Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் அரசு உதவிகள் வழங்கும்
Page 1 of 1

அமைச்சின் செயலாளர் கணேகல
மகேஸ்வரன் பிரசாத்
தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமையைக் கொண்டிருக்கும் மக்களுக்கு சரியான தகவல்களை, துல்லியமாக வழங்கும் பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உண்டு. குறிப்பாக இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் ஊடகவியலாளர்களுக்கு அதிகமான பொறுப்பு இருப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கணேகல தெரிவித்தார்.
அபிவிருத்திப் பணிகள் தொடர்பான உண்மைத் தன்மைகளை மக்களுக்கு எடுத்துச் செல்ல ஊடகவியலாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்விட யத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அரசாங்கம் தயாராகவிருப்ப தாகவும் அவர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவிலில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வில் கலந்து கொண்டு வரவேற்புரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சின் செயலாளர்.
கடந்த ஆறு வருடங்களில் இதுபோன்ற 50 செயலமர்வுகளை நாம் நடத்தியுள்ளோம். வட பகுதியில் நடைபெறும் முதலாவது செயலமர்வு இதுவாகும்.
வட மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடக வியலாளர்களுக்கு இச்செயலமர்வு நடைபெறுகிறது. அடுத்த மாதம் யாழ்ப் பாண ஊடகவியலாளர்களுக்கு யாழ்ப் பாணத்தில் செயலமர்வொன்றை நடத்த வுள்ளோம்.
ஊடகவியலாளர்கள் துறைசார் வல்லுனர் களாகக் காணப்பட வேண்டும் என்பதே அமைச்சரின் எதிர்பார்ப்பு. இதனாலேயே ஊடகவியலாளர்களுக்கு செயமலர்வை ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறான செயலமர்வுகளை மேலும் பல இடங்களில் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.
தகவல்களை அறிந்து கொள்வது மக்க ளின் ஜனநாயக உரிமை. தகவல்கள் சுதந்திரமாக வழங்கப்பட வேண்டும். எனவே, மக்களுக்கான தகவல்களை உண்மையாக, துல்லியமான முறையில் வழங்குவது ஊடக வியலாளர்களின் கடமை. குறிப்பாக வட பகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது பற்றிய தகவல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். இதுவிடயத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு முக்கியமானது.
30 வருட பயங்கரவாத நடவடிக்கை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில் நாட்டில் சாந்தியையும், சமா தானத்தையும் நிலைநாட்டும் பாரிய கடமை ஊடகவியலாளர்களுக்குக் காணப் படுகிறது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒரு நிலைப்பாட்டில் இருந்து நாட்டு மக்களையும், நாட்டையும் பாது காக்கவேண்டும்.
நாட்டின் அபிவிருத்தியில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் அபிவிருத்தி யிலேயே அரசாங்கம் கூடுதல் அக்கறை கொண்டுள்ளது. இந்த நிலையில் அபிவி ருத்திப் பணிகள் தொடர்பான சரியான தகவல்களை வழங்கி மக்களுக்கு அதன் மூலம் ஊடகவியலாளர் நாட்டின் அபி விருத்தியில் பங்களிப்புச் செய்ய முடியும்.
இதேநேரம், ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்கள் தனது மஹிந்த சிந்தனையின் ஊடாக பல்வேறு நன்மையான திட்டங்களை அறிவித்துள்ளார். இவற்றில் சில நிறைவேற் றப்பட்டுள்ளன. எஞ்சியவற்றையும் நாம் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றும் ஊடகத்துறை அமைச் சின் செயலாளர் டபிள்யூ. பி. கணேகல தனதுரையில் மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடகசெயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட உதவி அரசாங்க அதிபர், அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் வசந்தபிரிய ராமநாயக்க, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீடப்பணிப்பாளர் சீலரட்ண செனரத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வில் வளவாளர்களாகக் கலந்து கொண்ட இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹான் சமரநாயக்க சர்வதேச ஊடகங்களின் நிலைமை பற்றி கருத்துரை வழங்கியிருந்த துடன், திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டபீடத் தலைவர் சட்டத்தரணி யசோதரா கதிர்காமத்தம்பி, கச்சி முகமட், தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ். தில்லைநாதன் செய்தி சேகரிப்பு மற்றும் அறிக்கையிடல் தொடர்பான கருத்துரை யையும் வழங்கினார்கள்.
வடபகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுத்து வரப்படும் நிலை யில் ஊடகத்துறையில் எந்தவிதமான முன்னேற்றமும் காணப்படவில்லையென இச்செயலமர்வில் கருத்துத் தெரிவித்த லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீடப்பணிப்பாளர் சீலரட்ண செனரத், இவ்வாறான செயலமர்வுகள் மூலம் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கி அபிவிருத்திப் பணிகள் பற்றி மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உண்டு என்றும் கூறினார்.
30 வருட கொடிய யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தியை நோக்கி நாடு வீறுநடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஊடகவியலாளர்களும் தமது பங்களிப்பை நாட்டுக்கு வழங்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
இதேவேளை சுமார் 30 வருடங்களின் பின்னர் வன்னிப் பிரதேசத்தில் இவ்வாறான செயலமர்வொன்று நடத்தப்பட்டிருப்பதானது தமக்கு மிகவும் உதவியாக அமைந்தது என மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான அந்தோனிமார்க் தெரிவித்தார்.
இந்தச் செயலமர்வின் மூலம் பல்வேறு விடயங்களைத் தாம் அறிந்து கொண்டதுடன், இதுபோன்ற பல்வேறு செயலமர்வுகள் தொடர்ந்தும் நடத்தப்படவேண்டுமெனக் கோரிக்கைவிடுத்தார்.
இச்செயலமர்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த பி.பி.சி. செய்திச் சேவையின் வவுனியா பிராந்திய செய்தியாளர் மாணி க்கவாசகர், இவ்வாறான செயலமர்வுகள் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் அவசியமானது என்றார். 30 வருடங்களாக யுத்த சூழலிலிருந்த ஊடகவியலாளர்களுக்கு ஊடகத்துறை தொடர்பாக அறிவூட்டப்பட வேண்டியது அவசியம். இதனடிப்படையில் இந்த செயலமர்வு தமக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினியில் தமிழ்
» இணையத்தளங்களுக்கு தகவல்களை வழங்கும் செய்தியாளர்களின் விபரங்களை திரட்டும் அரசு!
» தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை
» உள்ளாட்சி துறைக்கு வழங்கும் அரசு சிமென்ட் விலை உயருது
» அரசு வழங்கும் இலவச மிக்சியை விற்றால் கைது:அதிகாரி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum