Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’-நேர்காணல்.எஸ்.ரோஷன்
Page 1 of 1
நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’-நேர்காணல்.எஸ்.ரோஷன்
நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’
வசந்தம் TV-யில்
நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரியும் கவிஞர்
அஸ்மின் ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய
கவிஞராகவும், திரைப்பட பாடலாசிரியராகவும், அறியப்பட்டு வருகின்றார்.
சக்திநிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரியும் கவிஞர்
அஸ்மின் ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய
கவிஞராகவும், திரைப்பட பாடலாசிரியராகவும், அறியப்பட்டு வருகின்றார்.
TV-யினால் நடாத்தப்பட்ட ‘இசை இளவரசர்கள்’ போட்டி நிகழ்ச்சி மூலம்
பாடலாசிரியராக அறிமுகமான இவர், தேசியமட்ட கவிதைப் போட்டிகளில் கலந்து
கொண்டு ஜனாதிபதி விருது(2001),பேராதனை பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம்
(2003)
பெற்றுள்ளதோடு 2 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010,2011) அகஸ்தியர் விருது
(2011), உட்பட 10க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
சுபாசெவ்வேளின்
தயாரிப்பில் இயக்குனர் கேசவராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘பனைமரக்காடு’
தமிழ் திரைப்படத்தில் பாடல்களை எழுதியிருக்கும் இவர் ஜீவா சங்கரின்
இயக்கத்தில் விஜய் அன்டனியின் நடிப்பில் வெளிவரவுள்ள ‘நான்’ திரைப்படத்தில்
இசையமைப்பாளர் விஜய் அன்டனியின் இசையில் பாடல் எழுதியுள்ளார்.கவிஞர் அஸ்மின் தினக்குரலின் சகோதர வெளியிடான உதயசூரியனுக்கு அளித்த பேட்டி
நேர்காணல்.எஸ்.ரோஷன்
வணக்கம்...
நான் கவிஞர் அஸ்மின்! இலங்கையின் தென்கிழக்கு பிராந்தியத்தில் நாட்டார்
பாடல்களின் விளைநிலங்களில் ஒன்றாக விளங்கும் பொத்துவில்தான் நான் பிறந்த
இடம்.
ஆரம்பம் முதல்
உயர்தரம் வரை பொத்துவில் மத்திய கல்லூரியில்தான் கல்வி கற்றேன். இப்பொழுது
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் கல்வியை தொடர்வதோடு வசந்தம்
தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும்
பணிபுரிந்து வருகின்றேன்.
நகரத்தின்
புகையை குடித்து வாழ்பவர்களை விட கிராமத்தின் புழுதியை குடித்து
வளர்பவர்களுக்கு நன்றாகவே கவிதை வரும். என் கிராமமே அழகிய கவிதை. அதை
வாசிக்க வாசிக்க நானும் கவிஞனாக மாறிவிட்டேன்.
ஒரு
கவிஞனை கற்பித்து வளர்க்க முடியாது. ஒருவன் கவிஞனாக மிளிர்வதற்கு கருவிலே
திருவாக வேண்டும். தான் வாழும் காலத்தின் கோலத்தை வார்த்தைக் கோடுகளால்
வரைந்துவிடும் கவிஞனின் நாளத்திலே, நெஞ்சின் ஆழத்திலே கற்பனைத் தீ
உற்பத்தியாகி அது கவித்துவத்தோடு கனன்று எரிவதற்கு முதலில் அவன் பிறப்பின்
மூலத்திலே கவிதை இருக்க வேண்டும்.
எனக்குள்
பந்தலிடும் பாட்டுப் பூக்களுக்குள் இருந்து என் பாட்டன் முப்பாட்டன்
முன்னோர்கள் அனைவரும் முறுவலிக்கின்றார்கள். மேலும் சிறிய வயதில் இருந்தே
எனக்குள் இருந்த இடையறாத வாசிப்பும் என்னை வளப்படுத்தியிருக்கின்றது. இற்றை
வரை என்னை பலப்படுத்தி வருகின்றது.
பாலர்
வகுப்பில் படிக்கும் போது ஆசிரியர் பாடப் புத்தகத்தில் உள்ள பாடல்களை
இசையோடு பாடிக்காட்டுவார். அதிலே எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர்
ஐந்தாம், ஆறாம் தரங்களில் படிக்கின்றபோது புத்தகத்தில் உள்ள பாடல்களை ஓசை
நயத்தோடு நானும் பாட ஆரம்பித்து விட்டேன். அது இற்றைவரை தொடர்கின்றது.
இப்பொழுதும் பாரதி, பாரதிதாசன், காசியானந்தன், மஹாகவி, நீலாவாணன்,
சுபத்திரன் கவிதைகளை ரசித்து ஓசையோடு பாடும் பழக்கம் இருக்கின்றது. இந்த
நிகழ்வும் என்னை கவிஞனாக செதுக்கியிருக்கலாம்.
தரம்
ஒன்பதில் கல்வி கற்கும்போதே எனக்குள் கவிஞன் இருப்பதை உணர ஆரம்பித்தேன்.
அதனால் கண்டதையும் ரசித்தேன், கண்களையும் ரசித்தேன், காணாமலும்
ரசித்தேன். அந்த காலகட்டத்தில் பித்தளையில் கூட தங்கத்தை
தேடியிருக்கின்றேன் என்பதை இப்பொழுது நினைக்கும்போது ஒரு பக்கம் வருத்தமாக
இருந்தாலும் மறுபக்கம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் அதனால்தானே
இன்று நான் கவிஞனாய் போனேன்.
ஆரம்பத்தில்
கவிதைகளோடு கைகுலுக்கிக்கொண்ட நான் சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்து,
பாடலியற்றல் என்று பலதுறைகளிலும் பயணிக்க ஆரம்பித்தேன். என்னுடைய
படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள் மட்டுமல்லாது
சர்வதேச தமிழ் சஞ்சிகைகள், இணைய இலக்கிய இதழ்கள் பலவற்றிலும் களம்
கண்டுள்ளன.
இப்பொழுது
எனது (www.kavingerasmin.com) இணையத்தளத்திலும் வலைப்பூவிலும்
(www.kavinger&asmin.blogspot.com) தொடர்ந்து எழுதி வருகின்றேன்.
அன்றுமுதல்
இன்றுவரை என் கவிதைகளுக்கு கிடைத்த சின்னச் சின்ன கைதட்டல்கள், பெரிய
பெரிய குழிவெட்டல்கள்தான் என்னை எழுந்து நிற்கச் செய்தன. என்னை நோக்கி வந்த
கேள்விக்குறிகளையெல்லாம் நம்பிக்கையோடு போராடி ஆச்சரியக் குறியாக்கினேன்.
அகில
இலங்கை மட்ட கவிதைப்போட்டிகளில் கலந்து கொண்டபோது எனக்கு கிடைத்த
‘ஜனாதிபதி விருது’ (2001) பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின்
பவளவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதலாமிடம்
பெற்றதற்காய் கிடைத்த ‘தங்கப்பதக்கம்’ (2003) என்பன மூலம் ஊமையான என்
கவிதைகள் பேச ஆரம்பித்தன.
2001,
2002 ஆம் ஆண்டுகளில் ‘விடைதேடும் வினாக்கள், விடியலின் ராகங்கள்’ என
இரண்டு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. கவிஞர் ஜீவகவி தொகுத்த ‘முகவரி
தொலைந்த முகங்கள்’ கவிதை தொகுப்பிலும் தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்
சங்கத்தினால் வெளியிடப்பட்ட ‘அடையாளம்’ கவிதை தொகுப்பிலும் எனது கவிதைகள்
இடம்பெற்றுள்ளன. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ‘கூர்மதி’ சஞ்சிகையிலும்
லங்கா பத்திரிகையினால் வெளியிடப்பட்ட ‘பட்சிகளின் உரையாடல்’ தொகுதியிலும்
எனது கவிதைகள் வெளிவந்துள்ளன. எனது 3ஆவது கவிதை நூலான ‘ரத்தம் இல்லாத
யுத்தம்’ மிகவிரைவில் வெளிவர இருக்கிறது. நூலின் அணிந்துரையை கவிப்பேரரசு
வைரமுத்து எழுதியுள்ளார். இதில் அடங்கியுள்ள கவிதைகளை ஆங்கிலத்தில்
கலாபூஷணம் கவிஞர் மீஆத் மொழிபெயர்த்துள்ளார். நூல் இருமொழிகளிலும்
மிகச்சிறப்பாக தயாராகிக்கொண்டிருக்கிறது. நான் அதனால்
தாயாராகிக்கொண்டிருக்கின்றேன்.
என்னை அடையாளப்படுத்திய இசை இளவரசர்கள்
கவிதை
எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்தே நான் பாடல் எழுதிக் கொண்டிருந்தாலும்
என்னை சரியாக நெறிப்படுத்தி பட்டை தீட்டி முழு இலங்கைக்கும் என்னை
அடையாளப்படுத்தியது சக்தி கூங யினால் 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ""இசை
இளவரசர்கள்'' நிகழ்ச்சியென்றால் மிகையில்லை. அந்த நிகழ்ச்சியின்
தயாரிப்பாளராக இருந்த ஷியாவுக்கு இவ்வேளையில் நான் நன்றிகூற
கடமைப்பட்டுள்ளேன்.
இந்த
நிகழ்ச்சியின் மூலம் தென்னிந்திய திரைப்பட பாடலாசிரியர்களை
இசையமைப்பாளர்களை இயக்குநர்களை சந்திக்கும் வாப்பு எனக்கும் கிட்டியது.
எமது ஹம்சத்வனி குழுவுக்கு இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பாடல் உருவாகும்
கதைச்சூழலை சொல்லியிருந்தார். இசையமைப்பாளர் பரத்வாஜ் கதைக்கு இசையமைக்க
வேண்டிய நுணுக்கங்களை சொல்லித்தந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம்
பாடலாசிரியர்களான பா.விஜ, நா.முத்துக்குமார், சினேகன், விவேகா போன்றோர்களை
சந்தித்து பாடல் எழுதும் நுட்பம் பற்றி என்னால் கற்க முடிந்தது.
மோகனின்
இசையில் எனது வரிகளுக்கு ரணில் மற்றும் சுவர்ணியா ஆகியோர் "வா வா அன்பே நீ
வா...' என ஆரம்பிக்கும் பாடலை உருவாக்கினோம். அதுவே ஒலி ஒளி வடிவில்
வெளிவந்த எனது முதல் பாடலாகும்.
அதன்
பின்னர் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் நான் எழுதிய "எங்கோ பிறந்தவளே' என
ஆரம்பிக்கும் பாடல் சர்வதேசமெங்கும் மிகுந்த வரவேற்பை பெற்று பலரதும்
கைதட்டல்களை எமக்கு பெற்றுத்தந்தது. டிரோன் பெர்ணான்டோ, நலிந்த, ராஜ்
தில்லையம்பலம், ஆனந்த், விமல்ராஜா, வேரணன் சேகரம், காதல்வைரஸ் போன்ற நம்
நாட்டு இசைக் கலைஞர்களோடும் புலம்பெயர் கலைஞர்களோடும் நான்
பணியாற்றியுள்ளேன்.
இசையமைப்பாளர்
டிரோனின் இசையில் நான் எழுதிய "புறப்படு தோழா' பாடல் வியர்வையின் ஓவியம்
நிகழ்வில் முதலாமிடம் பெற்று 2010ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியருக்கான
விருதினை எனக்கு பெற்றுக் கொத்தது.
அதே
போன்று 2011ஆம் ஆண்டு வியர்வையின் ஓவியம் நிகழ்வில் ஜெயந்தனின் இசையில்
நான் எழுதிய "எங்கோ பிறந்தவளே' மீண்டும் சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை
எனக்கு பெற்றுத்தந்தது. அதன் பிறகு ஜெயந்தனின் இசையில் நான்
எழுதிய ‘காந்தள் பூக்கும் தீவிலே’ பாடலை தென்னிந்திய திரைப்பட
இயக்குநர்கள் புலம் பெயர்ந்த நம்மவர்கள் என பலரும் பெரிதாகப்
பாராட்டினார்கள். பாடலை ஜெயந்தனுடன் சேர்ந்து அவரது சகோதரி ஜெயப்பிரதா
பாடியிருந்தார். இந்தப் பாடலை ரசித்து இயக்குநர் ஏ.வெங்கடேஷ் அவரது அடுத்த
படத்தில் எனக்கு வாப்புத் தருவதாக சொல்லியிருந்தார்.
சில உள்ளூர் வானொலிகள் எமது இந்தப் பாடலை கண்டுகொள்ளாத
நிலையில் வெற்றி வானொலி ‘விடியல்’ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது.
ஆனால் புலம்பெயர் நாடுகளில் இந்தப் பாடல் ஒலிக்காத வானொலி நிலையங்கள் இல்லை
என்றே சொல்லலாம். அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எமது பாடலை
ஒலிபரப்பின. எமது நாட்டு ரசிகர்கள் இந்தப்பாடலை கேட்காமல் இருப்பது
துரதிர்ஷ்டமே. ஙுOக்கூக்ஆஉ இணையத்தளத்தில் இந்தபாடலை ஒரு இலட்சத்துக்கும்
அதிகமான ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர். இலங்கையில் வெளிவந்த தமிழ்
பாடல்களில் அதிக ரசிகர்கள் பார்வையிட்ட பாடல் என்ற சாதனையும் இப்பாடல்
நிகழ்த்தியுள்ளது.
இதன் பிறகு
திரைப்படத்தில் பாடல் எழுதுவது, முதலாவதாக எனக்கு ‘பனைமரக்காடு’
திரைப்படத்தின் மூலமே சாத்தியமானது. இயக்குநர்
கேசவாஜின் இயக்கத்தில் விமல்ராஜாவின் இசையில் ‘உயிரிலே’ என ஆரம்பிக்கும்
பாடலை எழுதியிருந்தேன். இந்தப்பாடலை பின்னணி பாடகர் ஆனந்த்
பாடியிருந்தார்.
அதன்பிறகு பிரபல
தென்னிந்திய இசையமைப்பாளர் விஜ அன்ரனியின் இசையில் ‘நான்’ என்ற
திரைப்படத்தில் பாடல் எழுதியுள்ளேன். இந்தப் பாடலில் எனக்கு வாப்பு
கிடைத்தது சர்வதேச ரீதியாக வைத்த போட்டி ஒன்றின் மூலமே ஆகும்.
இசையமைப்பாளர்
விஜ அன்ரனி பல புதிய பாடகர்களை பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்திய
பெருமைக்குரியவர். எனவே தான் தயாரித்து, இசையமைத்து, கதாநாயகனாக
அறிமுகமாகும் ‘நான்’ திரைப்படத்தில் புதிய பாடலாசிரியரை அறிமுகம் செயும்
நோக்கோடு தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்கள் வாயிலாக ஒரு
போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். போட்டியில் வெற்றி பெறுபவர் உலகத்தின்
எந்த மூலையில் இருந்தாலும் அவருக்கு வாப்பளிப்பதாக அறிவித்திருந்தார்.
அவரால் வழங்கப்பட்ட கதைசூழல், இசைக்கேட்ப நானும் பாடலை எழுதி
அனுப்பியிருந்தேன். பல மாதங்கள் கடந்தும் அவரிடம் இருந்து எந்த பதிலும்
வரவில்லை திடீரென ஒருநாள் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்து சொன்ன அவர்
போட்டியில் நான் வெற்றியீட்டியதாக அறிவித்ததோடு உடனே சென்னைக்கு வருமாறு
அழைத்திருந்தார்.
நான் சென்னை
சென்று இரண்டு நாட்கள் அவரோடு தங்கியிருந்து முழுப்பாடலையும் எழுதிக்
கொடுத்துவிட்டு வந்திருக்கின்றேன். பாடல் வெளியீட்டு விழா மிகவிரைவில்
பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. அதற்கும் என்னை அழைக்க இருக்கின்றனர்.
விஜ அன்ரனி பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். கடின உழைப்பாளி. தனது
ஒவ்வொரு இரவையும் பகலாக்கி உழைத்ததினால்தான் இன்று அவரால் முன்னணி
இசையமைப்பாளர்கள் வரிசையில் இடம்பிடிக்க முடிந்துள்ளது. தெரிந்தவர்களையே
தெரியாது என்று கூறும் வறட்டு சிந்தனையுள்ள படைப்பாளிகளுக்கு மத்தியில்
அவர் பண்பாளர். அவரோடு பணிபுரிந்த அந்த இரண்டு நாட்களும் என் வாழ்வில்
மறக்கமுடியாத அழகிய நாட்கள்.
‘நான்’
திரைப்படம் என்னைப்போன்று முன்னேறத்துடிக்கும் இளைஞனின் கதை. முற்றிலும்
மாறுபாடான கதைக்களம். நான் நிச்சயம் வெற்றிபெறும். இத்திரைப்படத்தின் மூலம்
தென்னிந்திய திரைத்துறையில் எனக்கு மட்டுமல்ல இலங்கை கலைஞர்கள்
பலருக்கும் கதவு தானாக திறக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.
கவிஞர் அஸ்மின் தினக்குரலின் சகோதர வெளியிடான உதயசூரியனுக்கு அளித்த பேட்டி
'நான்'' திரைப்படத்தில் பாடல் எழுதியுள்ளள கவிஞர் அஸ்மின் பேட்டி
மிக விரைவில் எதிர்பாருங்கள். விஜய் அன்டனியின் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் நான்
கவிஞர் அஸ்மின்- புதுமுகம்
- பதிவுகள்:- : 21
மதிப்பீடுகள் : 10
Similar topics
» நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
» நான் செய்தேன், நான் சம்பாதித்தேன்..........
» அன்புக்கு நான் அடிமை தமிழ் பண்புக்கு நான் அடிமை
» நான் நீ 'அது'...!
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
» நான் செய்தேன், நான் சம்பாதித்தேன்..........
» அன்புக்கு நான் அடிமை தமிழ் பண்புக்கு நான் அடிமை
» நான் நீ 'அது'...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum