Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெண்மைக்குப் பெண்ணே எதிரி!
3 posters
Page 1 of 1
பெண்மைக்குப் பெண்ணே எதிரி!
பெண்மைக்குப் பெண்ணே எதிரி!
சென்னை. பரபரப்பான நந்தனம் சிக்னல். பச்சை விளக்குக்காகக்
காத்திருக்கிறேன். விர்ர்ரூம்ம்ம் விர்ர்ரூம்ம்ம் சத்தத்துடன் என் காரை
உரசிவிடுவது மாதிரி பக்கத்தில் வந்து
நின்றது அந்த பைக். ஓட்டி வந்த இளைஞனின் பின் இருக்கையில் ஒரு பெண். இரண்டு
பக்கமும் கால் போட்டு உட்கார்ந்திருந்தாள். காற்றைக் கிழிக்கும் கூந்தல்.
ஸ்லீவ்லெஸ் லோகட் டாப்ஸ் – ஜீன்ஸில் இருந்தாள். முதுகுப்பக்கம்
டாப்சுக்கும் ஜீன்சுக்கும் இடைவெளியில் பளீர் எனத் தேகம் தெரிய, கூடவே அவள்
அணிந்திருந்த பேன்ட்டீஸின் லேபிளும் எட்டிப் பார்த்தது. தோள்பட்டையிலும்
இடுப்பிலும் டாட்டூஸ் மின்னல்கள். சிக்னலில் நின்ற வாகனங்களின் கண்கள்
அந்தப் பெண்ணையே மொய்த்தன. பச்சை சிக்னல் விழுந்து சில விநாடிகள்
கழித்துத்தான் சக்கரங்கள் சுழலவே ஆரம்பித்தன. இது போன்ற நிகழ்வுகள்
தொடர்வது வாடிக்கையாகிவிட்டது.
இன்னொரு சம்பவம். ‘தனது அப்பா மீது
ரொம்பப் பாசமுடையவன் சதீஷ். அவனின் திருமணத்துக்குப் பிறகு அப்பா ஏனோ
மகனிடம் அதிகம் பேசுவதில்லை. மருமகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. வீட்டைவிட
வெளியில் இருப்பதையே விரும்பினார். சதீசுக்கு அப்பாவின் மனநிலை குறித்து
சந்தேகம். தனியாக விசாரித்தபோது, அப்பா சொன்னார்: ”எப்படிச் சொல்றதுன்னு
தெரியலைப்பா. உன் அம்மா செத்து இருபது வருஷமாச்சுப்பா. நான் ரொம்ப
யோக்கியமாவே வாழ்ந்துட்டேன். உன் வொய்ஃப் எப்பப் பார்த்தாலும் நைட்டியிலயே
திரியுது. அது ரொம்ப ஸ்டைலா வளர்ந்த பொண்ணு போல. எனக்குத்தான் மனசுக்கு
ரொம்பக் கூச்சமா இருக்குப்பா!” என்றார். அப்பா இப்போது இருப்பது முதியோர்
இல்லத்தில்.
‘இந்தியா சுதந்திர நாடு. நாங்கள் சுதந்திரப்
பிரஜைகள். நாங்கள் எப்படி வேண்டுமானாலும் உடுத்துவோம்’ என்பது சரிதான்.
ஆனால், அதற்கு ஓர் எல்லை உண்டு. எங்களுக்கு இது வசதியாக இருக்கிறது என்று
உடுத்துவது எதையும் யாரும் மறுக்க மாட்டார்கள். கட்டுப்பாடு, கலாசாரம்
என்றிருந்த நம் வீடுகளுக்குள் நம் வீட்டுப் பெண்களின் விருப்ப உடைகளான சுடி
தார், நைட்டி, ஜீன்ஸ் என எல்லாம் உள்ளே அனுமதித்தோமே… அதுதான் மனப்
பக்குவம்.
ஆனால், நாகரிகம் என்ற பெயரில் ஒரு சிலர் இப்படி அரைகுறையாக
ஆபாசமாக ஆடை உடுத்துவது, மற்றவர்களின் கவனம் ஈர்ப்பதற்காக. இந்த மனநிலைக்கு
‘attention drawing behaviour’என்று பெயர். பத்து பேரின் கவனத்தை
ஈர்த்தேன் என்று கர்வம்கொள்ளும் அதே நேரத்தில், பத்து பேரின் தவறான
அபிப்ராயத்தையும் சம்பாதிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ அப்படித்தான் மற்றவர்கள் உங்களிடம்
நடந்துகொள்வார்கள். எதைக் கொடுக்கிறோமோ,அது தான் திரும்பக் கிடைக்கும்.
யாரும் அரை குறை உடையுடன் கோயிலுக்குப் போவது இல்லையே. நேர்முகத் தேர்வு
என்றால், ஃபார்மல் டிரெஸ். திருமணம் என்றால் பட்டுப்புடவை என
எல்லாவற்றுக்கும் முறை ஒன்று இருக்கிறது. பொது இடங்களுக்கு வரும்போது
மட்டும் ஏன் அரைகுறையாக உடுத்த வேண்டும்?
நாகரிகம் என்கிற பெயரில்
இப்படியெல்லாம் பெண்கள் ஆடை உடுத்துவதற்கு மனப் பக்குவம் இல்லாததே காரணம்.
மனப் பக்குவம் இருக்கிற எவரும் இப்படி உடுத்த மாட்டார்கள்!
முன்னேற்றம் என்ற போர்வையில் பண்பாட்டுக் கலாச்சாரத்துக்கு வேட்டு வைத்து,
முன்னோர்கள் பின்பற்றியொழுகிய நற்பண்புகளும் நடமுறைப் பழக்கவழக்கங்களும்
பின்பற்றத் தகுதியற்றவையாக புறக்கணிப்பட்டு ”சுதந்திரம்” எனும் பெயரில்
மறைக்கப்பட வேண்டிய பெண்கள் எதற்கெடுத்தாலும் சமநிலை முழக்கத்தோடு உடை
சுதந்திரத்தைக் கையிலெடுத்துள்ளனர். புதியவை நல்லவையென்றும் பழையவை
காலங்கடந்தவையென்றும் நிர்வாண நாகரீகத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றனர்
பெண்கள்.
முன்னேற்றம் எல்லாக் காலங்களிலும் ஏற்படுவது தான். அதில்
நடுநிலையைக் கைவிடும் போதுதான் குழப்பங்களும் சர்ச்சைகளும் ஏற்படுகின்றன.
சதீஷின் அப்பா ஒழுக்கமுள்ளவர் அதனால் அரை குறை உடையில் காட்சி தரும்
மருமகளிடமிருந்து ஒதுங்கிக்கொண்டார். ஒழுக்கமுடன் இருந்தாலும் அரை குறை
ஆபாச உடையால் கவனத்தை ஈர்த்து சபலத்தை ஏற்படுத்துவதால் சில குடும்பங்களில்
மருமகள் மாமனாரால் பலவந்தப்படுத்தும் அவலமும் அங்காங்கே நிகழ்கிறது.
நம்மைச் சுற்றி எல்லாரும் நம்மையே கவனிக்க வேண்டும் என்று மற்றவர்களின்
கவனத்தை ஈர்ப்பதற்காக கவர்ச்சியாக உடை உடுத்தும் பெண்கள் – நீங்கள் எப்படி
நடக்கிறீர்களோ அப்படித்தான் மற்றவர்கள் உங்களிடம் நடந்துகொள்வார்கள். அரை
குறை ஆபாச உடைகளால் அபாயம் பெண்களுக்குத்தான். பெண்மைக்கு பெண்களே எதிரியாக
இருக்கின்றனர் இதை கவனத்தில் வைத்து உங்கள் ஆடை சுதந்திரத்தைப்
பேணிக்கொள்ளுங்கள்!
Re: பெண்மைக்குப் பெண்ணே எதிரி!
உங்கள் ஆடை சுதந்திரத்தைப்
பேணிக்கொள்ளுங்கள்! ......சிறந்த பதிவு பகிர்வுக்கு நன்றி முஹம்மட்.
பேணிக்கொள்ளுங்கள்! ......சிறந்த பதிவு பகிர்வுக்கு நன்றி முஹம்மட்.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: பெண்மைக்குப் பெண்ணே எதிரி!
@. @.ansar hayath wrote:உங்கள் ஆடை சுதந்திரத்தைப்
பேணிக்கொள்ளுங்கள்! ......சிறந்த பதிவு பகிர்வுக்கு நன்றி முஹம்மட்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பெண்ணே பெண்ணே! பொறாமை வேண்டாம்! கண்ணே!
» எதிரி ....
» எதிரி – ஒரு பக்க கதை
» ஈ'... எனும் எதிரி
» பெண்ணே
» எதிரி ....
» எதிரி – ஒரு பக்க கதை
» ஈ'... எனும் எதிரி
» பெண்ணே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum