சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே. Khan11

அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே.

2 posters

Go down

அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே. Empty அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே.

Post by *சம்ஸ் Fri 28 Jan 2011 - 0:55

இந்த உலகத்தில் மதங்கள் என்ற பெயரில் மக்களிடையே பிரிவினை இருந்தாலும் அன்பும் ஆதரவும் அனைவருக்கும் பொதுவானதே...........

எந்த ஒரு மதமும் பிறர் மீது அன்பு செழுத்தாதே பிறர் கஷ்டங்களை பங்கெடுக்காதே பிறர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காதே என்று சொல்வதில்லை அதன் அடிப்படையில் பிறர் மீது அன்பு செலுத்துதல், பிறருக்கு உதவி செய்தல், தம்மைப் போன்றுதான் பிறருக்கும் இன்பத்தை பெறத்துடிக்கும் ஆசையும், துன்பத்தை தாங்க முடியாத தவிப்பும் இருக்கும் என்று தெரிந்துகொள்ளுதல் போன்ற மனித பன்புகள் மூலம் நம் மனதை நம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

இந்த உலகத்தில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் சார்ந்து இருக்கவேண்டும் என்பதற்க்காகவே இறைவன் மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகளையும் செல்வத்தை பயன் படுத்தும் அறிவை கொடுத்தான். (அவன் கொடுப்பதை தடுப்பதற்க்கும் தடுப்பதை கொடுப்பதற்க்கும் இங்கு எவரும் இல்லை) இந்த உண்மை புரிந்து நாம் சம்பாதிக்கும் பணம் நம் ஒருவனுக்காக மட்டும் இறைவன் தருவதில்லை. நமக்கே தெரியாமல் நம்மை சுற்றி நம்மை எதிர்பார்த்து எத்தனையோ குடும்பங்கள் காத்திருக்கின்றன என்பதை மனதில் கொண்டு அப்படிப்பட்ட மணிதர்களை தேடிப்பார்க்க முயற்ச்சி செய்தல். அவர்களுக்கு உதவி செய்தல். அதில் சந்தோசம் கான தெரிந்துகொள்ளுதல், பிறரிடம் இருந்து பெறுவது மட்டும் தான் சந்தோசம் என்று நினைத்துக்கொண்டிருக்காமல் பிறருக்கு கொடுத்து உதவும்போது அவர்கள் முகத்தில் ஏற்படும் சந்தோசம் தான் மிகப் பெரிய சந்தோசம் என்ற தத்துவத்தை வாழ்க்கையில் புரிந்துகொள்ளுதல் போன்ற விசயங்களின் மூலம் நாம் இந்த உலகத்தில் பணத்தின் மீது நமக்கு உள்ள ஆசையில் இருந்து சிறிது விலகி நிற்க முடியும்.

நம்மிடம ஒருவர் உதவி கேட்டு வருகிறார்கள் என்றால் (அது பண உதவியாக இருந்தாலும் சரி அல்லது அல்லது அது நம் உடல் உழைப்பான உதவியாக இருந்தாலும் சரி) அது இறைவன் நமக்கு அளித்த பாக்கியம் என்று நினைத்து நம்மால் முடிந்தால் மற்றவர் உதவி செய்வதற்க்கு முன்பாக நாம் அந்த உதவியை செய்து அவர் துன்பத்தை துடைக்கவேண்டும் என்று நினைப்பதன் மூலம் நம் மனதை நம்மால் தூய்மையாக எப்பொழுதும் வைத்துக்கொள்ள முடியும்.

நமக்கு முன்னால் பல மன்னாதி மன்னரெல்லாம் வாழ்ந்த பூமி இது அவர்கள் சேர்க்காத செல்வம் இல்லை. அவர்கள் வாழாத வாழ்க்கை இல்லை. இன்று அவர்கள் எங்கே அந்த செல்வம் எங்கே. வாழ்ந்த வாழ்க்கை எங்கே. இந்த அற்ப வாழ்வில் எது நிரந்தரம். இன்று இந்த உலகில் உள்ள இதே பரபரப்பும் சுறுசுறுப்பும் நாளை நாம் இந்த உலகத்தில் இல்லாத அந்த நாளிலும் இருக்கத்தான் செய்யும். நமக்காக நம் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட வருடக்கணக்கில் சாப்பிடாமல் தூங்காமல் கவலைப்படப்போவதில்லை.

எனவே நாம் வாழும் காலத்தில் பிறர் மீது நாம் செலுத்தும் அன்பும் பிறருக்காக நாம் செலவிடும் நேரமும் பிறர் நலனுக்காக நாம் செலவிடும் பொருளும் மட்டுமே இந்த உலகத்தில் நம்மை நிரந்தரமாக வாழ வைக்கும்.

இதனையே இந்த மன்றத்தின் தூண் அன்பு நந்திதா அக்கா தன்னுடைய அழகிய தமிழ் நடையில் இவ்வாறு கூறுகிறார்கள்

மனந்தனை அடக்க மகமதுகான் என்னும்
எனதுடன் பிறந்தான் எடுத்துரைத்த பொன்மொழியைத்
தினந்தோறும் கைக்கொள்ளத் தீதொழிந்து மக்கள்
இனமெல்லாம் இன்பத்தை எய்துவரே இந்நிலத்தில்

அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவென்று
இன்புற்று ஈதலா லீட்டும் இரும்பூது
என்றைக்கும் நம்மை இமைபோல் காக்கின்ற
தன்னிகரில்லா இறைவனவன் தருசுவரக்கம் போலாகும்

செத்தால் அழுதுவிட்டு சிறுபோதில் மறந்திடுவர்
எத்தால் இவ்வுலகத்தில் எந்நாளும் இருந்திடுவோம்?
மெத்தப் படித்தவரும் மேதினியை ஆண்டவரும்
சொத்துமிக சேர்த்தவரும் சுடுகாட்டில் போய்மறைந்தார்

பசித்திருக்கும் ஏழைக்குப் பாசமுடன் சோறிட்டுப்
புசித்திருப்பான் சுவனத்தைப் பூமியிலே வரவழைப்பான்
இசைபெற்று வாழ்ந்திடவே இறைவனருள் ரஹ்மத்தால்
வசையிலா வாழ்வு பெற இம்மாமணியை வாழ்த்துதுமே


பொருள்


மனம் என்பது மாயப்பிசாசு உலக இன்பம் துய்ப்பார்க்கு. அம்மனமோ யோகியர்க்கு ஆத்மா என்னும் இரதத்தை இறைவன் என்னும் இலக்கு நோக்கி இழுத்துச் செல்லும் இந்த்ரியங்களாகிய குதிரைகளை
அடக்கியாளும் கடிவாளம் என்கிறது கடோபனிஷத்

ஆத்மானம் ரதினம் வித்தி சரீரரம் ரதமேவ து
புத்திம் சாரதிம் வித்தி மன:ப்ரக்ரஹமேவ ச

பொருள்
ஆத்மாவை ரதத்தில் செல்பவனாகவும் இவ்வுடல் ரதமாகவும் அறிவை இரதத்தை ஓட்டுபவனாகவும், இந்திரியங்களாகிற குதிரைகளைக் கட்டுப் படுத்தும் கடிவாளமாகவும் நினைத்து வாழ்க்கையை நடத்து என்றது

யோகியர்க்கு ஒரு மூலமாய் நின்ற திருமூலர் தமது ஏழாம் தந்திரத்தில்

அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கின் அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே. 3 (ஏழாம் தந்திரம் –பாடல் என் 2033)

அறிவில்லாதவர்கள் ஐந்து இந்திரியங்களையும் அடக்கு என்பர். மண்ணோர் முதல் விண்ணொர் வரை இந்த ஐந்தையும் அடக்கியவர் எவருமிலர். அவ்வாறு அடக்கிடில் சடப் பொருளாகி விடுவோம் என்பதனை இவர்கள் உணரவில்லை. ஆனால் நான் அந்த ஐந்தையும் அடக்காமல் வசப் படுத்தும் அறிவினைப் பெற்றேன்
என்கிறார்.

அந்த அறிவு திரு முகம்மது கான் அவர்களின் முதல் பாட்டில் விளக்கப் படுகிறது. தன்னுயிர் போல் மன்னுயிர்
நினத்து அவற்றை மதித்து வாழும் பண்பே மனிதப் பண்பு. இந்தப் பண்பினைக் கை கொண்டால் வெறிக் குணங்கள் அடங்கி மனம் நம் வசப் படும் என்கிறார். பெருக்கமான ஒரு விடயத்தைச் சுருக்கித் தந்த பெருமை திரு கானுக்கே சேரும்.

நீதி ஸ்லோகம் கூறுகிறது

பரோபகாராய வஹந்தி நத்ய; பரோபகாராய துஹந்தி காவ:
பரோபகாராய பலந்தி வ்ருக்ஷா: பரோபகாரார்த்தம் இதம் சரீரம்

ஒரு நதி தன் ஓட்டத்தினால் உலகைச் செழிக்க வைக்கிறது. பாலைப் பொழிந்து தரும் பசுக்கள் பலர் உயிரைக்
காக்கிறது, ஒரு சிறு விதைக்காகப் பெரிய பழத்தைத் தந்து மரங்கள் பரோபகாரம் செய்கின்றன. ஏ!அறிவுள்ள மனிதா உன் உடல் உள்ளம் உயிர் மூன்றும் பரோபகாரத்துக்காகவே படைக்கப் பட்டன என்று உலகத்தார் மேற்கொள்ள வேண்டிய பற்றில்லாப் பற்றினை எப்படி அடைவது என்று அகமது திறக்கிறார் நமது மகமது
கான் தனது இரண்டாவது பாராவினால்.

நிலையாமையைப் பற்றித் திருவள்ளுவர்

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு" என்றார்

இந்த உலக்குக்கு உள்ள பெருமையாவது நேற்று இருந்தான் இன்றில்லை என்பதேயாகும்

திருமூலர் ஒருபடி மேலே போய்

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை மாற்றிப் பிணமென்று பேரிட்டு
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே

முடிதரித்த மன்னரெல்லாம் பிடிசாம்பர் ஆனார்கள், தேடிவத்த செல்வம் ஓடிவிட்டது, நிரந்தரமற்ற தன்மையே
நிரந்தரமானது. இறைவன் திருவருளால் பெற்ற செல்வத்தைப் பிறருக்கும் ஈவார் இறந்தும் இறவாதாரே என்பதை திரு கானின் மூன்றாவது பாரா விளக்குகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே. Empty Re: அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே.

Post by நண்பன் Fri 28 Jan 2011 - 8:47

##* :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum