Latest topics
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!by rammalar Today at 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Today at 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Today at 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35
» பல்சுவை
by rammalar Yesterday at 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய்
4 posters
Page 1 of 1
மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய்
திருவனந்தபுரம்:
திருச்சூரை சேர்ந்த ஒரு தாய், கல்லீரல் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு
கல்லீரலையும், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மகளுக்கு சிறுநீரகமும் அளிக்க
முன்வந்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மனக்கொடி பகுதியை
சேர்ந்தவர் ராஜன். இவருடைய மனைவி கிரிஜா (52). இவர்களுக்கு சினோஜ் (34)
என்ற மகனும், சிமி (30) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி
குழந்தைகளும் உள்ளனர். கிரிஜாவின் கணவர் ராஜன் சில ஆண்டுகளுக்கு முன்
இறந்து விட்டார். இதனால், சினோஜுடன் கிரிஜா வசித்து வந்தார்.இந்நிலையில்,
சிமிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் பரிசோதித்த
போது அவருடைய 2 சிறுநீரகங்களும் செயலிழந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு சில மாதங்களுக்குள் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் சிமியின்
உயிருக்கு ஆபத்து ஏற்படும் என டாக்டர்கள் கூறினர். இதனால், கிரிஜா
அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும், மனதை தேற்றிக்கொண்ட அவர் தனது ஒரு
சிறுநீரகத்தை மகளுக்கு கொடுக்க தீர்மானித்தார். டாக்டர்களிடம் இது குறித்து
கிரிஜா ஆலோசனை நடத்தினார். கிரிஜா சிறுநீரகம் தானம் செய்ய டாக்டர்களும்
சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்வதற்கான
முன்னேற்பாடுகளை டாக்டர்கள் செய்து வந்தனர்.
இந்த நேரத்தில்தான்
கிரிஜாவுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய மகன் சினோஜ் ஒரு
நாள் வீட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். மருத்துவமனையில்
பரிசோதித்தபோது அவருடைய கல்லீரல் செயலிழந்தது தெரிய வந்தது. உடனடியாக
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் சினோஜின் உயிருக்கு ஆபத்து
ஏற்படும் என டாக்டர்கள் கூறினர். இதை கேட்டு சினோஜ் அதிர்ச்சி அடைந்தாலும்,
கிரிஜா அதிர்ச்சி அடையவில்லை. தன்னுடைய கல்லீரலை தந்து மகனின் உயிரை
காப்பாற்ற அவர் தீர்மானித்தது தான் அதற்கு காரணம். கிரிஜாவின் இந்த
முடிவுக்கு டாக்டர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வரும் 4ம் தேதி
எர்ணாகுளத்திலுள்ள அமிர்தா மருத்துவமனையில் மகனுக்காக தனது கல்லீரலை கிரிஜா
கொடுக்க உள்ளார். அன்றுதான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அமிர்தா
மருத்துவமனை டாக்டர்கள் தீர்மானித்துள்ளனர். மகனுக்கு கல்லீரலை கொடுத்த
பிறகு உடல்நலம் தேறினால் மகளுக்கு தனது சிறுநீரகத்தை கொடுப்பது உறுதி
என்கிறார் இந்த தாய். ஆனால் இந்த அறுவை சிகிச்சைகளுக்கு ஸி30
லட்சத்திற்கும் அதிகமாக பணம் தேவைப்படும். கிரிஜாவின் குடும்பத்தால் இந்த
அளவிற்கு பணத்தை ஏற்பாடு செய்ய முடியாது. இதையறிந்து கேரளாவில் உள்ள
ஏராளமான சமூக தொண்டு நிறுவனங்கள் அவருக்கு உதவ முன்வந்துள்ளன.
-தினகரன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய்
இதுதான் தாய்ப்பாசமா
நெகிழ வைத்த சம்பவம்
நெகிழ வைத்த சம்பவம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய்
தாய் என்றுமே உயர்ந்தவள் தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» அன்பு மகனுக்கு/மகளுக்கு
» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
» மருமகனுடன் ஜாலி...மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய் கைது!
» உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
» உடலையும், மனதையும் இளமையாக வைத்துக் கொள்ள
» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
» மருமகனுடன் ஜாலி...மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய் கைது!
» உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
» உடலையும், மனதையும் இளமையாக வைத்துக் கொள்ள
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|