சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை Khan11

தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை

Go down

Sticky தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை

Post by ahmad78 on Tue 12 Jun 2012 - 15:40

மாநில அரசின் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் வழங்கப்படும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்சிப் பெற தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பிளஸ் 1, பிளஸ் 2, ஐ.டிசி - என்.சி.வி.டி, பாலிடெக்னிக், நர்சிங் பட்டய படிப்பு, ஆசிரியர் பயிற்சி, இளநிலை பட்டப்படிப்பு,எம்.பில், பி.எச்டி போன்ற படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமாணம் 2லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்ற உதவித்தொகை பெற முடியாது.பள்ளி படிப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கல்வி நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும். கல்லூரி படிப்பு பயிலும் மாணவர்கள் www.momascholarship.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பித்த விண்ணப்பத்தை நகல் எடுத்து அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கான வருமான சான்றிதழ், குடும்ப அட்டை,வங்கி கணக்கு எண் (ஐ.எப்.சி கோடுடன்)இணைத்து அனுப்ப வேண்டும்.விண்ணப்பங்கள் கல்வி நிறுவனத்திந்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் பள்ளி மாணவர்கள் ஜூலை 31ம் தேதி வரையிலும், கல்லூரி மாணவர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விரிவான விவரங்கள் அறிய இணையதளத்தை பார்க்கலாம். .

http://www.minorityaffairs.gov.in/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை

Post by ahmad78 on Tue 12 Jun 2012 - 15:56

அரசின் இலவச கல்வி உதவி தொகை


பள்ளிபடிப்பு

1. பள்ளி படிப்பிற்க்கு தமிழக அரசால் வழக்கப்படும் உதவித்தொகை, சீருடை, நோட்டு புத்தகம், காலனி அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கே வழங்கப்படுகின்றது (தனியார் பள்ளிகளுக்கு கிடையாது). இதை பெருவதில் சிரமம் இல்லை, இதில் கல்வி கட்டணத்தை தவிர அனைத்தும் தானகவே கிடைக்கின்றது. கல்வி உதவி தொகை விண்ணப்பித்தால் கிடைக்கும்,அரசு பள்ளிகளில் கல்வி கட்டணம் மிக மிக குறைவு( சில நூறு ரூபாய்கள்). எனவே (அரசு பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்கும்) பெற்றோர்கள் இதை
பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. .
2. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக மத்திய அரசு ஒரு தகுதி தேர்வுவை (NET/NTSE/NMMS தேர்வுகள்) நடத்துகின்றது, இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் (பாஸ் பன்னினால் ) மட்டுமே உதவி தொகை கிடைக்கும். (8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு) மாதம் 500 ரூபாய் வரை கிடைக்கும். இந்த தேர்வை பற்றிய விபரம் அறிய http://dge.tn.gov.in/ மற்றும் www.ncert.nic.in இந்த இனையத்திற்க்கு செல்லுங்கள், மேலும் விபரம் அறிய நமது TNTJ மாணவரணியை தொடர்புகொண்டு அறிந்துகொள்ளாம்.
பட்ட படிப்பு
1. மத்திய அரசு நடத்தும் தகுதி தேர்வு (NET/NTS/NMMS தேர்வுகள்) பட்ட படிப்பிற்க்கும் உள்ளது, தேர்வில் தேர்ச்சி பெற்றால் *மாதம் ரூ. 1000* வரை கிடைக்கும்.
2. +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து பட்ட படிப்பு சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூ1,000 மத்திய அரசால் வழங்ப்படுகின்றது (முதுகலை (Master Degree) படிக்கும் போது மாதம் ரூ.2,000 வழங்கப்படும்).
2. பட்டபடிப்பை பொருத்தவரையில் தமிழக அரசு முஸ்லீம்களுக்கென்று தனியாக இதுவரை எந்த கல்வி உதவி தொகை திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச உதவி தொகை வழங்குகின்றது. படிப்பிற்க்கு தக்கவாறு *ஒரு வருடத்திற்க்கு ரூ.1000 முதல் ரூ.8500* வரை வழங்குகின்றது இதை பெருவதும் அவ்வளவு சிரமம்மில்லை, ஒவ்வொறு கல்லூரியிலும் இதற்க்கான விண்ணப்பம் வினியோகிக்கப்படும், அதை வாங்கி பூர்த்தி செய்துகொடுத்தாலே போதும், பெரும்பாலும் நமது சமுதாயம் இதை பெற்றுகொள்கின்றது. இந்த கல்வி தொகை பெற தாஸில்தாரிடம் வருமான சான்றிதழ் பெற வேண்டும், வருமான சான்றிதழ் பெருவதற்க்கு அலுப்புபட்டு கொண்டு நமது சமுதாய மாணவர்களில் சிலர் இதை பெருவதில்லை.
3. மத்திய அரசு (தமிழக அரசுடன் இணைந்து) தொழில் கல்வி (ITI, Diploma, B.E/B.Tech, M.E/M.Tech) படிக்கும் சிறுபாண்மை (முஸ்லீம், கிறித்துவர்,சீக்கியர்) மாணவர்களுக்காக சிறப்பான இலவச கல்வி உதவி தொகை திட்டத்தை அமல் படுத்தி வருகின்றது (*வருடத்திற்க்கு ரூ.25,000 வரை*). *விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இது கிடைக்காது.* (மேலும் விபரம் அறியwww.minorityaffairs.gov.in) ஒவ்வொறு வருடமும் அரசு குறிபிட்ட எண்ணிக்கையில் உதவியை வழங்குகின்றது. இந்த எண்ணிகை மிக மிக குறைவு, *நாம் கணகிட்ட வரை 200 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒருவர் என்ற எண்ணிக்கையில் இருக்கும். *இதில் இன்னோறு சிக்கல் இதை பெருவதாக இருந்தால் மேலே குறிபிட்ட தமிழக அரசு உதவி தொகை பெறமுடியாது. இது யாருக்கு கிடைக்கும் என்றால் ஐஐடி, என்ஐடி மாணவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும், ஏனெனில் மத்திய அரசு இங்கு படிக்கும் மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றது. மேலும் ஐஐடி, என்ஐடியில் இதை பெருவதற்க்காக சிறப்பான ஏற்பாடும் செய்து வைத்துள்ளனர். ஆனால் கட்டாயம் ரூ.25,000 வரை உதவி தொகை கிடைக்கும் ஐஐடி,என்ஐடியில் முஸ்லீம் மாணவர்கள் மிக மிக குறைவு.
பட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு கல்வி உதவி தொகை
1. மேலே குறிபிட்ட தமிழக அரசு செயல் படுத்தும் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச உதவி தொகை பட்ட மேற்படிப்பிற்க்கும்கிடைக்கும். படிப்பிற்க்கு தக்கவாறு *ஒரு வருடத்திற்க்கு ரூ.2000 முதல் ரூ.8500 வரை* வழங்குகின்றது.
2. மத்திய அரசு நடத்தும் தகுதி தேர்வு (NET/NTS/NMMS தேர்வுகள்) பட்ட
மேற்படிப்பிற்க்கும் உள்ளது, தேர்வில் தேர்ச்சி பெற்றால் *மாதம் மாதம் ரூ.2000* *வரை கிடைக்கும்.* இந்த தேர்வை பற்றிய விபரம் அறிய http://dge.tn.gov.in/ மற்றும் www.ncert.nic.in இந்த இனையத்திற்க்கு செல்லுங்கள்.
3. M.E/M.Tech படிக்க மத்திய அரசு (IIT) GATE என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இதில் தேர்ச்சி பெற்றால் *மாதம் ரூ.5000 முதல் ரூ.8500* வரை வழங்குகின்றது.
மேலே குறிபிட்ட நுழைவுதேர்வு பற்றிய விபரத்தை நமது மாணவரணியை தொடர்புகொண்டு அறிந்துகொள்ளாம்.
முனைவர் படிப்பு (Phd) மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு
1. M.Sc. படித்தவர்களுக்கு மத்திய அரசு CSIR -நுழைவு தேர்வு நடத்துகின்றது,இதில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ.9000 வழங்குகின்றது.
2. மேலும் அராய்ச்சி படிப்புகளான உயிர் தொழிநுட்பம் (பயோ டெக்னாலஜி) உயிரில் (தாவரவியல், விலங்கியல் போன்ற வற்றில் உயர் கல்வி பயலும் மாணவர்களுக்கு இளநிலை விஞ்ஞானி தேர்வுகள் (DBT, JRF தேர்வுகள் ) ஆண்டுதோறும் மத்திய அரசால் நடத்தபடுகிறது. இது சம்பதமாக தகவல்களை நமது TNTJ மாணவரணியை தொடபு கொள்ளவும்.
2. சில நுழைவு தேர்வுகள் (GATE etc..) எழுதினால் பெரும்பாலும் உள்ள முனைவர் படிப்பிற்க்கு உதவிதொகை கிடைக்கும். முனைவர் படிப்பு படிக்கும் மாணவர்கள் தாங்கள் ஆய்வு செய்யும் பாடம், படிக்கும் பல்கலை கழகம் போன்ற தகவலுடன் நமது TNTJ மணவரனியை தொடர்புகொண்டால் அவர்களுக்கு உதவி தொகை பெருவதற்க்கான வழிமுறைகளை விளக்குவோம்.
வெளி நாட்டு படிப்பிற்க்கான உதவி தொகை
அமெரிக்காவில் உதவி தொகை பெற
GRE , TOEFL என்ற இரண்டு தேர்வுகள் உள்ளது. இதை எழுத ரூ.18,000 தேவைபடும் (தற்போதைய நிலவரபடி). இதில நல்ல மதிப்பெண் எடுத்தால் அமெரிக்க பல்கலைகழகங்கள் *மாதம் ரூ.80,000 வரை* உதவி தொகை வழங்குகின்றது. இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, உதவி தொகை பெற்று, நல்ல பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தாலும் அமெரிக்கா
விசா வாங்குவது மிக மிக கடினம்.
இங்கிலாந்தில் உதவி தொகை பெற
IELTS- என்ற தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தால் இங்கிலாந்து பல்கலைகழகங்கள் *மாதம் ரூ.60,000* வரை உதவி தொகை வழங்குகின்றது. இதை எழுத ரூ.10,000 தேவைபடும் (தற்போதைய நிலவரபடி). பிற நாடுகள்* : மேலே குறிபிட்ட மூன்று நுழைவுதேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பிற நாடுகளில் உள்ள பல்கலைகழகங்கள் உதவி தொகை வழங்குகின்றன.
பிற கல்வி உதவிகள்
அரசு செய்யும் உதவி தொகைகளைகளை தவிர சில கல்லூரிகள், அவர்களுடைய கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக தனி தனியாக உதவி தொகை வழங்குகின்றது. அது கல்லூரிக்கு கல்லூரி மாறுபடும். (உதாரணத்திற்க்கு சென்னை புது கல்லுரியில் அங்கு படிக்கும் மாணவர்களுக்கென தனியாக இலவச கல்வி உதவி தொகை திட்டம், ஐஐடி-யில் அங்கு பயிலும் மாணவர்களுக்கென தனியாக இலவச கல்வி உதவி தொகை திட்டம் , etc.....)
நாம் மேலே குறிபிட்டது போக மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது சில கல்வி உதவிதொகை திட்டத்தை அறிவிக்கும், அவற்றை பற்றி அரசு அறிவிப்பு வெளியகும் போது நமது ஊடங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
அரசின் இலவச கல்வி திட்டமும் முஸ்லீம்களின் நிலையும்
1. மத்திய மாநில அரசுகள் வழங்கும் இலவச கல்வி உதவி தொகை மிக மிக குறைவாக உள்ளது, இதனால் நமது சமுதாயம் அதை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவதில்லை.
2. அதிக பணம் கிடைக்கும் கல்வி உதவி தொகை பெற நுழைவு/தகுதி தேர்வுகள் உள்ளன.இந்த தேர்வுகளெள்ளாம் கடினம் என நமது சமுதாய மாணவர்கள் நினைப்பதினால், *இதை எழுதி தேர்ச்சி பெரும் நிலையில் நமது சமுதாயம் இல்லை, இதனால் பெரும்பாலான இலவச கல்வி உதவி தொகை வீணகின்றது.*
3. நுழைவு/தகுதி தேர்வு இல்லாமல் கிடைக்கும் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பம் வாங்கி, சான்றிதழ் பெற்று பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால் நமது சமுதாயம் இதில் அதிக அக்கரை காட்டுவதில்லை. காரணம் பெரும்பாலானவர்கள் இதை பற்றி அறியாதவர்களாக இருக்கின்றனர், அரசு நிறுவங்களுக்கு சென்று பழக்கம் இல்லாதவர்களாக இருக்கின்றனர், *பெரும்பாலான மாணவர்களின் தந்தைகள் வெளி நாட்டில் இருப்பதால் பெண்களே இந்த வேலையை செய்ய வேண்டி உள்ளது, அல்லது அடுத்த ஆண்களின் துனையை நாட வேண்டி உள்ளது இதனாலேயே பலர் அரசிடம் இருந்துகிடைக்கும் சிறிய அளவிளான கல்வி தொகையையும் பெருவதற்க்கு முயற்சிப்பதில்லை.
தீர்வு என்ன?
தமிழகத்தில் லட்சக்காணக்கான முஸ்லீம் மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர்,அனைவருக்கும் நாமே நேரடியாக சென்று கல்வி உதவி வாங்கி தருவது என்பது நடைமுறை சாத்தியமில்லை, எனவே நமது முஸ்லீம் சமுதாயத்திற்க்கு நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எவ்வாறு அரசிடம் இருந்து கல்வி உதவி பெருவது என்பதை விளக்க வேண்டும், அவர்களே தானாக சென்று கல்வி உதவி பெரும் நிலையை ஏற்படுத்த வேண்டும், இதைதான் தற்போது TNTJ மாணவரணி செய்து கொண்டு இருக்கின்றது,

கல்வி உதவி சம்மதமான முக்கியமான இணைய தளங்கள்
தமிழக அரசின் தேர்வுகளுக்குகான இணையம்
www.dge.tn.gov.in/
தேசிய திறன் தேர்வு இணையம்
www.ncert.nic.in
மத்திய அரசின் சிறுபாண்மை நலதுறை
www.minorityaffairs.gov.in
கல்வி உதவிக்கான மத்திய அரசின் இணையதளம்
www.educationsupport.nic.in
பிற கல்வி உதவி சம்மந்தமான தகவல் பெற
www.scholarshipsinindia.com
மேலும் கீழ்க்கானும் தமிழக அரசின் அமைப்புகள் கல்வி உதவி , இலவச பயிற்சி போன்றவற்றை சிறுபாண்மை மாணவர்களுக்கு அளித்து வருகின்றன.
1.சிறுபாண்மையினர் நல இயக்கம்
எண்:807, அண்ணாசலை, சென்னை-600002
2.தமிழ்நாடு சிறுபாண்மையினர் பொருளாதரா வளர்ச்சி கழகம்
எண்:807, அண்ணாசாலை, 5வது மாடி, சென்னை-600002
கல்வியை தொடரமுடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445
2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530
3. சீதக்காதி அறக்கட்டளை 688 , அண்ணா சாலை சென்னை - 06
4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன் 688 , அண்ணா சாலை சென்னை - 06
5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)
6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட் ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சென்னை - 34
7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சென்னை - 34
8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை சென்னை - 02
9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட் ஜபார்ஷா தெரு, திருச்சி.
10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை சென்னை - 03
11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட் டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564
12. அஸ்மா காசிம் அறக்கட்டளை மாண்டியத் சாலை எழும்பூர் - சென்னை – 08
13. ராஜகிரி பைத்துல்மால் கீழத் தெரு ராஜகிரி - 614 207
14. டாம்கோ 807 - அண்ணா சாலை 5 வது சாலை சென்னை
15. ஹாஜி. அஹமது மீரான் Managing Director Professional Courier’s 22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு ஆழ்வார்பேட்டை - சென்னை – 18
16. மியாசி புதுக் கல்லூரி வளாகம் பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14
17. S I E T கே.பி. தாசன் சாலை தேனாம்பேட்டை சென்னை -__._,_.___.
தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை Nc3=3
__,_._,___


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum