சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Yesterday at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Khan11

ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!

Go down

ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Empty ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!

Post by Muthumohamed Sun 10 Feb 2013 - 7:03

ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!
(ஞாயிறு, 10 பிப்ரவரி 2013)

ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!

ஈழத்
தமிழர் விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இரட்டைவேடம் போடுகிறார்
என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தனது அறிக்கையில் கருணாநிதி கூறியிருப்பதாவது:

8-2-2013
அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரை
வழங்கிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை
விதிக்கப்பட வேண்டும் என்று பேரவையில் அ.தி.மு.க. ஆட்சியில் தீர்மானம்
நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது என்றும், அதை மத்திய அரசு கண்டு
கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டதோடு, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐக்கிய
நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக
அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த போது, அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக,
மத்திய அரசு வாக்களிக்க வேண்டுமென்று பிரதமரிடம் தான் வலியுறுத்தியதாகவும்,
முதலில் அதை ஆதரிப்பது பற்றி எதுவும் தெரிவிக்காத இந்திய அரசாங்கம், தனது
தொடர் வலியுறுத்தல் காரணமாக அந்தத் தீர்மானத்தை ஆதரித்தது என்றும்
கூறியிருக்கிறார்.

ஆனால் இதே முதலமைச்சர் ஜெயலலிதா தான்; 16-4-2002
அன்று, அ.தி.மு.க. ஆட்சியிலே, இதே தமிழகச் சட்டப் பேரவையிலே இலங்கைப்
பிரச்சினை பற்றி ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். அதன் முக்கிய பகுதிகள்
வருமாறு:-

இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை
பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு
மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை
வற்புறுத்துகிறது.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச்
சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக்
கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது. இந்தியாவின்
பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம்
விளைவிக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர்
பிரபாகரனும், இந்திய மண்ணில் காலூன்றுவது ஒரு போதும் ஏற்கப்பட மாட்டாது,
அனுமதிக்கப்பட மாட்டாது.

பிரபாகரனை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு
ஸ்ரீலங்கா அரசோடு சட்டப்படியாகவும், தூதரக நடைமுறைப்படியும், அனைத்து
விதமான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரபாகரனை அவர் புரிந்த
குற்றங்களுக்காக இந்தியாவில் உள்ள நீதி மன்றத்தில் உரிய விசாரணைக்கு
உட்படுத்தவேண்டும் என்றும் தமிழக சட்ட மன்றப் பேரவை மத்திய அரசைக் கேட்டுக்
கொள்கிறது.

ஸ்ரீலங்கா அரசினால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்
பிரகாரனை பிடித்து நாடு கடத்த இயலவில்லை என்றால், ஸ்ரீலங்கா அரசின் அனுமதி
யோடு, இந்திய இராணுவத்தை ஸ்ரீலங்கா அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனை
சிறை பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசை
தமிழக சட்டமன்றப் பேரவை கேட்டுக் கொள்கிறது. இந்தத் தீர்மானத்தை முன்
மொழிந்தவர் ஜெயலலிதாதான்!

அது மாத்திரமல்ல; 17-1-2009 அன்று இதே
ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று
இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி
மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்” என்றும் குறிப்பிட்டார்.

மேலும்
இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து, போர் நிறுத்தம் உடனே
அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்
ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது, ஜெயலலிதா விடுத்த அறிக்கையில்,
“விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்
தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது, இலங்கையில் தற்போது நடக்கும்
உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை” என்றே
மத்திய அரசுக்கு அப்போது வக்காலத்து வாங்கினார்.

4-11-2007இல்
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச்
செல்வன் மறைந்த போது ஒரு இரங்கல் கவிதையை நான் எழுதினேன் என்பதற்காக
ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு
இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று, இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று
தெரிவித்தவர் தான் ஜெயலலிதா.

இதையெல்லாம் ஈழத் தமிழர்கள்
மறந்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு நேற்று, 8-2-2013 அன்று சட்டப்
பேரவையில் ஜெயலலிதா ஈழத் தமிழர்களிடம் தான் மிகுந்த அக்கறை கொண்டவரைப் போல
தன்னைக் காட்டிக்கொள்கிறார். இதில் இருந்து அவரது உண்மை உருவத்தை, ஈழத்
தமிழர்களும், இங்குள்ள தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

அறிந்து கொள்வோம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» சட்டப்பேரவைக்கே வராமலேயே விமர்சிப்பதா?: கருணாநிதி மீது ஜெயலலிதா தாக்கு- திமுக வெளிநடப்பு
» தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம்.
» முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்- கருணாநிதி
» ஜாபர்சேட் மீது நடவடிக்கை:அரசுக்கு விசுவாசமான அதிகாரிகளை பழிவாங்குவதா? கருணாநிதி அறிக்கை
» அண்ணா வளர்ப்பு மகன் மரணம் ஜெயலலிதா, கருணாநிதி இரங்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum