சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

 நல்ல தூக்கத்துக்கு சிறந்த வழிகள் Khan11

நல்ல தூக்கத்துக்கு சிறந்த வழிகள்

3 posters

Go down

 நல்ல தூக்கத்துக்கு சிறந்த வழிகள் Empty நல்ல தூக்கத்துக்கு சிறந்த வழிகள்

Post by *சம்ஸ் Sat 16 Mar 2013 - 8:37

 நல்ல தூக்கத்துக்கு சிறந்த வழிகள் 36421fe5-ee26-40c8-822c-c6d525521426_S_secvpf
இதையொட்டி தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் பற்றி இன்று விவாதிக்கப்பட்டு வருகிறது. தூக்கமின்மை காரணமாக மனிதனுக்கு 80 வகையான பிரச்சினைகள் ஏற்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கார் விபத்துக்களில் 33 சதவீதமான விபத்துக்கள் சரியான தூக்கம் இல்லாததால் தான் ஏற்படுகின்றன. இன்றைய காலத்தில் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

குறிப்பாக சாக்லெட், இனிப்புகள் மற்றும் ஐஸ்க்ரீம் போன்றவற்றை சாப்பிட்டால், மனம் சந்தோஷம் அடைகிறதே தவிர, சரியான தூக்கம் மட்டும் வருவதில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா- அவைகளில் கார்போ ஹைட்ரேட் அதிகமாக உள்ளது. கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், அவை தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

எனவே தான் இரவில் தூங்கச் செல்லும் முன், இந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று கூறுகின்றனர். மேலும் தூக்கமின்மை அதிக வேலைப் பளு மற்றும் குடும்பப் பிரச்சனைகளால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாகவும் தடைபடும். எனவே என்னதான் பிரச்சினை இருந்தாலும், உடலைப் பாதுகாக்க வேண்டியது நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்.

எனவே அதனை உணர்ந்து, பிரச்சனையைக் கண்டு அஞ்சாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தது 8 மணிநேர தூக்கம் மிகவும் இன்றியமையாதது என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இருந்தாலும் சில நாட்களில் இந்த 8 மணிநேரத் தூக்கம் நமக்கு இல்லாமல் போய்விடும். அப்படிப்பட்ட நாட்களுக்கு மறுநாள் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாமல், ஒருவித வருத் தத்துடனேயே மனம் மற்றும் உடல் இருக்கும்.

ஆகவே தூக்கமின்மை எதற்கு வருகின்றது என்று ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு, அதனை சரிசெய்ய முயல வேண்டும். ஆரோக்கிய மற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுகளால் கூட தூக்கமின்மை ஏற்படும். அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை தவிர்த்து வந்தால், சரியான தூக்கத்தைப் பெறலாம். முதலில் தூக்கத்திற்கும் தண்ணீருக்கும் உள்ள தொடர்பைத் தெரிந்து கொள்ளலாம்.

அதிகமான தண்ணீர் குடிப்பது நல்லது தான். ஆனால் காலை மற்றும் மதிய வேளையில் தான் தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். மாலை மற்றும் இரவு வந்தால், தண்ணீர் குடிக்கும் அளவு குறைவாக இருக்க வேண்டும். இல்லையெனில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும். அதனால் நமது உறக்கம் தடைபடும். அடுத்து காப்பைன் உணவுகள் எப்படி நமது உறக்கத்தை பாதிக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம்..

ஒவ்வொருவரும் தினமும் ஏதாவது ஒரு வடிவில் காப்பைன் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வோம். அதிலும் டீ, காப்பி, சாக்லேட் மற்றும் ஊக்க பானங்கள் போன்றவற்றை நிச்சயம் சேர்ப்போம். இத்தகைய உணவுப் பொருட்களில் தான் காப்பைன் அதிகம் உள்ளது. இவை நம்முடைய நரம்புகளைத் தூண்டி மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பது போல் ஒரு உணர்வை ஏற்படுத்தும்.

ஆனால் உண்மையில் அந்த சுறுசுறுப்பு சோர்வின் வெளிப்பாடு தானே தவிர உண்மையான புத்துணர்ச்சி அல்ல. அதனால் காப்பைன் அதிகமாக இருக்கும் பானங்களை அளவோடு அருந்துவது நமது உறக்கத்திற்கு நல்லது. மது அருந்தினால் உடலில் வறட்சி ஏற்பட்டு, தூக்கத்தை ஏற்படுத்தும் செரோட்டின் அளவு குறையும். அதனால் சரியான தூக்கம் இல்லாமல், அடிக்கடி நடு இரவில் எழுவது போன்றவை ஏற்படும்.

புரோட்டீன் உணவுகள்..........

புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளான மாட்டு இறைச்சியை, இரவில் படுக்கும் போது சாப்பிட்டால், அவை செரிமானம் ஆவது கடினமாகிவிடும். அதனால், செரிமான செயல்பாடுகளால், செரோட்டின் உற்பத்தியானது தடைபட்டு, தூக்கம் தடைபடும். வாயு மற்றும் நெஞ்செரிச் சலை ஏற்படுத்தும் உணவுகளைச் சாப்பிட்டு தூங்கினால், வயிறு உப்புசத்துடன் இருப்பதோடு, நல்ல தூக்கம் வருவது நின்றுவிடும்.

எனவே தூக்கம் நன்கு வரவேண்டுமெனில் கார உணவுகள் மற்றும் வாயுவை ஏற்படுத்தும் உணவுகளான பட்டாணி, பீன்ஸ் மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் குழந்தை பருவம் மகிழ்ச்சி யாக அமையாதவர்களுக்கு, நடுத் தர வயதில், இதயநோய் வர வாய்ப்பு அதிகம் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், சமீபத்தில், 377 பேரிடம் நடத்திய ஆய்வில், குழந்தை பருவத்தில் அதிகமான மன அழுத்தத்துக்கு ஆளாகுபவர்களுக்கு, அவர்கள் நடுத்தர வயதாகும் போது, இதயநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஏழு வயதில், அதிகமான மனச்சுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு, அவர்களின் நடுத்தர வயதில், இதயநோய் வருவதற்கு, 31 சதவீதம் வாய்ப்பு உள்ளது, என்கிறது அந்த ஆய்வு. அதே சமயம், ஆண்களுக்கு, 17 சதவீதமே வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குழந்தை பருவத்தில், நல்ல கவனிப்பும், மகிழ்ச்சியான சூழலும் அமைபவர்களுக்கு, இதயநோய் வர வாய்ப்பு குறைவு என்கிறது இந்த ஆய்வு.

முறையான தூக்கமின்மையானது மனித உடலின் செயற்பாட்டை கடுமையாக பாதிக்கவல்லது என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், தொடர்ந்து ஒருவார காலத்திற்கு ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும்படி செய்யப்பட்டபோது சம்பந்தப்பட்டவர்களின் மரபணுக்களில் நூற்றுக்கணக்கானவற்றில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டதாக இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆய்வுக்காக 26 பேரை ஒரு வார காலம் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் தூங்கவைத்து அவர் களின் ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்தனர். அடுத்து இவர்களை ஒருவார காலத்துக்கு ஆறுமணிக்கும் குறைவாக தூங்கவைத்து அதன்பிறகு அவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தனர்.

இதில் எழுநூற்றுக்கும் அதிகமான மரபணுக்கள் மாற்றமடைந்திருப்பதை இவர்கள் கண்டறிந்தனர். குறிப்பாக மனிதர்களின் அன்றாட செயற்பாட்டுக்கு பெரிதும் தேவைப்படும் மரபணுக்களில் இந்த மாற்றங்கள் கூடுதலாக இருப்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே போதுமான தூக்கமின்மையானது, மனிதர்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக தூக்கமின்மை காரணமாக, இதயநோய்கள், சர்க்கரை நோய், கூடுதல் உடல் பருமன், குறைவான மூளைச் செயற்பாடு ஆகியவை உருவாகலாம் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே ஆரோக்கியமான வாழ்வை விரும்புபவர்கள் அவசியம் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கவேண்டும் என்பது இவர்களின் அறிவுரை..


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 நல்ல தூக்கத்துக்கு சிறந்த வழிகள் Empty Re: நல்ல தூக்கத்துக்கு சிறந்த வழிகள்

Post by ansar hayath Sat 16 Mar 2013 - 12:10

நன்றி நன்றி :`~//: பகிர்வுக்கு ...நான் இனி நல்லா தூங்குவன் சம்ஸ் :.”:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

 நல்ல தூக்கத்துக்கு சிறந்த வழிகள் Empty Re: நல்ல தூக்கத்துக்கு சிறந்த வழிகள்

Post by நண்பன் Sat 16 Mar 2013 - 12:19

ansar hayath wrote:நன்றி நன்றி :`~//: பகிர்வுக்கு ...நான் இனி நல்லா தூங்குவன் சம்ஸ் :.”:
எங்க அன்சார் நின்மதியாக தூங்கி பல ஆண்டுகள் கழிந்து விட்டது தூக்கம் வருகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நல்ல தூக்கத்துக்கு சிறந்த வழிகள் Empty Re: நல்ல தூக்கத்துக்கு சிறந்த வழிகள்

Post by ansar hayath Sat 16 Mar 2013 - 12:30

நண்பன் wrote:
ansar hayath wrote:நன்றி நன்றி :`~//: பகிர்வுக்கு ...நான் இனி நல்லா தூங்குவன் சம்ஸ் :.”:
எங்க அன்சார் நின்மதியாக தூங்கி பல ஆண்டுகள் கழிந்து விட்டது தூக்கம் வருகிறது
தூக்கம் விற்றவர்கள் நாம்...! @. @. நானும் ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன் நண்பா...உண்மையான தூக்கம் இங்கு எங்கே @. அந்த நாளை நானும் எதிபார்த்து காத்திருக்கிறேன் நண்பா :!#: ....வெகு தூரமில்லை இன்சா அல்லாஹ் எல்லோரும் நிம்மதியாக தூங்கலாம் :’|:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

 நல்ல தூக்கத்துக்கு சிறந்த வழிகள் Empty Re: நல்ல தூக்கத்துக்கு சிறந்த வழிகள்

Post by நண்பன் Sat 16 Mar 2013 - 13:10

ansar hayath wrote:
நண்பன் wrote:
ansar hayath wrote:நன்றி நன்றி :`~//: பகிர்வுக்கு ...நான் இனி நல்லா தூங்குவன் சம்ஸ் :.”:
எங்க அன்சார் நின்மதியாக தூங்கி பல ஆண்டுகள் கழிந்து விட்டது தூக்கம் வருகிறது
தூக்கம் விற்றவர்கள் நாம்...! @. @. நானும் ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன் நண்பா...உண்மையான தூக்கம் இங்கு எங்கே @. அந்த நாளை நானும் எதிபார்த்து காத்திருக்கிறேன் நண்பா :!#: ....வெகு தூரமில்லை இன்சா அல்லாஹ் எல்லோரும் நிம்மதியாக தூங்கலாம் :’|:
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நல்ல தூக்கத்துக்கு சிறந்த வழிகள் Empty Re: நல்ல தூக்கத்துக்கு சிறந்த வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum