சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நலம் அளிக்கும் வாழைப் பூ! Khan11

நலம் அளிக்கும் வாழைப் பூ!

2 posters

Go down

நலம் அளிக்கும் வாழைப் பூ! Empty நலம் அளிக்கும் வாழைப் பூ!

Post by யுவராஜா Mon 24 Dec 2012 - 16:52

நாம் கொஞ்சம் அரிதாக உணவில் சேர்த்துக்கொள்ளும் பூ, வாழைப் பூ. ஆனால் நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய பூ இது. வாழைப்பழம் மட்டுமல்ல, அதன் பூவும், தண்டும் கூட மருத்துவக் குணமுள்ளவையே. வாழைப் பூவின் துவர்ப்புச் சுவை நாம் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைப் போக்க பெண்கள் பலமுறை தண்ணீர் விட்டுக் கசக்கிப் பிழிந்து எடுத்துவிடுகிறார்கள்.
:-
துவர்ப்பு இருந்தால் சுவையிருக்காது என்பது அவர்களின் எண்ணம். ஆனால் துவர்ப்பு இருந்தால் ஊட்டச்சத்து வீணாகாமல் உடம்புக்கு வைட்டமின் 'பி' கிடைக்கிறது. பல வியாதிகளும் நிவர்த்தி அடைகின்றன. தற்போது சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
:-
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப் பூவைச் சுத்தம் செய்து, சிறிது சிறிதாக நறுக்கி, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று, உடலுக்குத் தேவையான இன்சுலினை சுரக்கச்செய்யும். சர்க்கரை நோயும் கட்டுப்படும்.
:-
மலம் கழிக்கும்போது ரத்தமும் சேர்ந்து வெளியேறுவதை ரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப் பூவைஉணவில் சேர்த்து வந்தால் ரத்த மூலம் வெகு விரைவில் குணமாகும். உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன்பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால் உடல் சூடு குறையும்.
:-
சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக் கடுப்பு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்கவைத்து வடி கட்டி, அந்த நீரை இளஞ்சூடாக அருந்திவந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும். பெண்களுக்கு வாழைப் பூவை ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம்.
:-
மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப் போக்கு ஏற்படும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தைப் பாதியளவு எடுத்து நசுக்கிச் சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.
:-
வெள்ளைப்படுதலால் பெண்கள்அதிக மன உளைச்சலுக்கு ஆளாகநேரிடுகிறது. அவர்கள் வாழைப் பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும். கை, கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப் பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு, எண்ணை சேர்த்து வதக்கி, கை, கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கை, கால் எரிச்சல் குணமாகும்.
:-
வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப் பூ ரசம் செய்து அருந்தி வந்தால் இருமல் நீங்கும். வாரம் இருமுறை வாழைப் பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் தாது விருத்தி அடையும். சிலர் குழந்தையின்மையால் மனவேதனைக்கு ஆளாவார்கள்.
அவர்களுக்கு, வாழைப் பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத் தன்மையைப் போக்கும். இப்படி வகை வகையாய் நன்மைகளை வாரி வழங்கும் வாழைப் பூவை கொஞ்சம் தேடிப் பார்த்து சமையலில் சேர்த்துப் சாப்பிடலாமே!
:-
நன்றி மாலை மலர்
யுவராஜா
யுவராஜா
புதுமுகம்

பதிவுகள்:- : 53
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நலம் அளிக்கும் வாழைப் பூ! Empty Re: நலம் அளிக்கும் வாழைப் பூ!

Post by ahmad78 Mon 24 Dec 2012 - 20:38

நல்ல தகவல் பதிவிற்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum