சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Yesterday at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

 பெண்கள் சம்பந்தப்பட்ட ஜனாஸாவின் சட்டங்கள் Khan11

பெண்கள் சம்பந்தப்பட்ட ஜனாஸாவின் சட்டங்கள்

2 posters

Go down

 பெண்கள் சம்பந்தப்பட்ட ஜனாஸாவின் சட்டங்கள் Empty பெண்கள் சம்பந்தப்பட்ட ஜனாஸாவின் சட்டங்கள்

Post by நண்பன் Wed 26 Jan 2011 - 14:20

ஒவ்வொருவர் மீதும் அல்லாஹ் மரணத்தை
விதித்துவிட்டான். நிரந்தரமாக இருப்பது என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்.
''(மிக்கவல்லமையும்) கண்ணியமும் சங்கையும் உடைய உம் இறைவனின் முகமே
நிலைத்திருக்கும்.'' (அல்குர்ஆன் 55:27)
ஜனாஸாக்களில் கடைபிடிக்க வேண்டிய சில
விதிமுறைகள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்துவது உயிரோடு உள்ளவர்கள் மீது கடமையாகும்.
அவற்றில் பெண்கள் சம்பந்தப்பட்டவைகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

1. பெண்களின் ஜனாஸாவை பெண்களே குளிப்பாட்ட வேண்டும்.

ஆண்கள் பெண்கள் ஜனாஸாவை குளிப்பாட்டுவது
கூடாது இறந்துபோன பெண்ணின் கணவன் மட்டும் தன் மனைவியை குளிப்பாட்ட அனுமதியுண்டு, ஆண் ஜனாஸாவை ஆண்களே
குளிப்பாட்ட வேண்டும். இறந்து போன ஆணின் மனைவி மட்டும் தான் கணவனைக் குளிப்பாட்ட அனுமதியுண்டு.

அலி(ரழி) அவர்கள் தம் மனைவியான பாத்திமா
(ரழி) அவர்கள் இறந்தபோது அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.
அப+பக்கர்(ரழி) அவர்கள் மரணமடைந்தபோது
அவர்களின் மனைவி அஸ்மா பின்த் உமைஸ்(ரழி) அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.
2. பெண் ஜனாஸா ஐந்து துணிகளில் கஃபன் செய்யப்படுவது சிறந்தது.
கீழங்கி, தலையில்போடும்துணி, சட்டை அதற்குமேல் இரண்டு துணியைக் கொண்டு ஜனாஸாவின் உடம்பு முழுவதும் மூடப்படும்.
''நபி(ஸல்) அவர்களின் மகள் உம்மு குல்ஸ_ம்(ரழி) மரணமடைந்தபோது
அவர்களின் ஜனாஸாவை குளிப் பாட்டியவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தேன். நபி(ஸல்) அவர்கள்
ஜனாஸாவிற்கு அணிவிப்பதற்காக முதல் முதலாக எங்களிடம் தந்தது கீழங்கி, பின்னர் சட்டை
பின்னர் தலையில் போடும் துண்டு, பின்னர் ஜனாஸாவை மூடுவதற்குண்டான துணி, பின்னர் அதே மாதிரி
இன்னொரு துணியிலும் மூடப்பட்டார்கள்''
என லைலா அத்தகபிய்யா(ரழி) அறிவிக்கிறார்.
(நூற்கள்: அஹ்மத், அப+தா¥த்)
இமாம் ஷவ்கானி 'நைலுல் அவ்தார், என்னும் நூலில்
4ழூ ழூ42ல் குறிப்பிடுகிறார். கீழங்கி,
சட்டை, தலையில் போடும் துணி, முழுவதுமாக உடலை
மறைக்கும் ஆடை ஆகியவை பெண்ணிற்கான கஃபன் துணி என சட்டமாக ஆக்கப் பட்டுள்ளது.
3. பெண் ஜனாஸாவின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்னால்போடவேண்டும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 பெண்கள் சம்பந்தப்பட்ட ஜனாஸாவின் சட்டங்கள் Empty Re: பெண்கள் சம்பந்தப்பட்ட ஜனாஸாவின் சட்டங்கள்

Post by நண்பன் Wed 26 Jan 2011 - 14:20

நபி(ஸல்) அவர்களின் மகளுடைய ஜனாஸாவை குளிப்பாட்டுவது பற்றி உம்முஅதிய்யா(ரழி) அறிவிக்கும் போது ''அவர்களின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்பக்கம்போட்டோம்'' என்று குறிப்பிடுகிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

4. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து பெண்கள் செல்லுதல்.

''ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது எங்களுக்கு தடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அது கண்டிப்பான முறையில் தடுக்கப்படவில்லை'' என உம்மு அதிய்யா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது மேற் கண்ட ஹதீஸில் கண்டிப்பான முறையில் தடையில்லா விட்டாலும், அது விலக்கப்பட்டது அல்ல எனக் கூற முடியாது. ஒரு வேளை அந்தத் தடை கண்டிப்பிற்குரிய தாக இருக்காது என உம்மு அதிய்யா அவர்கள் கருதியி ருக்கலாம். ஆதாரம் என்பது நபி(ஸல்) அவர்களின் சொல்லைக் கொண்டுதான் அமையவேண்டுமே தவிர ஒவ்வொருவரின் எண்ணமும் ஆதாரமாகாது என இப்னு தைமிய்யா அவர்கள் தம் ஃபத்வா தொகுப்பு 24ழூ ழூ355ல் குறிப்பிடுகிறார்கள்.

5. கப்ர் ஸியாரத் பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது.

''கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்'' என அப+ஹ{ரைரா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், திர்மிதி மற்றும் இப்னுமாஜா.)

ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா குறிப்பிடுகிறார். ''பெண்ணிற்கு இந்த வாசல் திறந்து விடப்படுமானால் அது அவளுடைய பலஹீனத்தின் காரணத்தினாலும், பயம், பொறுமையின்மை ஆகிய காரணத்தினாலும் ஒப்பாரி வைத்தல், பொறுமையிழத்தல் போன்ற பல தவறான காரியங்களின் பால் அவளை இழுத்துச் சென்றுவிடும். மேலும், இவளுடைய ஒப்பாரியினால் மையித்திற்கு வேதனை செய்யப்படும். மேலும், அவளின் சப்தம், கோலம் ஆகியவற்றினால் ஆண்களைக் குழப்பத்திற்கு (ஃபித்னாவிற்கு)ள்ளாக்கி விடுகிறாள்.

''பெண்களாகிய நீங்கள் உங்கள் ஒப்பாரியினால் உயிரோடு உள்ளவர்களை குழப்பத்திற்குள்ளாக்குகிறீர்கள். மையித்தை வேதனைப்படுத்துகிறீர்கள்.'' என ஹதீஸ் உள்ளது.

பெண்களுக்கு கப்ர் ஜியாரத்தை அனுமதிப்பதால், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சில விலக்கப்பட்ட செயல்கள் நிகழ்வதற்கு வழிவகுத்துவிடும் என்ற ஒர் அச்சமும் இருக்கிறது. அது விலக்கப்பட்ட காரியங்களின் பால் கொண்டு போய் சேர்க்காது இருப்பதற்கான அளவுகோல் என்ன என்பதை நிர்ணயம் செய்ய முடியாது. இந்த முறை கூடும், இந்த முறை கூடாது என வேறு படுத்திக் காட்டவும் முடியாது.

ஒரு செயல் எதனால் தடுக்கப்பட்டது என்பதற்கு காரணம் மறைவாகவோ, பம்ரங்கமாகவோ இருக்கும் போது, எந்தக் காரணத்தை சந்தேம்க்கப்படுகின்றதோ அதை வைத்து சட்டம் அமைக்கப்படும், எனவே விளைவு களைத் தடுப்பதற்காக வேண்டி அது விலக்கப்பட்டதாகக் கருதப்படும்.

உதாரணமாக பெண்களின் அழகலங்காரங்களைப் பார்ப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவ்வாறு பார்ப்பது தவறிழைப்பதற்குக் காரணமாக அமைந்து விடலாம். இவ்வாறே பிற பெண்களுடன் தனிமையில் இருப்பதும் தடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயல்களுக்கு எதிராக எந்த ஒரு பயனும் கப்ரை பெண்கள் சந்திக்கச் செல்வதில் இல்லை. கப்ருக்கு பெண்கள் சென்றால் மையித்திற்காகப் பிரார்த்திப்பார்கள் என்பதைத் தவிர வேறு எந்தப் பயனும் இல்லை. இதை அவள் தன் வீட்டில் இருந்து கொண்டே செய்யமுடியும். (ஃபத்வா தொகுப்பு 24ழூ ழூ356)

6. ஒப்பாரி வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஒப்பாரி வைப்பதும், ஆடைகளைக் கிழிப்பதும் கன்னத்தில் அடிப்பதும் முடியைப் பிடுங்குவதும் முகத்தைப் பறண்டுவதும், தகாத வார்த்தைகளைக் கூறுவதும் இதுபோன்ற அல்லாஹ் விதித்த விதியில் பதட்டத்தை ஏற்படுத்துகின்ற செயல்களைச் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது பொறுமை இழந்து நிற்பது பெரிய குற்றமாகும்.

''துன்பத்தின்போது கன்னத்தில் அடிப்பவனும் சட்டையை கிழிப்பவனும் அறியாமை காலத்து பிரார்த்தனையைச் செய்பவனும் நம்மைச் சார்ந்தவனல்ல'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், ''சோதனையின்போது சப்தத்தை உயர்துப வளை விட்டும் தலைமுடியை மளிப்பவளை விட்டும், ஆடையை கிழித்துக் கொள்பவளை விட்டும் நான் ஒதிங்கிக் கொண்டேன்'' என்றும் நபி(ஸல்) கூறினார்கள்.

''ஒப்பாரி வைப்பவளையும் ஒப்பாரியைக் கேட்டு மகிழ்பவளையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.'' (நூல்: முஸ்லிம்)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 பெண்கள் சம்பந்தப்பட்ட ஜனாஸாவின் சட்டங்கள் Empty Re: பெண்கள் சம்பந்தப்பட்ட ஜனாஸாவின் சட்டங்கள்

Post by நண்பன் Wed 26 Jan 2011 - 14:21

முஸ்லிம் சகோதரியே! சோதனையின்போது இதுபோன்ற தடுக்கப்பட்ட செயல்களை விட்டும் ஒதுங்கிக்கொள்! சோதனையின்போது பொறுமையைக் கடைபிடித்துக் கொள்! உனக்கு ஏற்படக்கூடிய சோதனை உன்னுடைய பாவத்திற்கு பரிகாரமாகவும் உன்னுடைய நன்மையை அதிகரிக்கக் கூடியதாகவும் அமைந்துவிடும்.

அல்லாஹ் கூறுகிறான்: ''நிச்சயமாக நாம் உங்களை அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச் சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம், (ஆனால்) பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நற்செய்தி கூறுவீராக!''

''அவர்களுக்கு துன்பம் ஏற்படும்போது நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், கிருபை யும் உண்டாகின்றன. இன்னும் இவர்களே நேர்வழியை அடைந் தவர்கள். (அல்குர்ஆன்: 2:155, 157)

அதேநேரத்தில் ஒப்பாரியும், அனுமதிக்கப்படாத செயல்களும், அல்லாஹ்வின் விதியின் மீது கோபப் படுவதும் இல்லாத அழுகை ஆகுமானதாகும். ஏனெனில் அப்படி அழுவது மரணித்தவரின் மீதுள்ள அன்பையும் உள்ளத்தில் மென்மையையும் காட்டுவதுடன் மனிதனால் தடுக்கமுடியாத ஒன்றாகவும் உள்ளது. எனவே அது ஆகுமானதாகிறது. சில வேளை அது அனுமதிக்கப் பட்டதாகவும் சில வேளை அது விரும்பத்தக்கதாகவும் ஆகிறது. அல்லாஹ் உதவப் போதுமானவன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 பெண்கள் சம்பந்தப்பட்ட ஜனாஸாவின் சட்டங்கள் Empty Re: பெண்கள் சம்பந்தப்பட்ட ஜனாஸாவின் சட்டங்கள்

Post by mini Wed 26 Jan 2011 - 14:28

கட்டாயம் அறிய வேண்டியவை
mini
mini
புதுமுகம்

பதிவுகள்:- : 163
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

 பெண்கள் சம்பந்தப்பட்ட ஜனாஸாவின் சட்டங்கள் Empty Re: பெண்கள் சம்பந்தப்பட்ட ஜனாஸாவின் சட்டங்கள்

Post by நண்பன் Wed 26 Jan 2011 - 14:39

mini wrote:கட்டாயம் அறிய வேண்டியவை
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 பெண்கள் சம்பந்தப்பட்ட ஜனாஸாவின் சட்டங்கள் Empty Re: பெண்கள் சம்பந்தப்பட்ட ஜனாஸாவின் சட்டங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum