிப்பதாக உணர்கிறேன். நிறைய முஸ்லிம் பெண்மணிகள் பர்தா அணிவது பற்றி கேட்டு வருவார்கள். அவர்களுக்கு பர்தாவின் அவசியத்தை எடுத்துரைத்து பர்தா அணியுமாறு ஊக்குவிப்பேன் என்கிறார். மற்றும் ஒரு பிரபலமான பெண்மணி ஏஞ்சலா வில்லியம்ஸ் கதீஜத்து சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றவர். சென்னை அமெரிக்க தூதரக அலுவலகத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றுகிறார். அரபியிலும் சரளமாக பேசுகிறார். குர்ஆன், ஹதீஸிலும் ஆழமான அறிவு படைத்தவர். பர்தா நாகரிகத்திற்காகவோ அழகுக்காகவோ அணியப் படுவதில்லை. பெண்களின் அழகை அன்னியரின் பார்வையிலிருந்து மறைக்க வேண்டும் என்பதற்காகவும், மற்ற முஸ்லிம் அல்லாதவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவும் என்று இவர் கூறுகிறார். மேலும் பர்தா அணிவதால் புழுக்கமாக இருக்கும், பாரபட்சத்துற்காளாவோம் என்பதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. என்னை பொறுத்தவரை பர்தா அணிவதால் என் உடலில் துளிர்க்கும் ஒவ்வொரு வேர்வை துளிகளுக்கு பகரமாகவும் நான் சகித்துக் கொள்ளும் அசெளகரியங்களுக்கு பதிலாகவும் பர்தா அணியும் ஒரே காரணத்திற்காக நான் எதிர்க் கொள்ளும் பாரபட்சங்களுக்கு பதிலாகவும் இன்ஷா அல்லாஹ் எனது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றே நான் நம்புகிறேன். பர்தா அணிவது கூட ஒரு வகை ஜிஹாத் என்றே நான் கருதுகிறேன். அமெரிக்கத் தூதரக அலுவலகத்திற்கு வந்தீர்களானால் என்னை பர்தா அணிந்த கோலத்தில் தான் பார்ப்பீர்கள் என்று கூறுகிறார். (ஆதாரம்: சமரசம் 1-15 அக்டோபர் 2002) லண்டனில் உள்ள நியூ ஸ்காட்லாண்ட் யார்டில் இஸ்லாமிய பெண் போலீசார் பர்தா அணிந்து பணிபுரிகிறார்கள். ஈரான், மற்றும் சூடான் நாடுகளிலும் பெண்கள் பர்தா அணிந்து காவல்துறையிலும், ராணுவத்திலும் கடமையாற்றுகிறார்கள். பர்தாவின் அவசியத்தை உணரும் மேற்கத்தியர்கள்: மேற்கத்திய நாடுகளில் எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் சரி ஆண் பெண் பேதமின்றி எல்லோருமே ஒன்றாக செயல் பட வேண்டிய பண்பாட்டு சூழலில் அம்மக்கள் வசிக்கிறார்கள். இதனால் இவர்கள் மிக எளிதாக இனக்கவர்ச்சியில் சிக்குண்டு சீரழிகிறார்கள். காரணம் பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவது தான். நொரீன் என்னும் அமெரிக்க பெண்மணி "சிகாகோ டிரிபியூன்" என்னும் பத்திரிக்கையில் நிருபராக வேலை பார்ப்பவர். தன் வேலை நிமித்தம் செய்திகள் சேகரிக்க வெளியே செல்லும் போது பர்தா அணிந்து தான் செல்கிறார். நவீன அமெரிக்க சூழலில் இஸ்லாமிய ஒழுக்கக் கோட்பாடுகளுக்கு ஏற்ப தன் கணவருடனும் மகளுடனும் வாழ்ந்து வருகிறார். அவர் நீச்சல் மற்றும் நடை பயிற்சியின் போதும் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய உடை உடுத்தி தலையில் தொப்பி அணிகிறார். பர்தா அணிவது என்பது பெண்மையின் அனைத்து பண்புகளையும் பெண்களுக்கு அதிகப்படுத்துகின்றது, தவிர பெண்மையை ஒடுக்கும் விதமாக அது அமையவில்லை எனவும் கூறுகிறார். ஹலீமா, நூர், ஸபியா, ஸாதியா இவர்கள் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பர்தா அணிந்தபடி தான் வெளியே எங்கும் செல்வார்கள். கனடா நாட்டவர்கள் இவர்களிடமும், இவர்களைப் போன்று பர்தா அணியும் மற்ற சில பெண்களிடமும் இது கனடா நாடு, நீங்கள் இங்கே பர்தா அணியாமல் சுதந்திரமாக இருக்கலாம் என்று கூறுவார்களாம். அதற்கு இந்த பெண்கள் நாங்கள் எல்லோரும் முஸ்லிம்கள், அல்லாஹுவின் கட்டளைக்கு அடிபணிந்து நாங்கள் பர்தா அணிகிறோம், இது ஒரு சுதந்திர நாடு, நாங்கள் விரும்பியபடி ஆடை அணிய எங்களுக்கு உரிமையிருக்கிறது என கூறுகிறார்கள். இந்த பெண்களின் மூலம் பர்தாவின் அவசியத்தை மேலைநாட்டவரும் உணர்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. |
__,_._,___
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பெண்களுக்கு பர்தா அவசியம் ஏன்?
சிந்திப்பவர்களுக்கு பல விஷயங்கள் உள்ளன..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» பர்தா பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கின்றதா? (2)
» பர்தா(புர்கா) என்றால் என்ன?
» பெண்களுக்கு கால்சியம் சத்து அவசியம்
» பெண்மையை பாதுகாக்கவே பர்தா
» பர்தா என்றால் என்ன?
» பர்தா(புர்கா) என்றால் என்ன?
» பெண்களுக்கு கால்சியம் சத்து அவசியம்
» பெண்மையை பாதுகாக்கவே பர்தா
» பர்தா என்றால் என்ன?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum