Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பொறியியல் சார்ந்த டிப்ளமோ படிப்புகள்...
Page 1 of 1
பொறியியல் சார்ந்த டிப்ளமோ படிப்புகள்...
பொறியியல் சார்ந்த டிப்ளமோ படிப்புகள்...
பல்வேறு காரணங்களால், பொறியியல் பட்டப்படிப்பு சேர முடியாத மாணவர்களுக்கு, பொறியியல் டிப்ளமோ படிப்புகள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. அத்தகைய டிப்ளமோ படிப்புகளில் சிலவற்றை இக்கட்டுரையில் அலசுவோம்.
1. கம்யூட்டர் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பு
இப்பிரிவானது, கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
துறைகளின் கோட்பாடுகள் மற்றும் நுட்பங்களை உள்ளடக்கியது. மேலும், கணிப்பொறி
அம்சங்களின், சோதனை மற்றும் வடிவமைப்பையும் உள்ளடக்கியது. பொதுவாக,
கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள், சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் இன்ஜினியர்கள்
என்று இருவகைப்படுகிறார்கள். இந்த டிப்ளமோ படிப்பு 3 வருடங்களைக் கொண்டது.
தகுதிகள் மற்றும் சேர்க்கை
அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் CET தேர்வை எழுத வேண்டும்.
பாடத்திட்டம்
Data structure, computer networking, programming in &'c&' digital techniques, visual basic, java programming.
பணி வாய்ப்புகள்
இதை முடித்த ஒருவர், உயர்கல்வியை மேற்கொள்ளலாம் அல்லது "டெக்னிக்கல்
இன்ஜினியர்" என்ற நிலையிலான பணியை, ஐடி தொடர்பான நிறுவனங்களில் பெறலாம்.
சம்பளம் - ஒருவரின் சராசரி சம்பளம், மாதம் ரூ.12,000 முதல் ரூ.30,000 வரை கிடைக்கிறது.
கல்விக் கட்டணம் - ஒரு செமஸ்டருக்கு ரூ.3000 செலவாகிறது(டெல்லியில் அமைந்த குருநானக் தேவ் பாலிடெக்னிக்கின் கட்டணப்படி).
2. எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பு
எலக்ட்ரிசிட்டி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரோமேக்னடிசம் ஆகியவற்றின்
ஆய்வு மற்றும் பயன்பாடு ஆகியவை சம்பந்தமானது இத்துறை. தொழில்துறைக்கு
தேவைப்படும் வகையில், மாணவர்களை, சிறந்த எலக்ட்ரிகல் மற்றும்
எலக்ட்ரானிக்ஸ் பொறியாளர்களாக உருவாக்குவது இப்படிப்பின் நோக்கம்.
இந்த 3 வருட டிப்ளமோ படிப்பானது, ஏஐசிடிஇ மற்றும் இந்திய அரசாங்கம் ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்றது.
தகுதிகள் மற்றும் சேர்க்கை
ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது கல்வி கவுன்சில்
ஆகியவற்றில் 10ம் வகுப்பு அல்லது &'O&' நிலை தேறியிருக்க வேண்டும்.
கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில், கூட்டாக குறைந்தபட்சம் 35%
மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பாடத்திட்டம்
Electrical engineering materials, electro machanical energy, electro magnetic field theory.
பணி வாய்ப்புகள்
இப்படிப்பை முடித்தவர்களுக்கு, ஏராளமான பணிவாய்ப்புகள்
காத்துக்கொண்டுள்ளன. தொழிற்சாலை மற்றும் வணிக மையங்களில், பராமரிப்பு
பொறியாளர்களாக பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். மேலும், புகழ்பெற்ற
தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பயிற்சி பெறுபவராகவும் சேர
முடியும். இவைத்தவிர, மென்பொருள் நிறுவனத்தில், வடிவமைப்பு பொறியாளராக
சேரலாம்.
தொழிற்சாலைகளிலுள்ள, எலக்ட்ரிக் மின்சார உற்பத்தி பிரிவில், power plant engineer ஆகவும் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
3. எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பு
இத்துறை, தொடர்ச்சியான முறையில் மாற்றம் கண்டும், வளர்ந்தும் வரும் ஒரு
துறையாகும். இத்துறை, உலகமயமாக்கல் சமூகத்தில் அதிக தாக்கத்தை
செலுத்துகிறது. இந்த டிப்ளமோ படிப்பானது, ஒரு குறுகிய வட்டத்திற்குள்
நில்லாமல், நவீன தொழில்நுட்ப யுக்திகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள
வழிசெய்கிறது. இப்படிப்பானது, ஏஐசிடிஇ மற்றும் இந்திய அரசின் அங்கீகாரம்
பெற்றது.
தகுதிகள் மற்றும் சேர்க்கை
ஏதேனுமொரு
அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது கவுன்சிலில், 10ம் வகுப்பு அல்லது
&'O&' நிலை படிப்பை முடித்திருக்க வேண்டும். கணிதம் மற்றும்
அறிவியலில், குறைந்தது 35% கூட்டு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பாடத்திட்டம்
Adv. communication, analog communication, analog electronics, applied
mathematics, basics of electronics & electrical engineering.
பணி வாய்ப்புகள்
சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் அம்சங்களை தன்னகத்தே கொண்ட எலக்ட்ரானிக்ஸ்
துறையானது, பொறியியல் துறையின் அடிப்படையாகும். மேலும், எலக்ட்ரானிக்ஸ்
அன்ட் கம்யூனிகேஷன் பிரிவானது, பிற துறைகளுடன் தன்னை சம்பந்தப்படுத்திக்
கொண்டுள்ளது.
எனவே, இப்படிப்பை முடித்தவர்களுக்கு,
டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ்
இன்ஜினியரிங், கம்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் சயின்ஸ்
இன்ஜினியரிங் மற்றும் மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு
துறைகளில் பணிவாய்ப்புகள் கிடைக்கின்றன.
4. வேளாண் பொறியியல் துறையில் டிப்ளமோ படிப்பு
வேளாண்மை உற்பத்தி மற்றும் செயல்பாட்டில், பொறியியலையும்,
தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதே இப்படிப்பாகும். மேலும்,
இப்படிப்பானது, மிருக உயிரியல், தாவர உயிரியல், மெக்கானிக்கல், சிவில்,
எலக்டரிகல் மற்றும் கெமிக்கல் பொறியியல் ஆகியவற்றின் அம்சங்கள்
இப்படிப்பில் உள்ளடங்கியிருப்பதோடு, வேளாண் கோட்பாடுகள் பற்றிய அறிவும்
உண்டு.
இந்த 3 வருட டிப்ளமோ படிப்பானது, ஏஐசிடிஇ மற்றும் இந்திய அரசின் அங்கீகாரம் பெற்றது.
தகுதிகள் மற்றும் சேர்க்கைமுறை
ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் குறைந்தபட்சம் 10ம்
வகுப்பு முடித்திருக்க வேண்டும். கணிதம் மற்றும் அறிவியலில் குறைந்தபட்சம்
35% கூட்டு மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், கூட்டு
நுழைவுத்தேர்வின் மூலம், இறுதி சேர்க்கை நடைபெறும். இதைத்தவிர, கவுன்சிலிங்
செயல்பாடும் முக்கியம்.
முக்கிய பாட அம்சங்கள்
Farm power engineering, soil mechanic and soil science, soil water conservation and land reclamation, field exposure training.
பணி வாய்ப்புகள்
தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், சிறிய நீர்ப்பாசன துறைகள்,
நிலத்தடி நீர் பயன்பாட்டுத் துறைகள், வேளாண் துறைகள், டிராக்டர்
நிறுவனங்கள், வேளாண் உற்பத்தி மையங்கள், நீர்ப்பாசன திட்டங்கள், நீர்
பயன்பாட்டுத் திட்டங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநில வேளாண்
கூட்டுறவுத் துறைகள் போன்ற பலவிதமான நிறுவனங்கள் மற்றும் திட்டங்களில்
இப்படிப்பை முடித்த ஒருவர் வேலை வாய்ப்புகளை பெறலாம்.
சம்பளம் - இப்படிப்பை புதிதாக முடித்த ஒருவர், மாதம், குறைந்தது ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை பெறலாம்.
கல்விக் கட்டணம் - முழு படிப்பையும் முடிக்க ரூ.60,000 செலவாகிறது.
5. ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பு
வாகன இன்ஜினியரிங் துறையின் ஒரு பிரிவாக, ஆட்டோமொபைல் துறையில்
வழங்கப்படும் 3 வருட டிப்ளமோ படிப்பானது, தியரி மற்றும் பிராக்டிகல் அறிவை
ஒருசேர வழங்குகிறது.
தகுதிகள் மற்றும் சேர்க்கை முறை
சிபிஎஸ்இ நடத்தும் 10ம் வகுப்பு தேர்வுக்கு இணையான தேர்வுகளில் தேறியவர்கள்
இதற்கு விண்ணப்பிக்கலாம். ஐந்து பாடங்களில் கூட்டாக 45% கூட்டு
மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்ப கல்வி வாரியத்தால்
நடத்தப்படும் நுழைவுத்தேர்விலும் தேறியிருக்க வேண்டும்.
பாடத்திட்டம்
Engineering drawing, strength of materials, auto shop, repair and maintenance, manufacturing process, theory of machines
போன்ற அம்சங்கள் முக்கியமானவை.
பணி வாய்ப்புகள்
இப்படிப்பை முடித்தப்பின்னர், ஆட்டோமெபைல் துறையில் பணிக்கு சேரலாம் அல்லது பி.டெக் ஆட்டோமொபைல் போன்ற உயர் படிப்புகளில் சேரலாம்.
ஒருவர், ஜுனியர் இன்ஜினியர் என்ற நிலையில் பணியில் சேரலாம்.
சம்பளம் - ஆரம்ப நிலையில், மாதம், ரூ.8000 முதல் ரூ.10,000 வரை சம்பளமாக பெறலாம்.
படிப்பு கட்டணம் - ஒரு வருடத்திற்கு ரூ.29,040 செலவாகிறது.
6. சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பு
சாலைகள், பாலங்கள், கால்வாய்கள், அணைகள் மற்றும் கட்டடங்கள் போன்ற பல்வேறு
கட்டுமானங்களின் வடிவமைப்பு, கட்டுதல் மற்றும் பராமரிப்பு போன்ற அம்சங்களை
இப்படிப்பு உள்ளடக்கியுள்ளது. இது 3 வருட காலஅளவைக் கொண்டது.
தகுதிகள் மற்றும் சேர்க்கை முறைகள்
ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் பத்தாம் வகுப்பு படிப்பை
முடித்திருப்பதோடு, டிப்ளமோ நுழைவுத் தேர்வையும் எழுத வேண்டும். இத்தேர்வு
வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும்.
பாடத்திட்டம்
Workshop practice, construction materials, building construction, civil
engineering drawing, soil & foundation engineering and hydraulics.
போன்ற பிரதான அம்சங்கள் கற்றுத்தரப்படும்.
பணி வாய்ப்புகள்
இந்த டிப்ளமோவை முடித்த ஒரு மாணவர், பி.டெக் சிவில் படிப்பில் லேட்டரல்
என்ட்ரி முறையிலோ, கல்லூரியில் நேரடி முறையிலோ சேர்க்கை பெறலாம்.
ஆராய்ச்சியாளர் மற்றும் ஜுனியர் இன்ஜினியர் போன்ற பணிவாய்ப்புகள் உள்ளன.
சம்பளம் - ஆரம்ப நிலையில், ஒருவர் மாதம் ரூ.10,000 வரை சம்பாதிக்கலாம்.
கட்டணம் - ஒரு வருடத்திற்கு ரூ.32,095 செலவாகிறது.
7. கெமிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பு
ரசாயனம் மற்றும் ரசாயனம் தொடர்பான தயாரிப்புகளுக்காக, வேதியியல் மற்றும்
பொறியியல் ஆகிய துறைகளின் இணைப்புருவாக்கம்தான் கெமிக்கல் இன்ஜினியரிங்.
இத்துறை ஆராய்ச்சியின் மூலம், நேனோ டெக்னாலஜி, Fuel cells மற்றும்
பயோமெடிக்கல் இன்ஜினியரிங் போன்றவை புதிதாக உருவானவை. இந்த டிப்ளமோ படிப்பு
3 வருட காலஅளவைக் கொண்டது.
தகுதிகள் மற்றும் சேர்க்கை
பத்தாம் வகுப்பு தகுதியைப் பெற்றிருப்பதோடு, டிப்ளமோ நுழைவுத்தேர்வையும் எழுத வேண்டும்.
பாடத்திட்டம்
Thermodynamics, reaction engineering, paper making, pulping process and environmental studies.
பணி வாய்ப்புகள்
ஒருவர், கெமிக்கல் இன்ஜினியரிங் பி.டெக் படிப்பில் லேட்டரல் என்ட்ரி
முறையில் சேர்வதோடு, paper plants, fertilizer manufacturing units,
industrial chemical manufacturing units and refineries போன்ற பலவற்றில்
பணி வாய்ப்புகளைப் பெறலாம். &'Shift In - Charge&' என்ற பணியைப்
ஒருவர் பெறுகிறார்.
சம்பளம் - புதியவர் ஒருவர், சராசரியாக, மாதம் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை பெறுகிறார்.
கட்டணம் - ஒரு செமஸ்டருக்கு ரூ.2000 வீதம் செலவாகிறது.
8. கம்யூட்டர் ஹார்வேர் மற்றும் நெட்வொர்கிங் டிப்ளமோ
இத்துறை ஒரு இன்டர்டிசிப்ளினரி துறையாகும். இந்த 3 வருட டிப்ளமோ
படிப்பானது, ஒருவர் பொறியாளராக பயிற்சி பெற அல்லது பிற துறை
பயன்பாட்டிற்கான கணினி திறன்களை புரிந்துகொள்வதை மேம்படுத்தல்
போன்றவற்றுக்கு துணைபுரிகிறது.
தகுதிகள் மற்றும் சேர்க்கை
ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது கவுன்சில் ஆகியவற்றில்
10ம் வகுப்பு அல்லது &'O&' நிலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில், குறைந்தபட்சம் 35% கூட்டு
மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
பாடத்திட்டம்
Computers, digital theory, C theory, C lab, data communication and communication networks, advanced microprocessor.
பணி வாய்ப்புகள்
ஒருவர் உயர்கல்வி மேற்கொள்ளலாம் அல்லது கணினி தொழில்துறை, நிதி சேவைகள்,
டெலிகம்யூனிகேஷன், பயோடெக்னாலஜி, இ-காமர்ஸ் மற்றும் தொடர்புடைய துறைகளில்
ஜுனியர் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை வாய்ப்பினை பெறலாம்.
சம்பளம்
புதிதாக பணிக்கு சேர்பவர்கள், மாதம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை சம்பளம் பெறலாம்.
கட்டணம் - ஒரு வருடத்திற்கு ரூ.1,35,000 செலவாகிறது.
Similar topics
» பொறியியல் கலந்தாய்வு
» பொறியியல் படிப்பு இலவசம்
» சிலந்தி வலையில் பொறியியல் கலை
» பலம் தரும் பாதுகாப்பு படிப்புகள்
» ஐ.ஐ.டி. மும்பை வழங்கும் இலவச படிப்புகள்
» பொறியியல் படிப்பு இலவசம்
» சிலந்தி வலையில் பொறியியல் கலை
» பலம் தரும் பாதுகாப்பு படிப்புகள்
» ஐ.ஐ.டி. மும்பை வழங்கும் இலவச படிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum