சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

நரம்புத்தளர்ச்சியுடைய ஆண்களின் கவனத்துக்கு. Khan11

நரம்புத்தளர்ச்சியுடைய ஆண்களின் கவனத்துக்கு.

4 posters

Go down

நரம்புத்தளர்ச்சியுடைய ஆண்களின் கவனத்துக்கு. Empty நரம்புத்தளர்ச்சியுடைய ஆண்களின் கவனத்துக்கு.

Post by ராகவா Sun 10 Feb 2013 - 1:18

நரம்புத்தளர்ச்சியுடைய ஆண்களின் கவனத்துக்கு. 1358281599642






நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு,
உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து
வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற
குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும்
போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த
வண்ணமாக உள்ளது. இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும்
அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க
விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து
விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு
வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து, தெளிவுபடுத்தி
தைரியப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.








நரம்புத்தளர்ச்சியுடைய ஆண்களின் கவனத்துக்கு. PAP_Impotence_PSAஆண்களுக்கு
பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது
20 - 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல
பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக்
காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச்
சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை
ஏற்படுத்திக் கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல்
போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர். இது இயற்கையான ஒன்று
தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை
உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை.
விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது
நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது
உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.






சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக்
கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை
பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக
மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி,
அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும்.
இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு. பயந்தவனும்
கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை
கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி
செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல்
ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.






இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல்,
தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல்
போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.






வாழ்க்கை முறைகள்






புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகித்தல்,
டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப்பட்ட இரசாயணம் கலந்த உணவுகள்,
பானங்கள் போன்றவைகளையும் அவ்வப் போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்காக
உட்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரைகள்
முதலியவைகளையும் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல் உள்ளுறுப்புகளைப்
பாதிக்கச் செய்கிறது.






நரம்புத்தளர்ச்சியுடைய ஆண்களின் கவனத்துக்கு. Tobacco_large_Brunei_impotence_01_large_en


தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது
நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம்,
சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங்,
ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம். இதனால் உடல்
உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க,
குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம்
வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல்
நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும் 15 நாட்களுக்கொரு முறை
தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது.






மூலிகைகள்






அன்று கிராமங்களில் சாதாரண நோய்கள் முதல் கொடிய நோய்கள் வரை
எல்லாவற்றுக்கும் அருகில் உள்ள அரிய மூலிகைகளைக் கொண்டு பக்கவிளைவுகள்
இன்றி குணப்படுத்தி வந்தனர். இந்த மூலிகைகளில் வியக்கத்தக்க வகையில் குணம்
இருப்பது நாம் அறிந்த ஒன்று. இந்த மூலிகைகளால் குணமாக்க முடியாத நோய்களே
இல்லை. இதனை இந்து மத முன்னோர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும்







நரம்புத்தளர்ச்சியுடைய ஆண்களின் கவனத்துக்கு. Use-home-remedies-treat-impotence-800x800


உகந்த மூலிகைகள் என அம்மைக்கு - வேப்பிலை, சிவனுக்கு - வில்வம்,
விநாயகருக்கு - அருகம்புல், விஷ்ணுவுக்கு - துளசி, பிரம்மாவுக்கு -
அத்தியிலை என்று வைத்து தினசரி பூஜைகளின்போது வரும் பக்தர்களுக்கு
பிரசாதமாக உட்கொள்ள கொடுத்து நோய் வருமுன்னர் மக்களின் பொதுவான
ஆரோக்கியத்தை காத்தனர். மேலும், அவ்வப்போது வரும் நோய்களை குணப்படுத்தும்
மூலிகைகளை அறிந்துள்ளார்கள்.






அவைகளில் ஆண்மைக் குறைவுக்காக, வேப்பிலை, அருகு, அத்தி, முருங்கை,
ஆலயிலை, அரசஇலை, மாவிலை, அமுக்கரா, நாவல், ஓரிதழ் தாமரை போன்றவைகள் மிக
பயன் உள்ளதாக உள்ளது. இக்குறைபாடு உள்ளவர்கள், இவைகளைப் பறித்து வெய்யிலில்
உலர்த்தி பொடி செய்து பின் சம அளவில் ஒன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில்
வைத்துக் கொள்ளவும். பின் இதில் இருந்து இரண்டு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு
டம்ளர் தண்ணீர் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக உட்கொள்ள சுமார் 30
முதல் 60 நாட்களில் நல்ல பலன் தெரியும்.






உணவு முறைகள்






நமது உடலானது நாம் உண்ணும் உணவில் இருந்து சக்தியைப் பெற்று
வளர்ச்சியும், உறுதியும் பெறுகின்றது. தவறான உணவுப் பழக்கத்தினால் கெடவும்
செய்யும். நமது உடலுக்கு பச்சையாக உண்ணும் உணவே ஏற்றது. ஆகவே, பச்சைக்
காய்கறிகள், கீரைகள், பழவகைகள் போன்றவைகளை அதிகம் உண்பதால் உடல் பூரண
எதிர்ப்பு சக்தியுடனும், உறுதியுடனும் காணப்படும். வேக வைத்து உண்ணும் போது
உணவில் உள்ள சக்திகள் அழிந்து விடுகின்றன.






நரம்புத்தளர்ச்சியுடைய ஆண்களின் கவனத்துக்கு. Pomegranate-2


ஆகவே, இயற்கை உணவான ஆப்பிள், அன்னாசி, வாழை, பப்பாளி, பேரிட்சை, மாதுளை,
சப்போட்டா, தக்காளி போன்றவைகளையும், காய்களில் வெண்டை, கேரட், கோவக்காய்,
தேங்காய், கரும்புச்சாறு, பதனீர், உருளை, கொத்தமல்லி, முள்ளங்கி, பூண்டு,
வெங்காயம் போன்றவைகளை சாலட்டாகவோ தனித்தனியாகவோ உட்கொள்ளலாம்.






நரம்புத்தளர்ச்சியுடைய ஆண்களின் கவனத்துக்கு. Salmon-and-broccoliகொட்டை வகைகளில் பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பட்டாணி வகைகள், உளுந்து போன்றவைகளை ஊற வைத்து அல்லது லேசாக வேக வைத்து சாப்பிடலாம்.






மேற்கூறியவைகளில் இருந்து தேவையானவைகளை அவரவர் விருப்பம் போல் காலை, இரவு
ஆகிய இரண்டு வேளையும் 3 / 4 வயிறு வீதம் உட்கொள்ளவும். பகல் ஒரு வேளை
சமைத்த உணவுகள் உட்கொள்ளலாம். அதிலும் சாதம், கேழ்வரகுக் கூழ், ரொட்டி, கழி
போன்றனவும், கோதுமை, மக்காசோளம், கம்பு போன்றவை தானியங்களில் இருந்தும்
சமைத்த உணவுகள் தயார் செய்து சாப்பிட்டு வரவும்.






மேற்கூறிய முறைகளைப் பின்பற்றினால் நரம்பு தளர்ச்சி, ஆண்மைக்குறைவு என்ற நோய்களுக்கே இடமின்றி வாழலாம்.

நன்றி:தளம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நரம்புத்தளர்ச்சியுடைய ஆண்களின் கவனத்துக்கு. Empty Re: நரம்புத்தளர்ச்சியுடைய ஆண்களின் கவனத்துக்கு.

Post by கைப்புள்ள Sun 10 Feb 2013 - 10:05

GOOD MESSAGES
சூப்பர் சூப்பர்
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

நரம்புத்தளர்ச்சியுடைய ஆண்களின் கவனத்துக்கு. Empty Re: நரம்புத்தளர்ச்சியுடைய ஆண்களின் கவனத்துக்கு.

Post by ahmad78 Sun 10 Feb 2013 - 13:46

பயனுள்ள தகவல்கள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நரம்புத்தளர்ச்சியுடைய ஆண்களின் கவனத்துக்கு. Empty Re: நரம்புத்தளர்ச்சியுடைய ஆண்களின் கவனத்துக்கு.

Post by மீனு Sun 10 Feb 2013 - 17:51

மருத்துவத்துறையில் உள்ளதால் நீங்களும் மருத்துவர் ஆகி விட்டீர்கள் ஐடியா!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

நரம்புத்தளர்ச்சியுடைய ஆண்களின் கவனத்துக்கு. Empty Re: நரம்புத்தளர்ச்சியுடைய ஆண்களின் கவனத்துக்கு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum