சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

ரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிறப்பு தகவல்கள் Khan11

ரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிறப்பு தகவல்கள்

2 posters

Go down

ரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிறப்பு தகவல்கள் Empty ரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிறப்பு தகவல்கள்

Post by Muthumohamed Sat 1 Dec 2012 - 21:07

ரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிறப்பு தகவல்கள்


அமெரிக்க
அதிபர் ஒபாமாவின் லிமோசின் ரக கார் ஜெனரல் மோட்டார்ஸ் கீழ் செயல்படும்
கேடில்லாக் நிறுவனத்திடமிருந்து கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்டது. ராணுவ கவச
வாகனம் போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இந்த லிமோசின் ரக காரின்
தொழில்நுட்பம், பாதுகாப்பு வசதிகள் ஆகியவை மிகவும் ரகசியமாக
வைக்கப்பட்டிருக்கின்றன. தி பீஸ்ட் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்
த கார் அமெரிக்க அதிபரின் நடமாடும் அலுவலகமாக கூறப்படுகிறது. இந்த காரின் சிறப்பம்சங்களின் தகவல்களை காணலாம்.

போயிங்
757 விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கதவுகளுக்கு இணையான தடிமன் கொண்ட
கதவுகள் இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த காரில்
பொருத்தப்பட்டிருக்கும் தகடுகள் ராணுவ கவச வாகனங்களில் பயன்படுத்தப்படும் 8
இஞ்ச் தடிமன் கொண்ட உறுதியான தகடுகளால் மூடப்பட்டிருக்கும்.

காரின்
கீழ்ப்பாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் தடிமன் கொண்ட தகடுகள் கண்ணி வெடி
தாக்குதல்களில் கூட சேதமடையாது. இதன் பெட்ரோல் டேங்க்கும் ஏவுகணை
தாக்குதலில் கூட தீப்பிடிக்காது. குண்டு துளைக்காத கண்ணாடிகள்
பொருத்தப்பட்டிருக்கின்றன. டிரைவர் இருக்கையின் கீழே தற்காப்பு கருவிகள்
பொருத்தப்பட்டிருக்கின்றன.
அதிபர் ஒபாமா உள்பட 7 பேர் இந்த காரில் பயணம்
செய்யும் வசதி கொண்டிருக்கிறது. முன்பக்க டிரைவர் வரிசை இருக்கையில் 2
பேர் அமரலாம். கண்ணாடி தடுப்புடன் கூடிய பின்புற கேபினில் பின்னோக்கி 3
இருக்கைகளும், முன்னோக்கி 2 இருக்கைகளும் உள்ளது. இதில், முன்னோக்கி
பொருத்த்பபட்டிருக்கும் இரண்டு இருக்கைகளில் ஒன்று அதிபருக்கான ரிசர்வ்
செய்யப்பட்ட இருக்கை.

இரு இருக்கைகளுக்கு இடையில் மடக்கி விரிக்கும்
வசதிகொண்ட டேபிள் உள்ளது. இதில், லேப்டாப், தொலைபேசி ஆகியவை
வைக்கப்பட்டிருக்கும். காரின் இருக்கைகள் அனைத்தும் உயர்தர லெதர் மூலம்
கைவேலைப்பாடுகளோடு மிக சொகுசாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இது அதிபரின்
நடமாடும் அலுவலகம் என்பதால் இன்டர்நெட் இணைப்பு, செயற்கைகோள் தொலைபேசி
மற்றும் அவசர காலங்களில் ராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் துணை
ஜனாதிபதியுடன் உடனடியாக பேசும் வகையில் தொலைபேசியும் இருக்கிறது.அதிபர்
ஒபாமாவின் அதிகாரப்பூர்வமான இந்த காரின் டிரைவர் அமெரிக்க புலனாய்வு
பிரிவான சிஐஏ., அமைப்பு மூலம் பயிற்சி அளிக்கப்பட்டவர். எத்தகைய ஆபத்தான
சூழ்நிலைகளிலும் காரை வேகமாகவும், சாதுர்யமாகவும் ஓட்டுவதற்கு சிறப்பு
பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
காரின் அனைத்து பக்கங்களிலும் இரவிலும்
துல்லியமாக படம் பிடிக்கும் திறன் வாய்ந்த நைட் விஷன் கேமராக்கள்
பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த காரி்ல் ஜிபிஎஸ் கருவி
பொருத்தப்பட்டிருப்பதால், கார் எந்த பகுதியில் சென்றுகொண்டிருக்கிறது
என்பதை செயற்கைகோள் உதவியுடன் கண்காணிக்க முடியும்.
அதிபர் ஒபாமா
உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும்போது, அமெரிக்க
வான்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தின் மூலம் இந்த கார் கொண்டு
செல்லப்படுகிறது. இதற்காக, அந்த விமானத்தில் சிறப்பு வசதிகளும் இருக்கிறது.

கண்ணீர்
புகை குண்டுகள், நவீன ரக துப்பாக்கிகள், தீத்தடுப்பு கருவி உள்ளிட்ட
ஏராளமான தற்காப்பு பாதுகாப்பு சாதனங்களும் இந்த காரில் பொருத்தப்பட்டு
இருக்கின்றன. நச்சுப் புகை மற்றும் ரசாயன தாக்குதல்களை சமாளிக்கும்
வகையில், உட்புறத்தில் காற்றை சுத்திகரித்து வெளியில் அனுப்பும் விஷேச
கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

ரன் பிளாட் டயர்கள்
பொருத்தப்பட்டிருப்பதால், பஞ்சரானால் கூட காரை வேகமாக ஓட்டிச் செல்ல
முடியும். இந்த கார் 5 டன் எடை கொண்டது. 100 கிமீ செல்வதற்கு 30 லிட்டர்
வரை எரிபொருளை உறிஞ்சித் தள்ளும். மேலும், அமெரிக்க போக்குவரத்து துறையின்
சுற்றுச் சூழல் மாசுபாடு விதிகளிலிருந்து இந்த காருக்கு விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் அதிபர் ஒபாமா இந்த காரில்
செல்லும்போது அமெரிக்க கொடியும், வெளிநாட்டு சுற்றுப் பயணம் செய்யும்போது
காரில் ஒரு பக்கத்தில் அமெரிக்க கொடியும், மறுபக்கத்தில் சுற்றுப் பயணம்
சென்றுள்ள நாட்டு கொடியும் பறக்கவிடப்பட்டிருக்கும்.


ரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிறப்பு தகவல்கள் 381996_398141200266132_572873693_n

நன்றி: இன்று முதல் தகவல்


Last edited by Muthumohamed on Sun 2 Dec 2012 - 9:45; edited 1 time in total (Reason for editing : spelling mistake)
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிறப்பு தகவல்கள் Empty Re: ரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிறப்பு தகவல்கள்

Post by ராகவா Sun 2 Dec 2012 - 7:00

நன்றி...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவுடன் நட்புடன் இருப்பதே பாகிஸ்தானுக்கு நல்லது: அதிபர் ஒபாமா
» ஜப்பானிடம் மன்னிப்பு கேட்க அமெரிக்க அதிபர் ஒபாமா மறுப்பு
» அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பெறும் சம்பளத்தை விட அதிகம்
» சிரிய அதிபர் பதவி விலக வேண்டும்: ஒபாமா
» எகிப்தில் தாக்கப்பட்ட நிருபர்:சந்தித்து அதிபர் ஒபாமா ஆறுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum